வாழ்க்கை என்பது பெரும் புதிர். எப்படி, எப்போது, யாருக்கு, என்ன நிகழும் என்பது தெரியாமல் ஓடுவ தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாகக் கழிகிறது. ஆங்கிலத்தில் ஒரு தன்னம்பிக்கை பழமொழி உண்டு. `வாழ்க்கை உன்மீது எலுமிச்சைகளைத் தந்தால், அவற்றைக்கொண்டு பழச்சாறு செய்துவிடு’ (வென் லைஃப் கிவ்ஸ் யூ லெமன்ஸ், மேக் லெமனேட்). அப்படி வாழ்க்கை தங்கள் மீது எறிந்த எலுமிச்சைகளைக் கொண்டு பழச்சாறு செய்வதோடு நிறுத்தி விடாமல், அதைப் பிறருக்கும் பருகக் கொடுத்து `சூப்பர் செஃப்’ என்று பெயர் வாங்குவது அத்தனை எளிதல்ல. கொடும் பயணம். இந்தப் பயணத்தை புன்முறுவலுடன் செய்து, உலகின் சூப்பர் செஃப்களில் முதன்மை இடங்களைப் பிடித்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அறிமுகம் இது!

அன்பு... அணைப்பு... அருமை!

டிம் ஹாரிஸ்

2004-ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் எல்டொராடோ பள்ளியின் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் டிம் ஹாரிஸ். அப்படி என்ன ஸ்பெஷல் டிம்மிடம்? கேய்த் மற்றும் ஜீனி ஹாரிஸின் மகனான டிம், பிறக்கும்போதே ‘டௌன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னையுடன் பிறந்தவர். படிப்பின் மீது ஆர்வம் கொண்ட டிம்முக்கு, சமையலிலும் ஆசை பிறக்க, ராஸ்வெல் நகரில் மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் கேட்டரிங் படிப்பை முடித்தார். டௌன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைப் போலவே எல்லா பணியும் செய்யக்கூடியவர்கள்தாம். சற்று நிறுத்தி, நிதானமாக... அவ்வளவுதான். கற்றலிலும் புரிதலிலும் தாமதம் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் மீறி சமையற்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார் டிம்.

மகன் உணவகம் திறக்க ஆசைப்படுவதை உணர்ந்த தந்தை, நியூ மெக்ஸிகோவின் ஆல்புகர்க் நகரில் `டிம்ஸ் பிளேஸ்’ என்ற உணவகம் உருவாக உதவினார். 2010, அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்ட டிம்ஸ் பிளேசின் சிறப்பு - அமெரிக்காவில் டௌன்ஸ் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட நபர் தொடங்கி நடத்திய முதல் மற்றும் ஒரே உணவகம் என்பதுதான். அமெரிக்க மற்றும் நியூ மெக்ஸிகோ சிற்றுண்டி வகைகளை வழங்கி வந்தது டிம்ஸ். அவற்றைவிட முக்கியமாக... விருந்தினர்கள் அனைவருக்கும் டிம்மின் சிறந்த டிஷ் - அவரது அணைப்பு கிடைத்தது! வாடிக்கையாளர்கள் டிம் என்ற அற்புத மனிதனின் அணைப்புக்கும் அன்புக்கும் ஆசைப்பட்டு வரத் தொடங்கினர். இந்த ஸ்பெஷல் ஹக்ஸ் தவிர, டார்டிலாஸ், ரான்ஷெரோஸ், என்சிலாடாஸ், கன்ட்ரி ஃபிரைடு ஸ்டேக் போன்ற சுவையான உணவுகளும் டிம்ஸில் கிடைத்தன.

உணவகம் என்பது உணவை மட்டுமே தரும் இடம் அல்ல... அன்பையும் அள்ளித்தர வேண்டும் என்று உணர்ந்தவர் டிம். “கவலையுடன் என்னிடம் வருபவர்களை நான் அன்புடன் அணைத்துக் கொள்கிறேன், அவர்கள் நிம்மதியாக உணர்கிறார்கள்” என்று கூறுகிறார் டிம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த டிம், கட்டி அணைக்க, “சில நேரங்களில் அதிபருக்கும் அன்பும் அணைப்பும் தேவையாக இருக்கிறது’’ என்று கூறினார் ஒபாமா.

ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கிய உணவகத்தை மூடிவிட்டார் டிம். காரணம் காதல்! சிறப்பு ஒலிம்பிக்கில் சந்தித்த டிஃபனி என்ற மற்றொரு டௌன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது காதல் கொண்டார் டிம். டிஃபனிக்கும் இவரைப் பிடித்துப்போக, காதலி வசிக்கும் டென்வர் நகருக்கு தன் டிம்ஸ் பிளேஸை விற்றுவிட்டு 2016-ம் ஆண்டு கிளம்பிவிட்டார் டிம். இருவரும் டென்வரில் இப்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள். டிம் மீண்டும் உணவகம் ஒன்றை அங்கே தொடங்குவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்!

மணம்... மகத்துவம்!

கிறிஸ்டின் ஹா

“பார்வையை இழப்பது எளிதல்ல. மிதமிஞ்சிய சோகம், துக்கம் எல்லாம் நம்மை அழுத்தும். அழுவது தவறில்லை. அரற்றுவது ஆறுதல் தரலாம். ஆனால், அதுவும் கடந்து போகும். இனி எப்படி எழுந்து நிற்பது என்று யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்க வேண்டும், முன்னேற வழி காண வேண்டும். அதன்பின் திரும்பிப் பார்த்தல் கூடாது” என்று சொல்லும் கிறிஸ்டின் ஹா, அமெரிக்காவின் டாப் செஃப்களில் ஒருவர். முற்றிலும் பார்வை இழந்தவர்.

வியட்நாம் போரில் நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த குடும்பம் ஒன்றில் 1979-ம் ஆண்டு பிறந்தார் ஹா. புற்றுநோய்க்குத் தாயைப் பறிகொடுத்தபோது அவருக்கு வயது 14. படிப்பின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்த ஹா, பொருளாதாரம் மற்றும் வணிகத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆஸ்டின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ பட்டம் பெற்றார் கிறிஸ்டின். மேற்படிப்பையும் முடித்தார். 1999-ம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக ஹாவுக்குப் பார்வை மங்கத் தொடங்கியது. 2007-ம் ஆண்டு முற்றிலும் பார்வையை இழந்துவிட்டார் ஹா. 28 வயதில் ஹாவின் உலகம் இருண்டுபோனது. உடலின் எதிர்ப்பு சக்தியே ஆப்டிகல் நரம்புகளைத் தாக்கி பார்வையைப் பறிக்கக்கூடிய கொடூர நோய்தான் அவரைத் தாக்கிய நியூரோமைலெடிஸ் ஆப்டிகா.

`கௌன்டிங் ஃபிங்கர்ஸ்’ என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இவரது நிலையில், வெளிச்சத்தைப் பொறுத்து முகத்திலிருந்து 10 முதல் 12 இன்ச் தொலைவில் உள்ள பொருள்கள் மட்டும் மங்கலாகத் தெரியும். “குளியல் அறையில் வெந்நீரில் குளித்து முடித்து அந்த நீராவி படிந்த கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தால் என்ன தெரியுமோ, அதுதான் எனக்குத் தெரிவது” என்று கூறுகிறார் இவர்.

ஹாவுக்கு வடிகாலாக அமைந்தது அவரது சமையலறைதான். `கம்ஃபர்ட் குக்கிங்’ என்கிற எளிய உணவு வகைகளை செய்துபார்க்கத் தொடங்கினார். கொஞ்சம் ஆறுதலும், புதிதாக ஏதோ செய்கிறோம் என்ற புத்துணர்ச்சியையும் தந்தது சமையல்.

“பார்வை இல்லாததால் என் மற்ற திறன்களான மணம் அறிதல், சுவை பார்த்தல் போன்றவற்றோடு ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்த்தே நான் சமைக்க வேண்டி வந்தது” என்று சொல்லும் ஹா, சமையலறையை ஒழுங்குபடுத்தி வைத்தால் மட்டுமே தன்னால் அதில் இயங்க முடியும் என்று கூறுகிறார். பூண்டு சரியாக வெந்திருக்கிறதா என்பதை மணம்கொண்டு என்னால் கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறும் ஹா, ஒரே ஒருமுறைதான் தன் கையை அஜாக்கிரதையாக வெட்டியிருக்கிறார். மிகவும் கவனத்துடனே சமையல் அறையில் இயங்குகிறார். எண்ணெயில் பொரித்துக் கொண்டிருக்கும் உணவின்மீது லேசாக தண்ணீர் தெளித்து அதில் வரும் ஓசை கொண்டு எவ்வளவு வெந்திருக்கிறது என்பதை சரியாகக் கணித்து விடுகிறார்.

பார்வையற்ற மனைவி, வீட்டில் செய்யும் சமையல் முயற்சிகளை வலைதளம் தொடங்கி பதியத் தொடங்கினார் கணவர் ஜான் சு. ‘தி பிளைண்டு குக்’ என்ற இவரது சமையல் தளம் மக்களை ஈர்க்கத் தொடங்க, `மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் பங்கெடுக்க அழைத்தது அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம். முதலில் தயங்கிய ஹா, கணவர் உற்சாகம் தரவே, போட்டியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அமெரிக்காவின் தலைசிறந்த செஃப்களான கார்டன் ராம்சே, ஜோ போன்றவர்களின் பார்வையும் ஹாவின் மீது திரும்பியது. தரவரிசையில் கடைசி போட்டியாளராக இருந்த ஹா, 18 வாரங்களில் முதல்நிலை போட்டியாளர்களுள் ஒருவரானார்.

2012, செப்டம்பர் 10 அன்று மாஸ்டர் செஃப் மூன்றாவது சீசனின் வெற்றியாளராக முதல் பரிசைத் தட்டிச் சென்றார் ஹா. இரண்டரை லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன், சமையல் புத்தகம் ஒன்றை எழுதும் வாய்ப்பும் ஹாவுக்கு இதன் மூலம் கிடைத்தது. அடுத்த ஆண்டே `ரெசிப்பீஸ் ஃப்ரம் மை ஹோம் கிச்சன்’ என்ற இவரது சமையல் புத்தகம் வெளியாகி, விற்பனையில் சக்கைபோடு போட்டது. அதே ஆண்டு ஃபோர் சென்சஸ் என்ற கனடா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளத் தொடங்கினார் ஹா. அடுத்தடுத்து மாஸ்டர்செஃப் வியட்நாமின் நடுவர், மாஸ்டர்செஃப் அமெரிக்காவின் நடுவர் என்று பரபரப்பாக இயங்கத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு ஹெலன் கெல்லர் விருதைப் பெற்ற முதல் பார்வைக் குறைபாடு உள்ள செஃப் என்ற பெருமையைப் பெற்றார். பிளைண்டு கோட் என்ற உணவகத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இன்றும் வீடு முழுக்க காட்ஜெட்டுகள் துணைகொண்டே நடமாடுகிறார் ஹா. நாம் இதை வாசிக்கும் வேளையில், தன் இரண்டாவது சமையல் புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் ஹா. இவரது வியட்நாமீஸ் காட் ஃபிஷ் ஊறுகாய், அரிசி நூடுல்ஸ் நக்கெட், கெச்சப் ஃப்ரைடு ரைஸ் என்று எளிய, ஆனால் சுவையான உணவு வகைகள் இவரது ஸ்பெஷாலிட்டி!

ஒலி... உணவு... உயர்வு!

போனி போர்ட்டர்

“செஃப் என்பது ஆண்களின் உலகமல்ல. இப்போது இங்கே நிறைய திறமையுள்ள பெண்கள் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் உள்ளது போல இதிலும் கிளாஸ் சீலிங் எனப்படும் தடை இருக்கிறது. அதை உடைத்துதான் முன்னேறி நாம் வர வேண்டும்” - பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறார் போனி போர்ட்டர். 23 வயதில் ஆஸ்திரேலிய `மாஸ்டர் செஃப்’ போட்டிகளுக்குத் தேர்வாகி அதன் இறுதிச்சுற்று வரை வந்த போனி, இரு காதுகளிலும் கேட்கும் திறனை இழந்தவர்.

ஒரு வயது குழந்தையாக இருந்தபோது போனிக்கு ஒருபக்க காது மட்டும் கேட்காமல் போக, மூன்று வயதில் இரு செவிகளுமே செயலிழந்துபோனது. ஒலிகளுக்குப் பழக்கப்பட்ட குழந்தை குழம்பிப்போனது. காதுகளில் ஹியரிங் எய்டுகளுடன்தான் பள்ளிக்கு முதன்முதலில் சென்றாள் சிறுமி போனி.

ஆஸ்திரேலியாவின் காம்டன் நகரில் பிறந்து வளர்ந்த போனி, ஆஸ்திரேலிய சூப்பர் செஃப்பான கைலி க்வாங்கினால் கவரப்பட்டு, சமையற்கலையின் மீது ஆர்வம் கொண்டார். படிப்பை முடித்ததும் கான்பெரா நகரின் பார்க் ஹயாத், மேன்லி வைன் பை கசிபோ, ராக்பூல் பார் எண்டு கிரில் போன்ற உணவகங்களில் பணியாற்றினார். 23-வது வயதில் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் செஃப் போட்டிகளில் பங்கேற்ற மிகுந்த இளம் வயது போட்டியாளர் இவரே!

“காதுகேளாமையோடு இருப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு குறையல்ல. எனக்கு அது சவால்தான். ஆனால், அது என்னை எந்த விதத்திலும் கட்டுபடுத்தவில்லை. நான் ஒரு ஸ்பாஞ்ச் போலவே இருக்க விரும்புகிறேன். எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொண்டு பயனடைய விரும்புகிறேன்” என்று கூறும் போனி, 2013-ம் ஆண்டின் ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை பயணித்தார்.

மாஸ்டர் செஃப் தந்த வெளிச்சமும், மாஸ்டர் செஃப் மார்கோ பியரி ஒயிட்டின் ஊக்கமும் கற்றுக்கொள்ளும் ஆவலை அவருக்குள் தூண்ட, கனவுகளுடன் இங்கிலாந்து பயணமானார் போனி. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தான் சிறுகச் சேர்த்த பணத்தில் சோஹோ எனும் இடத்தில் 25 பேர் அமரக் கூடிய `பால்ஸ் அண்டு கம்பெனி’ என்கிற பிரத்யேக ‘மீட் பால்’ உணவகத்தைத் திறந்தார், 25 வயதான போனி. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமான மாமிச பந்துகளை (மீட் பால்ஸ்) இங்கிலாந்தில் புதிதாகவும் சுவையாகவும் பால்ஸ் அண்டு கம்பெனி தர, விற்பனை சூடு பிடித்தது.

ஆசிய உணவு வகைகளே தனக்கு மிகவும் பிடித்தவை என்று கூறும் போனி, 2018-ம் ஆண்டில் வெற்றிகரமாக இருந்த பால்ஸ் அண்டு கம்பெனிக்கு மூடுவிழா நடத்திவிட்டு ஆஸ்திரேலியா பயணமானார். டிசம்பர் 2018-ல் ஆஸ்திரேலியாவின் ‘பௌன்டி’ என்ற 80 பேர் அமரக்கூடிய புதிய உணவகத்தைத் தொடங்கியுள்ளார் போனி. “வாழ்க்கையில் பேஷன் மிகவும் முக்கியம். உங்களை ஏதோ ஒன்று உந்தி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். செஃப்பாக இருப்பது கடினம். ஆனால், செய்வதை விரும்பிச் செய்து, உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தால் இதைப் போல திருப்தியையும் மன நிறைவையும் தரக்கூடிய பணி வேறு எதுவுமில்லை” என்று சொல்கிறார் போனி. போனியின் ஸ்பெஷல் உணவு வகைகள் வாக்யூ பீஃப் மீட் பால்ஸ், பம்ப்கின் பை, கினோ மீட் பால்ஸ், ஏலக்காய் பன் போன்றவை.

வலி... வாழ்வு!

கிரான்ட் ஆக்கெட்ஸ்

“இப்போது எப்படி உணர்கிறீர்கள்?”, நியூயார்க்கர் பத்திரிகையின் நிருபர் கேட்ட கேள்விக்கு 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் கிரான்ட் ஆக்கெட்ஸ் தந்த பதில் இது... “உங்கள் கையில் வெனிலா மில்க் ஷேக் வைத்திருக்கிறீர்கள். அதன் மேல் ஹாகன்-டாஸ் ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப் வைக்கிறீர்கள், பால் ஊற்றுகிறீர்கள். இதன் சுவை எத்தனை ரம்மியமாக இருக்கும் என்று உங்கள் உள்ளுணர்வு உங்களுக்குச் சொல்லும். அதில் கொஞ்சமே கொஞ்சம் சுவைப்பதற்காக நாக்கில் வைக்கிறீர்கள். கெட்டியான ஏதோ உணவு வாயில் இருப்பதைப்போல மட்டுமே உங்களால் உணரமுடிந்தால் எப்படி இருக்கும்? வெறுமை. அப்படித்தான் நான் உணர்கிறேன்...”

வாயில் புற்றுநோய் தாக்கியபோது, ஆக்கெட்ஸ் புத்தம்புதிய உணவகம் ஒன்றின் உரிமையாளர். சமையற்கலை புத்தகம் ஒன்றையும் எழுதிக்கொண்டிருந்தார். இப்படியொரு நேரத்தில் நோய் அவரை உருக்குலைத்தது. திட உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தார். சரேலென எடை குறைந்துபோனது. திரவ உணவும் புரதங்களும் தவிர வேறு எதையும் உண்ண முடியவில்லை. மிகவும் முற்றிய `ஸ்டேஜ் 4’ புற்றுநோய் தொண்டையையும் வாயையும் தாக்கியிருந்தது.

சிறு வயது முதலே போராட்ட குணம் கொண்டவர் ஆக்கெட்ஸ். 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்து வளர்ந்தவர். குடும்பமே உணவகத் தொழிலில் ஈடுபட்டிருந்தது. சிறுவன் ஆக்கெட்ஸுக்கு முதன்முதலில் குடும்ப உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணியே கிடைத்தது.

மகன் தொழிலைக் கற்றுக்கொள்ள இதுவே சரியான வழி என்று நினைத்தார் தந்தை. கல்லூரியிலும் சமையற்கலையைத் தேர்ந்தெடுத்தார் ஆக்கெட்ஸ். 1994-ம் ஆண்டு குலினரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் அமெரிக்காவில் படிப்பை முடித்தார். நான்கு ஆண்டுகள் தி ஃப்ரெஞ்ச் லாண்ட்ரி என்ற உணவகத்தில் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு இல்லினாய்ஸ் நகரின் டிரையோ உணவகத்தில் முதன்மை செஃப்பாக பணியேற்றார். ஆனாலும், சுயதொழில்மீது கொண்ட ஆர்வத்தால் நிக் கோகோனாஸ் என்பவருடன் இணைந்து 2005-ம் ஆண்டு ‘அலினியா’ என்ற 64 டேபிள்கள் கொண்ட உணவகத்தைத் தொடங்கினார். அலினியாவின் உணவு மக்களின் கவனம் பெற்றது.

2006-ம் ஆண்டு கோர்மே பத்திரிகை வெளியிட்ட `அமெரிக்காவின் டாப் 50 உணவகங்கள்’ பட்டியலில் இடம் பிடித்தது, ஓராண்டையே நிறைவு செய்திருந்த அனிலியா. 2007-ம் ஆண்டோ, உலகின் டாப் 50 உணவகங்கள் வரிசையில் இடம் பிடித்தது. அடுத்து ஆக்கெட்ஸ் என்ன செய்யப் போகிறார் என்று வியப்புடன் காத்திருந்த நண்பர்களுக்கும், குடும்பத்துக்கும் வந்தது இடி போன்ற செய்தி. ஆக்கெட்ஸின் வாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

கடும் வலியில் துடித்தபோதும் உணவகம் வருவதையோ, சமைப்பதையோ, கைவிட வில்லை ஆக்கெட்ஸ். ஜூலை மாதம் கீமோதெரபி மற்றும் பிற சிகிச்சைகள் தொடங்க, முற்றிலும் சுவை உணர முடியாத நிலைக்குச் சென்றார். வாயில் வலிநிவாரணி களிம்பைப் பூசியபடி தினமும் உணவகம் வந்து தன் வேலையை வெறும் மணம் வைத்தே செய்து கொண்டிருந்தார். மேற்சிகிச்சைக்கு சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையை நாட, உயர் சிகிச்சை பலன் தந்த காரணத்தால், அதே ஆண்டு டிசம்பர் மாதம் புற்றுநோயிலிருந்து தான் முழுக்க குணமடைந்ததாக அறிவித்தார் ஆக்கெட்ஸ். கொஞ்சம் கொஞ்சமாக சுவை உணர்வு திரும்ப ஆரம்பிக்க, முழு கவனத்தையும் அலினியாவின் பக்கம் திருப்பினார் ஆக்கெட்ஸ்.

அதன் பலன், 2009-ம் ஆண்டு உலகின் சிறந்த உணவகங்கள் வரிசையில் 10-ம் இடத்தைப் பிடித்தது அலினியா. சிகாகோ நகரில் `நெக்ஸ்ட்’ என்ற உணவகமும், `ஏவியரி’ என்ற பாரையும் தொடங்கினார். பல சமையல் புத்தகங்கள் எழுதியுள்ள ஆக்கெட்ஸ், தன் வாழ்க்கை வரலாற்றை `லைஃப் ஆன் தி லைன்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். மாலிக்யூலர் காஸ்ட்ரானமி எனப்படும் மூலக்கூறு நுகர்வு சமையற்கலையைப் பரவலாக்கியதில் பெரும் பங்கு ஆக்கெட்ஸையே சேரும். புற்றுநோயுடனான தன் போராட்டத்தை ஒரு புது உணவு வகையாகவே படைத்து விட்டார் ஆக்கெட்ஸ். அவரது ‘லேயர்டு டிசர்ட் பால்’ மேலாக எந்த சுவையும் இல்லாதது. அதனுள் கொஞ்சம் சாக்லேட், பின் ஆலிவ், இறுதியாக ஸ்ட்ராபெரியின் இனிப்பு என்று மூன்றடுக்காக சுவை ஊட்டக்கூடியது. இவரது கண்டுபிடிப்புகளான பனானா-லாவண்டர் ஐஸ்கிரீம், பீ மற்றும் ஸ்மோக்டு சால்மன் லாலிபாப் போன்றவை புகழ்பெற்ற உணவு வகைகள்.

கைமணம்... காவியம்!

மைக்கல் கேன்ஸ்

கிட்லி பார்க் ஹோட்டலில் அண்மையில் தான் தலைமை செஃப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் மைக்கல். வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் பகல் இரவு பாராமல் ஓயாத பணியை முகம் கோணாமல் செய்து கொண்டிருந்தார்.

அன்று எம்-4 ஹைவேயில் கார் நிதானமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், மைக்கல் சற்றே கண் அயர்ந்துவிட, நடுவே இருந்த சென்ட்டர் மீடியனில் இடித்து, இங்கும் அங்கும் புரண்டு ஒருவழியாக நின்றது கார். மயக்கமான மைக்கல் நினைவு திரும்பி விழிக்கையில் உடல் எங்கும் வலி. சீட் பெல்ட் புண்ணியத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த மைக்கலின் கண்ணில் அடுத்து தெரிந்தது கால்வைக்கும் இடத்தில் கிடந்த அவரது துண்டிக்கப்பட்ட வலதுகை. அப்போதுதான் தன் வலது தோளை ஆராய்கிறார். முழங்கைக்குக் கீழ் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தது. “ரத்தம் உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த அந்த நொடியில், நாம் செத்துவிட மாட்டோமா என்று ஏங்கினேன்” என்று பின்னொரு நாளில் பேட்டி ஒன்றில் கூறினார் மைக்கல். ஒரு சமையற்கலைஞன் வலதுகை இல்லாமல் என்ன செய்வது? எப்படி வாழ்வது?

ஜெரால்டின் என்ற பெண்மணி போர்வை ஒன்றைக்கொண்டு மைக்கலைப் போர்த்தியபடி, `வேலை ஒன்றே வாழ்க்கை இல்லை, குடும்பமும் நட்பும் அதைவிட முக்கியம்’ என்று நம்பிக்கை ஊட்டியபடியே இருந்தார். மைக்கலுக்குள் நம்பிக்கை துளிர்த்தது. 25 வயதில் வாழ்க்கை யாருக்கும் முடிந்துவிடுவதில்லைதானே?

1969-ம் ஆண்டு இங்கிலாந்தின் எக்ஸ்டர் நகரில் பிறந்த மைக்கல் கேன்ஸ் சிறு வயதிலேயே தத்து கொடுக்கப்பட்டார். பேட்ரீஷியா மற்றும் பீட்டர் கேன்ஸின் ஆறு குழந்தைகளில் ஒருவராக வளர்ந்தார். எக்ஸ்டர் காட்டரிங் கல்லூரியில் பயின்றவர் 1987-ம் ஆண்டு சிறந்த மாணவன் விருதைப் பெற்றார். லண்டனின் கிராஸ்வீனர் ஹௌஸ் ஹோட்டல், குவாட் சேசன்ஸ் போன்ற ஹோட்டல்களில் பணியாற்றியவர், பாரீஸ் சென்று அங்கு தலைசிறந்த சமையற்கலை வல்லுனர்களான பெர்னார்ட் லூசோ மற்றும் ஜோயெல் ரோபுசன் ஆகியோரிடம் உதவியாளராகச் சேர்ந்து கற்றுக் கொண்டார். இந்த பயிற்சிதான் கிட்லி பார்க் ஹோட்டலில் 1994-ம் ஆண்டு தலைமை செஃப் என்ற இடத்தில் அவரை அமர வைத்தது.

விபத்து நடந்து இரண்டே வாரங்களில் பணிக்குத் திரும்பினார் மைக்கல். வலதுகை தானே இல்லை? நெஞ்சு நிறைய நம்பிக்கை இருந்தது. தடுமாறினாலும், சமையலறையில் சமாளித்துக்கொண்டார். காய்கறிகள் நறுக்க உதவியாளர்களின் உதவியை நாடினார். அவரது அப்போதைய பாஸ் பால் ஹெண்டர்சன் உறுதுணையாக நின்றார். மைக்கல் பயன்படுத்த அமெரிக்காவில் இருந்து நவீன பிராஸ்தடிக் கை ஒன்றை வரவழைத்துத் தந்தார் பால். கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை கை கொண்டு சமையலறையின் அத்தனை வேலைகளையும் சிரமமின்றி செய்ய கற்றுக் கொண்டார் மைக்கல்.

ஏற்கெனவே மிஷலின் ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தவர், கடும் முயற்சியால் 1999-ம் ஆண்டு தன் இரண்டாவது மிஷலின் ஸ்டார் செஃப் பட்டம் வென்றார். அதே ஆண்டு மைக்கல் கேன்ஸ் ரெஸ்டாரன்ட்ஸ் என்ற உணவகத்தைத் தொடங்கினார். ஆங்கிலோ- பிரெஞ்சு உணவுகளே இவரது ஸ்பெஷல். கிரேக்கத் தயிர், தாய்லாந்தின் அரைத்த விழுது, சோயா என்று ஆங்கிலேய உணவுடன் வித்தியாசமான பொருள்களைச் சேர்த்து சுவை கூட்டுவதில் வல்லவர் இவர்.

ஆன்ட்ரூ ப்ரௌன்ஸ்வர்ட் என்பவருடன் இணைந்து `ஆபோட் ஹோட்டல்ஸ்’ தொடங்கினார். ஐந்து ஆபோட் ஹோட்டல்கள் இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆன்ட்ரூவின் பிரௌன்ஸ்வர்ட் ஹோட்டலின் உணவுப் பிரிவு இயக்குநராகவும் பணியாற்றினார் மைக்கல். 2006-ம் ஆண்டு கிரேட் பிரிட்டிஷ் மெனு என்று தொலைக்காட்சித் தொடரில் தோன்றி சமைத்து அசத்தினார். அந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வரை வென்று வந்தார். 2013-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிராண்ட் பிரீ போட்டிகளில் கேட்டரிங் பணியைச் செய்துவருகிறார்.

2011-ம் ஆண்டு எக்ஸ்டர் நகரில் மைக்கல் கேன்ஸ் அகாடமி என்ற சமையற்கலை கல்லூரியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 2006ஆம் ஆண்டு இவரைப் பாராட்டி `மெம்பர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கி கௌரவித்தது இங்கிலாந்து அரசு.

2016-ம் ஆண்டு ஆபோட் ஹோட்டல்களிலிருந்து விலகியவர், 2017-ம் ஆண்டு லிம்ப்ஸ்டோன் மானர் என்ற சொகுசு ஹோட்டல் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

இவை தவிர `ஃபேமிலீஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவரும் இவர், எக்ஸ்டர் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கை கால்களைப் பொருத்தி உதவுவது என்று பல சமூகத் தொண்டுகளையும் சத்தமின்றி செய்து வருகிறார். “உன்னால் இதை செய்ய முடியாது என்று ஒருவர் என்னிடம் சொல்வது என்பது, மாட்டின் முன் சிவப்புத் துணியை ஆட்டுவது போன்றது. என்னால் முடியாது என்று யார் சொல்வது? அந்த வேலையை முடித்துவிட்டுத் தான் அடுத்ததைப் பார்ப்பேன்” என்று சொல்லிச் சிரிக்கிற மைக்கல், இன்று இங்கிலாந்தின் தலைசிறந்த செஃப்களில் ஒருவர்!

தொகுப்பு: நிவேதிதா லூயிஸ்