உணவும் பயணமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. உலகின் எந்தவொரு மூலையிலும் ஏதோவொரு சிறப்பான உணவு நமக்காக நிச்சயம் காத்திருக்கும். இப்படி நாம் சுவைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் பின்னே கலாசாரமும் வரலாறும் ஒளிந்திருக்கும். உணவோடு சேர்த்து இந்த அறிவையும் உட்கொள்வதற்காகவே தொலைதூரம் பயணிக்கிறவர்கள் பலர் உண்டு. பயணிகள் மூலமாகவே பல உணவுகள் கடல்கடந்து வந்து ருசி பரப்புகின்றன.

நட்சத்திர ஹோட்டல்களில் நாம் அறிந்துகொள்ள முடியாத ருசி ரகசியங்களை தெருக்கடை உணவகங்களில் தெளிவாக அறிந்துகொள்ள முடியும், `இதை எப்படிச் சமைப்பது?’ என்று கேட்டால் போதும்... எதையும் மறைக்காமல் அந்த ரெசிப்பியைச் சொல்லி நம் கண்முன்னே சமைத்துக்காட்டும் பல கலைஞர்களால் நிறைந்திருக்கிறது தெருக்கடை உணவு உலகம். இப்படி உலகின் பல பகுதிகளில் புகழ்பெற்றிருக்கும் ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளை அழகிய படங்கள் மற்றும் வீடியோக்களோடு அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். இது உலகின் உன்னத சுவை!

பவேரியன் ப்ரேட்சல்

தேவையானவை:
* மைதா மாவு – 2 கப்
* ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் (Active Dry Yeast) – ஒன்றேகால் டீஸ்பூன்
* பிரவுன் சுகர் (brown sugar) – அரை டேபிள்ஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் – அரை கப்
* வெண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
* உப்பு – ஒரு டீஸ்பூன்
* கல் உப்பு – மேலே தூவுவதற்கு தேவையான அளவு
* முட்டை – ஒன்று (கால் கப் தண்ணீருடன் சேர்த்து அடித்து வைத்துக்கொள்ளவும்)
* பால் – கால் கப்

வாட்டர் பாத் தயாரிக்க:
* தண்ணீர் – 2 லிட்டர்
* பேக்கிங் சோடா – கால் கப்

செய்முறை:

மாவு செய்முறை: ஒரு பவுலில் ஈஸ்ட் மற்றும் பிரவுன் சுகர் சேர்க்கவும். இதனுடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலந்து மூடிவைக்கவும். 5 முதல் 6 நிமிடங்கள் கழித்து ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மேலே நுரைகள் வந்துவிடும். பின்னர் இதில் வெண்ணெய், மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து ஒரு மரக்கரண்டியால் கிளறவும். மாவு சேர்ந்து வந்ததும், சமையல் மேடையில் சிறிது உலர் மாவு தூவி, பிசைந்த மாவைப் போட்டு 8 - 10 நிமிடங்கள் மீண்டும் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்துப் பிசையவும்.

மாவு இப்போது உருண்டு பார்க்கவே பளபளப்பாக இருக்கும். ஒரு பெரிய பவுலில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மாவு இருமடங்காகப் பொங்கி வந்திருக்கும்.

ப்ரேட்சல் வடிவம் செய்முறை: மேடையில் சிறிதளவு உலர் மாவு தூவி, பொங்கி வந்திருக்கும் மாவை மேடையில் போடவும். பிறகு மாவைச் சிறிது பஞ்ச் (punch) செய்து ஆறு சம பங்குகளாகப் பிரித்து உருண்டைகளாக்கி மூடிவைக்கவும். மறுபடியும் மேடையில் சிறிது உலர் மாவு தூவி, ஓர் உருண்டை மாவை எடுத்து அதில் வைத்து கயிறு திரிப்பது போல் திரிக்கவும். நடுவில் சற்றுக் கனமாகவும் ஓரங்கள் மெலிதாகவும் இருக்குமாறு திரிக்கவும். திரித்த கயிற்றை ஒரு `U’ வடிவத்தில் மடிக்கவும்.

பிறகு, அதன் இரண்டு ஓரங்களையும் பிடித்து `8’ போல் செய்து மடித்து ஓரங்களைக் கனமான பகுதியுடன் சேர்த்து ஒட்டவும். இதை பேக்கிங் ஷீட்டின் மேல் வைக்கவும். இதே போல் அனைத்து உருண்டைகளுக்கும் வடிவம் கொடுத்து பேக்கிங் ஷீட்டின் மேல் வைத்து பிறகு ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

வாட்டர் பாத் செய்முறை: ஒரு பெரிய ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து அடுப்பை `சிம்’மில் வைக்கவும். பிறகு செய்து வைத்திருக்கும் ப்ரேட்சல்லில் ஒன்றை எடுத்துக் கொதிக்கும் நீரில் சேர்த்து, 10 நொடிகள் வேகவிடவும். பிறகு அதைத் திருப்பிவிட்டு மீண்டும் 10 நொடிகள் வேகவிடவும்.

பின்பு இதைத் தண்ணீரிலிருந்து எடுத்து, பேக்கிங் பேப்பர் போடப்பட்ட பேக்கிங் ட்ரேயில் வைக்கவும். இதேபோல் மீதம் இருக்கும் ப்ரேட்சல்களையும் ஒவ்வொன்றாக வேகவைத்து பேக்கிங் பேப்பரில் வைக்கவும். இரண்டு ப்ரேட்சல்களுக்கு நடுவில் சிறிது இடைவெளி இருக்குமாறு வைக்கவும்.

பேக் செய்யும் முறை: 160 டிகிரி வெப்பத்தில் அரை மணி நேரம் அவனை (oven) பிரீஹீட் செய்யவும். வேகவைத்திருக்கும் ப்ரேட்சல்களின் மீது அடித்துவைத்து இருக்கும் முட்டை அல்லது பாலை சிறிது பிரஷ் செய்து அதன்மேல் கல் உப்பு தூவவும். ப்ரேட்சல்களின் நடுவில் இருக்கும் கனமான பகுதியை ஒரு கத்தியால் கொஞ்சம் கீறிவிடவும்.

பின்னர் ப்ரேட்சல்கள் இருக்கும் பேக்கிங் ட்ரேயை பிரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனுள் வைத்து 30 – 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். ப்ரேட்சலின் நடுப் பகுதி சரியாக வேகாமல் மாவாக இருக்கும் பட்சத்தில் மேலும் பத்து நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பின்னர் ஒரு க்ரில் (cooling rack) மேல் இவற்றை வைத்து ஆறவிட்டுப் பரிமாறவும்.

அராபிக் மநாக்கீஷ் (Manakeesh)

தேவையானவை - மேல் மாவுக்கு:
* மைதா மாவு – 2 கப்
* ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் (Active Dry Yeast) – ஒரு டேபிள்ஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் – முக்கால் கப்
* சர்க்கரை – அரை டேபிள்ஸ்பூன்
* உப்பு – ஒரு டீஸ்பூன்
* ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

ஜாத்தர் (zaatar) செய்ய:
* உலர்ந்த தைம் இலைகள் (Thyme Leaves) - 3 டேபிள்ஸ்பூன்
* ஒரிகானோ - 3 டேபிள்ஸ்பூன்
* எள் - 3 டேபிள்ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்)
* கல் உப்பு – ஒரு டீஸ்பூன்
* சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்
* ஆலிவ் எண்ணெய் – கால் கப்

செய்முறை:

ஒரு பவுலில் ஈஸ்ட் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். 5 முதல் 6 நிமிடங்கள் கழித்து ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மேலே நுரைகள் வந்திருக்கும். இதனுடன் மைதா மாவு, உப்பு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் கிளறவும். மாவு சேர்ந்து வந்ததும், சமையல் மேடையில் சிறிது உலர் மாவு தூவி, பிசைந்த மாவைப் போடவும். 8 முதல் 10 நிமிடங்கள் மீண்டும் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்துப் பிசையவும். மாவு இப்போது உருண்டு பார்க்கவே பளபளப்பாக இருக்கும். பிறகு மாவைச் சிறிது எண்ணெய் தடவிய ஒரு பெரிய பவுலில் வைத்து ஒரு மணி நேரம் மூடிவைக்கவும். இப்போது மாவு இரு மடங்காகப் பொங்கி வந்திருக்கும்.

ஜாத்தர் செய்முறை:

தைம் இலைகள், ஒரிகானோ, சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் எள் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். ஜாத்தர் தயார்.

ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி அதன் மேல் பேக்கிங் பேப்பர் வைக்கவும். மேடையில் சிறிது உலர் மாவு தூவி, பொங்கி வந்திருக்கும் மாவை மேடையில் போடவும். பின்னர் இதைச் சிறிது பஞ்ச் (punch) செய்து கால் இன்ச் தடிமனும் 8 அங்குல விட்டமும் கொண்ட சப்பாத்தியைப் போல் திரட்டிக்கொள்ளவும். தயாரித்து வைத்திருக்கும் ஜாத்தர் கலவையை சப்பாத்தியின் மேல், ஓரங்களில் ஒரு சென்டி மீட்டர் இடைவெளிவிட்டுப் பரப்பவும். பின்னர் 180 டிகிரி வெப்பத்தில் அரை மணி நேரம் பிரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனுக்குள் இவற்றை வைத்து 6 முதல் 8 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ பரிமாறவும்.

சின்னமோன் ரோல்ஸ்

தேவையானவை மேல் மாவுக்கு:
* மைதா மாவு – 2 கப்
* ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் (Active Dry Yeast) – அரை டேபிள்ஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் – கால் கப்
* சர்க்கரை – கால் கப் + அரை டேபிள்ஸ்பூன்
* புளிப்பு இல்லாத மோர் – கால் கப்
* முட்டை – ஒன்று
* வெண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்
* வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்
* உப்பு - கால் டீஸ்பூன்

ஸ்டஃபிங்குக்குத் தேவையானவை:
* உப்பு இல்லாத வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
* பிரவுன் சுகர் (brown sugar) – அரை கப்
* பட்டைப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்
*க்ரீம் சீஸ் ஃப்ரோஸ்ட்டிங் செய்யத் தேவையானவை:
* ஐசிங் சுகர் – ஒன்றரை கப்
* க்ரீம் சீஸ் – 2/3 கப்
* உப்பு இல்லாத வெண்ணெய் – கால் கப்
* வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்

செய்முறை:

மாவு செய்முறை: ஒரு பவுலில் ஈஸ்ட் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலந்து மூடிவைக்கவும். 5 முதல் 6 நிமிடங்கள் கழித்து ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மேலே நுரைகள் வந்துவிடும். பின்னர் இதில் உருக்கிய வெண்ணெய், மோர் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, வெனிலா எசென்ஸ், உப்பு, கால் கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு இதனுடன் மைதா மாவு சேர்த்து ஒரு மரக்கரண்டியால் கிளறவும். மாவு சேர்ந்து வந்ததும், சமையல் மேடையில் சிறிது உலர் மாவு தூவி, பிசைந்த மாவைப் போட்டு 8 -10 நிமிடங்கள் மீண்டும் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்துப் பிசையவும். மாவு இப்போது உருண்டு பார்க்கவே பளபளப்பாக இருக்கும். மாவைச் சிறிது எண்ணெய் தடவிய ஒரு பெரிய பவுலில் வைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். இப்போது மாவு இரு மடங்காகப் பொங்கி வந்திருக்கும்.

ரோல்ஸ் செய்முறை: ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி அதன் மேல் பேக்கிங் பேப்பர் வைக்கவும். மேடையில் சிறிது உலர் மாவு தூவி, பொங்கி வந்திருக்கும் மாவை மேடையில் போடவும். பிறகு சிறிது பஞ்ச் (punch) செய்து கால் இன்ச் தடிமனில் செவ்வக வடிவில் திரட்டிக்கொள்ளவும். ஸ்டஃபிங்க்குக் கொடுத்துள்ள பிரவுன் சுகர் மற்றும் பட்டைப்பொடியை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். திரட்டி வைத்திருக்கும் மாவில் வெண்ணெயை அனைத்து இடங்களிலும் படுமாறு பரப்பவும். பின்னர் அதன் மேல் பிரவுன் சுகர் - பட்டைப் பொடிக் கலவையையும் பரப்பவும்.

இப்போது ஓர் ஓரத்தில் இருந்து மாவை நன்கு இறுக்கமாகச் சுருட்டிக்கொண்டு வரவும். சுருட்டியதும் ஓரங்களை நன்கு ஒட்டிவிடவும். இப்போது இந்த உருளை வடிவத்தை இரண்டு இன்ச் நீள துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இந்தத் துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் ஒவ்வொன்றுக்கும் நடுவில் சிறிது இடைவெளி இருக்குமாறு அடுக்கி ஒன்றரை மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் இதனை 180 டிகிரி வெப்பத்தில் அரை மணி நேரம் பிரீஹீட் செய்த அவனுக்குள் (oven) வைத்து 25 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். ரோல்ஸின் நடுப்பகுதி மாவாக இருக்கும் பட்சத்தில் மேலும் ஐந்து நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும்.

க்ரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங் செய்முறை: க்ரீம் சீஸ் மற்றும் வெண்ணெயை ஒன்றாகச் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் ஐசிங் சுகர் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து, பஞ்சு போல வரும் வரை அடித்து வைக்கவும். பின்னர் இதைச் சூடாக இருக்கும் ரோல்ஸ் மேல் பரப்பிவிடவும்.

ரோல்ஸ்ஸைச் சிறிது சூடாக இருக்கும்போதே பரிமாறவும். மீதம் இருந்தால் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். பரிமாறும்போது சிறிது சூடு செய்து பரிமாறவும்.

அமெரிக்கன் பிரவுனி

தேவையானவை:
* மைதா – அரை கப்
* சர்க்கரை – முக்கால் கப்
* கோகோ பவுடர் (அ) டிரிங்கிங் சாக்லேட் பவுடர் – முக்கால் கப்
* பிரவுன் சுகர் – கால் கப்
* வெண்ணெய் – கால் கப்
* எண்ணெய் – கால் கப்
* டார்க் சாக்கோ சிப்ஸ் (அ) துருவிய டார்க் சாக்லேட் – அரை கப் + 3 டேபிள்ஸ்பூன்
* முட்டை – 3 (ஒரு மணி நேரம் முன்னதாகவே ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்)
* வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்
* காபி டிகாக்ஷன் (அ) இன்ஸ்டன்ட் காபித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
* உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரிக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு செவ்வக அல்லது சதுர வடிவிலான பானில் (pan) அலுமினியம் ஃபாயில் பேப்பரை விரித்து ஓரங்களில் மடித்துவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் உருக்கவும். வெண்ணெய் உருகியதும் இதனுடன் அரை கப் சாக்கோ சிப்ஸ் சேர்த்து, குறைவான தீயில் சாக்லேட் உருகும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

மைதா, கோகோ பவுடர், உப்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துச் சலித்துக்கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதன் நிறம் நன்கு மாறும் வரை அடித்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் சர்க்கரை, பிரவுன் சுகர் இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இரண்டு சர்க்கரையும் கரையும் வரை நன்கு அடித்துக்கொள்ளவும்.

பின்னர் இதனுடன் உருக்கிவைத்துள்ள சாக்லேட், காபி டிகாக்ஷன் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பிறகு இதனுடன் சலித்துவைத்துள்ள மைதா மாவுக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட் & ஃபோல்டு முறையில் மாவாகக் கலந்துகொள்ளவும். கலந்துவைத்துள்ள இந்த மாவை பானில் ஊற்றி அதன் மேல் மீதம் இருக்கும் சாக்கோ சிப்ஸைத் தூவவும்.

இதை 25 முதல் 30 நிமிடங்கள் அவனில் வைத்து `பேக்’ செய்யவும் (டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும்). அப்போது பிரவுனியை வெளியே எடுத்து ஆறவிடவும். ஆறியபின் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

வெனிலா கப் கேக் வித் ரியல் சாக்லேட் ஃப்ரோஸ்ட்டிங்

தேவையானவை - கப் கேக் செய்ய:
* மைதா மாவு – ஒரு கப்
* பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
* முட்டை – 3
* பொடித்த சர்க்கரை – ஒரு கப்
* வெண்ணெய் – கால் கப்
* வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

சாக்லேட் ஃப்ரோஸ்ட்டிங் செய்ய:
* பொடித்த சர்க்கரை – ஒரு கப்
* க்ரீம் – கால் கப்
* டார்க் சாக்லேட் – 100 கிராம்
* வெண்ணெய் – கால் கப்
* வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாக வரும் வரை ஒரு பீட்டரால் (beater) அடித்துக்கொள்ளவும்.

இந்த முட்டைக் கலவையுடன் மைதா கலவை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கட் & ஃபோல்டு (Cut and Fold) முறையில் கலக்கவும். அதாவது பீட்டரில் அடிப்பதுபோல அடிக்காமல் மைதா கலவையை முட்டைக் கலவையுடன் படிப்படியாகச் சேர்த்து கரண்டி யால் மடித்து மடித்துக் கலக்க வேண்டும். இதைத்தான் `கட் & ஃபோல்டு முறை’ என்று சொல்கிறோம்.

இப்படிக் கலக்கப்படும் மாவு இட்லி மாவைவிடச் சற்றுக் கெட்டியாக இருக்க வேண்டும். ஒருவேளை மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் பால் கலந்துகொள்ளலாம். கப் கேக் லைனர்களில் (Cup Cake Liners) இந்த மாவுக் கலவையை ஊற்றவும். பின்னர் இதனை 175 டிகிரி பிரீஹீட் செய்த அவனுக்குள் வைத்து, 18 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்து ஆறவைக்கவும்.

சாக்லேட் ஃப்ரோஸ்ட்டிங் செய்முறை: ஒரு டபுள் பாய்லரில் க்ரீம், வெண்ணெய் மற்றும் சாக்லேட் சேர்த்து, சாக்லேட் உருகும் வரை சூடு ஏற்றவும். பிறகு உருகிய சாக்லேட் சற்று ஆறியதும் அதனுடன் சிறிது சிறிதாக சர்க்கரைத்தூள், வெனிலா எசென்ஸ் சேர்த்து ஒரு பீட்டரால் நன்கு மென்மையாக வரும் வரை அடித்துக்கொள்ளவும். ஒரு ஸ்டார் நாஸில் கொண்ட பைப்பிங் பையில் (piping bag) இந்தச் சாக்லேட் ஃப்ரோஸ்ட்டிங்கை நிரப்பி கப் கேக்கின் மேல் `பைப்’ செய்யவும்.

பிரெஞ்சு ஹாட் சாக்லேட்

தேவையானவை:
* பால் - 2 கப்
* டார்க் சாக்கோ சிப்ஸ் (அ) டார்க் சாக்லேட் துருவியது – அரை கப்
* சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
* சாக்லேட் (அ) கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
* இன்ஸ்டன்ட் காபித்தூள் – ஒரு டீஸ்பூன்
* விப் (Whip) செய்த க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாலில் சாக்லேட் (அ) கோகோ பவுடரைச் சேர்த்துக் கலந்து, வாணலியில் ஊற்றிச் சூடாக்கவும். பால் நன்கு சூடாகிக் கொதி வரும் முன்பு இதனுடன் சாக்கோ சிப்ஸ், சர்க்கரை சேர்த்துக் கலந்து குறைவான தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். ஒரு கட்டத்தில் சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும் அதனுடன் இன்ஸ்டன்ட் காபித்தூள் சேர்த்து, ஒரு கொதிவிடவும். பிறகு அடுப்பை அணைத்து, கலவையைக் கண்ணாடிக் கோப்பையில் ஊற்றவும். அதன் மேலே விப் செய்த க்ரீமால் அலங்கரித்து சுடச்சுடப் பரிமாறவும்.

ஸ்விஸ் பொட்டாட்டோ ரோஸ்ட்டி

தேவையானவை:
* உருளைக்கிழங்கு – 2
* மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
* ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் (காய்ந்த மிளகாய்த் துகள்கள்) – கால் டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் (அ) வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலுடன் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உருளைக்கிழங்கை 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர் அதன் தோலைச் சீவி ஒரு பெரிய துருவியில் துருவிக்கொள்ளவும்.

இத்துடன் மிளகுத்தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். பிறகு கலவையைச் சற்று மெல்லிய கட்லெட் வடிவத்தில் செய்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் சூடுசெய்யவும்.

அதில் கட்லெட்களை அடுக்கி எண்ணெய் (அ) வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் வேகவைத்து மொறுமொறுப்பாக எடுக்கவும். தக்காளி கெட்சப் உடன் சுடச்சுடப் பரிமாறவும்.