வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். பீநட் பட்டர், அதாவது வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கம். சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக 1890 வாக்கில் ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த `பீநட் பட்டர்’ எனச் சொல்லப்படுகிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு. அதனால்தானோ என்னவோ இந்தோனேஷியாவின் பீநட் சாஸ், மேற்கு ஆப்பிரிக்காவின் சூப், சைனீஸ் நூடுல்ஸ், பெரு நாட்டின் ஸ்ட்யூ, பீநட் பட்டர் போடப்பட்ட சாண்ட்விச் எல்லாமே ஒரேவிதமாக ருசிக்கிறதோ?

இதோ... லட்டு முதல் சிக்கி வரை இனிப்பும் காரமுமாக இனிய வேர்க் கடலை உணவுகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

படங்கள்: வீ.நாகமணி

வேர்க்கடலை லட்டு

தேவையானவை:
* பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
* பொடித்த வெல்லம் - முக்கால் கப்
* நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சை வேர்க்கடலையை அதன் தோல் பிரவுன் நிறமாக மாறும் வரை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒருகட்டத்தில் கடலையின் தோல் பிரிந்து வெளியே வர ஆரம்பிக்கும். இப்போது வாணலியைக் கீழே இறக்கவும். பிறகு வறுத்த கடலையைக் கைகளால் தேய்த்து ஊதினால் அவற்றின் தோல் முழுவதும் சுலபமாக வந்துவிடும். தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும்.

பிறகு இதனுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மறுபடியும் அரைக்கவும். அரைத்த இந்தக் கலவையை ஒரு பவுலுக்கு மாற்றவும். அதனுடன் உருக்கிய நெய்யைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும். உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:

* கைகளில் தனியாக நெய் எதுவும் தடவத் தேவையில்லை. வேர்க்கடலையில் இருக்கும் எண்ணெய்ப்பசையே லட்டு பிடிக்கப் போதுமானது.

*வேர்க்கடலையின் தாயகம் தென்அமெரிக்கா.

வேர்க்கடலை சாட்

தேவையானவை:
* வேர்க்கடலை (வறுக்காதது) - அரை கப்
* துருவிய கேரட் - ஒரு டேபிள்ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்
* பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* துருவிய மாங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
* எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
* சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையைத் தண்ணீரில் 30 முதல் 40 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு குக்கரில் 5-6 நிமிடங்கள் வேகவைக்கவும். ஒரு பவுலில் நறுக்கிய தக்காளியையும் வெங்காயத்தையும் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் துருவிய கேரட்டைச் சேர்க்கவும். பிறகு புதினா இலைகளைச் சேர்க்கவும்.

பின்னர் துருவிய மாங்காயைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து மறுபடியும் நன்கு கலக்கவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலாத்தூள், சர்க்கரை சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். வேர்க்கடலை சாட் ரெடி!

*சீனா, இந்தியா, நைஜீரியா நாடுகள் அதிக அளவில் வேர்க்கடலை பயிரிடுகின்றன.

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை:
* கடலை மாவு - 2 கப்
* அரிசி மாவு - ஒரு கப்
* வேர்க்கடலை (வறுக்காதது) - ஒரு கப்
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் கலந்துகொள்ளவும்.

ஒரு கை நிறைய தண்ணீரை எடுத்து மாவின் மேல் தெளித்து மாவைப் பிசறிவிடவும். பிசறிய மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிற மாகப் பொரித்தெடுக்கவும்.

*நிலக்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை, மல்லாட்டை ஆகிய பெயர்களும் வேர்க்கடலைக்கு உண்டு.

ஹோம்மேடு வேர்க்கடலை பட்டர் (Peanut butter)

தேவையானவை:
* வறுத்த வேர்க்கடலை - 2 கப்
* உப்பு - அரை டீஸ்பூன்
* தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
* கடலை எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுற்று ஓடவிடவும். இதனுடன் உப்பு, எண்ணெய் மற்றும் தேனைச் சேர்க்கவும். மறுபடியும் அரைக்கவும். இடையிடையே ஒரு நிமிடம் மிக்ஸியை நிறுத்தி மிக்ஸியின் ஓரங்களில், அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கலவையைக் கிளறிவிட்டு மறுபடியும் அரைக்கவும்.

வேர்க்கடலைக் கலவை வெண்ணெய் போல வழுவழுவென மாறும்வரை தொடர்ந்து இதுபோல செய்யவும். பிறகு இந்த வேர்க்கடலை பட்டரை ஒரு ஜாரில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும்.

*காந்திக்குப் பிடித்த உணவுகளில் வேர்க்கடலை முக்கியமானது.

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி

தேவையானவை:
* பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
* காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
* இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
* பூண்டு - 6 பல்
* நறுக்கிய வெங்காயம் - கால் கப்
* புளி - எலுமிச்சை அளவு
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
* எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 10

செய்முறை:

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் வேர்க்கடலையைப் போட்டு அதன் தோல் லேசான பிரவுன் நிறமாக மாறும் வரும் வரையில் வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வதக்கி வேர்க்கடலையுடன் சேர்க்கவும். கலவை ஆறியதும் இதனுடன் உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் மையாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, சில விநாடிகள் வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதைச் செய்து வைத்திருக்கும் சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும். ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி தயார்.

இந்தச் சட்னியை இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறலாம்.

*நிலக்கடலையில் மாங்கனீஸ், கால்சியம், தாமிரம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் உள்ளன.

வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் (எக்லெஸ்)

தேவையானவை:
* கோதுமை மாவு - முக்கால் கப்
* ஓட்ஸ் - கால் கப் (வெறும் கடாயில் வறுக்கவும்)
* வேர்க்கடலை பட்டர் (peanut butter) - கால் கப்
* பொடித்த சர்க்கரை - முக்கால் கப்
* பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
* வெண்ணெய் - அரை கப்
* பால் - ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது தேவையான அளவு
* வேர்க்கடலை (நொறுக்கியது) - 1/3 கப்
* உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீ ஹீட் செய்யவும். ஒரு பவுலில் வெண்ணெய், சர்க்கரை, வேர்க்கடலை பட்டர் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக க்ரீம் போல அடித்துக்கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு, ஓட்ஸ், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துப் பிசையவும். மாவு மிகவும் இறுக்கமாகத் தெரிந்தால் சிறிது பால் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மாவுடன் நொறுக்கிவைத்திருக்கும் வேர்க்கடலை, உலர்திராட்சையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பிறகு குக்கீஸ் வடிவத்தைப் பெறுவதற்காக ஒவ்வோர் உருண்டையையும் கைகளால் தட்டையாக்கவும். இவற்றை பார்ச்மென்ட் தாள் வைக்கப்பட்ட பேக்கிங் ட்ரேயில் வரிசையாக அடுக்கவும். ட்ரேயை அவனில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். குக்கீஸ்களை முழுவதுமாக ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

*வேர்க்கடலையில் உள்ள எண்ணெய்ப்பசை எளிதில் ஜீரணமாகக்கூடியது.

வேர்க்கடலை சாக்லேட் பார்

தேவையானவை - வேர்க்கடலை பட்டர் லேயர் செய்ய:
* உருக்கி, சற்று குளிரவைக்கப்பட்ட உப்பில்லாத வெண்ணெய் - ஒரு கப்
* வேர்க்கடலை பட்டர் (peanut butter) - ஒரு கப்
* பொடித்த சர்க்கரை - 2 கப்
* மேரி பிஸ்கட் துகள்கள் (marie biscuit crumps) - 2 கப்

சாக்லேட் டாப்பிங் செய்ய:
* சாக்லேட் சிப்ஸ் - ஒரு கப்

பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் அல்லது பார்ச்மென்ட் பேப்பரை வைக்கவும். அப்படி வைக்கும்போது பேப்பர் கொஞ்சம் அதிகமாக வெளியே நீட்டிக்கொண்டிருக்குமாறு வைக்கவும். அப்போதுதான் பேக் செய்யப்பட்ட பிறகு பேப்பரைச் சுலபமாக வெளியே எடுக்க முடியும். ஒரு பெரிய பவுலில் உருக்கிய வெண்ணெய் மற்றும் வேர்க்கடலை பட்டரை எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.

இதனுடன் பொடித்த சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரையானது கலவையுடன் நன்கு சேரும் வரை கலக்கவும். பிறகு மேரி பிஸ்கட் துகள்களை முதலில் ஒரு கப் சேர்த்துக் கலந்து, பிறகு இன்னொரு கப் சேர்த்து மறுபடியும் நன்கு கலக்கவும். இந்த வேர்க்கடலை பட்டர் கலவையை பேக்கிங் ட்ரேயில் போட்டுச் சமப்படுத்தி, நன்கு அழுத்தி லேயர் போல உருவாக்கவும். வேர்க்கடலை பட்டர் லேயர் தயார்.

கால் கப் வேர்க்கடலை பட்டர், ஒரு கப் சாக்லேட் சிப்ஸை மைக்ரோவேவ் அவனுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் மைக்ரோவேவ் பவுலில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சூடாக்கவும். சீரிய இடைவெளிகளில் கலவையை அவ்வப்போது எடுத்துக் கிளறிவிடவும். கலவையானது முழுவதுமாகக் கரைந்து மென்மையானதும் எடுத்துவிடவும். இதுவே சாக்லேட் டாப்பிங்.

இதை பேக்கிங் ட்ரேயில் இருக்கும் வேர்க்கடலை பட்டர் கலவையின் மேலே சேர்த்து சமப்படுத்தி ஒரு லேயர் போல உருவாக்கவும். பிறகு இந்த பேக்கிங் ட்ரேயை இறுக்கமாக மூடி ஃப்ரிட்ஜில் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது வைக்கவும்.

அப்போதுதான் சாக்லேட் டாப்பிங் நன்றாக செட்டில் ஆகும். அதன்பிறகு பேக்கிங் ட்ரேயை வெளியே எடுத்து அதில் எக்ஸ்ட்ராவாக நீட்டிக்கொண்டிருக்கும் பார்ச்மென்ட் பேப்பரைச் சற்று இழுத்து லாகவமாக ட்ரேயிலிருந்து முழு பேப்பரையும் வெளியே எடுக்கவும். பிறகு அதில் தயாராகி இருக்கும் சாக்லேட் பாரைத் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

*5 - 6 மணி நேரம் ஊறவைக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு முழுமையான உணவுக்குச் சமம். நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

வெண்டைக்காய் வேர்க்கடலை மசாலா

தேவையானவை:
* நறுக்கிய வெண்டைக்காய் - ஒரு கப்
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

வேர்க்கடலை மசாலா செய்ய:
* வறுத்து நொறுக்கப்பட்ட வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
* ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
* சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலில் வேர்க்கடலை மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெண்டைக்காயை இதனுடன் சேர்த்து மிதமான தீயில் 4 - 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.(அவ்வப்போது கரண்டியால் காயைக் கிளறிவிடவேண்டும்).

வெண்டைக்காய் நன்கு வெந்ததும், இதனுடன் வேர்க்கடலை மசாலா மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு கலந்து, மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்துக் கிளறி பிறகு அடுப்பை அணைக்கவும். வெண்டைக்காய் வேர்க்கடலை மசாலாவைச் சூடாகப் பரிமாறவும்.

*வேர்க்கடலையைக் கூழ் அல்லது கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு அதிக பலம் கிட்டும்.

மொறுமொறு வேர்க்கடலை சாலட் (CRUNCHY PEANUT SALAD)

தேவையானவை:
* சதுரமாக நறுக்கிய சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - தலா அரை கப்
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
* மெலிதாக நறுக்கிய வெங்காயத்தாள் - அரை கப் (வெங்காயத்தாளின் பச்சை மற்றும் வெள்ளைப்பகுதி *இரண்டையும் நறுக்கிக்கொள்ளவும்)
* சதுரமாக நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
* சதுரமாக நறுக்கிய தர்ப்பூசணி - அரை கப்
* சதுரமாக நறுக்கிய தக்காளி - ஒரு கப்
* மெலிதாக நறுக்கிய கேரட் - அரை கப்

டிரெஸ்ஸிங் செய்ய:
* நொறுக்கிய வேர்க்கடலை - ஐந்து டேபிள்ஸ்பூன்
* தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய
* கொத்தமல்லித்தழை - கால் கப்
* பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
* எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
* எள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒரு பெரிய பவுலில் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் குறைந்தது ஒரு மணி நேரமாவது வைத்து எடுக்கவும். டிரெஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்க்கவும். பரிமாறுவதற்குச் சற்று முன்பு டிரெஸ்ஸிங் கலவையை பவுலில் உள்ள பொருள்களுடன் சேர்த்து நன்கு குலுக்கி உடனடியாகப் பரிமாறவும்.

*வேர்க்கடலையைக் கொறிக்கக் கூடாது. நன்றாக மென்று சாப்பிடவில்லையென்றால் வயிற்றுவலியை ஏற்படுத்திவிடும்.

வேர்க்கடலை சிக்கி (CHIKKI)

தேவையானவை:
* வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் (தோல் நீக்கியது)
* பொடித்த வெல்லம் - ஒரு கப்
* ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* அரிசி மாவு - சிறிதளவு

செய்முறை:

அடிகனமான வாணலியில் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதனுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து வெல்லம் முழுவதுமாகக் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பாகுப்பதம் வந்ததும் அதனுடன் ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். உடனே வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து விரைவாகக் கிளறவும்.

பிறகு அடுப்பை அணைத்துவிடவும் (கடலையும் பாகும் நன்றாகச் சேரும்படிக் கிளற வேண்டும்). பிறகு, ஒரு மரப்பலகையில் அரிசி மாவைத் தூவவும். அதில் கிளறி வைத்திருக்கும் வேர்க்கடலைக் கலவையைச் சூடு ஆறுவதற்குள் போடவும். பிறகு சப்பாத்திக் குழவியால் உடனடியாகக் கலவையைச் சமப்படுத்தவும் (சூடு ஆறிய பிறகு இவற்றைச் செய்தால் கலவை மிகவும் கடினமாகிவிடும்).

பின்னர் கலவையின் சூடு சற்றுக் குறையும் போது (சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு) கத்தியால் வில்லைகள் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

*வறுத்த வேர்க்கடலையைவிட வேகவைத்த வேர்க்கடலையே சத்தானது. அத்துடன் ஒரு வாழைப்பழம், சிறிதளவு வெல்லம் மற்றும் ஒரு டம்ளர் மோர் குடித்தால் சமச்சீர் உணவாகும்.