தெருவோரக் கடைகளிலும் தள்ளுவண்டி உணவகங்களிலும் சாப்பிடுகிறவர்கள் நட்சத்திர ரெஸ்டாரன்ட்டுகளை அண்ணாந்துப் பார்த்தது அந்தக் காலம். இப்போது நட்சத்திர ஹோட்டல்களில் ‘ஸ்ட்ரீட் ஃபுட்’ வகைகளைக் கொண்டாடுகிறார்கள். தெருக்கடை உணவுத் திருவிழா, தட்டுக்கடை ஃபெஸ்டிவல் என்றெல்லாம் விழாக்கோலம் ஆக்குகிறார்கள். அங்கு பரிமாறப்படுவது என்னவோ, நம் தெருக்கடை உணவுகள்தாம். உணவுத் திருவிழாக்களோடு முடிந்துவிடவில்லை இதன் மீதான மோகம்.

சென்னை உட்பட உலகின் முக்கிய நகரங்களில் தெருக்கடை உணவுகளை மட்டுமே வழங்கும் ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட்டுகள் தொடங்கப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் புகழ்பெற்ற தெருக்கடை உணவுகளை ஏற்கெனவே இப்பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வரிசையில் உலகத் தெருக்கடை உணவுகளை நம் வீட்டிலேயே செய்து ருசிக்க படங்கள், வீடியோக்களுடன் வழிகாட்டுகிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

இது உணவு உலகம்!

ஃபலாஃபில்

தேவையானவை:

வெள்ளைக் கொண்டைக்கடலை – ஒரு கப்

கொத்தமல்லித்தழை (அ) பார்ஸ்லே – ஒரு கட்டு

பூண்டு – 10 பற்கள்

சமையல் சோடா – கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – 2 சிட்டிகை

வறுத்து அரைத்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

தாஹினி சாஸ் செய்ய:

வெள்ளை எள் – அரை கப்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – 4 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

வெதுவெதுப்பான நீர், உப்பு – தேவைக்கேற்ப

ஃபலாஃபில் செய்முறை:

கொண்டைக்கடலையை நன்கு கழுவி, கால் டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, கொண்டைக்கடலையுடன் கொத்தமல்லி, பூண்டு சேர்த்துச் சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். இதனுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போடவும். அல்லது ஃபலாஃபில் மேக்கேரில் மாவை வைத்து எண்ணெயில் ஒரு ஸ்பூனால் மெதுவாகத் தள்ளிவிடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஃபலாஃபில்லை தாஹினி சாஸுடன் சுடச்சுடப் பரிமாறவும்.

தாஹினி சாஸ் செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் மிதமான சூட்டில் நன்கு வாசம்வரும் வரை வறுக்கவும். வறுத்த எள் ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். எள் நன்கு அரைபட்டதும் அதனுடன் சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து, திக் பேஸ்ட் போல் ஆகும் வரை அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் இந்தப் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டு அதனுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு, மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து, சட்னி பதத்துக்குக் கலந்துகொள்ளவும்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரை

தேவையானவை:

பெரிய உருளைக்கிழங்கு – 3

உப்பு – 3 டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு உருளைக் கிழங்கை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு முதலில் மிக முக்கியமானது உருளைக்கிழங்கின் வாகு. அதாவது உருளைக்கிழங்கு பழசாக இருக்க வேண்டும். புதிதாகச் சாகுபடி செய்த உருளைக்கிழங்காக இருந்தால் அதில் மாவுச்சத்து மற்றும் தண்ணீர் அதிகமாக இருக்கும். ஆகையால் முடிந்த வரை பழைய மற்றும் நீளமாக இருக்கும் உருளைக்கிழங்கைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். உருளைக்கிழங்குச் சிறியதாகவும் உருண்டையாகவும் இருந்தால் கடைகளில் கிடைக்கும் ஃப்ரெஞ்சு ஃப்ரை போல நீளமாக வராது.

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி, விரல் நீளத்தில் தடிமனான துண்டுகளாக நறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய உருளைக் கிழங்குத் துண்டுகளைப் போடவும். அவற்றைக் கைகளால் நன்கு தேய்த்துக் கழுவி எடுத்துக்கொண்டு பிறகு தண்ணீரைக் கீழே கொட்டிவிடவும். பாத்திரத்தில் மறுபடியும் புதிதாகத் தண்ணீர் எடுத்துக்கொண்டு மறுபடியும் உருளைக்கிழங்குத் துண்டுகளை அதில் போட்டு நன்கு கழுவி எடுக்கவும். உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் போவதற்காக இப்படிச் செய்ய வேண்டும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் உருளைக்கிழங்கைக் கழுவி எடுத்த பிறகும் தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டும். அதுவரை உருளைக்கிழங்குத் துண்டுகளை இப்படி மாற்றி மாற்றித் தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் உருளைக்கிழங்குத் துண்டுகளை எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு துண்டுகள் மூழ்கும் அளவுக்கு அதன்மேல் தண்ணீர் ஊற்றிச் சூடு செய்யவும். கை பொறுக்க முடியாத அளவுக்குத் தண்ணீரில் சூடு ஏற வேண்டும். அதேநேரம் கொதி வரக்கூடாது. இப்படி தண்ணீர் சூடானதும் அடுப்பினுடைய தீயின் அளவை நன்கு குறைத்து, பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகே கீழே இறக்கவும். இப்போது கிழங்கை மீண்டும் மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும். அதே போல் கிழங்கு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து இந்த முறை தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். நடுநடுவே கிழங்குத் துண்டுகள் உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறிவிடவும்.

உருளைக்கிழங்குத் துண்டுகளைக் கைகளால் பிட்டுப் பார்த்தால் சட்டென்று உடைந்து வர வேண்டும். இந்தப் பதம் வந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி, கிழங்குத் துண்டுகளைத் தனியாக வடித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு உடனே இவற்றைக் குளிர்ந்த நீரில் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்திருந்து பிறகு வடிகட்டவும்.

வடித்து எடுத்த உருளைக்கிழங்குத் துண்டுகளை ஒரு சுத்தமான துணியில் பரப்பி மின்விசிறிக்குக் கீழ் குறைந்தது ஒரு மணி நேரமாவது உலரவிடவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து அதன் நிறம் மாறாமல் பொரித்து எடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு, ஒரு தட்டில் பரப்பி இந்த ஃப்ரைகளை ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைக்கவும். இப்படி ஃப்ரீஸரில் பதப்படுத்தும் இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளை, ஆறு மாதங்கள் வரை எப்போது வேண்டுமோ அப்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிட விரும்பும்போது, ஃப்ரீஸரில் வைத்திருக்கும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் இந்த ஃப்ரெஞ்ச் ப்ரைகளைப் போட்டு, கவனமாகப் பொரிக்கவும். எண்ணெயில் உள்ள சலசலப்பு அடங்கி, ஃப்ரையானது சிறிது நிறம் மாறியதும் எடுத்து ஒரு பவுலில் போடவும். அதனுடன் உப்பு மற்றும் உங்களது விருப்பத்துக்கேற்ப மற்ற பொருள்களைச் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். மொறுமொறு ஃப்ரெஞ்சு ஃப்ரையைச் சுவைத்து மகிழவும்.

குறிப்பு:

பொரித்த ஃப்ரெஞ்சு ஃப்ரையுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்தால் ஸ்பைஸி ஃப்ரெஞ்சு ஃப்ரை ரெடி!

மிளகாய்த்தூள், சாட் மசாலா, கறுப்பு உப்பு, ஆம்சூர் பவுடர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பொரித்த ஃப்ரெஞ்சு ஃப்ரையுடன் தேவையான இந்தக் கலவையைச் சேர்த்துக் குலுக்கினால் சட்பட்டா ஃப்ரை ரெடி!

ஃப்ரெஞ்சு ஃப்ரையுடன் தேவையான அளவு பெரிபெரி மசாலா சேர்த்தால் பெரிபெரி ஃப்ரெஞ்சு ஃப்ரை ரெடி!

பெரிபெரி மசாலா செய்வது எப்படி?

தேவையானவை:

பூண்டுப் பொடி – 2 டீஸ்பூன்

வெங்காயப் பொடி – ஒரு டீஸ்பூன்

சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

கறுப்பு உப்பு – அரை டீஸ்பூன்

சர்க்கரை – அரை டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்

ஒரிகானோ – அரை டீஸ்பூன்

சிட்ரிக் ஆசிட் (லெமன் சால்ட்) – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இதுதான் இந்தியன் பெரிபெரி மசாலா.

ஆர்டிசன் பிட்சா

தேவையானவை:

மைதா மாவு – இரண்டே கால் கப்

ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் (Active Dry Yeast) – ஒன்றேகால் டீஸ்பூன்

சர்க்கரை – அரை டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் – ஒரு கப்

ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்

மைதா - பீட்சா செய்வதற்குத் தேவையான அளவு

பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்

உதிர்த்த சோள முத்துகள் – 2 டேபிள்ஸ்பூன்

செர்ரி தக்காளி – 10 (இரண்டாக நறுக்கவும்)

நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – கால் கப்

ஆலிவ் – 5 (வட்டமாக நறுக்கவும்)

துருவிய பீட்சா சீஸ் – அரை கப்

பீட்சா சீஸனிங் – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை: ஒரு பவுலில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். அதனுடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கழித்து ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மேலே நுரைகள் வந்துவிடும். இதனுடன் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கவும். மாவு சேர்த்து ஒரு மரக் கரண்டியால் கிளறி நன்றாகச் சேர்க்கவும். மாவு சேர்ந்து வந்ததும், சமையல் மேடையில் சிறிது உலர் மாவைத் தூவி, சேர்த்த மாவைப் போட்டு பத்து நிமிடங்கள் மீண்டும் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்துப் பிசையவும்.

மாவு இப்போது உருண்டு, பார்க்கவே பளபளப்பாக இருக்கும். ஒரு பெரிய பவுலில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவைப் போட்டு ஒரு மணி நேரம் மூடிவைக்கவும். இப்போது மாவு இரு மடங்காகப் பொங்கி வந்திருக்கும். மீண்டும் மேடையில் உலர் மாவு தூவி, பொங்கி வந்திருக்கும் மாவை மேடையில் மாற்றவும். பொங்கிய மாவைச் சிறிது பஞ்ச் (punch) செய்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். இரண்டையும் பந்து போல் உருட்டி, தனித்தனியாக ஜிப்லாக் கவரில் போட்டு 36 – 48 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

சோள முத்துகள் மற்றும் நறுக்கிய குடமிளகாயைச் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். 260 டிகிரி வெப்பத்தில் அரை மணி நேரம் OTG அவனை (oven) பிரீஹீட் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் பிராய்லிங் மூடில் செய்ய வேண்டும். அதாவது, அவனை பிரீஹீட் செய்யும்போது பீட்சா வேகவைக்கும் ட்ரேயையும் உள்ளே வைத்து பிரீஹீட் செய்யவும். ஜிப் லாக் கவரில் வைத்திருக்கும் மாவிலிருந்து ஒரு பங்கு மாவை எடுத்து விரல்களால் மெல்லிய வட்டமாகச் செய்துகொள்ளவும். இதை பிரீஹீட் செய்த அவனுக்குள் இருக்கிற பீட்சா வேகவைக்கும் ட்ரேயில் கவனமாகத் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். பிறகு இதன் மேல் சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி தக்காளி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ் துருவல், பிட்ஸா சீஸனிங் தூவி அலங்கரிக்கவும். மீண்டும் அவனுக்குள் 6 - 7 நிமிடங்கள் வைத்தெடுத்து உடனடியாகச் சுடச்சுட பரிமாறவும்.

மற்றொரு பங்கு மாவுக்கும் இதே முறையைப் பின்பற்றி இரண்டாவது பிட்சாவைத் தயாரிக்கவும்.

வெஜ் பர்கர்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 3 அல்லது 4

அவல் – ஒரு கப்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சைப் பட்டாணி – கால் கப்

பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) – கால் கப்

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

மசாலாத்தூள் தயாரிக்க:

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – அரை டீஸ்பூன்

சீரகம் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

பூண்டுப் பொடி – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மேல் மாவுக்கு:

மைதா – அரை கப்

கார்ன்ஃப்ளார் – கால் கப்

சோள மாவு (மக்காய் கா ஆட்டா) – கால் கப்

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

குளிர்ந்த நீர் – ஒரு கப்

இதர பொருள்கள்:

பர்கர் பன் – 8

மயோனைஸ் – தேவைக்கேற்ப

லெட்யூஸ், தக்காளி, வெங்காயம் (ஸ்லைஸ் செய்தது) – தேவைக்கேற்ப

சீஸ் ஸ்லைஸ் – 8

பிரெட் துகள்கள் (crumbs) – தேவையான அளவு

செய்முறை: மசாலாத்தூள் தயாரிக்கக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். பொடியாக நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணியை வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை உப்புத் தண்ணீரில் வேகவைத்து 3 – 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, பிறகு மசித்துக்கொள்ளவும். அவலை ஒரு வடிகூடையில் கொட்டி அதைத் தண்ணீரில் கழுவி வடித்து வைக்கவும். ஒரு வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி அதில் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சற்று வதங்கியதும் அதில் தயாரித்துவைத்துள்ள மசாலாத்தூள் மற்றும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் அவல் சேர்த்து நன்கு கிளறி, கலவை சேர்ந்து வந்ததும் இறக்கவும். கலவை சற்று ஆறியதும் அதை உருளை வடிவமாகச் செய்து ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.

மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை ஒரு பவுலில் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலந்து கட்டிதட்டாமல் கரைத்துக்கொள்ளவும். உருளை வடிவத்தில் செய்து வைத்திருக்கும் காய்கறி கலவையை பர்கர் பேட்டி (Burger Patty) வடிவத்தில் வெட்டவும். இந்த ஒவ்வொன்றையும் தயாரித்துவைத்திருக்கும் மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பிரெட் துகளில் புரட்டி எடுத்துவைக்கவும். இவற்றைக் குறைந்தது அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பர்கர் பன்னை இரண்டாக வெட்டி அதன் உள்பாகத்தில் மயோனைஸைத் தடவவும். பன்னின் ஒரு பாகத்தின் மேல் லெட்யூஸ் இலைகள் மற்றும் தக்காளி, வெங்காயத்தை அடுக்கவும். அதன்மேல் சீஸ் ஸ்லைஸ் மற்றும் பர்கர் பேட்டிஸ் வைத்து அதன்மேல் மற்றொரு பாகத்தை வைத்து மூடவும். வீட்டிலேயே டேஸ்ட்டி பர்கர் ரெடி!

குறிப்பு: பர்கர் பேட்டியைத் தயாரித்து அதை ஃப்ரீசரில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். தேவைப்படும் போது பேட்டிஸை எடுத்துச் சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து உடனடியாக பர்கர் செய்துவிடலாம்.

வாஃபிள்ஸ் (Waffles)

தேவையானவை:

மைதா – ஒரு கப்

புளிக்காத மோர் – ஒரு கப்

சமையல் சோடா – அரை டீஸ்பூன் (பொடித்துக்கொள்ளவும்)

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

சர்க்கரை – முக்கால் கப்

வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

உப்பு இல்லாத வெண்ணெய் (உருக்கியது) – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை: ஒரு பவுலில் உலர் பொருள்களான மைதா, சர்க்கரை, சமையல் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். மற்றொரு பவுலில் மோர், வெண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து மென்மையாகக் கலந்துகொள்ளவும், அடித்துக் கலக்கக் கூடாது. பிறகு இதனுடன் கலந்துவைத்திருக்கும் உலர் பொருள்களைச் சேர்த்து மாவுப் பதத்தில் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

வாஃபிள் மேக்கரை சூடு செய்து அதில் சிறிது வெண்ணெய் தடவி, கலந்து வைத்து இருக்கும் இந்த மாவை ஊற்றி மூடி வைக்கவும். மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை இதை வேகவைத்து எடுத்து, ஒரு க்ரில் மேல் வைத்து ஆறவிடவும். (தட்டில் வைக்காமல் க்ரில் அல்லது கூலிங் ரேக்கில் வைக்க வேண்டும்). பிறகு இதைப் பழங்கள், சாக்லேட் சாஸ் அல்லது ஐஸ்க்ரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: மைதாவுக்குப் பதிலாக, கோதுமை மாவு பயன்படுத்தியும் வாஃபிள்ஸ் செய்யலாம். ஏதாவது ஒரு சிறுதானிய மாவு பாதி அளவு, கோதுமை மாவு பாதி அளவு எடுத்துக் கொண்டும் வாஃபிள்ஸ் தயாரிக்கலாம்.

பரிட்டோஸ்

தேவையானவை - ஸ்பைஸி சால்ஸா செய்ய:

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

குடமிளகாய் – ஒரு கப் (சிறிய கட்டங்களாக நறுக்கியது)

தக்காளி – கால் கப் (சிறிய கட்டங்களாக நறுக்கியது)

சிவப்பு மிளகாய்த் துகள்கள் (ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்) – ஒரு டேபிள்ஸ்பூன்

தக்காளி விழுது – கால் கப்

ஒரிகானோ – ஒரு டீஸ்பூன்

வினிகர் – ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

மெக்ஸிக்கன் ரைஸ் செய்ய:

உதிரியாக வேகவைத்த சாதம் – ஒரு கப்

நறுக்கிய குடமிளகாய் – அரை கப்

கறுப்பு ஆலிவ் – 2

சிவப்பு மிளகாய்த் துகள்கள் (ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்) - கால் டேபிள்ஸ்பூன்

ஒரிகானோ – கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

ரீஃப்ரைடு பீன்ஸ் செய்ய:

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

பூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – கால் கப்

தக்காளி விழுது – கால் கப்

ராஜ்மா – அரை கப்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

சன்னா மசாலா – கால் டீஸ்பூன்

வறுத்து அரைத்த சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

இதர பொருள்கள்:

மெல்லிய சப்பாத்தி (அ) டோர்டில்லா – 6

லெட்யூஸ் இலைகள் – தேவையான அளவு

மயோனைஸ் – 6 டேபிள்ஸ்பூன்

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தக்காளி மற்றும் குடமிளகாயைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பிறகு சிவப்பு மிளகாய்த் துகள்கள், தக்காளி விழுது, ஒரிகானோ மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கெட்டியானதும் வினிகர் சேர்த்துக் கலந்து இறக்கி ஆறவைக்கவும். ஸ்பைஸி சால்ஸா ரெடி.

ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி குடமிளகாயைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பிறகு சிவப்பு மிளகாய்த் துகள்கள், ஒரிகானோ மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் வேகவைத்த சாதம், நறுக்கிய ஆலிவ் சேர்த்துக் கலந்து இறக்கி ஆறவிடவும். மெக்ஸிக்கன் ரைஸ் தயார்.

ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் உப்பு கலந்த தண்ணீரில் வேக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பூண்டு, வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் மிளகாய்த்தூள், சன்னா மசாலா, சீரகத்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த ராஜ்மா சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியானதும் இறக்கிவைத்து ஆறவிடவும். ரீஃப்ரைடு பீன்ஸ் ரெடி

பரிட்டோஸ் பரிமாறும் முறை:

ஒரு சப்பாத்தியின் மேல் முதலில் சிறிது மயோனைஸ் தடவி பிறகு அதன்மேல் ஸ்பைஸி சால்ஸாவைக் கொஞ்சம் தடவவும். அதன்மேல் சில லெட்டூஸ் இலைகளை வைக்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் மெக்ஸிக்கன் ரைஸ் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ரீஃப்ரைடு பீன்ஸ் இரண்டையும் அதன்மேல் வைத்து சப்பாத்தியின் இரண்டு ஓரங்களையும் மடித்து, சப்பாத்தியை இறுக்கமாகச் சுற்றிப் பரிமாறவும்.

சுர்ரோஸ்

தேவையானவை:

மைதா – ஒரு கப்

பால் – அரை கப்

தண்ணீர் – அரை கப்

வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்

பிரவுன் சுகர் – 2 டேபிள்ஸ்பூன்

பட்டைப் பொடி – கால் டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஸ்டார் நாஸில் (star nozzle), பைபிங் பேக் - தேவையானது

கலந்துவைத்துக் கொள்ள:

சர்க்கரை – அரை கப்

பட்டைப் பொடி – அரை டீஸ்பூன்

பரிமாற:

சாக்லேட் சாஸ் – கால் கப்

செய்முறை: கலந்துவைத்துக் கொள்ள கொடுத்துள்ள சர்க்கரை, பட்டைப் பொடி இரண்டையும் சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர், வெண்ணெய், பிரவுன் சுகர், பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கொதிவந்ததும் மைதா கலந்து வேகமாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் அடி பிடிக்க ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்துவிட்டு, மாவைக் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு கெட்டியானதும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். ஒரு பைப்பிங் பேகில் ஸ்டார் நாஸில் போட்டு, மாவை நிரப்பவும். எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும். சுர்ரோஸ் ரெடி. சுர்ரோஸ் சற்று ஆறியதும் சர்க்கரைக் கலவையில் புரட்டி எடுத்து, சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.

நியூடெல்லா நிரப்பிய போம்போலோனி

தேவையானவை:

மைதா – ஒரு கப்

வெதுவெதுப்பான பால் – கால் கப்

வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

ஆக்டிவ் டிரை ஈஸ்ட் (Active Dry Yeast) - அரை டீஸ்பூன்

முட்டை – ஒன்று

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

நியூடெல்லா – தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு – ஒரு சிட்டிகை

மேலே தூவ:

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை: ஒரு பவுலில் ஈஸ்ட், சர்க்கரை, வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பத்து நிமிடங்கள் கழித்து அதில் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மேலே நுரை வர ஆரம்பிக்கும். மற்றொரு பவுலில் முட்டையை உடைத்துப் போட்டுக்கொள்ளவும். அதனுடன் மைதா, உப்பு, வெனிலா எசென்ஸ், வெண்ணெய் சேர்த்து அதனுடன் ஆக்டிவேட் செய்யப்பட்ட ஈஸ்ட் கலவையையும் சேர்த்துப் பிசையவும். மாவை அரை அங்குலம் உயரம் வரும் அளவுக்குப் பரப்பவும் (பிளாட்ஃபாரம், டேபிள், போர்டு போன்ற ஏதேனும் ஒரு வொர்க்கிங் சர்ஃபேஸில் பரப்பலாம்). ஒரு மூன்று இன்ச் குக்கி கட்டர் உதவியோடு அதை டோனட் வடிவில் கட் செய்து கொள்ளவும். ஒரு பேக்கிங் ஷீட்டின் மேல் சிறிது உலர் மாவு தூவி, அதில் கட் செய்த டோனட்களை சிறிது இடைவெளிவிட்டு வைத்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து டோனட்களைப் பொரித்தெடுக்கவும். ஒரு பைப்பிங் பேகில் (Piping Bag) மிக சிறிய ரவுண்டு நாஸில் (nozzle) போட்டு நியூடெல்லாவை நிரப்பவும். வேகவைத்திருக்கும் டோனட்டுக்குள் பக்கவாட்டில் கத்தியால் ஒரு ஓட்டை போட்டு (படத்தில் உள்ளது) அந்த ஓட்டைக்குள் கொஞ்சம் நியூடெல்லாவை நிரப்பவும். மேலே சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: நியூடெல்லா என்பது கோகோ மற்றும் ஹேசல்நட் சேர்க்கப்பட்ட ஒருவகையான சாக்லேட் ஸ்பிரெட் (Cholocate Spread). எல்லாப் பெரிய கடைகளிலும் இது கிடைக்கும்.

க்ரெப்ஸ்

தேவையானவை:

மைதா – ஒன்றரை கப்

காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கப்

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்

எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை: கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் மையான மாவாக அரைத்துக்கொள்ளவும். மாவை ஒரு பவுலில் மாற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு நான்-ஸ்டிக் தோசைக்கல்லைச் சூடுசெய்து சிறிதளவு வெண்ணெயைக் கல்லில் தடவவும்.

ஒரு கரண்டி மாவைத் தோசைக்கல்லில் ஊற்றி, தோசைக்கல்லைக் கையில் எடுத்துச் சுழற்றி மாவை மெல்லிய தோசையாகப் பரவச் செய்யவும். தோசை சற்று வெந்து ஓரங்கள் கல்லைவிட்டுப் பிரிந்ததும் தோசையை மறுபக்கம் திருப்பி வேகவிடவும். தோசை சற்று வெந்து நிறம் மாறாமல் இருக்கும்போது எடுத்து ஆறவிடவும். இதுதான் க்ரெப்ஸ். மீதமிருக்கும் மாவையும் இதே போல் க்ரெப்ஸ்ஸாகச் செய்யவும். சாக்லேட், சாக்லேட் சாஸ், நியூடெல்லா, பழங்கள் மற்றும் க்ரீமுடன் பரிமாறவும்.

இங்கிலீஷ் ட்ரைஃபிள்

தேவையானவை:

வெனிலா கேக் (அ) சாக்லேட் கேக் (அ) ஸ்விஸ் ரோல்ஸ் – தேவைக்கேற்ப

நறுக்கிய பழங்கள் – ஒரு கப்

கஸ்டர்ட் – ஒரு கப்

அன்னாசிப் பழச்சாறு – கால் கப்

விப்பிங் க்ரீம் – ஒரு கப்

கஸ்டர்ட் செய்ய:

காய்ச்சிய பால் – ஒரு கப்

கஸ்டர்ட் பவுடர் – இரண்டு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – அரை கப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், கஸ்டர்ட் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து, கெட்டியானதும் இறக்கி, ஆறவைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் கெட்டியாக வரும்வரை அடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப்பில் கேக்கை எடுத்துக் கொண்டு அதன்மேல் ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு ஊற்றவும். அதன் மேலே கஸ்டர்ட் பரப்பவும். பிறகு சிறிது பழங்களைப் பரப்பவும். அதன்மேல் சிறிது விப்பிங் க்ரீம் பரப்பி மீண்டும் இதே வரிசையில் அதற்கு மேலே அடுக்கவும். கடைசியாக விப்பிங் க்ரீம் பைப் செய்து அதன் மேலே பழங்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

லக்ஷ்மி வெங்கடேஷ்