திருச்செந்தூரில் ஓர் உணவகம் மற்றும் கார் ஆக்ஸசரீஸ் விற்பனையைக் கவனித்துக் கொண்டிருந்தவர் மதன் சுந்தர். நான்காண்டுகளுக்கு முன்பு ஒருநாள் அதே ஊரில் உணவகம் நடத்திக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள்... `நம்ம ஹோட்டல்ல நிறைய ஸ்பெஷல் அயிட்டங்கள் போடறோம். பல ஊர்கள்லேருந்து வர்றங்களுக்கு அதை சுலபமா புரிய வைக்க போட்டோ எடுத்து டிஸ்பிளே செய்தா நல்லாயிருக்கும். எங்களுக்கு ஏதாவது ஐடியா சொல்லேன்’ என்கிறார்கள்.

பல ஊர்களைச் சுற்றிப்பார்த்த அனுபவம்கொண்ட மதன், உடனே செயலில் இறங்குகிறார். ஒரு கேமரா வாங்குகிறார். நண்பர்களின் உணவகத்தில் தயார்செய்த உணவுகளை விதம் விதமாகப் படமெடுக்கிறார். கார் ஆக்ஸசரீஸுக்காக அவர் பார்த்த விளம்பரங்களும் அதற்கு உதவுகிறது. பல கோணங்கள், பல வகையான உணவுகள், பல சோதனை முயற்சிகள்... இன்று மதன் எடுத்த போட்டோக்கள் நண்பர்களின் உணவகங்களில் மொழி தெரியாத வாடிக்கையாளர்களைக்கூட ஈர்க்கிறது.

அதுமட்டுமல்ல... பெங்களூரில் உள்ள பிரபல உணவகங்கள், சென்னையில் உள்ள நகைக்கடை நிறுவனங்கள் மதனை அழைக்கின்றன. உற்சாகமாகப் படமெடுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது?

“ஒன்பதாம் வகுப்புதான் படிச்சேன். பெரிசா ஆங்கில அறிவும் கிடையாது. ஆனால், செய்வதை மிகச் சிறப்பாகச் செய்யணும்கிற ஆர்வம் அதிகம். நல்ல கேமரா வாங்கியதும் உணவு வகைகளை மட்டுமல்லாமல் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் படம் எடுத்தேன். அடுத்து திருவிழாக்கள், கோயில்கள் என்று என் பார்வை பதிய தொடங்கியது.

உணவு வகைகளைப்பொறுத்தவரை, ஓர் உணவைச் சாப்பிடும் விஷயமாகப் பார்க்காமல் அதை ஓர் உயிருள்ள பொருளா நினைச்சுப்பேன். சுடச்சுட சமையல் செய்து என் முன்னாடி உணவு வந்ததும் அதன் பின்னணி, கலர், தன்மை, லைட்டிங்னு சகலத்தையும் பார்த்து, அதுக்கேத்தபடி அழகுபடுத்துவேன். என் கற்பனைக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி புதுப்புது முயற்சிகளும் செய்வேன். சைவம், அசைவம், சைனீஸ், இத்தாலி, செட்டிநாடு... எந்த உணவா இருந்தாலும், அதன் பின்னணி மூலமா அந்த ஃபீலிங்கை உருவாக்கலாம்.

படம் எடுக்கும்போது, ருசியைவிட அழகு முக்கியம் என்று நினைப்பேன். அதற்காக சில கண்கட்டு வித்தைகளைச் செய்யறதுண்டு. உதாரணத்துக்கு ஐஸ்கட்டிகள் மிதக்கிற மாதிரியான இடங்கள்ல நிஜமான ஐஸ்கட்டிகளை உபயோகப்படுத்தினால், போட்டோ செஷன் முடியறதுக்குள்ள கரைஞ்சிடும். அதனால அக்ரிலிக் ஐஸ்கட்டிகளை உபயோகிப்பேன்.

உணவு வகைகள் பக்கத்துல அழகுக்காக வைக்கப்படும் கீரை வகைகள், சில காய்கறிகள் என்னதான் ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும் படமெடுத்துப் பார்த்தால் திருப்தி ஏற்படாது. பச்சை மிளகாய் மேலே தண்ணீர் தெளித்தாலும், அதை தண்ணிக்குள்ளே முக்கியெடுத்து வந்து படம் எடுத்தாலும் சரியா வராது. அதை ஃப்ரீசரில் வைத்து எடுத்து வந்து வைத்து, படமெடுத்தால் அதன் ரிசல்ட் துல்லியமா இருக்கும்.

எந்த ஓர் உணவாக இருந்தாலும் அது சமைத்த ஆறு மணி நேரத்துல அதன் சுவை மாறிவிடும் என்பார்கள். அதனால், உணவை வகைகளை அடுத்த சில நிமிஷங்களுக்குள் அலங்கரிச்சு படம் எடுத்து முடிக்கணும்.

சமையலில் ஆர்வம், கிரியேட்டி விட்டி, அளவுக்கதிகமான பொறுமை, உணவின்மீது தனிக் காதல்... இவை எல்லாம் இருந்தா போதும் நீங்களும் என்னைவிட பிரமாதமாகப் படமெடுக்கலாம்” என்கிறவர், எடுத்த படங்களைப் பார்த்தாலே பசியைத் தூண்டுகிறது!