பாரம்பர்ய உணவு வகைகளை நவீன இயந்திரங்கள் எதுவுமின்றி, பாரம்பர்ய முறைப்படியே சமைத்துப் பரிமாறும் `ஆற்காடு உணவுத் திருவிழா’ சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. பார்த்தாலே திகட்டும் அளவுக்கு உணவு வகைகளை அடுக்காமல், மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெனுவை தயார்செய்து வைத்திருந்தார் இந்த விழாவின் மாஸ்டர் செஃப் மஞ்சுளா.

சைவமும் இருந்தாலும், அசைவ உணவின் மணம் முந்திக்கொண்டு சுண்டியிழுத்தது. ஆவி பறக்கும் ஆட்டு நெஞ்செலும்பு சூப்புடன் செஃப் மஞ்சுளாவிடம் பேசினோம்.

``ஆற்காடுதான் என் சொந்த ஊர். சின்ன வயசுலயிருந்தே சமையல்மீது அதிக ஈடுபாடு. அதுலயும் ஆற்காடுக்கே உரிய தனித்துவமான உணவு வகைகள்மீது ஆர்வம் அதிகம். முடிஞ்சளவுக்கு எல்லாத்தையும் கத்துக்கிட்டு, `முதலியார்ஸ் ஆற்காடு கிச்சன்’னு சாந்தோம்ல ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சோம். ஒருகட்டம் வரைதான் அதைத் தொடர முடிஞ்சது.

அப்புறம் ஒரு ஐ.டி கம்பெனில வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். ஆனாலும், சமையல்மீது இருக்கிற விருப்பம் கொஞ்சமும் குறையலை. இந்த மெரிடியன் ஹோட்டல் ஜெனரல் மானேஜர், தலைமை செஃப் எல்லோரும் என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. அதை நல்லவிதமா பயன்படுத்திருக்கேன்னு நம்புறேன். இதுபோல விழா பண்றது இதுதான் முதன்முறை” என்று கூறி செஃப் ஃபேவரைட்டான `விரால் மீன் வறுவ’லையும், `கோழி பிச்சுப் போட்ட’தையும் ருசிக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார்.

சூப்பே சூப்பராக இருந்தது. பிறகு அவர் சொன்னதுபோல இரண்டு உணவு வகைகளையும் தட்டில் அடுக்கி மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தோம்.

``உங்க இன்ஸ்பிரேஷன் யாரு?’’

``எங்க வீட்டுல எல்லாருமே ரொம்ப நல்லா சமைப்பாங்க. என் மாமியார், அம்மா, நான் எல்லாருமே `சமையல் ராணிகள்’தான். எனக்கு இன்ஸ்பிரேஷன், மோட்டிவேஷன் எல்லாமே குடும்பம்தான். அதையும் தாண்டி `பேஷன்’ங்கிற விஷயம் ரொம்ப முக்கியம். அது இருந்தாதான் எந்த ஒரு செயலையும் முழுமையா செய்ய முடியும்.

சரி... சரி... சாப்பிடுங்க... நண்டு வறுவல், மீன் குழம்பு, மட்டன் சுக்கா இதெல்லாம் என் சிக்னேச்சர் டிஷ்” என்றதும், வேறென்ன... வழக்கம்போல இலையை உணவுகளால் நிறைத்தோம்.

ஆற்காடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, மீன் குழம்பு, நண்டு வறுவல் என அத்தனையையும் ருசித்தோம். வித்தியாசமான - ஆனால், விரும்பத்தக்க சுவை. எந்த உணவு வகையிலும் `இன்ஸ்டன்ட் பவுடர்’களை உபயோகிக்கவில்லை என்பதை நன்றாகவே உணர முடிந்தது. அம்மிக்கல்லில் கைப்பட அரைத்த மசாலாவில் நன்கு ஊறியிருந்த இறைச்சித் துண்டுகளின் வாசனையே மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டியது.

சைவப் பிரியர்களுக்கென சீரகக் குழம்பு, எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு, கொத்தவரங்காய் பொரியல் என்று சுடச்சுடப் பரிமாறினார்கள். மண்மணம் மாறாத `ஆற்காடு உணவு’ விருந்தளித்த மஞ்சுளாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, ஆற்காடு ஸ்பெஷல் `மக்கன் பேடா’வைச் சுவைத்துக்கொண்டே விடைபெற்றோம்.

ஆஹா... என்ன ருசி!

-கானப்பிரியா

படங்கள்: க.பாலாஜி