வேகவைக்காமல், எண்ணெய் இல்லாமல் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகள்!

அடுப்பைப் பற்றவைத்து, எண்ணெய் ஊற்றி, அது காயும் நிமிடத்துக்குள் 300 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனைப் படைத் துள்ளனர், தமிழ்நாட்டு இளைஞர்கள். வேகவைக்காமலும், ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமலும், 3 புள்ளி 5 நிமிடத்தில் முழுமையான இயற்கை உணவுகளைத் தயார்செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ஜியோ இந்தியா ஃபவுண்டேஷனோடு இணைந்து செஃப் `படையல்’ சிவகுமார் தலைமையில் சென்னை விமானநிலையத் திருமண மண்டபத்தில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவ மாணவிகள், விமானநிலைய ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜியோ இந்தியா பவுண்டேஷனின் நிறுவனர் ப்ரியா ஜெமிமாவிடம் பேசினோம்.

``ஒரு தன்னார்வ நிறுவனத்தின் முக்கியக் கடமை, சமுதாயத்துக்கு துணை நிற்பதுதானே? முன்னுரிமை வழங்கப்படாத மக்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத திறமை சாலிகளைக் கண்டெடுப்பதில் எங்கள் பொறுப்பு அதிகம். அப்படி எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் `படையல்’ சிவகுமார். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், மிகுந்த திறமைசாலி. அவரின் திறமையை உலகறியச் செய்ததில் மகிழ்ச்சி. இவரைப் போன்ற திறமையாளர்களுக்கு நான் உதவிசெய்ய எப்போதும் தயார். இயற்கை கொடுத்ததை, இயற்கையாவே சாப்பிட வேண்டும். அதை உலகளவில் கொண்டுசென்றதுதான் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன்” என்று பூரித்தார் ப்ரியா.

தென்னிந்தியா முழுவதும் `படையல் நேச்சுரல் ஃபுட்’ என்ற பெயரில் படையல் சிவகுமாரும் அவரின் சகோதரி பகவதி ராணியும் இணைந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்கள். எண்ணெய், அடுப்பு போன்றவற்றை உபயோகிக்காமல், சுமார் 30 வகையான இயற்கை உணவு ரெசிப்பிகளை மட்டுமே இவர்கள் இதுவரை சொல்லிக்கொடுத்திருக்கின்றனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 500 இயற்கை உணவு வகைகளைத் தனியே தயாரித்துவந்த சிவகுமார், அந்தக் குறிப்புகளை முதன்முதலாக இந்த உலகச் சாதனைக்காக வெளியிட்டுள்ளார்.

``இந்தச் சாதனையைப் படைப்பதற்காக எவ்வளவு நாள் பயிற்சியில் ஈடுபட்டீர்கள்?” - ‘படையல்’ சிவகுமாரிடம் கேட்டோம்.

``இந்த வாய்ப்பு கிடைக்க மிக முக்கியக் காரணம் `ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’. இங்கே வேலைசெய்யும் விவேகானந்தன், ஒரு வருடத்துக்கு முன்பு அவர் மனைவியுடன் என் பயிற்சி வகுப்புக்கு வந்தார். அப்போது, இந்த இயற்கை உணவில் இருக்கும் நன்மைகளைப் பார்த்துட்டு, `இந்தச் சின்ன வட்டத்துக்குள்ளேயே இது முடிந்துவிடக் கூடாது. உலக அளவில் கொண்டுசேர்க்க வேண்டும்’ எனச் சொன்னதோடு, இப்படி ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சிக்காக மூன்று நாள்கள் நாங்கள் எல்லோரும் தூங்காமல் உழைத்தோம். நிறைய பேர் நன்றாகவே சமைக்கிறார்கள். ரொம்பப் பெருமையாக இருக்கிறது.”

``வருங்காலத்தில், இயற்கை உணவுகள் எந்த அளவுக்கு மக்களால் ஆதரிக்கப் படும்?”

``இயற்கை உணவு, பலவித நோய்களைக் குணப்படுத்தும். மருத்துவமனைக்குப் போனால்கூட உணவுப் பழக்கத்தில்தான் பெரும்பாலும் மாற்றங்களைச் செய்யச் சொல்வார்கள். அதனால், அதை ஒழுங்குபடுத்திக்கொண்டாலே ஆரோக்கியம் மேம்படும். இப்போது மக்களுக்கு ஆரோக்கியத்தில் அதிக கவனம் இருக்கிறது. அதனால் வருங்காலத்தில் இயற்கை உணவுகள் நிச்சயம் ஏற்கப்படும்” என்கிறார் `படையல்’ சிவகுமார்.