1900-களில் இருந்தே தமிழ் சமூகத்தில் ருசி ரசிகர்களின் அபிமானத்தைத் தொட்டுத் தொடர்கிறது காபி. வீட்டில் தயாரிக்கப்படும் காபிக்காக எவ்வளவோ மெனக்கெடப்படும்.

குறிப்பிட்ட காபி கொட்டைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி, வறுத்து, அதற்கான சிறு கருவியில் அரைத்து, காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தி, காலை எழுந்தவுடன் காபி என்றே நாளும் பொழுதும் தொடங்கும்.

காபி என்பது காபி மட்டும் அல்லவே. இதோ... சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார் மக் கேக், டோனட்ஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட், குக்கீஸ், ஜெல்லி, பர்ஃபி என காபியைப் பயன்படுத்தி செய்யக்கூடிய பலவித ரெசிப்பிகளை வழங்குகிறார். காபி மணம் கமழும்!

படங்கள்: தே.அசோக்குமார்

காபி ஐஸ்க்ரீம்

தேவையானவை:
* திக் டிகாக்ஷன் - 2 டேபிள்ஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* காபி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன் (இன்ஸ்டன்ட் காபி பவுடர்)
* சாக்கோ சிப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
* ரெடிமேட் விப்பிங் க்ரீம் (ஹெவி) - 250 மில்லி

செய்முறை:

சிறிய பவுலில் வெதுவெதுப்பான நீர் சிறிது எடுத்து காபி பவுடர் போட்டுக் கலக்கவும்.அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் விப்பிங் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் அதன் அளவு இரு மடங்காகும் வரை தொடர்ந்து பீட் செய்யவும். இதனுடன் கலக்கி வைத்திருக்கும் காபி கண்டன்ஸ்டு மில்க் கரைசலை ஊற்றித் திரும்பவும் நன்கு அடிக்கவும்.

இந்தக் கலவையில் சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கிளறவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 12 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும்.

பின்னர், இதைப் பரிமாறும் பவுலுக்கு மாற்றி மேலே சாக்கோ சிப்ஸ் சிறிது தூவி, திக்கான காபி டிகாக்ஷன் சிறிது ஊற்றிப் பரிமாறவும். வேண்டுமெனில் விருப்பமான கோன் வேஃபரிலும் இந்த ஐஸ்க்ரீமை ஊற்றிச் சாப்பிடலாம்.

*70 நாடுகளைச் சேர்ந்த 120 மில்லியன் மக்கள் காபி சார்ந்த பணிகளால் தான் வாழ்கிறார்கள்.

காபி சாக்லேட்

தேவையானவை:
* டார்க் சாக்லேட் பார், மில்க் சாக்லேட் பார் - தலா 50 கிராம்
* இன்ஸ்டன்ட் காபி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
* பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சாக்லேட்டுகளைத் துருவி ஒரு பாத்திரத்தில் போட்டு டபுள் பாய்லிங் முறையில் (ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதைக் கொதிக்கவிட்டு அதன் மேல் சாக்லேட் இருக்கும் பாத்திரத்தை வைத்து, சாக்லேட்டை உருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் டபுள் பாய்லிங்) உருக்கிக்கொள்ளவும்.

இப்படி உருக்கிய சாக்லேட்டில் காபி பவுடர், சுக்குப்பொடி, பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் போட்டுக் கலக்கவும். பின்னர் இதை விருப்பமான சாக்லேட் மோல்டில் ஊற்றி, பதினைந்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

குறிப்பு:

* ஹைடெம்ப்ரேச்சரில் வைத்து மைக்ரோவேவ் அவனிலும் சில நிமிடங்களில் சாக்லேட்டை உருக்கிக் கொள்ளலாம்.

*உலக காபி உற்பத்தி 1960-ல் இருந்ததைவிட இப்போது மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.

காபி டோனட்ஸ்

தேவையானவை:
* மைதா, கோதுமை மாவு - தலா அரை கப்
* உருக்கிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* வெதுவெதுப்பான பால் - அரை கப்
* சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் பொடி - தலா ஒரு சிட்டிகை
* பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
* இன்ஸ்டன்ட் ஈஸ்ட் - அரை டீஸ்பூன்
* டோனட் கட்டர் - ஒன்று
* வெஜிடபிள் ஆயில் - சிறிது
*காபி கிளேசிங் (coffee glazing) செய்யத் தேவையானவை:

* உருக்கிய டார்க் சாக்லேட் - 2 டேபிள்ஸ்பூன்
* கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெதுவெதுப்பான பால் - 4 டேபிள்ஸ்பூன்
* ஐசிங் சுவர் - 2 டேபிள்ஸ்பூன்
* திக் காபி டிகாக்ஷன் - 4 டேபிள்ஸ்பூன்
* விருப்பமான சுகர் கலர் ஸ்பிரிங்கிள்ஸ்
(மேலே அலங்கரிக்க) - தேவைக்கேற்ப

செய்முறை:

வெதுவெதுப்பான பாலை வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, இன்ஸ்டன்ட் ஈஸ்ட்டைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சலித்த மைதா, உப்பு, கோதுமை மாவைச் சிறிது, சிறிதாகக் கலந்து மாவாகப் பிசைந்து கொள்ளவும்.

மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெதுவெதுப்பான பால் ஊற்றி சப்பாத்தி மாவு போலப் பிசையவும். பிசைந்த மாவில் சிறிது வெஜிடபிள் ஆயில் தடவி முப்பது நிமிடங்கள் மூடி வைக்கவும். முப்பது நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் மாவின் அளவு இருமடங்காகி இருக்கும். (ஈஸ்ட் சேர்ப்பதால் மாவின் அளவு அதிகரிக்கும். அறையின் வெப்பத்துக்கேற்றபடி ஈஸ்ட் வேலை செய்யும் என்பதால் சில நேரம் மாவு பொங்க 30 நிமிடங்களுக்குப் பதிலாக 40 - 50 நிமிடங்களாகக்கூட ஆகலாம்).

பின்னர் மொத்த மாவையும் ஒரே சப்பாத்தி யாக இட்டு அதன்மேல் டோனட் கட்டரால் அழுத்தி, டோனட்களை உருவாக்கிக் கொள்ளவும். டோனட் கட்டர் இல்லாதவர்கள் வட்ட வடிவிலான பெரிய மூடி ஒன்றையும், அதைவிட சிறிய வடிவிலான மூடி ஒன்றையும் எடுத்துக்கொள்ளவும்.

சப்பாத்தியாக இட்ட மாவில் பெரிய மூடி வட்டத்தை அழுத்தி எடுத்து அதன் நடுவில் துளைக்குச் சிறிய மூடியை வைத்து அழுத்தி எடுக்கவும். எல்லா மாவிலும் இது மாதிரி டோனட்களைத் தயார் செய்யவும்.

பின்னர் தயாரித்த டோனட்களை பிரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் வெண்ணெய் தடவிய அவன் டிரேயில் வைத்து 25 நிமிடங்கள் 180 டிகிரியில் பேக் செய்யவும்.

ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள், சிறிது பொடித்த சர்க்கரை மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். பேக் செய்து எடுத்த டோனட்களின் மேல் முதலில் உருக்கிய வெண்ணெயைத் தடவி, அதன்பிறகு அதன் மேல் சர்க்கரைக் கலவையைத் தூவவும்.

காபி கிளேசிங் செய்முறை:

ஒரு பாத்திரத்தில் காபி கிளேசிங் செய்யத் தேவையான அனைத்துப் பொருள்களையும் போட்டு நன்கு கலக்கவும். திக்கான பேஸ்ட் மாதிரி கிடைக்கும். இதை பேக் செய்து சர்க்கரை கலவை தூவி வைத்திருக்கும் டோனட்களின் மேல் பாகத்தில் மட்டும் சுற்றிலும் ஊற்றவும். உங்களுக்கு விருப்பமான ஸ்பிரிங்கள்ஸை மேலே தூவி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

* டோனட்கள் செய்ய நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அதில் மிகவும் சுலபமான வழிமுறை இது. மாவு மிருதுவாக இருந்தால்தான் டோனட்களும் மிருதுவாக இருக்கும்.

* அதேபோல மாவிலும் காபி ஃப்ளேவர் வேண்டுமென்றால் மாவு பிசையும்போது வெதுவெதுப்பான பாலுடன் வெதுவெதுப் பான டிகாக்ஷனும் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

*2015-ல் உலக காபி வணிகத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 19 பில்லியன் டாலர்.

காபி குக்கீஸ்

தேவையானவை:
* சர்க்கரை பொடித்தது - அரை கப்
* சலித்த மைதா - ஒரு கப்
* காபி இன்ஸ்டன்ட் பவுடர் - 2 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
* ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
* சாக்கோ சிப்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்)
* வெண்ணெய் - கால் கப்
* வெதுவெதுப்பான பால் - சிறிது (காபி பவுடரைக் கலப்பதற்கு)

செய்முறை:

காபி பவுடரை பாலில் கரைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் சலித்த மைதா, பேக்கிங் பவுடர், ஜாதிக்காய்ப் பொடியைக் கட்டிதட்டாமல் கலந்து வைக்கவும்.

மற்றொரு பவுலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரையைப் போட்டு பீட் செய்யவும். இதனுடன் காபி பவுடர் - பால் கலவையைப் போட்டுத் திரும்பவும் அடித்து ஸ்மூத்தாக்கிக் கொள்ளவும். இதை மைதா மாவு கலவையுடன் சிறிது, சிறிதாக ஊற்றி மிருதுவாக, கட்டி தட்டாமல் பிசைந்துகொள்ளவும்.

பிறகு மாவை மூடி, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பின்னர் எல்லா மாவையும் எடுத்து மொத்தமாக ரோல் செய்து சிறிது, சிறிதாக வெட்டி உருண்டையாக்கிக் கொள்ளவும். பிறகு நடுவில் அழுத்தி, கொஞ்சம் தட்டைகளாக்கிக் கொள்ளவும். அல்லது மொத்த மாவையும் ஒரே சப்பாத்தியாக இட்டு குக்கீஸ் கட்டரால் கட் செய்தும் கொள்ளலாம்.

எல்லா மாவையும் இப்படி குக்கீஸ்களாகச் செய்து அதன்மீது சாக்கோ சிப்ஸ் தூவவும். பிறகு பேக்கிங் டிரேயில் இடைவெளிவிட்டு குக்கீஸ்களை அடுக்கவும். இவற்றை பிரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் வைத்து 10-15 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். காபி குக்கீஸ் ரெடி. குக்கீஸ் சிறிது ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுப் பயன்படுத்தவும்.

*காபி குடிக்கும் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவிகித அளவுக்கு அதிகரிக்கிறது.

காபி சாக்கி கேக்

தேவையானவை:
மைதா, பொடித்த சர்க்கரை - தலா ஒரு கப்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
தேன் - அலங்கரிக்க தேவையான அளவு
கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 3 டீஸ்பூன்
தயிர் - அரை கப்
வெதுவெதுப்பான பால் - 2 டீஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் - கால் கப்

செய்முறை:

ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர் சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும்.வெதுவெதுப்பான பாலில், காபி பவுடரை கரைத்துவைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பவுலில் தயிர், சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் காபி, பால் கலவையைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் வெஜிடபிள் ஆயிலைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்னர் இதை மாவுக் கலவையில் ஊற்றி, கட்டிதட்டாமல் கலந்து தோசை மாவுப் பதத்துக்கு ஸ்மூத்தாகக் கரைக்கவும். பின்னர், இதை உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் இருக்கும் சிலிக்கான் மோல்டில் ஊற்றவும். இருபது நிமிடங்கள் பிரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் இந்தக் கேக் கலவையை வைத்து 40 முதல் 50 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். கேக்கை மோல்டிலிருந்து எடுத்து, சிறிது ஆறியதும் அதன் மேலே தேன் ஊற்றிப் பரிமாறவும்.

குறிப்பு:

* வேண்டுமென்றால் டூட்டி ஃப்ருட்டி, நட்ஸ் போன்றவற்றை கேக் கலவையில் சேர்த்துக் கொள்ளலாம். கேக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் ஊற்றி கலந்து கொள்ளவும். அதுபோல பேக்கிங் நேரமும் 5, 10 நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனுக்குத் தகுந்ததுபோல மாறுபடும்.

*மழைப்பொழிவு குறையும்போதெல்லாம் 10-12% காபி உற்பத்தி குறைகிறது.

காபி ஆர்ட்

தேவையானவை:
* இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்
* பால் (ஃபுல் ஃபேட் மில்க்) - ஒரு கப்
* சாக்லேட் சிரப் - 3 டேபிள்ஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க், ஃப்ரெஷ் க்ரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன்
* 250 மில்லி காபி மக் - ஒன்று

செய்முறை:

பாலைக் காய்ச்சி, சிறிது ஆறவிட்டு வெது வெதுப்பாக்கவும். இதனுடன் காபி பவுடர், கண்டன்ஸ்டு மில்க், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு இதை காபி பருகும் கப்பில் ஊற்றவும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பிறகு வெளியில் எடுத்து அதன் நடுவில் சாக்லேட் சிரப் ஊற்றி, டூத்பிக்கால் இலை, இதயம் என உங்களுக்கு விருப்பமான வடிவத்தை வரையவும் அல்லது காபியின் மேல் விதவிதமான வடிவத்தை வரைவதற்காகவே ஸ்டென்சில்கள் வடிவங்கள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு விருப்பமான வடிவத்திலிருக்கும் ஸ்டென்சிலை காபி டம்ளர் மேல் வைத்து சாக்லேட் சிரப்பை ஊற்றினாலும் அழகாக டிசைன் விழும்.

குறிப்பு:

*பொதுவாகப் பெரிய காபி ஷாப்களில் இதுபோன்ற காபி ஆர்ட்டுக்கு என்றே தனி டூல்ஸ் மெஷின் இருக்கும். இதற்கு Latte Art என்றே பெயர். ஆனால், இந்த மெஷினின் விலையும் அதிகமாக இருக்கும்.

*ஆனால், இது எதுவுமே இல்லாமல் நாமே சுலபமான முறையில் மேற்சொன்னதுபோல காப் ஆர்ட் செய்து கொடுத்து, குழந்தைகளையும் விருந்தினர்களையும் அசத்தலாம். அதுபோல சாக்லேட் சிரப்புக்குப் பதில் இன்ஸ்டன்ட் காபி பவுடர், காபி கண்ணாடி மேல் டிசைன் வரைந்து காபி ஆர்ட் செய்யலாம்.

*லண்டன், நியூயார்க் ஆகிய சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்பவே நம் ஊரிலும் காபி விலையில் ஏற்றமும் இறக்கும் உள்ளது.

காபி வித் காபி ஜெல்லி

தேவையானவை:
* காபி - அரை கப் (பாலில் டிகாக்ஷன், சர்க்கரை கலந்தது)
* அகர் அகர் - 10 கிராம் (ஜெல்லியை உருவாக்கப் பயன்படும் ஒரு வகையான பொருள்தான் அகர் அகர் என்று அழைக்கப்படுகிறது)
* காபி ஐஸ்க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்
* ரெடிமேட் காபி பவுடர், கோகோ பவுடர் - தலா அரை டீஸ்பூன்

செய்முறை:

பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் அகர் அகரைப் போட்டுக் கரைக்கவும். அது கரைந்ததும், அந்தப் பத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, அகர் அகர் கரைசலுடன் கண்டன்ஸ்டு மில்க், காபி பவுடர், கோகோ பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

இவை அனைத்தும் கரைந்து ஜெல்லி பதத்துக்கு வந்ததும் அடுப்பை நிறுத்தவும். கலவை ஆறியதும் அவற்றை உங்களுக்கு விருப்பமான வடிவத்திலுள்ள மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் காபி ஜெல்லி ரெடி. குளிர்ந்த காபியில் இந்தக் காபி ஜெல்லியைக் கொட்டிக் கலக்கவும்.

பிறகு இவற்றை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர் இதன் மேலே சிறிது காபி ஐஸ்க்ரீம் வைத்து நீளமான ஸ்பூன் போட்டுப் பரிமாறவும்.

*இந்தியாவின் அரிய வகை காபி (சிங்கிள் ஆர்ஜின்) அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸின் ஒரு பிரத்யேக காபி ஷாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காபி பர்ஃபி

தேவையானவை:
* தேங்காய்த்துருவல் - ஒரு கப்
* சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
* பிரெட் உதிர்த்தது - கால் கப்
* சர்க்கரை - ஒரு கப்
* கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
* நெய் - சிறிது
* இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 3 டீஸ்பூன்
* திக் காபி டிகாக்ஷன் - கால் கப்

செய்முறை:

சர்க்கரையுடன் தேங்காய்த்துருவல், சுக்குப் பொடி சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, இக்கலவையை போட்டுக் கிளறவும்.

இதனுடன் உதிர்த்த பிரெட், கோகோ பவுடர் சேர்த்துக் கிளறவும். கடைசியாகக் காபி பவுடர், காபி டிகாக்ஷன் சேர்த்துக் கிளறவும். இவை அனைத்தும் சேர்ந்து வெந்து சுருள வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். நெய் தடவிய தட்டில் இதைக் கொட்டி, சிறிது ஆறியதும் கத்தியால் பர்ஃபி துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

* இதை உருண்டையாகவும் பிடிக்கலாம். பதம் சிறிது மாற வேண்டும். அவ்வளவு தான்.

*இந்தியாவில் 3,42,000 ஹெக்டேர் நிலத்தில் காபி பயிரிடப்படுகிறது. சராசரி உற்பத்தி 2,62,000 டன் (2012 கணக்கீடு).

கேரமல் காபி

தேவையானவை:
* திக்கான பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)
* கேரமல் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்
* விப்டு க்ரீம் (whipped cream) - ஒரு ஸ்கூப்
* பிரவுன் சுகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* இன்ஸ்டன்ட் காபி பவுடர் - ஒரு டீஸ்பூன்
* பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் அல்லது பட்டர் ஸ்காட்ச் தூள் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

திக்கான பாலில் இன்ஸ்டன்ட் காபி பவுடரைக் கலந்து கொள்ளவும். ஒரு சிறிய பானில் பிரவுன் சுகர், கேரமல் சாஸ் போட்டு, குறைந்த தணலில் சில நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைக்கவும்.

பிறகு, பெரிய டம்ளரில் காபியை ஊற்றி அதன்மீது விப்டு க்ரீம் வைத்து, அதன்மீது ரெடியான கேரமல் சாஸ், பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் கலவையைப் போட்டு ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

* பட்டர் ஸ்காட்ச் சிப்ஸுக்குப் பதில் கேரமல் சிப்ஸ் / தூளும் பயன்படுத்தலாம்.

*ஒட்டுமொத்த இந்திய காபி உற்பத்தியில் 71 சதவிகிதம் கர்நாடகாவிலும், 21 சதவிகிதம் கேரளாவிலும், தமிழ்நாட்டில் 5 சதவிகிதமும் செய்யப்படுகிறது.

காபி மக் கேக்

தேவையானவை:
* மைதா - 4 டேபிள்ஸ்பூன்
* இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்
* பால் - கால் கப் (வெதுவெதுப்பானது)
* உருக்கிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
* விருப்பமான நட்ஸ் உடைத்தது - 2 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* 250 மில்லி அளவுள்ள பீங்கான் காபி மக் - ஒன்று

செய்முறை:

200-250 மில்லி அளவு கொள்ளும் பீங்கான் மக்கை எடுத்து, அதில் வெண்ணெய், கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். இதனுடன் காபி பவுடர், வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறிக் கலக்கவும். பின்னர் மைதா, ஏலக்காய்த்தூள், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் போட்டுக் கலக்கி விருப்பமான நட்ஸையும் அதிலேயே போடவும்.

கப்பின் பாதி அளவுக்கு மட்டும் கலவை நிரம்பியிருந்தால் போதும். பிறகு மைக்ரோ அவனை ஹைடெம்பரேச்சரில் செட் செய்து இரண்டு நிமிடங்கள் கலவை நிரம்பிய மக் வைத்து மூடி வேகவிடவும். இடையே அவனை திறந்து டூத்பிக்கால் கேக் நடுவில் குத்தி பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது என்று அர்த்தம். தயாரான மக் கேக்கை ஸ்பூன் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:
* இன்ஸ்டன்ட் காபி பவுடருக்குப் பதில் திக் காபி டிகாக்ஷனை, பாலுடன் கலந்தும் இவ்வகை கேக் தயாரிக்கலாம். காபி சுவையுடன் மிக அருமையாக இருக்கும்.

*ஒவ்வொரு நாளும் உலகில் 2.25 பில்லியன் கப் காபி பருகப்படுகிறது.