என்ன சுவை என்ன சுவை... இப்படித்தான் வியக்கத் தோன்றும், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை ருசிக்கும்போது! தண்ணீர் நீக்கப்பட்ட மிக அடர்த்தியான பாலில் நிறையவே சர்க்கரை சேர்க்கப்பட்டு டின் டின்னாக ஸ்வீட்டண்டு கண்டன்ஸ்டு மில்க் விற்பனை செய்யப்படுகிறது. திறக்காத வரை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பது இன்னொரு வசதி. உலகின் பல பகுதிகளில் இனிப்பு வகைகள் தயாரிப்பில் இந்த அடர் இனிப்புப் பாலே பயன்படுத்தப்படுகிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ரஷ்யாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கண்டன்ஸ்டு மில்க் பயன்பாட்டில் இருந்ததாக, மார்கோபோலோ தன் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். 1800-களில் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து எனத் தொடங்கி புவியெங்கும் பிரபலமாகத் தொடங்கியது.இதோ... விதவிதமான டெஸர்ட்களை கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்திச் செய்யும் முறையை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். இல்லம் இனிக்கட்டுமே!

பிரவுன் ரைஸ் போமகிரனேட் மூஸ்

தேவையானவை:
* பழுப்பு அரிசி - அரை கப்
* மாதுளை முத்துகள் - அரை கப்
(சாறு எடுக்கவும்)
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* பால் பவுடர் - அரை கப்
* சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* பால் - கால் கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* மாதுளை முத்துகள்
(அலங்கரிக்க) - சிறிதளவு

செய்முறை:

பழுப்பு அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் மாதுளம்பழச்சாறு, சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிட்டு சாஸ் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து பால், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, மிதமான தீயில் வேகவிட்டு, கலவை கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் பழுப்பு அரிசி சாதம் - கண்டன்ஸ்டு மில்க் கலவை, மாதுளம்பழ சாஸ், பால் பவுடர் சேர்த்து மிருதுவாக அரைத்தெடுக்கவும். இதைச் சிறிய பவுல்கள் அல்லது கண்ணாடி டம்ளர்களில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். மாதுளை முத்துகள் கொண்டு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

* ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் காபி, டீ போன்ற பானங்களில் பால், சர்க்கரைக்குப் பதிலாக கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தப்படுகிறது.

காஷ்மீரி பிர்னி

தேவையானவை:
* பால் - ஒரு கப்
* சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
* பாஸ்மதி அரிசி - அரை கப்
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
* நறுக்கிய பாதாம், பிஸ்தா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:
* நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:

அரிசியைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். குங்குமப்பூவை 2 டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும். அரிசியைத் தண்ணீர் வடித்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அடிகனமான கடாயில் பாலைச் சூடாக்கி, குமிழ்கள் வந்ததும் தீயைக் குறைக்கவும். அரிசி மாவு, கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ கலவை, ஏலக்காய்த்தூள், நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து, கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் வரை அடிக்கடி கிளறிவிடவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும் (ருசி பார்த்து சர்க்கரையின் அளவை அட்ஜஸ்ட் செய்வது நல்லது). சர்க்கரை கரைந்து, அரிசி நன்கு வெந்ததும் பிர்னி தயார். சிறிது நேரம் ஆறியதும் மண் பாண்டத்தில் பிர்னியைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்து, ஜில்லென்று பரிமாறவும்.

* உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் பால் பொருள்களை உணவாகக் கொள்கின்றனர்.

சாக்லேட் சூஃப்ளே

தேவையானவை:
* கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
* கோகோ பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
* நறுக்கிய வால்நட் - 50 கிராம்
* ஜெலெட்டின் - 3 டேபிள்ஸ்பூன்
* பால் - 2 கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

அலங்கரிக்க:
* விப்டு க்ரீம், துருவிய சாக்லேட் -
தேவையான அளவு

செய்முறை:

அரை கப் வெந்நீரில் ஜெலெட்டினைக் கரைக்கவும். ஒரு கப் பாலுடன் கோகோ பவுடர் சேர்த்து 5 - 7 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

ஜெலெட்டின், வால்நட், மீதமுள்ள ஒரு கப் பால், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து இறக்கி தனியே வைக்கவும். ஒரு பவுலில் க்ரீமைப் போட்டு அடித்து பால் - கோகோ கலவையைச் சேர்க்கவும். இதைக் குளிரவைத்து அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

* ஜெலெட்டினில் புரதமும் கால்சியமும் அதிக அளவில் காணப்படுகிறது.

ஓட் சாக்கோ லாக்

தேவையானவை:
* ஓட்ஸ் - 2 கப்
* கண்டன்ஸ்டு மில்க் - முக்கால் கப்
* வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* கோகோ பவுடர் - அரை கப்
* சாக்கோ சிப்ஸ் - கால் கப்
* நறுக்கிய பாதாம், வால்நட்,
முந்திரி (சேர்த்து) - அரை கப்

செய்முறை:

ஓட்ஸை வெறும் கடாயில் வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்து, ஒரு பவுலில் சேர்க்கவும். கடாயைச் சூடாக்கி, வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பாதாம், வால்நட், முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து ஓட்ஸ் பொடியுடன் சேர்க்கவும். இதனுடன் கோகோ பவுடர், சாக்கோ சிப்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும். இதை மாவாகப் பிசைந்துகொண்டு மரத்துண்டுகள் வடிவில் உருட்டி, சில்வர் ஃபாயிலில் வைத்துச் சுற்றி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

* கோகோ பவுடரில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் ஆகிய தாதுக்கள் உள்ளன.

ஆப்பிள் ஜிலேபி

தேவையானவை:
* ஆப்பிள் - 2
* மைதா - 2 கப் + 2 டேபிள்ஸ்பூன்
* பட்டைத்தூள் - 2 டீஸ்பூன்
* தயிர் - கால் கப்
* எண்ணெய் - தேவையான அளவு

சர்க்கரைப் பாகு செய்ய:
* சர்க்கரை - ஒரு கப்
* ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* தண்ணீர் - ஒன்றரை கப்

ரபடி செய்ய:
* பால் - அரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* குங்குமப்பூ - சிறிதளவு
* நறுக்கிய நட்ஸ்
(முந்திரி, பாதாம், பிஸ்தா) - கால் கப்

செய்முறை:

ஆப்பிளை வட்டமாக நறுக்கி, கொட்டையை நீக்கி, நடுவில் ஓட்டை போட்டுக்கொள்ளவும் (`டோநட்’டில் இருப்பது போல). 2 டேபிள்ஸ்பூன் மைதாவுடன் பட்டைத்தூள் சேர்த்து, இதை ஆப்பிள் துண்டுகளின் மேல் பரவலாகத் தூவி தனியே வைக்கவும். சர்க்கரையை ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள மைதாவுடன் தயிர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். மைதா கரைசலில் ஆப்பிள் துண்டுகளைத் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் பொரிக்கவும். அவற்றைச் சர்க்கரைப் பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும். பாலைக் கொதிக்கவைத்து கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ, நறுக்கிய நட்ஸ் சேர்த்து ரபடி தயாரிக்கவும். ஆப்பிளை சர்க்கரைப் பாகில் இருந்து எடுத்து ட்ரேயில் வைக்கவும். அதன்மீது ரபடியை ஊற்றி, குறைந்தது ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

* ஆப்பிளில் 7,500-க்கும் அதிக வகைகள் உள்ளன.

பாட்டிஷப்டா

தேவையானவை - க்ரெப்ஸ் (crepes) செய்ய:
* மைதா - ஒரு கப்
* ரவை - 4 டேபிள்ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
* பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
* பால் - ஒரு கப்
* நெய் - 4-5 டேபிள்ஸ்பூன்

ஸ்டஃபிங்குக்கு:
* தேங்காய்த் துருவல் - 2 கப்
* கண்டன்ஸ்டு மில்க் - முக்கால் கப்
* முந்திரி - 10
* பிஸ்தா - கால் கப்
* உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

கடாயைச் சூடாக்கி நெய்விட்டு முந்திரி, பிஸ்தா, திராட்சையை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கி, கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும்.

வறுத்த முந்திரி, பிஸ்தா, திராட்சை சேர்த்து ஒரு பவுலுக்கு மாற்றவும். ஃபில்லிங் தயார். மைதா, ரவை, அரிசி மாவு, பேக்கிங் சோடா, பால், பொடித்த சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மாவாகக் கரைத்துக்கொள்ளவும். தவாவைச் சூடாக்கி நெய்விட்டு ஒரு கரண்டி மாவுவிட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். இந்த பான்கேக்குகளைச் சிறிது நேரம் ஆறவிட்டு, நடுவில் ஒரு முழு ஸ்பூன் அளவுக்கு ஃபில்லிங் வைத்துச் சுருட்டி, டூத்பிக் குத்திப் பரிமாறவும்.

* சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 24 கிலோ சர்க்கரை உபயோகிக்கிறார். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது இன்னும் 9 கிலோ அதிகம்.

வால்நட் ஃபட்ஜ் ஃபிங்கர்ஸ்

தேவையானவை:
* கோகோ பவுடர் - கால் கப்
* வால்நட் - அரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* வெண்ணெய் - கால் கப்
* சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெனிலா எசென்ஸ் - ஒரு மூடி

செய்முறை:

அகலமான நான் - ஸ்டிக் பானை (non - stick pan) சூடாக்கி, கண்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், சர்க்கரை, கோகோ பவுடர், வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 3 நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். பிறகு இறக்கி வால்நட் சேர்த்துக் கலக்கவும்.

கலவையை நெய் தடவிய ட்ரேயில் சேர்த்து ஆறவிடவும். கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விரல்கள் போல செய்து கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 2 - 3 நாள்கள் பயன்படுத்தலாம்.

* வால்நட்டில் புரதச்சத்தோடு நம் உடலுக்கு அவசியமான கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன.

ஸ்வீட் சாக்லேட் பானி பூரி

தேவையானவை:
* பானி பூரி - 12
* டார்க் சாக்லேட் - 2 கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - 2 கப்
* கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
* நறுக்கிய பழக்கலவை - 3 கப்
(ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் அல்லது உலர்பழங்கள்)

செய்முறை:

சாக்லேட், ஃப்ரெஷ் க்ரீமை டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். பானி பூரியில் ஓட்டைகள் போட்டு, சாக்லேட்டில் முக்கி எடுக்கவும். 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்யவும். கண்டன்ஸ்டு மில்க்குடன் பழக்கலவை சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பானி பூரியில் பழக்கலவை நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

* பானிபூரியில் வழக்கமான புளிப்பு - கார நீருக்குப் பதிலாக வெள்ளரிக்காய் ஜூஸ் பயன்படுத்தினால் புதிய சுவை கிடைக்கும்.

லேயர்டு கஸ்டர்ட் டிலைட்

தேவையானவை:
* பால் - ஒரு லிட்டர்
* கஸ்டர்ட் பவுடர் - 8 டீஸ்பூன்
* கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டின்
* சர்க்கரை - ஒரு கப்
* வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
* சாக்லேட் கேக் க்ரம்ஸ் - ஒரு கப்
* கிவிப் பழம் - 8
* கார்ன்ஃப்ளேக்ஸ் - 8 டேபிள்ஸ்பூன்
* நொறுக்கிய முந்திரி - 4 டேபிள்ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
* துருவிய சாக்லேட் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கஸ்டர்ட் பவுடரைக் கண்ணாடி டம்ளரில் போட்டு, சிறிதளவு பால்விட்டுக் கரைத்துக்கொள்ளவும். நான்-ஸ்டிக் பானில் (pan) மீதமுள்ள பாலைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் கண்டன்ஸ்டு மில்க், அரை கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு கஸ்டர்ட் கரைசல், வெனிலா எசென்ஸ் சேர்த்து மிருதுவாகவும் கெட்டியாகவும் ஆகும் வரை கைவிடாமல் கிளறவும்.

பின்னர் இறக்கி ஆறவிட்டு, ஹேண்ட் மிக்ஸரால் மென்மையாக, க்ரீம் பதத்துக்கு வருமாறு அடித்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் அளவுக்கு எடுத்து, கோகோ பவுடர் சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் அடித்துக்கொள்ளவும். சாக்லேட் கஸ்டர்ட் தயார். கஸ்டர்ட், சாக்லேட் கஸ்டர்ட் இரண்டையும் சிறிய பவுல்களில் சேர்த்து ஃப்ரிட்ஜில் குளிரவைக்கவும்.

கிவிப் பழங்களைத் துண்டுகளாக நறுக்கி தவாவில் சேர்த்து, அரை கப் சர்க்கரை சேர்த்துக் கலந்து, 2 நிமிடங்கள் வேகவிட்டு, இறக்கி ஆறவிடவும். முந்திரி, உலர்திராட்சையை நெய்யில் வறுக்கவும்.

சிறிய டெசர்ட் பவுல்களில் (dessert bowl) முதலில் ஒரு முழு ஸ்பூன் அளவுக்கு சாக்லேட் கேக் துகள்களைச் சேர்க்கவும். அதன் மீது சிறிதளவு கஸ்டர்ட் சேர்க்கவும். அதன் மீது சிறிதளவு சாக்லேட் கஸ்டர்ட், வறுத்த முந்திரி - திராட்சை, கார்ன் ஃப்ளேக்ஸ், மீண்டும் சிறிதளவு கஸ்டர்ட் சேர்க்கவும்.

அதன் மீது சிறிதளவு கிவிப் பழ விழுது, வறுத்த முந்திரி - திராட்சை, கார்ன் ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். ஒவ்வொரு பவுலிலும் சாக்லேட் துருவல் சேர்த்து அலங்கரிக்கவும். லேயர்டு கஸ்டர்ட் டிலைட் தயார்.

* மடகாஸ்கர், மெக்ஸிகோ, இந்தோனேசியா, உகண்டா நாடுகளில் உற்பத்தியாகும் வெனிலா டீன்களே உலகம் முழுக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

தண்டய் ஆப்பிள் பிர்னி வித் பிரவுன் ரைஸ்

தேவையானவை:
* பழுப்பு பாஸ்மதி அரிசி - கால் கப்
* பால் - அரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* ஆப்பிள் - ஒன்று (தோல் நீக்கி நறுக்கவும்)
* ஆலிவ் ஆயில் - சிறிதளவு

தண்டய் மசாலாவுக்கு:
* பாதாம் - 10
* முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் - 8
* ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்
* கசகசா - ஒரு டீஸ்பூன்
* பெருஞ்சீரகம், குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:
* உலர்ந்த ரோஜா இதழ்கள், எடிபிள் சில்வர்
* ஃப்ளேக்ஸ் - தேவையான அளவு

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவிடவும். பாதாம் பருப்பையும் 20 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் ஆலிவ் ஆயில்விட்டு, நறுக்கிய ஆப்பிள் சேர்த்து, மிருதுவாகும் வரை வதக்கவும் (7-8 நிமிடங்கள்). பாஸ்மதி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும். பாதாமை தோலுரிக்கவும். ஏலக்காயிலிருந்து விதைகளை எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் தண்டய் மசாலாவுக்குக் கொடுத்துள்ள மற்ற பொருள்களைச் சேர்த்து (குங்குமப்பூ நீங்கலாக)கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பாலைக் கொதிக்கவிட்டு, பிறகு அடுப்பை `சிம்’மில் வைத்து பாஸ்மதி அரிசி சாதம், வதக்கிய ஆப்பிள் சேர்த்து மசித்துக்கொள்ளவும். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும். தண்டய் மசாலாவைக் கொதிக்கும் பால் கலவையில் சேர்க்கவும். குங்குமப்பூவையும் சேர்த்து நன்கு கலந்து இறக்கி, ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிரவைக்கவும். சிறிய பவுல்களில் ஊற்றி, உலர்ந்த ரோஜா இதழ்கள், எடிபிள் சில்வர் ஃப்ளேக்ஸ் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

* உலகின் பாஸ்மதி அரிசி தேவையில் 65 சதவிகித அளவை இந்தியாவே பூர்த்தி செய்கிறது.