பாப்பா முதல் தாத்தா வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றல் சாக்லேட்டுக்கு உண்டு. அப்படியோர் அழகும் சுவையுமாக அலப்பறை செய்யும் சாக்லேட் பொக்கேவிடம் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதனால்தானோ என்னவோ... பிறந்தநாள், திருமண நாள், காதலர் தினம் போன்றவற்றுக்கு சாக்லேட் பொக்கேவைப் பரிசாகத் தருவது இப்போது வழக்கமாகி வருகிறது.

ஆனால், கடையில் சாக்லேட் பொக்கே வாங்கினால் சில ஆயிரங்கள் செலவாகி நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். அதனால் சாக்லேட்களின் ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறையையும், அதை எப்படி பொக்கேவாக வடிவமைக்கலாம் என்பதையும் சொல்கிறோம். இனி வீட்டிலேயே நம் கையால் சாக்லேட் பொக்கே செய்து பிரியமானவர்களுக்குக் கொடுத்து அசத்தலாம். அன்பைக் கொண்டாடலாம்!

சாக்லேட் செய்யத் தேவையானவை:
* டார்க் காம்பவுண்ட் சாக்லேட் (Dark Compound Chocolate) – 250 கிராம் (பெரிய பெரிய பார் (Bar)களாகக் கிடைக்கும் டார்க் சாக்லேட் டார்க் காம்பவுண்ட் சாக்லேட்)
* மில்க் சாக்லேட் – 250 கிராம்
* வொயிட் சாக்லேட் – 250 கிராம்
* வெண்ணெய் - 25 கிராம்
* விருப்பமான நட்ஸ் (சிறு துண்டுகளாக உடைத்தது) – 50 கிராம் (வேண்டுமெனில்)
* ரோஸ் லிக்விட் கலர் - 2 சொட்டுகள்
* சிலிகான் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன சாக்லேட் மோல்டு (பூ, இதயம், ஸ்மைலி
வடிவம் என்று உங்கள் விருப்பம்போல்
எடுத்துக்கொள்ளவும்) - தேவைக்கேற்ப

பொக்கே வடிவமைக்கத் தேவையானவை:
* சிறிய மூங்கில் கூடை அல்லது ட்ரே – ஒன்று (உங்களுக்கு விருப்பமான வடிவத்தில்)
* கலர் ஃபாயில் ஷீட் (Clour Foil Sheet) - தேவைக்கேற்ப
* கெபாப் ஸ்டிக்ஸ் (Kebab Sticks) (அ) லாலிபாப் ஸ்டிக்ஸ் - தேவைக்கேற்ப
* ரெடிமேட் இலை, பூ, பௌ (BOW) – அலங்கரிக்க
* கலர் செல்லோடேப் – ஒன்று
* தெர்மாக்கோல் - மூங்கில் கூடைக்குள் போடத் தேவையான அளவு

செய்முறை:

சாக்லேட்டுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே துருவிக்கொள்ளவும். அல்லது சிறுசிறு துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை டபுள் பாயிலிங் முறையில் உருக்க வேண்டும். சாக்லேட் இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் நேரடியாக வைத்து சாக்லேட்டை உருக்கக் கூடாது. ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதன் மேல் சாக்லேட் துருவல் இருக்கும் பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்தி சாக்லேட்டை உருக்க வேண்டும். இதற்கு டபுள் பாயிலிங் என்று பெயர். இப்படி இல்லாமல் மைக்ரோவேவ் அவனில் சாக்லேட்டை உருக்க நினைத்தால், அதற்குரிய பாத்திரத்தில் சாக்லேட் துருவலைப் போட்டு, குறைந்த வெப்பநிலையில் சில நிமிடங்கள் வைத்தால் சாக்லேட் உருகிவிடும்.

முதலில் டார்க் சாக்லேட் துருவல், மில்க் சாக்லேட் துருவல் ஆகிய இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து இப்படி டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக்கொள்ளவும். வொயிட் சாக்லேட் துருவலை மட்டும் வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். உங்களுக்கு விருப்பமான சாக்லேட் மோல்டில் உருக்கி வைத்திருக்கும் டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் கலவையை ஊற்றவும் (வேண்டுமெனில் அதன்மேல் நட்ஸ் தூவிக்கொள்ளலாம்).

பிறகு சாக்லேட் மோல்டின் கீழே லாலிபாப் ஸ்டிக் செருகி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சுவையான சாக்லேட் ரெடி. உருக்கிவைத்திருக்கும் வொயிட் சாக்லேட்டில் வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.

இதை உங்களுக்கு விருப்பமான சாக்லேட் மோல்டில் ஊற்றி, லாலிபாப் ஸ்டிக் செருகி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் வொயிட் சாக்லேட் ரெடி. உருக்கிய வொயிட் சாக்லேட்டில் இரண்டு சொட்டுகள் ரோஸ் லிக்விட் கலர் சேர்த்து லிப்ஸ் வடிவ சாக்லேட் மோல்டில் ஊற்றி, லாலிபாப் ஸ்டிக் செருகி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் அடுத்த வகை சாக்லேட் ரெடி.

இதேபோல உருக்கிய அனைத்துச் சாக்லேட்டையும் உங்களது விருப்பமான வடிவம் உள்ள மோல்டில் ஊற்றி, லாலிபாப் ஸ்டிக் செருகி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்து சாக்லேட்களாகத் தயாரித்துக்கொள்ளவும். இனி தயாரித்து வைத்திருக்கும் இந்தச் சாக்லேட்களை பேக் செய்து, அலங்கரிக்கும் முறை பற்றிப் பார்க்கலாம்.

செய்துவைத்திருக்கும் சாக்லேட்டுக்குக் கீழிருக்கும் லாலிபாப் குச்சிகளில் உங்களுக்குப் பிடித்த கலரில் செலோடேப் சுற்றவும்.

சாக்லேட்களில் உங்களுக்குப் பிடித்தமான கலர் பாயில் பேப்பரை (Clour Foil Paper) அழகாக `wrap’ செய்யவும். ஒரு சாக்லேட் லாலிபாப் குச்சியில் `ரெடிமேட் பௌ (Bow) ஒன்றை வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு சாக்லேட் லாலிபாப் குச்சியில் ரெடிமேட் இலை, பூ வைத்து படத்தில் இருப்பது போல அலங்கரிக்கவும். இப்படி ஒவ்வொரு சாக்லேட் லாலிபாப் குச்சியையும் அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்ப அலங்கரித்துக்கொள்ளவும். பிறகு தனித்தனியாக அலங்கரித்து வைத்துள்ள சாக்லேட் குச்சிகளை மூங்கில் கூடையில் பொக்கேவாக வடிவமைக்க வேண்டும். அலங்கரித்த சாக்லேட்களை மூங்கில் கூடையில் அடுக்குவது எப்படி?

முதலில் கூடையின் உள்ளே பசை கொஞ்சம் தடவி அதன் மேலே உடைத்த சிறு சிறு தெர்மாகோலை ஒட்டவும். இப்படிச் செய்தால் கூடையைக் கவிழ்த்தால்கூட தெர்மாகோல் கீழே விழாது. இப்படி ஒட்டிய தெர்மாகோலில் சாக்லேட் அனைத்தையும் பொறுமையாகச் செருக வேண்டும். (படத்தில் உள்ளபடியோ, உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்பவோ செருகிக் கொள்ளவும்). இதோ கண்ணைக் கவரும் அழகான, சுவையான சாக்லேட் பொக்கே தயார்!

உங்கள் கவனத்துக்கு... பொக்கேவுக்காக சாக்லேட்கள் தயாரிக்கும்போது அவரவருக்குப் பிடித்த ஃபிளேவரில் சாக்லேட் ஃபில்லிங்கும் (Chocolate Filling) செய்துகொள்ளலாம். அதாவது உருக்கிய சாக்லேட்டை சாக்லேட் மோல்டில் விடும்போது... ஜாம், தேங்காய்த் துருவல், கிரஞ்ச் ரைஸ் பால்ஸ் (Crunch Rice Balls), இன்ஸ்டன்ட் காபி பவுடர் போன்றவற்றை சாக்லேட்டின் மேல் தூவி சாக்லேட் தயாரிப்பில் வெரைட்டி காட்டலாம்.