ஆப்பிள் ஃபிரிட்டர்ஸ்

தேவை:  நறுக்கிய ஆப்பிள் - ஒன்று மைதா மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - தலா ஒரு டீஸ்பூன் சர்க்கரை - ஒரு சிட்டிகை மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிளைத் தோல், விதை நீக்கி விரல் அளவு பருமனாக நறுக்கவும். மைதா மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்துச் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

காம்போ பர்ஃபி

தேவை:  வறுத்த ரவை வறுத்த கடலை மாவு - தலா 50 கிராம்
முந்திரி - 10 (பொடிக்கவும்) ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
பால் பவுடர் - 50 கிராம் சர்க்கரை - 250 கிராம் நெய் - 150 மில்லி (உருக்கவும்).

செய்முறை:  கடாயில் சர்க்கரை சேர்த்து, அது மூழ்கும் அளவு நீர்விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இத்துடன் வறுத்த ரவை, கடலை மாவு, பால் பவுடர் பொடித்த முந்திரி சேர்த்துக் கிளறவும் (நடுநடுவே நெய் சேர்க்கவும்). கலவை கடாயில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஏலக்காய்த்தூள் தூவி விரும்பிய வடிவில் வில்லைகளாகப் போடவும்.

டைஜஷன் பால்ஸ்

தேவை:  ஓமம், சீரகம், மிளகு, மல்லி (தனியா) - தலா ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய வெல்லம் - 50 கிராம் நெய் - 50 மில்லி (உருக்கவும்) உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஓமம், சீரகம், மிளகு, தனியாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து சிறிய சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அஜீரணத்துக்குக் கைகண்ட மருந்து இது.

சாக்லேட் கேசரி

தேவை:  வறுத்த ரவை - 100 கிராம் சர்க்கரை - 150 கிராம்
சாக்லேட் சிரப் (அ) எசென்ஸ் (அ) துருவிய சாக்லேட் - சிறிதளவு
வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10 நெய் - 150 மில்லி (உருக்கவும்).

செய்முறை: கடாயில் சர்க்கரை சேர்த்து, 300 மில்லி தண்ணீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் ஏற்றி கொதி வரும்போது ரவை சேர்த்துக் கிளறவும். வெந்த பின் சாக்லேட் சிரப் (அ) துருவல் (அ) எசென்ஸ் சேர்க்கவும். நெய்விட்டு நன்கு கிளறி, கடாயில் ஒட்டாமல் வரும்போது இறக்கி, முந்திரி, திராட்சை சேர்க்கவும். இதற்கு ஏலக்காய் வேண்டாம்.

ஸ்வீட் பூரண தோசை

தேவை:  துருவிய தேங்காய் - ஒரு கப் (அரைக்கவும்) துருவிய வெல்லம் - முக்கால் கப் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
தோசை மாவு - 2 கப் நெய் - தேவையான அளவு.

செய்முறை:  துருவிய வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். வெல்ல நீருடன் அரைத்த தேங்காய் சேர்த்துப் பூரணம் கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். ஒரு கரண்டி தோசை மாவு எடுத்து தோசை வார்த்து 2 டீஸ்பூன் பூரணத்தை அதன்மேல் நன்கு பரவலாகச் சேர்த்து, நெய்விட்டு வேகவிட்டு மடித்துப் பரிமாறவும். இது ஒரு கிட்ஸ் ஸ்பெஷல் தோசை.

சுண்டல் சாண்ட்விச்

தேவை:  வீட்டில் செய்த பட்டாணி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சுண்டல் (ஏதேனும் ஒன்று) - அரை கப் பிரெட் ஸ்லைஸ் - 8 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
லவங்கம் - தேவையான அளவு.

செய்முறை:  2 பிரெட் ஸ்லைஸ் எடுத்து மேலும் கீழும் வெண்ணெய் தடவவும். ஒரு பிரெட் துண்டுமீது சுண்டல் சேர்த்து மறு பிரெட் துண்டால் மூடி நாற்புறமும் லவங்கம் செருகி, தவாவில் டோஸ்ட் செய்து பரிமாறவும்.

சீரகம் சோம்பு மசாலா அவல்

தேவை:  கெட்டி அவல் - ஒரு கப் சீரகம், சோம்பு, கடுகு - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  கெட்டி அவலை ஊறவிட்டு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் உப்பு, வேர்க்கடலைப் பொடி மற்றும் ஊறிய அவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

வண்டிக்காரன் சட்னி

தேவை:  வெங்காயம், தக்காளி - தலா 2 (நறுக்கவும்) காய்ந்த மிளகாய் - 10 உப்பு - தேவையான அளவு பூண்டு - 6-8 பல் (தோல் உரிக்கவும்) புளி - சிறிய நெல்லி அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:  நல்லெண்ணெய் தவிர மற்ற பொருள்களை அம்மி (அ) சிறிய கல் உரல் (அ) மிக்ஸியில் சேர்த்து நன்கு மசிக்கவும். நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும்.

சோம்பு வெந்தய டீ

தேவை:  சோம்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன் பொடித்த வெல்லம் - தேவையான அளவு சூடான பால் - முக்கால் கப்
டீத்தூள் - அரை டீஸ்பூன். (இவை அனைத்தும் ஒரு கப் அளவுக்குத் தேவையான அளவு)

செய்முறை:  வெறும் வாணலியில் சோம்பு, வெந்தயத்தை வறுக்கவும். இதனுடன் அரை கப் நீர், டீத்தூள் சேர்த்து, கால் கப்பாகக் குறுகவிட்டு வடிகட்டவும். சூடான பாலுடன் வெல்லம் சேர்த்துக் கரைக்கவும். இதனுடன் டீ டிக்காக்ஷன் சேர்த்துப் பரிமாறவும்.

பூண்டு புதினா பொடி

தேவை:  புதினா - ஒரு கட்டு (சருகாகக் காய்ந்தது) தோல் உரித்த பூண்டு - 10 பல் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  வாணலியில் நெய்யைச் சூடாக்கி பூண்டு சேர்த்து வறுத்து, புதினாவையும் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் வேர்க்கடலை, புதினா, பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாகப் பொடிக்கவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட, இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குக் தொட்டுக்கொள்ள சுவையான சைடிஷ் தயார்.

பருப்பு பனீர் கட்லெட்

தேவை:  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம் துருவிய பனீர் - 100 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு (சிறியது) - ஒன்று (துருவவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கைப்பிடி அளவு நெய், எண்ணெய் (சேர்த்து) - 50 கிராம், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:  பருப்பு வகைகளை அரை மணி ஊறவிட்டு ரவையாக அரைக்கவும். இதனுடன் நெய், எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாக செய்யவும். கட்லெட்டுகளைத் தவாவில் போட்டு, எண்ணெய் - நெய் கலவையைச் சுற்றிலும் ஊற்றி, சற்றே சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

நெல்லிக்காய் ஜாம்

தேவை:  கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் - 10 (வேகவைக்கவும்)
சர்க்கரை - 100 கிராம் சிறிய எலுமிச்சைப்பழம் - பாதியளவு உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:  வேகவைத்த நெல்லிக்காயை விழுதாக்கிக்கொள்ளவும். நெல்லி விழுது, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்த்துச் சூடாக்கிக் கரையவிடவும். சற்றே நீர்த்துக்கொள்ளும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஜாம் பதம் வரும் வரை கிளறி எடுத்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். உடனடி உபயோகத்துக்கானது இது. ஒன்று அல்லது இரண்டு நாள்கள் தாங்கும்.

சின்ன வெங்காய ஊறுகாய்

தேவை:  சின்ன வெங்காயம் - 200 கிராம் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் - 100 மில்லி உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து, நறுக்கவும். 50 கிராம் நல்லெண்ணெயைச் சூடாக்கி அதில் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து இறக்கவும். வாணலியில் 50 கிராம் எண்ணெயைச் சேர்த்துக் காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறிய பின் காரம் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

தேன் மிட்டாய்

தேவை:  புழுங்கலரிசி - 100 கிராம் உளுத்தம்பருப்பு - 25 கிராம்
ஜவ்வரிசி - 10 கிராம் சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன் உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை
எண்ணெய் - 200 மில்லி.

செய்முறை:  புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவிட்டு மையாக அரைத்து உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி மாவை நெல்லிக்காய் அளவு சிறிய சிறிய உருண்டகளாக உருட்டிப் போட்டுப் பொரிக்கவும். சர்க்கரையுடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். பொரித்த உருண்டைகளைச் சூடான பாகில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, பொடித்த சர்க்கரை - ஏலக்காய்த்தூளில் புரட்டி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தட்டில் வைக்கவும்.

வெள்ளை - கறுப்பு எள் காம்போ சிக்கிஸ்

தேவை:  வறுத்த வெள்ளை எள், கறுப்பு எள் - தலா 50 கிராம்
பாகு வெல்லம் - 100 கிராம் நெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - சிறிதளவு.

செய்முறை: கடாயைச் சூடாக்கி வெல்லம், 2 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து முற்றிய பாகு காய்ச்சி அடுப்பை நிறுத்தவும். பாகுடன் வெள்ளை எள், கறுப்பு எள், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை நெய் தடவிய தட்டுக்கு மாற்றி அப்பளக் குழவியால் நன்கு எல்லா பக்கமும் அழுத்திவிட்டுச் சற்றே சூடாக இருக்கும்போது வில்லைகள் போடவும்.

பிரெட் ரபடி

தேவை:  பிரெட் ஸ்லைஸ் - 4 ஃபுல் க்ரீம் பால் - 500 மில்லி
சர்க்கரை - 50 கிராம் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
பாதாம் - 3 (சீவவும்) நெய் - 100 மில்லி.

செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை ஓரம் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துச் சூடாக்கி தயிர் பதம் வரும் வரை குறுக்கவும். நெய்யைச் சூடாக்கி பிரெட் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஒரு தட்டில் பொரித்த பிரெட் துண்டுகளை வைத்து மேலே குறுக்கிய பால் (ரபடி) ஊற்றி, ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம் தூவிப் பரிமாறவும்.

பொரித்த கொழுக்கட்டை

தேவை: மேல் மாவுக்கு: கோதுமை மாவு - அரை கப் நெய் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை.
பூரணத்துக்கு: தேங்காய் - அரை மூடி (துருவவும்) வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு வறுத்துப் பொடித்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன் நெய் - சிறிதளவு.
பொரிக்க: எண்ணெய் - 150 மில்லி.

செய்முறை:  வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதைக் கடாயில் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பூரணம் கிளறி பொடித்த எள், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல் பிசைந்து, சிறு உருண்டைகளாக்கி, மினி தட்டை அளவு பூரிகளாகத் திரட்டவும். நடுவில் சிறிதளவு பூரணக் கலவை வைத்து நன்கு குவித்து மூடி சிறிதளவு நீர்கொண்டு மேற்புறம் பிரியாமல் இருக்கும்படி ஒட்டவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொழுக்கட்டைகளைப் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.

கீரை சொதி

தேவை:  ஏதேனும் ஒரு கீரை - ஒரு கட்டு தோல் சீவி, நறுக்கிய இஞ்சி - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) பூண்டு - 2 பல் (நசுக்கவும்) பட்டை - ஒரு சிறிய துண்டு லவங்கம் - 2
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்) தேங்காய் - ஒன்று தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - சிறிதளவு.

செய்முறை:  கீரையை ஆய்ந்து, அலசி, பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி மூன்று முறை பால் எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி பட்டை, லவங்கம் தாளித்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் மூன்றாம் பால் சேர்த்துக் கீரையைப் பாதி வேகவிடவும். இப்போது இரண்டாம் பால் சேர்த்துக் கீரை வெந்தவுடன், மூன்றாம் பால் சேர்த்து ஒரு கொதி வந்தபின் இறக்கவும்.

சீஸ் டாப்டு டீ டைம் ஸ்நாக்

தேவை:  ரஸ்க் - 10 சீஸ் - 50 கிராம் (துருவவும்) நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய் - 2 டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு.

செய்முறை:  ஒவ்வொரு ரஸ்க்கையும் தவாவில் தனித்தனியாக ஒரு சொட்டு நெய்விட்டு இருபுறமும் சூடாக்கவும். ரஸ்க்கின் மேலே துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லித்தழை வைத்து, உப்பு, மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

சுரைக்காய் சப்ஜி

தேவை:  நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப் துவரம்பருப்பு, கடலைப் பருப்பு - தலா 50 கிராம் தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்).

செய்முறை:  குக்கரில் நெய்யைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளிக்கவும் இதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து மூடி, மூன்று விசில்விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மணத்தக்காளிக்கீரை சட்னி

தேவை:  பொடியாக நறுக்கிய மணத்தக்காளிக்கீரை - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பெருங்காயத்தூள் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் வெல்லம் - சுண்டைக்காய் அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன்.

செய்முறை:  ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மணத்தக்காளி, நறுக்கிய தக்காளியை நன்கு வதக்கி எடுக்கவும். மீதம் உள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் கடாயில்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூளை வறுத்துக்கொள்ளவும். இதனுடன் வதக்கிய கீரை, தக்காளி, தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். தாளிக்கும் பொருள்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

மாங்காய் இஞ்சி சாதம்

தேவை:  உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப் தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) கேரட் துருவல் - சிறிதளவு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச்சாறு - சிறிதளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை:  கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருள்களைத் தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். உதிர் உதிராக வடித்த சாதத்தில் வதக்கிய மாங்காய் இஞ்சி கலவை, கேரட் துருவல், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். உப்பு, புளிப்பு, உறைப்புமாகச் சுவையில் அசத்தும் இந்த சாதம்.

சேனைக்கிழங்கு சிப்ஸ்

தேவை:  சேனைக்கிழங்கு - கால் கிலோ புதினா - கொத்தமலித்தழை - பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் பொடித்த ரஸ்க் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கைத் தோல் நீக்கி நீளமாக 2 இன்ச் அளவுக்கு நறுக்கவும். நறுக்கிய சேனைத் துண்டுகள், பொடித்த ரஸ்க், புதினா - கொத்தமல்லித்தழை - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாகப் பிசிறவும். சூடான எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும்.

மாதுளைத் துவையல்

தேவை:  மாதுளை முத்துகள் - ஒரு கப் பச்சை மிளகாய் - 4 அல்லது 5 பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். மாதுளை முத்துகள், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். தாளிக்கும் பொருள்களைத் தாளித்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

அப்பள பேல்

தேவை:  உளுந்து அப்பளம் - 4 (2 இன்ச் நீளத்துக்கு கட் செய்யவும்)
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - அரை கட்டு (நறுக்கிக்கொள்ளவும்) எலுமிச்சைச்சாறு - சிறிதளவு கரம் மசாலாத்தூள், உப்பு - சிறிதளவு எண்ணெய் (பொரிக்க) - 100 கிராம்.

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கட் செய்த அப்பளங்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதனுடன் மற்ற பொருள்களைச் சேர்த்துப் பரிமாறவும்.

கார்ன்ஃப்ளேக்ஸ் குழம்பு

தேவை:  கார்ன்ஃப்ளேக்ஸ் - கைப்பிடி அளவு நீர்க்கக் கரைத்த புளிச்சாறு - ஒரு கப் சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 100 மில்லி.
தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:  கடாயில் 100 மில்லி எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, கார்ன் ஃப்ளேக்ஸைப் பொரித்தெடுக்கவும். சிறிதளவு எண்ணெயில் தாளிக்கும் பொருள்களைத் தாளித்து புளித்தண்ணீர், மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். கார்ன்ஃப்ளேக்ஸ், கறிவேப்பிலை தூவிக் கலந்து பரிமாறவும். ரெடிமேடாக விற்கும் பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸிலும் இதைத் தயாரிக்கலாம்.

குடமிளகாய் கொத்சு

தேவை:  குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்) புளிக்கரைசல் - அரை கப் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மல்லி (தனியா), வெள்ளை எள் - தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம், கடுகு - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களை எண்ணெயில் வறுத்துப் பொடிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு பெருங்காயத்தூள் தாளித்து, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்க்கவும். கொதி வரும்போது வறுத்துப் பொடித்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் ஒரு கொதி வரவிட்டு இறக்கவும்.

பூந்தி முந்திரி கீர்

தேவை:  ஸ்வீட் பூந்தி - 50 கிராம் அல்லது லட்டு - ஒன்று
முந்திரி விழுது - 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரி விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சற்றே சூடாக்கி, ஸ்வீட் பூந்தி / உதிர்த்த லட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

ஸ்வீட் பொட்டேட்டோ மிக்ஸர்

தேவை:  சர்க்கரைவள்ளிக்கிழங்கு - கால் கிலோ வறுத்த வேர்க்கடலை - 50 கிராம் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு எண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு துண்டுகளைப் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையையும் பொரித்து எடுக்கவும். இவற்றுடன் வறுத்த வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு குலுக்கி, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

இஞ்சி மல்லி தொக்கு

தேவை:  நார், தோல் நீக்கிய இளம் இஞ்சி - 50 கிராம் (நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு (ஆய்ந்துகொள்ளவும்)
புளி - நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் - 5
எண்ணெய் - 100 கிராம் உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை:  இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், புளியைச் சிறிதளவு எண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில்விட்டுச் சூடாக்கி, தாளிக்கும் பொருள்களைத் தாளித்து அரைத்த விழுது சேர்த்து, தொக்கு போல் கிளறி எடுக்கவும்.

வகைகள் ஏராளம்... சுவையோ தாராளம்!

சாதம், சாம்பார், ரசம், பொரியல், இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், சப்பாத்தி, பிரெட் ஜாம்... பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களின் சாப்பாட்டு உலகம் இந்த மெனுக்குள் அடங்கிவிடும். உணவின் சுவை, தனிப்பட்ட விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து திருப்தியாகச் சாப்பிடுபவர்கள், சாப்பிட்டாக வேண்டுமே என்று சாப்பிடுபவர்கள் என இரு வகையினர் இருக்கின்றனர்.

இதில் எந்த வகையினராக இருந்தாலும் வித்தியாசமான ரெசிப்பி ஒன்றைச் செய்யும்போது பெரும்பாலும் ருசித்துச் சாப்பிடுவார்கள். உடனடியாகச் செய்யக்கூடிய, சுவையான, வித்தியாசமான பல்வேறு வகையில் உடல்நலத்துக்கு உதவும் ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல் கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.

``சாக்லேட் கேசரி, சுண்டல் சாண்ட்விச், ஆப்பிள் ஃபிரிட்டர்ஸ், பருப்பு பனீர், கட்லெட், மாதுளைத் துவையல், பனானா கோசம்பரி என இங்கே வரிசைகட்டி நிற்கும் ரெசிப்பிகள் உங்கள் வீட்டு டைனிங் அறைக்கு உற்சாகத்தைக் கொண்டுவரும் என நம்புகிறேன்’’ என்று அன்பும் அக்கறையும் நிறைந்த குரலில் கூறுகிறார் லக்ஷ்மி.

படங்கள்: பா.கார்த்திகா