ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறதோ இல்லையோ, முனியாண்டி விலாஸ் இருக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் தனித்துத் தெரியும். அந்தக் கடையைக் கடந்து செல்லும்போது, வாசனை சுண்டி இழுக்கும்!

``எத்தனை வெளிநாட்டுக் கடைகள் வந்தாலும், தினுசு தினுசான பெயர்களில் உணவுகள் கொடுத்தாலும், ஆப் மூலம் ஆர்டர் மூலம் வீட்டுக்கே சாப்பாடு வந்து தரும் நிறுவனங்கள் பெருகினாலும், எங்கள் வாடிக்கையாளர்களை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது.

காரணம், எங்களை வாழவைக்கும் முனியாண்டி சாமிதான்’’ என்றார் ஹோட்டல் தொழிலில் ஐம்பது வருட அனுபவமுள்ள பெரியவர் அழகர்சாமி. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவுக்கு வந்திருந்தவரிடம் பேசியபோதுதான் இதைப் பகிர்ந்துகொண்டார். நாடு முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்துநர்கள், இந்தத் திருவிழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் நெடுஞ்சாலையில் கள்ளிக்குடியில் இறங்கி வலதுபுறச் சாலையில் சில கிலோமீட்டர் தூரம் பயணித்தால், தமிழகத்தில் அசைவ உணவகப் பாரம்பர்யத்தை உருவாக்கிய வடக்கம்பட்டியை அடையலாம்.

``எந்த ஊரில் ஹோட்டல் வைத்திருந் தாலும், நாங்கள் தொழில் செய்ய காரணமான முனியாண்டி சாமிக்குப் பூஜைசெய்த பிறகுதான் வியாபாரத்தைத் தொடங்குவோம். முதல் விற்பனையில் வரும் பணத்தை அல்லது அதில் ஒரு பகுதியை எடுத்துவைத்து, கோயில் திருவிழா வுக்கு எங்கள் பங்காக அளித்துவிடுவோம். வாழவைக்கும் முதலாளிக்கு நாங்கள் கொடுக்கும் பங்கு இது” என்றார், ஆடு காணிக்கை கொடுக்கவந்த ஹோட்டல் காரரான வேணுகோபால்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், வெளிமாநிலங்களில் முனியாண்டி விலாஸ்களைத் தொடங்கி அங்கேயே செட்டிலாகிவிட்டாலும், திருவிழாவுக்கு மட்டும் ஒருவரும் மிஸ்ஸாகாமல் வந்து விடுவார்கள். ஆண்டு முழுவதும் ஆள் இல்லாமல் கிடந்த தங்கள் பூர்வீக வீடுகளில் உறவுகளுடன் உரையாடிக் களிப்பார்கள்.

உணவைக் காசுக்கு விற்கும் தொழில் தமிழகத்தில் வளர ஆரம்பித்தபோது, சைவ உணவுக் கடைகளே அதிகம் தொடங்கப்பட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நிறைய சைவ உணவகங்களைத் திறந்தார்கள். அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், நாயுடு மற்றும் ரெட்டியார்களும் அசைவ உணவகங்களைப் பரவலாக்கினார்கள். முனியாண்டி விலாஸ்கள் பல்கிப்பெருகின. ஒரே பெயரில் செயல்பட்டாலும் தனித்தனி முதலாளிகள் இருந்தனர்.

`செட்டிநாட்டு உணவகம்’ எனப் பெயர் போட்டுக்கொள்வோரில் 90 சதவிகிதம் பேர் செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், `முனியாண்டி விலாஸ்’ எனப் போட்டுக்கொள்வோரில் 90 சதவிகிதம் பேர் வடக்கம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தாம்!

நம்மிடம் மீண்டும் பேசிய அழகர்சாமி, ``ஹோட்டல் தொழிலுக்கு நான் வந்து ஐம்பது வருஷங்களாச்சு. காசுக்கு உணவு வித்தாலும், எங்க ஊர்க்காரர்கள் அதை உணர்வுபூர்வமா செய்கிறார்கள். அதனால்தான், சோளிங்கரில் ஹோட்டல் ஆரம்பித்த நாங்கள், மக்கள் ஆதரவில் வேலூர், ஆற்காடு, சேத்துப்பட்டு, சென்னை எனக் கிளை பரப்ப முடிந்தது. சுதந்திரத்துக்கு முன்பே 1937-ம் ஆண்டில் முனியாண்டி சாமியின் பெயரில் முதல் ஹோட்டலை சுப்பையா நாயுடு என்பவர் காரைக்குடியில் தொடங்கினார். விவசாயம் செய்து வந்தவர்கள் திடீரென ஹோட்டல் தொழிலில் இறங்குவதற்கு என்ன காரணம் எனக் கேட்கலாம். அந்தக் காலத்தில், காரைக்குடியில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டபோது எங்க ஊர் மக்கள் விவசாயம் செய்து நல்ல நிலையில் இருந்ததால், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைத்து வழங்கியிருக்கிறார்கள். அதனால் சிலருக்குச் சமையல் செய்வது பழகிவிட்டது. அதற்குப் பிறகு விவசாய வருமானம் குறையவே, கற்றுக்கொண்ட சமையல் கலையை மூலதனமாக வைத்து ஹோட்டல் தொழில் செய்ய ஊர் ஊராகச் செல்லத் தொடங்கினார்கள். எங்க முனியாண்டி சாமியின் பெயரையே அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பு வரை தமிழக மக்களுக்குத் தெரிந்த நல்ல அசைவ ஹோட்டல் என்றால், அது `முனியாண்டி விலாஸ்’தான். இப்போதுள்ள தலைமுறைகளுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். இன்று பல நவீன ஹோட்டல்கள், ஆன்லைன் உணவகங்கள் வந்துவிட்டாலும் எங்கள் வியாபாரத்துக்கு எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் சிறு வயதில் பார்த்த இடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் இப்போதும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

அதற்குக் காரணம், நியாயமான விலை, வீட்டுப் பக்குவத்தில் செய்யப்படும் சமையல், வேதிப்பொருள்கள் சேர்ப்பதில்லை. அது மட்டுமல்ல... ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிடுவோரையும், ஐந்நூறு ரூபாய்க்குச் சாப்பிடுவோரையும் ஒரே மாதிரியாகக் கவனிக்கும் முறை எங்களுடையது. சாப்பாட்டை அளவில்லாமல் கொடுக்கும் வழக்கம்தான், மக்களோடு எங்களை ஒன்றவைத்துள்ளது. இப்போது காலத்துக்கு ஏற்றாற் போல நகரங்களில் உள்ள எங்கள் உணவகங்களை நவீனப்படுத்தி வருகிறோம். சென்னையிலும் பல பகுதிகளில் முனியாண்டி விலாஸ்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன’’ என்றார்.

ஒவ்வொருவரும் ஆடுகளையும் கோழிகளையும் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் அடுப்பு மூட்டி விறகு வைத்து, பெரிய சட்டிகளை வரிசையாக அடுக்கிவைத்துக் கொண்டிருந்தனர். ஊர்க்காரர்கள் அனைவருக்கும் சமையல் தெரியும் என்றாலும், இந்தத் திருவிழா சமையலுக்குச் சுற்றுவட்டாரத்தில் உள்ள சமையல் மாஸ்டர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். டன் கணக்கில் அரிசியும், கறியும், கிலோ கணக்கில் மளிகைப் பொருள்களும், காய்கறிகளும் குவிந்து கிடந்தன. நள்ளிரவில் பிரியாணி வேக வேக, வாசனையில் அந்தப் பகுதியே சொக்கிப்போகும்.

டிரம் செட்காரர்கள் போடும் குத்துகளுக்கு வெளியூரிலிருந்து வந்திருந்த யுவன்கள் ஆட்டம்போட்டும், யுவதிகள் பால்குடம், தேங்காய், பழம் ஏந்தி ஊர்வலமாகச் சென்றும் முனியாண்டி சாமிக்குப் படைத்துவிட்டு, கோயில் முன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். கோயில் அமைந்திருக்கும் கண்மாய்க் கரையோரம் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஊர் மந்தையில் உள்ள நாடக மேடையில் `நான் மயங்குகிறேன்... சபையிலே....’ என்று எப்போதோ நடிகை ஸ்ரீதேவி ஆடிய பாடலுக்கு ஆடும் பெண்ணை ரசித்துக்கொண்டிருந்தனர்.

மறுநாள் முனியாண்டிக்குச் சிறப்புப் பூஜைகள் முடித்து, பிரியாணியை அவருக்குப் படைத்துவிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். அதிகமாக நன்கொடை கொடுத்தவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஸ்டீல் வாளிகளில் போட்டுக்கொடுக்கிறார்கள். அடுத்ததாக, வந்திருக்கும் மக்கள் அனைவருக்கும் `போதும்... போதும்’ என்று சொல்கிற அளவுக்குப் பாத்திரங்களில் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த விநியோகம் மதியம் வரை தொடர்கிறது.

நாயுடு சமூகத்தினரைப்போலவே வடக்கம்பட்டியைச் சேர்ந்த ரெட்டியார் சமூகத்தினரும் முனியாண்டி பெயரில் ஹோட்டல்களைத் தமிழகம் முழுவதும் நடத்திவருகிறார்கள். இவர்கள் தை மாதம் என்றால், அவர்கள் மாசி மாதத்தில் முனியாண்டிக்குத் திருவிழா எடுக்கிறார்கள். அவர்களும் பிரமாண்ட பிரியாணித் திருவிழாவை நடத்தி வட்டாரத்தை மணக்க வைப்பார்கள். ஆண்டுக்கு இரண்டு பிரியாணித் திருவிழா!

மாசி மாதத்தில் திருவிழா எடுக்கும் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி கூறும்போது ``இப்போதுள்ள எங்கள் சந்ததிகள் படித்து முடித்து வெவ்வேறு வேலைகளுக்குச் சென்றாலும், முதன்மைத் தொழிலான ஹோட்டல் தொழிலும் கவனத்தில் வைத்திருக்கிறார்கள். அதற்கு அடிப்படை, இந்தத் திருவிழாவில் ஒன்றுகூடுவதுதான். நம் பாரம்பர்யத்தை, நம் மண்ணை, நம் சாமியை மறக்கக் கூடாது என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு சமூகத்தினரும் முனியாண்டித் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்துகிறோம். முதல் இரண்டு நாள் சைவ அன்னதானம் வழங்கிவிட்டு, ஒவ்வொருவரும் தரும் ஆடு, கோழி, அரிசி, மளிகைப்பொருள்கள் வைத்து, பெரிய அளவில் பிரியாணி சமைத்து, சாமிக்குப் படைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு வழங்குகிறோம். பிரியாணி சமைக்க மாலையில் ஆரம்பிக்கும் பணி, அதிகாலையில் முடிவடையும். இந்தத் திருவிழா மூலம் மக்கள் வாயும் வயிறும் மனசும் நிறையும்’’ என்றார்.

இப்படி கமகமவென நிறைவுபெறுகிறது தை, மாசி மாதங்களில் நடைபெறும் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பிரியாணித் திருவிழா!

- செ.சல்மான்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

முனியாண்டி பெயரைப் பயன்படுத்தும் மற்றவர்கள்...

இந்த ஊரைச் சேராதவர்களும் முனியாண்டி பெயரில் ஹோட்டல் வைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் நன்றி் தெரிவிக்கும் வகையில், வடக்கம்பட்டிக்கு வந்து வணங்கி, திருவிழாவில் தாங்களும் பங்களிப்பதாகச் சொன்னார்கள். முனியாண்டி விலாஸில் உணவருந்த வருபவர்களை மற்ற அசைவ ஹோட்டல்கள்போல மட்டன், சிக்கன் வாங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஓர் ஆம்லேட் ஆர்டர் செய்து சாப்பிட்டாலும், அவர்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். மட்டன், சிக்கன், மீன் குழம்பும் வழங்குவார்கள். அதிலும் இவர்கள் வைக்கும் ரசத்துக்கு ஈடுஇணையே இல்லை. வீட்டில் வைப்பது போல் சரியான விகிதத்தில் ரசம் வைப்பார்கள். டம்ளரில் குடிக்கக் கேட்டாலும் கொடுப்பார்கள்.

சென்னையில் பல முனியாண்டி விலாஸ் களில் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் குழம்பு, ரசம் போன்றவற்றை 10, 20 ரூபாய்க்குக் கொடுத்து, யாருக்கும் `இல்லை’ எனச் சொல்லாமல் சேவையாற்றி வருகிறார்கள்!

மற்ற நாளில் வடக்கம்பட்டி...

சாதாரண நாளில் ஊரில் வீடு இருக்கும் அளவுக்கு ஆள்கள் இருப்பதில்லை. பழங்காலத்து வீடுகளுடன் ஊரே ஓவென்று காட்சியளிக்கும்.

ஹோட்டல் தொழிலுக்குச் செல்லாமல் வேறு வேலை பார்ப்பவர்களும், விவசாயம் செய்பவர்கள் மட்டுமே ஊரில் இருக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு பாட்டியோ, தாத்தாவோ இருக்கிறார்கள்.

அரசியல் மேடைகளில் முனியாண்டி விலாஸ்

`முனியாண்டி விலாஸுக்கு இருக்கும் கிளைகள்கூட இல்லாத கட்சி’ என்று எதிர்க்கட்சிகளை அரசியல் மேடைகளில் கிண்டலடிக்கும் நிலை ஒருகாலத்தில் இருந்தது.

வடக்கம்பட்டியைப் பார்த்து அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் ஹோட்டல் தொழில் செய்கின்றனர். அவர்களும் தங்கள் ஊரில் முனியாண்டிக்கு விழா எடுத்தாலும் இதுதான் டாப்!

பாண்டியன், மதுரை மெஸ், ராஜவிலாஸ் என்று, சிலர் கடைக்குப் பெயர் சூட்டியிருந்தாலும் பெயருக்கு மேலே `வடக்கம்பட்டி முனியாண்டி’ இருப்பார். அந்தக் காலத்தில் வடக்கம்பட்டி என்றால் யாருக்கும் தெரியாது என்பதால், `மதுரை’யை முனியாண்டிக்கு முன் சேர்த்துள்ளனர்.