Published:Updated:

எக்லெஸ் கேக் ரெசிப்பி

எக்லெஸ் கேக் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
எக்லெஸ் கேக் ரெசிப்பி

எக்லெஸ் கேக் ரெசிப்பி

எக்லெஸ் கேக் ரெசிப்பி

எக்லெஸ் கேக் ரெசிப்பி

Published:Updated:
எக்லெஸ் கேக் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
எக்லெஸ் கேக் ரெசிப்பி

ப்போது கிறிஸ்துமஸ் கேக் என்பது மேல்தட்டு மக்களுக்கான இனிப்பாக மட்டுமே இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில்தான் கேக், பிரெட் செய்வதற்கான சமையல் பாத்திரங்கள், கேக்குக்கான அடுப்பு போன்றவை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விலையில் கிடைக்கத் தொடங்கின. தொழிற்புரட்சியின் காரணமாகவே, கேக் என்பது எல்லா மக்களுக்குமான இனிப்பாக மாறிப்போனது. ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் வழியாகவே உலகமெங்கும் பல்வேறு உணவுகள் பரவின. கேக்கும் அப்படித்தான் இந்தியாவுக்கு வந்தது.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

``கடைகளில் எக்லெஸ் கேக்குகள் என்றால் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்... எக்ஸ்ட்ரா விலை. அதனால் அவற்றை நம் வீட்டிலேயே செய்யலாமே’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். இந்த இதழில் வெளியாகியுள்ள முட்டை சேர்க்காத கேக் வகைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குக் கூடுதல் சுவை சேர்க்கும். வாழ்த்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எக்லெஸ் கேக் ரெசிப்பி

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: மீனா சுதிர்

எக்லெஸ் சாக்கோ ஆரஞ்சு கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒன்றரை கப்
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 கண்டன்ஸ்டு மில்க் - முக்கால் கப்
 கோகோ பவுடர் - அரை கப்
 பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - ஒரு கப்
 பால் - ஒரு கப்
 எண்ணெய் - கால் கப்
 வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆரஞ்சுத்தோல் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆரஞ்சு எக்ஸ்ட்ராக்ட் - ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய், மைதா - சிறிதளவு

எக்லெஸ் கேக் ரெசிப்பி

அலங்கரிக்க:

 க்ரீம் - ஒரு கப்
 மிதமான இனிப்புகொண்ட சாக்லேட் சிப்ஸ் (நறுக்கியது) - ஒரு கப்

செய்முறை:

அவனை (oven) 350 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு பிரீஹீட் செய்யவும். வட்டமான கேக் பான்களில் (pan) வெண்ணெய் தடவி, மைதா மாவு தூவவும். வட்ட கேக் பான்களின் அடியில் பெர்ச்மென்ட் பேப்பர் (பேக்கரி பேப்பர்) வைத்து அதன் மீதும் வெண்ணெய் தடவி, மைதா மாவு தூவவும். கோதுமை மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றைச் சலித்துப் பெரிய பவுலில் போட்டு வைக்கவும். பாலையும் தண்ணீரையும் நன்கு சூடாக்கவும். மீடியம் சைஸ் பவுலில் சூடான பால், வெந்நீர், கண்டன்ஸ்டு மில்க், எண்ணெய், வினிகர், ஆரஞ்சுத் தோல் துருவல், ஆரஞ்சு எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும். கோதுமை மாவு கலவையுடன், பால் கலவையை ஒன்றாகக் கலக்கவும் (அதிக நேரம் கலக்க வேண்டாம்). மாவை கேக் பான்களில் ஊற்றி 40 - 50 நிமிடங்கள் அல்லது பல்குத்தும் குச்சியால் குத்திப் பார்க்கும்போது மாவு, குச்சியில் ஒட்டாமல் வரும் வரை பேக் செய்யவும். பிறகு அவனில் இருந்து எடுத்து ஆறவிடவும். பானை வயர் ரேக் மேல் கவிழ்த்து, பெர்ச்மென்ட் பேப்பரைப் பிரித்து எடுத்துவிட்டு கேக்கை ஆறவிடவும்.

சாஸ் பானில் (sauce pan) க்ரீமை சூடாக்கவும் (கொதிக்கவிடக் கூடாது). சாக்லேட் சிப்ஸ் அல்லது சாக்லேட் துண்டுகளுடன் சேர்க்கவும். இதை மூடிவைத்து சாக்லேட்டை உருகவிடவும். சில நிமிடங்கள் கழித்து, பிறகு நன்கு கிளறவும். இதை 20 - 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து லேசாக, செட்டான பிறகு எடுத்து ஆரஞ்சு கேக்கின் மேலே பரவலாக ஊற்றவும் (பக்கவாட்டில் சொட்டும்படி ஊற்றவும்). ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

சாக்லேட் கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கேக் மேலே தடவ வேண்டும் என்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அதை ஃப்ரிட்ஜில் குளிரவைக்கவும்.

கி.மு 314-ம் ஆண்டிலேயே சீன இலக்கியங்களில் ஆரஞ்சு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

எக்லெஸ் ஐஸ்க்ரீம் கேக்

தேவையானவை:

 8 இன்ச் வெனிலா கேக் - ஒன்று
 குளிர்ந்த விப்டு க்ரீம் - தேவையான அளவு
 ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 2 கப்
 சாக்லேட் ஐஸ்க்ரீம் - 2 கப்
 சாக்லேட் சிப்ஸ் - அலங்கரிக்கத் தேவையான அளவு

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

விருப்பமான கேக்கை, விருப்பமான அளவுக்கு `பேக்’ செய்யவும் (நான் 8 இன்ச் வெனிலா கேக் `பேக்’ செய்திருக்கிறேன்). `வயர் ரேக்’கில் ஆறவிடவும். ஐஸ்க்ரீம்களை உருகவிடவும். கேக் செய்த அதே பானின் (pan) உள்ளே க்ளிங் ஃபிலிம் வைத்து கவர் செய்யவும். ஐஸ்க்ரீமை ஊற்றவும் (நான் ஸ்ட்ராபெர்ர்ரி, சாக்லேட் ஐஸ்க்ரீம்களை ஊற்றியுள்ளேன்). மேல்பகுதியை ஸ்பூனால் சமமாக்கி, மூடி போட்டு அல்லது கிளிங் ஃபிலிமால் மூடி, ஃப்ரீசரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் செட் ஆனதும் கேக்கை இரண்டு துண்டுகளாக்கிச் சமப்படுத்தவும். கேக் துண்டுகளின் நடுவே ஐஸ்க்ரீம் ஃபில்லிங்கை வைத்து, விப்பிங் க்ரீமை மேலே சேர்த்து, சாக்லேட் சிப்ஸ் கொண்டு அலங்கரித்து, ஃப்ரீசரில் வைத்து எடுத்து, 10 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

விப்பிங் க்ரீமுக்குப் பதிலாக உங்களுக்கு விருப்பமான `ஃப்ராஸ்டிங்’ பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.

ஐஸ்க்ரீம் செய்வதற்கு நான்கு மணி நேரம் முன்பே ஃப்ரீஸரை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். ஹைகூலிங்கில் செட் செய்ய வேண்டும்.

எக்லெஸ் வெனிலா மக் கேக் வித் மில்க் சாக்லேட்

தேவையானவை:

 மைதா - 4 டேபிள்ஸ்பூன்
 பால் -  4 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 யோகர்ட் - 3 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 மில்க் சாக்லேட் சங்க்ஸ் - தேவையான அளவு

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

பால், எண்ணெய், வெனிலா எசென்ஸ், யோகர்ட் ஆகியவற்றை `மக்’கில் (குவளை) சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து எல்லாவற்றையும் சில நிமிடங்கள் நன்கு கலக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கலக்கவும். இந்த கேக் மாவின் நடுவில்  மில்க் சாக்லேட் சங்க்ஸ் சேர்க்கவும். மைக்ரோவேவ் அவனில் (oven) 2 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு `மக்’கை வெளியே எடுத்து கேக்கை ருசிக்கவும்.

வெனிலா பயிரிடுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுவதால், அதன் உற்பத்திச் செலவும் அதிகமாகிறது.

எக்லெஸ் ஓட்ஸ் பனானா பிரவுனீஸ்

தேவையானவை:

 பெரிய வாழைப்பழம் (பழுத்தது) - ஒன்று
 ஹோல் கிரெய்ன் ரோல்டு ஓட்ஸ் - முக்கால் கப்
 பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 டார்க் பிரவுன் சுகர் (அழுத்தி அளக்கவும்) - அரை கப்
 ஆளிவிதைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
 ரிஃபைண்ட் ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய வால்நட்ஸ் - கால் கப்
 மினி சாக்லேட் சிப்ஸ் - 3 டேபிள்ஸ்பூன்
 இனிப்பில்லாத கோகோ பவுடர் - 5 டேபிள்ஸ்பூன்
 கடல் உப்பு - 1/8 டீஸ்பூன்

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

அவனை (oven) 350 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். பிரவுனி பானின் (pan)  உள்ளே பெர்ச்மென்ட் பேப்பரை விரித்து வைக்கவும். (அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவதாக இருந்தால் எண்ணெய் தடவவும்). வெறும் கடாயில் ஓட்ஸைச் சிறு தீயில் 2 நிமிடங்கள் வறுக்கவும். 3 - 4 நிமிடங்கள் ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

ஓட்ஸ் பொடியைச் சலித்து அரை கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாழைப்பழத்தை ஃபோர்க்கால் மசித்துக்கொள்ளவும். ஆளிவிதைப் பொடியை 3 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நுரை வரும் வரை கலக்கவும்.

ஒரு கிண்ணத்தில் எண்ணெய், டார்க் பிரவுன் சுகர், ஆளிவிதை கலவை சேர்த்து எலெக்ட்ரிக் மிக்ஸரில் 2 நிமிடங்கள் அடித்துக்கொள்ளவும். வெனிலா எக்ஸ்ட்ராக்ட், கோகோ பவுடர் சேர்த்துக் குறைவான ஸ்பீடில் அடிக்கவும். அதிக நேரம் அடிக்க வேண்டாம். இதனுடன் ஓட்ஸ் பவுடர், மசித்த வாழைப்பழம், நறுக்கிய வால்நட்ஸ், சாக்லேட் சிப்ஸ். சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவை பானில் ஊற்றி 35 - 40 நிமிடங்கள் பேக் செய்யவும். இப்போது ஓரங்கள் நன்கு `பேக்’ ஆகியிருப்பது தெரியும். பானை (pan) ஆட்டினால், நடுப்பகுதி அசையாது (பிரவுனியின் மேல் பகுதியில் விரிசல்விட ஆரம்பித்தால், நன்கு வெந்துவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்). பிரவுனிகளை வெளியே எடுத்து `வயர் ரேக்’கில் ஆறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து, பிரவுனிகள் நன்கு ஆறியதும் சதுரத் துண்டுகளாக கட் செய்து பரிமாறவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்தும் பயன்படுத்தலாம்.

ஓட்ஸூக்கு தமிழ்ப்பெயர் உண்டு. அதுதான் காடைக்கண்ணி!

எக்லெஸ் ஃப்ரூட் கேக்

தேவையானவை:

 மைதா - ஒன்றரை கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 உப்பு சேர்க்காத வெண்ணெய் - கால் கப்
 எண்ணெய் - கால் கப்
 சர்க்கரை -  முக்கால் கப்
 கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
 பால் - முக்கால் கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 ஊறவைத்த டிரை ஃப்ரூட்ஸ் - ஒன்றரை கப்பில் இருந்து 2 கப் வரை
 உப்பு - சிறிதளவு

ஊறவைத்த டிரை ஃப்ரூட்ஸ் செய்ய:

 உலர்திராட்சை - 2 கப்
 சுல்தானா (உலர்திராட்சை வகை) - ஒரு கப்
 நறுக்கிய பேரீச்சை - ஒரு கப்
 டூட்டி ஃப்ரூட்டி - ஒரு கப்
 உலர்ந்த க்ரான்பெர்ரி - அரை கப்
 உலர்ந்த ஆப்ரிகாட் (நறுக்கியது) - அரை கப்
 ப்ரூன்ஸ் (நறுக்கியது) - அரை கப்
 செர்ரிப் பழம் (நறுக்கியது) - அரை கப்
 கரன்ட்ஸ் (நறுக்கியது) - அரை கப்
 நட்ஸ் கலவை (முந்திரி, பாதாம், வால்நட்) - ஒரு கப்
 ஆரஞ்சுச்சாறு - 2-3 கப்

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸைப் போட்டு ஆரஞ்சுச்சாற்றை சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாள்களுக்குப் பயன்படுத்தலாம்.

அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு (350 டிகிரி ஃபாரன்ஹீட்) பிரீஹீட் செய்யவும். லோஃப் பானின் (loaf pan) உள்ளே பெர்ச்மென்ட் பேப்பரை விரித்து வைக்கவும். வெண்ணெய், எண்ணெய், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு அடிக்கவும். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு மைதா சேர்த்து மெதுவாகக் கலக்கவும். இதனுடன் ஊறவைத்த ஊறவைத்த டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பால் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஸ்பூனால் எடுத்து லோஃப் பானில் சேர்க்கவும் (கலவை மீதம் இருந்தால் மஃபின் பானில் (muffin pan) ஊற்றவும்). இதை 35 - 50 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும் (டூத் பிக்கால் நடுவில் குத்தி எடுத்துப் பார்க்கும்போது, மாவு
ஒட்டாமல் வந்தால் `பேக்’ ஆகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்).
ஆறவிட்டுப் பரிமாறவும்.

இனிப்பு செர்ரிப் பழத்தில் 82% தண்ணீர்தான். அதோடு, 16% கார்போஹைட்ரேட், 1% புரோட்டீன் உள்ளது.

எக்லெஸ் சாக்கோ லாவா கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - அரை கப்
 கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
 குளிர்ந்த நீர் - அரை கப்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 வினிகர் - அரை டேபிள்ஸ்பூன்
 வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - கால் டீஸ்பூன்
 சாக்லேட் பார் - 100 கிராம் (சதுர துண்டுகளாக நறுக்கவும்)

அலங்கரிக்க:

 பொடித்த சர்க்கரை அல்லது கோகோ பவுடர் - தேவையான அளவு

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு, அதன் மேல் சல்லடையை வைக்கவும். அதில் கோதுமை மாவு, உப்பு, கோகோ பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கிண்ணத்தில் நேரடியாக விழும்படி சலித்துத் தனியே வைக்கவும். மற்றொரு கிண்ணத்தில் சர்க்கரை சேர்த்து, குளிர்ந்த நீரை ஊற்றிக் கலக்கவும். சர்க்கரை கரைந்ததும் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். பிறகு வெனிலா எக்ஸ்ட்ராக்ட், வினிகர் சேர்த்து மேலும் கலக்கவும்.

இதனுடன் சலித்த கோதுமை மாவு, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும் (மிகவும் அதிக நேரம் கலக்க வேண்டாம்). இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய மஃபின் கப்களில் ஊற்றவும். கலவையின் நடுவில் சாக்லேட் துண்டுகளை வைத்து லேசாக அழுத்தவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) மஃபின் கப்களை வைத்து, 200 டிகிரி செல்ஷியஸில்
30 - 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பிறகு வெளியே எடுத்து, 2 - 3 நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு ஒரு தட்டில் கவனமாகக் கவிழ்க்கவும். பொடித்த சர்க்கரை அல்லது கோகோ பவுடரை சிறிய சல்லடை பயன்படுத்தி கேக்களின் மீது விழும்படி சலிக்கவும். உடனடியாகப் பரிமாறவும்.

சமையலில் மட்டுமல்ல... அழகு, மருத்துவம், தோட்டக்கலை, சுத்திகரிப்புத் துறைகளிலும் வினிகர் பயன்படுகிறது.

எக்லெஸ் செமோலீனா ரூட்டி ஃப்ரூட்டி கேக்

தேவையானவை:

 ரவை - 2 கப்
 ரூட்டி ஃப்ரூட்டி - 1/3 கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 சர்க்கரை -  முக்கால் கப்பிலிருந்து ஒரு கப் வரை
 தயிர் - ஒரு கப்
 எண்ணெய் - 1/3 கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். கேக் பானில் (cake pan) எண்ணெய் தடவி, சிறிதளவு மைதா மாவு தூவவும். ரவை, ஏலக்காய்த்தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஸ்பூனால் கலக்கவும். இதனுடன் தயிர், எண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கெட்டியாகக் கலக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக் கலக்கலாம்). பிறகு ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலக்கவும்.

இந்த மாவை கேக் பானில் ஊற்றி 40 - 45 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

35 நிமிடங்களுக்குப் பிறகு கவனம் செலுத்தவும். ஸ்கீவரை (skewer) கேக்கின் நடுவில் குத்தி எடுத்து பேக் ஆகிவிட்டதா என்று செக் செய்யவும் (மாவு  ஸ்கீவரில் ஒட்டாமல் வந்தால் `பேக்’ ஆகிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்). ஆறவிட்டு, மெதுவாகத் தட்டில் கவிழ்க்கவும். பொடித்த சர்க்கரை தூவவும். துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

கோதுமையிலிருந்து மட்டுமல்ல... அரிசி, மக்காச்சோளம் ஆகியவற்றிலிருந்தும் ரவை தயாரிக்கப்படுகிறது.

எக்லெஸ் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் கேக் வித் சாக்லேட் சாஸ்

தேவையானவை - கேக்குக்கு:

 மைதா - ஒன்றரை கப்
 ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர்டு கஸ்டர்ட் பவுடர் - முக்கால் கப்
 சர்க்கரை - முக்கால் கப்
 பேக்கிங் பவுடர் - இரண்டே கால் டீஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 உப்பு சேர்க்காத மிருதுவான வெண்ணெய் - அரை கப் + 3 டேபிள்ஸ்பூன்
 பால் - ஒரு கப்

எக்லெஸ் கேக் ரெசிப்பி

சாக்லேட் சாஸ் செய்ய:

 பொடித்த சர்க்கரை - ஒரு கப்
 இனிப்பில்லாத கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு சேர்க்காத வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 வெதுவெதுப்பான பால் - 4 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்

அகங்கரிக்க:

 ரோஜா இதழ்கள் - சிறிதளவு

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். வட்டமான கேக் பானில் (pan)வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவவும். ஒரு பாத்திரத்தில் மைதா, ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர்டு கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும். பால், வெனிலா எசென்ஸ், வெண்ணெய் சேர்த்து மிருதுவாகும் வரை அடிக்கவும். இந்தக் கலவையை உடனடியாக  கேக் பானில் ஊற்றி, அவனில் (oven) வைக்கவும். 35 - 40 நிமிடங்கள் பேக் செய்யவும் (டூத் பிக்கால் நடுவில் குத்தி எடுத்துப் பார்க்கும்போது, மாவு ஒட்டாமல் வந்தால் `பேக்’ ஆகிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்). 15 நிமிடங்கள் ஆறவிட்டு, கேக்கை கவிழ்த்து எடுத்து முழுவதும் ஆறவிடவும்.

சாக்லேட் சாஸ் செய்யக் கொடுத்துள்ள வெண்ணெயை உருக்கி, தனியே வைக்கவும். பொடித்த சர்க்கரை, கோகோ பவுடரைச் சேர்த்துக் கலக்கவும். வெதுவெதுப்பான பால், உருக்கிய வெண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு ஒன்றாக சேரும் வரை அடிக்கவும். இதை முழு கேக்கின் மீதோ, துண்டுகளாக்கப்பட்ட கேக்கின் மீதோ ஊற்றவும். ரோஜா இதழ்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

வணிகரீதியாக ஸ்ட்ராபெர்ரி முதலில் விளைவிக்கப்பட்டது, பிரான்ஸில்தான்.

எக்லெஸ் சாக்லேட் மயோனைஸ் கேக்

தேவையானவை:

 தண்ணீர் - ஒரு கப்
 மயோனைஸ் - ஒரு கப்
 வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - ஒரு டீஸ்பூன்
 மைதா மாவு - 2 கப்
 சர்க்கரை - ஒரு கப்
 பேக்கிங் சோடா - இரண்டு டீஸ்பூன்
 பேக்கிங் கோகோ - 3 டேபிள்ஸ்பூன்

எக்லெஸ் கேக் ரெசிப்பி

அலங்கரிக்க:

 பிரவுன் சுகர் (அழுத்தி அளந்தது) - அரை கப்
 வெண்ணெய் (க்யூப்களாக நறுக்கியது) - கால் கப்
 பால்  - 2 டேபிள்ஸ்பூன்
 பொடித்த சர்க்கரை - ஒன்றே முக்கால் கப்

செய்முறை:

பெரிய பவுலில் தண்ணீர், மயோனைஸ், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு பெரிய பவுலில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் கோகோ, பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். இதை மயோனைஸ் கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடிக்கவும். 9 இன்ச் ஸ்கொயர் பேக்கிங் பான் (baking pan) அல்லது 11 x 7 பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவனில் (oven) 30- 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும் (டூத் பிக்கால் நடுவில் குத்தி எடுத்துப் பார்க்கும்போது, மாவு ஒட்டாமல் வந்தால் `பேக்’ ஆகிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்). பிறகு நன்கு ஆறவிடவும்.

சாஸ் பானில் (sauce pan) பிரவுன் சுகர், வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கிக் கிளறவும். குமிழ்கள் வரும்போது இறக்கி பால்விட்டுக் கலக்கவும். பொடித்த சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மிருதுவாகும் வரை அடிக்கவும். இதை கேக்கின் மீது சேர்த்து அலங்கரிக்கவும்.

மைதா `all purpose flour’ என்று பெயரிலும் விற்கப்படுகிறது.

எக்லெஸ் நூடெல்லா பிரவுனீஸ்

தேவையானவை:

 நூடெல்லா ஸ்ப்ரெட் - அரை கப்
 வாழைப்பழக்கூழ் - கால் கப்
 கோதுமை மாவு - 5 டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய வால்நட்ஸ் - கால் கப்
 வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - அரை டீஸ்பூன்

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். லோஃப் பானில் (loaf pan) எண்ணெய் தடவவும் அல்லது உள்ளே பெர்ச்மென்ட் பேப்பரை விரித்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் நூடெல்லா ஸ்ப்ரெட், வாழைப்பழக்கூழ், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து மிருதுவாகும் வரை அடிக்கவும். இதனுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வால்நட்ஸ் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை லோஃப் பானில் ஊற்றி 12- 15 நிமிடங்கள் `பேக்’ செய்யவும். வயர் ரேக்கில் வைத்து ஆறவிடவும். நூடெல்லா பிரவுனீஸ் தயார்.

குறிப்பு: நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை நறுக்கி மசித்தால் கால் கப் வாழைப்பழக்கூழ் கிடைக்கும்.

மற்ற கொட்டை வகைகளை விடவும் வால்நட்டிலேயே அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism