ஓட்டல்களில் கிடைக்கும் சப்பாத்தி, புரோட்டாக்களில் மாவு முதல் எண்ணெய் வரை எல்லாவற்றிலும் சிலபல பிரச்னைகள் இருக்கக்கூடும். அதனாலேயே பலர் இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பதுண்டு.

இனி தயக்கம் வேண்டாம்... எடை குறைப்பு / நீரிழிவுக் கட்டுப்பாட்டுக்கு உதவும் குளூட்டன் ஃப்ரீ சிறுதானிய பராத்தா / ரொட்டி வகைகளை வீட்டிலேயே செய்யலாம்!

ரொட்டி இடும் முறை

பிசைந்த மாவை ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து மாவு பிசைய பயன்படுத்திய அதே மாவில் தோய்த்து எடுத்து ஐந்து முதல் ஆறு அங்குலம் அகலம் உள்ள சற்று மெல்லிய சப்பாத்தியாக இடவும். சூடான சப்பாத்திக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு அதன் மேல் பாகம் முழுவதும் தண்ணீரால் ப்ருஷ் செய்யவும். மேல் பாகத்தில் இருக்கும் தண்ணீர் காய்ந்துபோனதும் திருப்பிவிடவும். சற்று வெந்ததும் மீண்டும் திருப்பிவிட்டு, எண்ணெய் அல்லது நெய் விடவும். இரண்டு பக்கமும் வேகும்வரை மிதமான தீயில் சப்பாத்தியை வேகவைத்து எடுக்கவும். இந்த வகை சப்பாத்திகளைச் சூடாகப் பரிமாற வேண்டும்.

மிக்ஸ்டு நவ சிறுதானியம் பராத்தா

மாவு பிசையும் முறை:

தானியங்களைத் தனித்தனியாக நன்றாகக் கழுவவும். தனித்தனியாக முளை கட்ட விடவும். பிறகு இவற்றை வெயிலில் நன்கு காயவைக்கவும். அனைத்துத் தானியங்களையும் ஒன்று சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும். இந்த மாவு மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

மல்ட்டி கிரெய்ன் (Grain) ரொட்டி

மாவு பிசையும் முறை:

இந்த ரொட்டி செய்வதற்குத் தனித் தனி மாவுகளைச் சேர்த்துச் செய்யலாம். அல்லது சம பங்கு கோதுமை, சோயா, ஓட்ஸ், கடலைப்பருப்பு, தண்டு கீரை விதை, கேப்பை மற்றும் பார்லி ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

ஓட்ஸை மாத்திரம் வெறும் வாணலியில் வறுத்துச் சேர்க்கவும். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும். இந்த மாவு மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

ஸ்டஃப்டு கம்பு பராத்தா, மிக்ஸ்டு நவ சிறுதானியம் பராத்தா, ஸ்டஃப்டு ராகி பராத்தா:

ஸ்டஃப்டு கம்பு பராத்தாவுக்கு, கம்பு ரொட்டிக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளவும். பனீர், கேரட், கொத்தமல்லித்தழை, தக்காளி, சோளம், பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

ஸ்டஃப்டு மிக்ஸ்டு நவ சிறுதானியம் பராத்தாவுக்கு, மிக்ஸ்டு நவ சிறுதானியம் ரொட்டிக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளவும். காலிஃப்ளவரைத் துருவி வெந்நீரில் அலசிக்கொள்ளவும். காலிஃப்ளவர், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

ஸ்டஃப்டு ராகி பராத்தாவுக்கு, ராகி ரொட்டிக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். கேரட்டைத் தோல் சீவி, துருவிக்கொள்ளவும். காலிஃப்ளவரைத் துருவிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கேரட், காலிஃப்ளவர், பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

பிசைந்து வைத்த மாவைச் சப்பாத்திக்குச் செய்வதுபோல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். இரண்டு உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக 4 அங்குலம் அகலம் உள்ள சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் ஸ்டஃபிங்கை, சுற்றிலும் கால் அங்குல இடைவெளி இருக்கும்படி பரப்பவும். மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை ஒட்டிவிடவும். நன்றாக மூடியவுடன் மாவில் புரட்டி எடுத்துக் கையால் தட்டிய பின்னர் குழவியால் மெதுவாகப் பெரிய கனமான சப்பாத்தியாகக் கவனமாக இடவும்.

இப்படிச் செய்த பராத்தாவைச் சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு வேகவைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும்
எடுக்கவும்.