இந்தியாவில் மாதந்தோறும் விழாக்கோலம்தான். பன்முகக் கலாசாரம் கொண்டுள்ளதால் பலவிதமான பண்டிகைகள் நமக்கு வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. எந்த மாநிலமாக இருந்தாலும், எந்தப் பண்டிகையாக இருந்தாலும் ஒருவரையொருவர் இணைக்கும் பொதுவான விஷயம் இனிப்பு வகைகள்தானே? ஆம்... நம் விழாக்காலத்தைக் கோலாகலமாகக் கொண்டாடவைக்கும் விதமாக, அருமையான இனிப்பு வகைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த தனுஜா தர்மேந்திரகுமார். இந்திய இனிப்புகளோடு, பங்களாதேஷ், அரபுச் சுவையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

பெயர்களைப் பார்த்தவுடன் செய்வது கடினமாக இருக்குமோ என எண்ணத் தேவையில்லை. கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்... இறுதியில் இனிப்பு நம் வசப்படும்!

குனாஃபா

தேவையானவை:
* சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
* கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்
* பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் - ஒரு கப்
* சீஸ் - 5 டேபிள்ஸ்பூன்
* ஃப்ரெஷ் க்ரீம் - 100 கிராம்
* மெலிதான சேமியா (ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் பயன்படுத்துவது) -
ஒரு பாக்கெட்
* வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தண்ணீரைக் காய்ச்சி அதில் சர்க்கரை, கார்ன்ஃப்ளார், பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, கெட்டியான பேஸ்ட் பதத்துக்குச் செய்து ஆறவைக்கவும். மிக்ஸியில் சீஸ், ஃப்ரெஷ் க்ரீம், தயாரித்து வைத்துள்ள பேஸ்ட் மூன்றையும் கலக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கியதும் சேமியாவை ஒரு நிமிடத்துக்கு வறுத்து எடுக்கவும். முதலில் சேமியாவை லேயராகப் பரப்பி அதன் மேல் கலவையை ஊற்றி, சமமாகப் பரப்பவும். சேமியாவையும் கலவையையும் மாற்றி மாற்றி லேயர் லேயராக ஊற்றி பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் பத்து நிமிடங்களுக்கு 150 டிகிரியில் பேக் செய்யவும்.

சர்க்கரைப் பாகு செய்ய:
* சர்க்கரை- அரை கப்
* தண்ணீர் - அரை கப்
* எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன்

இவை எல்லாவற்றையும் ஐந்து நிமிடங் களுக்குக் கொதிக்கவைக்கவும் இதை பேக் செய்த குனாஃபா மீது ஊற்றிப் பரிமாறவும்

சீஸ் செய்ய: அரை லிட்டர் பாலில் சிறிது வினிகர் ஊற்றித் திரிந்ததும் வடிகட்டவும் அதை தண்ணீரில் அலசி வைக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடிக்கவும். (பீட்டர் பயன்படுத்தலாம்) சீஸ் ரெடி.

* இத்தாலியில் சேமியா ஸ்பாகெட்டியைவிடச் சிறிது பருமனாக இருக்கும். அமெரிக்காவில் சேமியாவைவிட ஸ்பாகெட்டி சிறிது பருமனாக இருக்கும்.

பப்பா தோய்

தேவையானவை:
* தயிர் - 400 கிராம் (தயிரை மெல்லிய காட்டன் துணியில் கட்டி அரை மணி நேரத்துக்குத் தண்ணீர் முழுவதும் வற்றும்படி தொங்கவிட வேண்டும்)
* கண்டன்ஸ்டு மில்க் - 200 கிராம்
* பால் - 50 மில்லி
* சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* பொடித்த முந்திரி, பாதாம் பிஸ்தா தலா - அரை டீஸ்பூன்
* குங்குமப்பூ அல்லது ஃபுட் கலர் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)

செய்முறை:

தயிரில் சிறிதுகூட தண்ணீர் இல்லாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மெதுவாக அடிக்கவும். ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கேரமலைஸ் செய்யவும். அதாவது கடாயில் சர்க்கரை சேர்த்துச் சூடாக்கினால் அது பழுப்பு நிறத்துக்கு மாறும். இது லைட் பிரவுன் நிறத்துக்கு வரும்போது பால் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். இதுதான் கேரமல் மில்க். இதை தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் கேரமல் மில்க் சேர்த்து மீண்டும் கலக்கவும். அலங்காரத்துக்குச் சிறிதளவு நட்ஸ் எடுத்து வைத்துவிட்டு, மீதியை இதில் சேர்க்கவும். விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்க்கலாம். இந்தக் கலவையை இட்லி குக்கர் அல்லது குக்கரில் வைத்து ஸ்டீம் செய்யவும். குறைந்த தீயில் 30 நிமிடங்களுக்கு ஸ்டீம் செய்தால் கலவை புட்டிங் மாதிரி வரும். இதை ஆற வைத்து நட்ஸ் தூவி பரிமாறவும்.

* தயிர் உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவு. 5,400 ஆண்டுகளாக மக்கள் தயிரைத் தயாரித்தும் உண்டும் வந்திருக்கின்றனர்.

கரஞ்சி

தேவையானவை - பூரணத்துக்கு:
* தேங்காய்த் துருவல் - ஒன்றரை கப்
* பால் - கால் கப்
* கசகசா - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
* சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம் (இனிப்பு அதிகம் விரும்புவோர் இன்னும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்)
* நெய் - 5 டீஸ்பூன்
* உலர்பழங்கள் - 50 கிராம்
* சோம்பு - அரை டீஸ்பூன்
* டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய நட்ஸ் - 3 டேபிள்ஸ்பூன்
* சப்ஜா விதைகள் - ஒரு டீஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

கரஞ்சி செய்ய:
* மைதா - ஒன்றரை கப்
* உப்பு - ஒரு சிட்டிகை
* நெய் - 3 டீஸ்பூன்
* பால் - பிசைவதற்குத் தேவையான அளவு

செய்முறை:

மைதா, உப்பு, முக்கால் டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசறவும். உதிராக வந்ததும் பால் சேர்த்துப் பிசையவும். ஈரமான துணியால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, சூடாக்கி கசகசா சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும். சர்க்கரை, சிறிதளவு தண்ணீர், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கெட்டியாக வரும் வரை கிளறவும். அதில் நட்ஸ், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வெல்லம் சேர்ப்ப தானாலும் இதே முறையில்தான் செய்ய வேண்டும்.

தண்ணீர்வற்றக் கிளறியதும் கலவையை ஆறவிடவும். அத்துடன் டூட்டி ஃப்ரூட்டி, சப்ஜா விதைகள், சோம்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். பூரணம் ரெடி.

பிசைந்துவைத்துள்ள மாவை மீண்டும் பிசையவும். மிதமான தடிமனில் சின்னச்சின்ன பூரியாகச்செய்து, உள்ளே பூரணத்தை வைத்து, அரைவட்ட வடிவத்துக்கு மடிக்கவும். தண்ணீர் தொட்டு ஓரங்களை ஒட்டவும். எண்ணெயைச் சூடாக்கி, மிதமான தீயில் தயாராக உள்ள கரஞ்சிக்களைப் பொன்னிறத்துக்குப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு அவற்றை காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

லேயர்கள் வருவதற்கு...

2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளாருடன் சிறிது நெய் சேர்த்து பேஸ்ட் போலச் செய்யவும். அதை ஒவ்வொரு பூரியின் மீதும் தடவவும். அதன் மீது இன்னொரு பூரியை வைக்கவும். பிறகு, அவற்றை உருட்டிப் பூரியாகத் தேய்த்து உள்ளே பூரணம் வைத்துச் செய்தால் லேயர்கள் வரும்.

* நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசா, பல நாடுகளில் போதைப்பொருள் என வரையறுக்கப்பட்டதால், அங்கெல்லாம் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

லேயர்டு பாலுஷாஹி

தேவையானவை - மேல் மாவுக்கு:
* மைதா - 250 கிராம்
* பேக்கிங் பவுடர் -அரை டீஸ்பூன்
* தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* நெய் - 80 மி.லி
* பொடித்த சர்க்கரை - ஒரு சிட்டிகை
* உப்பு - ஒரு சிட்டிகை
* பொடித்த ட்ரை ஃப்ரூட்ஸ் - 4 டேபிள்ஸ்பூன்
* குளிர்ந்த தண்ணீர் - 80 மில்லி

பொரிப்பதற்கு:
* நெய் அல்லது எண்ணெய் - அரை லிட்டர்

பாகு செய்ய:
* சர்க்கரை - 400 கிராம்
* தண்ணீர் - அரை கப் + கால் கப்
* ரோஸ் வாட்டர் - சில துளிகள்
* குங்குமப்பூ - சிறிது (பாலில் ஊற வைக்கவும்)
* ஏலக்காய் - 4 (பொடிக்கவும்)
* எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பாத்திரத்தில் அரை கப் தண்ணீர்விட்டு சர்க்கரை சேர்த்துக் கெட்டியான கம்பிப் பதத்தில் பாகு தயாரிக்கவும். அதில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பாகு ஒரு கம்பி பதத்தில் இருந்தால் போதும். பளபளப்பாக வேண்டுமென்றால் கால் கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கம்பிப்பதம் வைக்கலாம்.

மைதா, உப்பு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும், அதில் தயிர், நெய், சேர்த்து விரல்களால் கலந்துவிடவும். மிகக் குறைந்த அளவு குளிர்ந்த தண்ணீர் சேர்த்துப் பிசறவும். (சப்பாத்தி மாவுப் பதத்தில் இருக்கக் கூடாது). இந்த மாவை 25 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

மாவை எடுத்துத் தட்டையாகத் தட்டவும். இதே மாதிரி ஐந்து முதல் ஆறு முறை செய்யவும். பிறகு அதைச் சம அளவு உருண்டைகளாக்கவும். நடுவில் வடைக்குச் செய்வதுபோல லேசாக அழுத்தவும். நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். பொன்னிறத்துக்கு வந்ததும் எடுத்து சூடான பாகில் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்களுக்கு இரண்டு புறமும் பாகில் ஊறியதும் வெளியில் எடுத்து ட்ரை ஃப்ரூட்ஸ் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

* உலர்பழங்களில் கலோரிகள் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையிலான வைட்டமின்கள், தாதுக்களும் இவற்றில் நிறைய உள்ளன.

இன்ஸ்டன்ட் ஜிலேபி

தேவையானவை - ஜிலேபி மாவுக்கு:
* மைதா - அரை கப்
* கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்
* ஃப்ரூட் சால்ட் (ஈனோ) - அரை டீஸ்பூன்
* வினிகர் அல்லது எலுமிச்சைச்சாறு -
கால் டீஸ்பூன்
* தயிர் - ஒரு டீஸ்பூன்
* தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன்
* மஞ்சள் அல்லது ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது
* எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு

பாகு செய்ய:
* சர்க்கரை - முக்கால் கப்
* எலுமிச்சைச்சாறு - அரை டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் - 1/3 கப்

செய்முறை:

கடாயில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும், ஒரு கம்பிப் பதத்துக்கு பாகு தயாரித்து, அதில் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் சூடாக்கவும்.

அதற்கிடையில் மைதா, கார்ன்ஃப்ளார், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். வினிகர் சேர்க்கவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். ஃபுட் கலர் மற்றும் ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கிளறவும்.

ஜிலேபி பிழிகிற துணி அல்லது நீளமான நாஸில் பொருத்திய பைப்பிங் பையில் மாவை நிரப்பவும். வாணலியில் எண்ணெயைவிட்டு, காய்ந்ததும் அதில் நேரடியாக ஜிலேபிகளைப் பிழியவும். இரண்டு பக்கங்களிலும் பொன்னிற மானதும் எடுத்து எண்ணெய் வடிய சிறிது நேரம் டிஷ்யூ பேப்பரில் வைத்திருந்து, பிறகு பாகில் போடவும். சூடாகவோ அல்லது ஐஸ்க்ரீம் உடனோ பரிமாறவும்.

* ஈனோ சால்ட் என்றும் கூறப்படும் ஃப்ரூட் சால்ட்டானது, பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக டோக்ளா, ரவா இட்லி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சால்ட் கிடைக்கவில்லையெனில், பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து உபயோகிக்கலாம்.

மைசூர் பர்பி

தேவையானவை:
* கடலை மாவு - அரை கப் (பச்சை வாசனை போக வறுத்து ஆற வைக்கவும்)
* சர்க்கரை - ஒன்றே கால் கப்
* தண்ணீர் - ஒரு கப்
* உப்பு சேர்க்காத வெண்ணெய் - ஒரு கப்
* குங்குமப்பூ - சிறிது
* செவ்வக வடிவிலான ட்ரே

குறிப்பு:
* வறுத்த கடலை மாவைச் சலித்துக்கொள்ளவும். கட்டிகள் இருக்கக் கூடாது.
* மிகக் குறைந்த தணலில் வெண்ணெயை உருக்கவும்.
* ட்ரேயில் வெண்ணெய் தடவித் தயாராக வைத்துக்கொள்ளவும். இதற்கு பதிலாக பட்டர் பேப்பரும் பயன்படுத்தலாம்.

செய்முறை:

ஒரு கடாயில் சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துச் சூடாக்கி, ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு தயாரிக்கவும். இதில் தயாராக உள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். கட்டிகள் வரக் கூடாது. உருக்கிய வெண்ணெயையும் இதில் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.

மொத்த வெண்ணெயையும் இப்படிச் சேர்த்து, கலவை அனைத்தையும் இழுத்துக் கொண்டதும் குங்குமப்பூ சேர்க்கவும்.கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும்போது, அதை ட்ரேயில் கொட்டவும்.லேசாகத் தட்டி 5 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். கொஞ்சம் ஆறியதும் துண்டுகள் போட்டு, மீண்டும் ஆறவிடவும். முற்றிலும் ஆறியதும் தட்டைத் தலைகீழாகக் கவிழ்த்தால் துண்டுகள் தனியே வரும். பிறகு பரிமாறவும்.

குறிப்பு:
குறைந்த தணலில்தான் செய்ய வேண்டும்.கலவையை ட்ரேயில் கொட்டும்வரை கைவிடாமல் கிளற வேண்டும். விருப்பப் பட்டால் சர்க்கரைப் பாகில் ஏலக்காய்த்தூள் சிறிது சேர்க்கலாம்.

* மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குங்குமப்பூ சாகுபடி செய்யப்படுகிறது.

கிரீன் ஆப்பிள் தாலியா

தேவையானவை:
* கோதுமை ரவை (தாலியா) -அரை கப்
* நெய் - 2 டேபிள்ஸ்பூன்
* கிரீன் ஆப்பிள் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
* கிஸ்மிஸ் - 2 டீஸ்பூன்
* உடைத்த முந்திரி, பாதாம் - 2 டீஸ்பூன்
* டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்
* வால்நட்ஸ் - 2 டீஸ்பூன்
* சாரப்பருப்பு - 2 டீஸ்பூன்
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* ரோஸ் வாட்டர் - சில துளிகள்
* பால் - அரை லிட்டர்
* தண்ணீர் - அரை கப்
* உப்பு - ஒரு சிட்டிகை
* வெல்லம் அல்லது பிரவுன் சுகர் -
4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடாயைச் சூடாக்கி நெய்யில் கோதுமை ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். அதில் தண்ணீரும் பாலும் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பாலில் குங்குமப்பூ கலந்து அதை கலவையில் சேர்த்து மூடி வேகவிடவும். பிறகு நறுக்கிய கிரீன் ஆப்பிள் சேர்த்து வேக விடவும். ரோஸ் வாட்டர் சேர்க்கவும். பிரவுன் சுகர் மற்றும் நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும் ஒரு தட்டில் செட் செய்து, நட்ஸ் தூவி சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.

* எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு, பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவு. இது ரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதைத் தடுத்து, இதயத்தின் முறையான ரத்த ஓட்டத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

மாவா கஜர் அல்வா

தேவையானவை:
* கேரட்- ஒரு கிலோ
* கெட்டியான பால் - ஒரு லிட்டர்
* சர்க்கரை சேர்க்காத கோவா - 150 கிராம்
* ஏலக்காய்த்தூள் - சிறிது
* சர்க்கரை - ஒன்றரை கப்
* நெய் - ஒரு கப்
* ஊறவைத்து, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ் - தலா 15

செய்முறை:

கேரட்டைத் துருவி தனியே வைக்கவும். அடிகனமான நான் ஸ்டிக் பாத்திரத்தில் கேரட்டைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். தீ மிதமாக இருக்க வேண்டும் அதில் பால் சேர்த்து 30 நிமிடங்களுக்கு வேகவிடவும். நன்கு வெந்ததும் அதில் நெய் மற்றும் பாதி சர்க்கரை சேர்க்கவும். பிறகு, கோவா சேர்த்து வதக்கவும்.

பிறகு மீதி சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்துக்கெட்டியாகும் வரை கிளறவும். குங்குமப்பூ, நட்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கலவையில் இருந்து நெய் வெளியேறும்போது அடுப்பை அணைத்து, கலவையை ஆறவைத்துப் பரிமாறவும்.

* கேரட் பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் ஊதா, கறுப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் கேரட் வகைகளும் உண்டு.

மிஸ்டி தோய்

தேவையானவை:
* கொழுப்பு நீக்கப்படாத பால் - இரண்டு லிட்டர்
* சர்க்கரை - ஒன்றரை கப்
* கொழுப்பு நீக்கப்படாத பால் பவுடர் - 2 கப்
* தயிர் - ஒன்றரை கப்
* ஏலக்காய்த்தூள் - சிறிதளவு (விருப்பமானால்)

செய்முறை:

பாலைக் கொதிக்க வைக்கவும். அது பாதியாக வற்றும்வரை கிளறவும். சர்க்கரையை கேரமல் செய்யவும். இதற்குப் பதிலாக பேரீச்சை, வெல்லம் அல்லது பழுப்பு சர்க்கரை பயன் படுத்தலாம். கேரமல் செய்ததும் அடுப்பை அணைத்து, காய்ச்சிய பாலில் பாதியைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு மீதமுள்ள பாலில் கால் பங்கு சேர்த்துக் கலக்கவும்.

இப்போது கலவையைச் சற்று நேரத்துக்குக் கொதிக்க வைக்கவும். அடுப்பை அணைத்துத் தனியே வைக்கவும். பால் வெதுவெதுப்பாக இருக்கும்போது ஒரு கப் பால் பவுடரை அதில் சேர்த்துக் கிளறவும். பிறகு, தயிர் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறவும். இப்போது மீதமுள்ள கால் பங்கு பாலையும் சேர்த்து நுரைக்க அடிக்கவும்.

சீக்கிரமே தயாராக வேண்டுமென்றால் அவனில் செய்யலாம். அப்படிச் செய்வதானால் அவனை பத்து நிமிடங்களுக்கு பிரீஹீட் செய்ய வேண்டியது அவசியம். ட்ரேயில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். 50 டிகிரி செல்சியஸில் 2 மணி நேரத்துக்கு வைத்து அவனை அணைக்கவும். இன்னும் 2 மணிநேரம் கலவை உள்ளேயே இருக்கட்டும். டூத்பிக்கால் குத்திப்பார்த்தால் கலவை ஒட்டாமல் வரும். அப்படிவந்தால் சரியான பதம் என அர்த்தம். ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.

அப்படியில்லை என்றால் நுரைத்து அடித்ததை கப்புகளில் ஊற்றி 6 மணி நேரத்துக்கு வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்.அல்லது திக்கான டர்க்கி டவலால் கலவையை மூடி வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து கூலாகப் பரிமாறவும்.

* இந்தியாவின் 60% ஏலக்காய் சாகுபடி கேரளாவிலேயே செய்யப்படுகிறது. 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது.

ஹனி காஜா பின் வீல்

தேவையானவை:
* மைதா - ஒரு கப்
* சர்க்கரை - முக்கால் கப்
* தேன் - 2 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு
* பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
* நெய் அல்லது வெண்ணெய் - 10 கிராம்
* தண்ணீர் - ஒரு கப்
* ஏலக்காய் பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதாவில் நெய், பேக்கிங் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாகப் பிசைந்து கொள்ளவும். மாவு ரொம்பவும் கெட்டியாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கக் கூடாது. ஐந்து நிமிடங்களுக்கு மாவைப் பிசைந்து ஒரு மணி நேரத்துக்கு மூடி வைக்கவும்.

இந்த மாவை பெரிய சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும். இடுவதற்கு முன்பு பிறகும் மாவு தொட்டுக் கொள்ளவும். ஓவல் வடிவத்தில் வெட்டி நடுவில் விரலால் அழுத்தவும். கடாயில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும்.

அதில் ஏலக்காய் பவுடர் சேர்க்கவும். இதை இரண்டு மணி நேரத்துக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். தயாராக உள்ள காஜாக்களை மிதமான தீயில் எண்ணெயில் பொன்னிறத்துக்குப் பொரித்தெடுக்கவும்.

பிறகு அவற்றை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். காஜாக்களின் மீது பாகு நன்றாக படிய வேண்டும். பிறகு அவற்றை எடுத்து, தேன் மற்றும் குங்குமப்பூ வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

* தேனில் குளுகோஸ், ஃப்ருக்டோஸ், நீர் ஆகியவற்றோடு சில என்ஸைம்கள், சில வகை எண்ணெய்களும் அடங்கியுள்ளன.