`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது பழமொழி. அந்த அளவுக்கு, காரச்சுவைகொண்டது கடுகு. அதனாலேயே, வெப்பத் தன்மையும்கொண்டது. கடுகு சாப்பிடும்போது, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வட மாநிலங்களில், குளிர்ச்சியான காலத்தில் அந்தச் சூழலிலிருந்து உடலைத் தற்காத்துக்கொள்ள, சமையலில் கடுகு எண்ணெயையே உபயோகப்படுத்துவார்கள். ‘காஷ்யப சம்ஹிதா’ என்ற பழைமையான நூலில் கடுகு எண்ணெய் பயன்படுத்துபவர்கள், `கல்லீரல் மற்றும் மண்ணீரல் பிரச்னைகளைத் தடுக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கழுத்துவலி பிரச்னைகளுக்கும், கழுத்து எலும்புத் தேய்மானத்துக்கும் சிறந்த மருந்து கடுகு.

பலன்கள்: கடுகு, நம் அன்றாட உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது. என்றாலும், சாலட் ரெசிபிகளில் பெரும்பாலும் அதை உபயோகப்படுத்துவதில்லை. இந்த ரெசிபியில், கடுகு உபயோகிக்க ஒரு காரணமுண்டு. இதில் குறிப்பிட்டிருக்கும் ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம் மூன்றுமே குளிர்ச்சிமிக்கவை. உடல் உஷ்ணத்தைக் குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக்கிவிடும் தன்மைகொண்டவை. அதனாலேயே செரிமானம் மந்தமாகிவிடக்கூடும். கடுகு, செரிமானக் கோளாறுகளை விரைவாக்கி, எளிதாக்கும்.

மூன்று பழங்களையும் சேர்த்துச் சாப்பிடுவதால், அவற்றிலிருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்குக் கிடைக்கும். ஆப்பிள் உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலை வலுப்படுத்தும், மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வயிற்றுப்புண் இருப்பவர்களுக்குச் சிறந்த மருந்தாக இந்த சாலட் இருக்கும். கூடுதல் நன்மை வேண்டுமென்றால், சாலட் செய்ய ஆலிவ் ஆயிலுக்கு பதில் கடுகு எண்ணெயை உபயோகப்படுத்தலாம். கடுகு எண்ணெயின் சுவை பிடிக்காதவர்களும், உடல்சூடு பிரச்னை இருப்பவர்களும் கடுகு எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது. அதே நேரம், மற்ற எந்த எண்ணெயையும்விட, நம் தட்பவெப்பநிலைக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது.

தேவையானவை:

ஆப்பிள் : ஒன்று

கொய்யா : ஒன்று

வாழைப்பழம் : ஒன்று

கடுகு : அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் : 2

உப்பு : கால் டீஸ்பூன்

தேன் : ஒரு டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் : ஒரு டீஸ்பூன்

செய்முறை: கடுகு, மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக்கொள்ளவும். பழங்களைத் தோல் நீக்கி, சதுரத் துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த கடுகு-உப்பு பொடி, தேன், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

ஆ.சாந்தி கணேஷ், ஜெ.நிவேதா - படங்கள்: தே.அசோக்குமார்