Published:Updated:

வைகாசி பிரசாதங்கள்!

வைகாசி பிரசாதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வைகாசி பிரசாதங்கள்!

வைகாசி பிரசாதங்கள்!

வைகாசி பிரசாதங்கள்!

ந்திய நாட்டின் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக பண்டிகைகள் விளங்குகின்றன. பண்டிகைகள் இல்லாத மாதங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாக் கடவுளுக்கும் பண்டிகைகள் இருக்கின்றன. பண்டிகைகளின் சிறப்பே விதவிதமான உணவுப் படையல்கள்தானே? கடவுளுக்குப் படைத்த கையோடு, அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதால் உணவுகள் `பிரசாதம்’ என்கிற பெருமையை அடைகின்றன.

மக்களை மகிழ்வித்து ஒற்றுமையாக்கும் இந்த பிரசாதங்கள் சீஸனுக்குத் தகுந்த வகையில் உடல்நலனைப் பேணும் மருந்தாகவும் அமைவது சிறப்பிலும் சிறப்பானது. கடுமையான கோடைக்காலமான இந்த வைகாசி மாதத்தில் கடவுளுக்குப் படைக்கும் பிரசாதங்கள் பெரும்பாலும் குளிர்ச்சியைக் கொடுப்பவையாகவே இருக்கும்.

வைகாசி பிரசாதங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை அசோக்நகரில் வசித்துவரும் விகடன் வாசகி இந்திரா மோகன்ராஜ், விதவிதமான உணவுகளைச் சமைப்பதில் அலாதி விருப்பம்கொண்டவர். தனித்த ருசிகொண்ட மண்மணக்கும் பலகாரங்களை வைகாசி விசேஷ பிரசாதங்களாக அளிக்கிறார் இந்திரா.

- மு.ஹரி காமராஜ், படங்கள்:  ப.பிரியங்கா

வைகாசி பௌர்ணமி 18-5-19

துளசி தளத்தில் பிறந்து மாதவிப் பந்தலில் வளர்ந்து மார்கழி மாதத்தில் விரதமிருந்து பெருமை கொண்ட கோதை ஆண்டாள் குளிர்ச்சியே உருவானவள். அதனால் இந்த கோடைக்காலத்தில் அவளுக்குத் தயிர் சாதமும் பால் மாங்காயும் பிரசாதமாகப் படைப்பார்கள்.

குறிப்பாக, வைகாசி பௌர்ணமி நாளில் பெரியாழ்வார் வழிவந்த பெரியோர்கள் இன்றும் பால் மாங்காயை நைவேத்தியமாகப் படைக்கிறார்கள். அன்று வெண்ணிற ஆடை, சந்தனம், மல்லிகை மலர் என சீதளாதேவியாக அருள்பாலிக்கும் ஆண்டாளின் விருப்பமான பிரசாதம் இது.

பால் மாங்காய்

தேவையானவை:
* தோல் நீக்கிய மாங்காய்த் துண்டுகள் – ஒரு கப்
* பலாப்பழம் - 5 பெரிய சுளைகள்
* தோல் நீக்கிய வாழைக்காய்த் துண்டுகள் – ஒரு கப்
* பொடித்த வெல்லம் - 2 கப்
* தேங்காய் (சிறிதாக நறுக்கியது) – அரை கப்
* நெய் - 100 கிராம்
* மிளகு - 2 டீஸ்பூன்
* புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்
*காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
* உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வைகாசி பிரசாதங்கள்!

சிறிதளவு நெய்யில் மிளகை வறுத்துப் பாதி அளவைப் பொடித்துவைத்துக் கொள்ளவும். வாணலியில் இரண்டு கப் தண்ணீர்விட்டு வாழைக்காய்த் துண்டுகளை வேகவிடவும். பாதி வெந்ததும் புளிக்கரைசலைவிட்டு கிளறவும். பிறகு மாங்காய்த்துண்டுகள், பலாப்பழத் துண்டுகள், தேங்காய்த் தூண்டுகள் சேர்த்துக் கிளறி 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

பின்னர் இதனுடன் உப்பு, வெல்லம் சேர்த்துக் கிளறி மேலும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு பால் சேர்த்து, மிளகுத்தூள், முழு மிளகு, மீதமுள்ள நெய் எல்லாம் கலந்து கிளறி இறக்கவும். ஆறவைத்துப் படைக்கவும். உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என பல சுவைகளும் கலந்த இந்தப் பிரசாதம் ஆரோக்கியமானது.

வைகாசி விசாகம் - 18-5-19

வைகாசி மாதம் என்றாலே முருகப்பெருமான் நினைவுதான் வரும். வைகாசி விசாகத்தில் அவதரித்த அந்த ஞானவள்ளலுக்குப் பிடித்த பிரசாதம் என்றால் அது பஞ்சாமிர்தம்தான். எல்லோருக்கும் பிடித்த அந்த அமிர்த ருசியை யாருமே மறக்க முடியாது.

சிலருக்குக் கையில் ஊற்றி நாவில் சுவைத்துப் பார்க்க ஏனோ கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம். அவர்களுக்காகவே இந்தப் பஞ்சாமிர்த அல்வா. பஞ்சாமிர்தத்தின் ருசி அப்படியே இருக்க, கொஞ்சம் கெட்டியாக இருக்கும். இந்தப் பிரசாதம் குழந்தைகளுக்கும் பிடித்தமானது. 

பஞ்சாமிர்த அல்வா

தேவையானவை:
* தேங்காய்த் துருவல் – ஒரு கப்
* வறுத்த ரவை – அரை கப்
* நெய் – ஒரு கப்
* நறுக்கிய பேரீச்சம்பழம் – கால் கப்
* நறுக்கிய முந்திரி, உலர்திராட்சை (இரண்டும் சேர்த்து) - ஒரு கப்
* நாட்டுச்சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - இரண்டரை கப்
* சுண்டக்காய்ச்சிய பால் – ஒரு கப்
* தேன் – கால் கப்
* மலை வாழைப்பழம் - 6 (பொடியாக நறுக்கவும்)
* டைமண்டு கற்கண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வைகாசி பிரசாதங்கள்!

நெய், தேன், கற்கண்டைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி ஒன்றாகக் கலந்த கலவையைப் போட்டு மிதமான தீயில் சுருளக் கிளறவும்.

எல்லாம் திரண்டு அல்வா பதத்துக்கு வந்ததும், தேன், கற்கண்டைச் சேர்த்துக் கலக்கி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். பின்னர் துண்டுகள் போட்டு இந்த மிருதுவான அல்வாவைப் படைக்கலாம்.

வைகாசி பஞ்சமி 23-5-19

அம்பிகைக்கு ஏற்றது ஆடிப் பால். வைகாசியில் வசந்த விழா கொண்டாடும் அம்பிகைக்கு ஆடிப் பால் விசேஷமானது.

செவ்வாய், வெள்ளி நாள்களில் இந்தப் பாலை அம்மனுக்கு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளிக்கொடுப்பாள்.

ஆடிப் பால்

தேவையானவை:
* பால் - ஒரு லிட்டர்
* சர்க்கரை - ஒரு கப்
* சோம்பு – அரை டேபிள்ஸ்பூன்
* பாதாம் - 50 கிராம்
* ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

அலங்கரிக்க:
* வெள்ளரி விதை – அரை டேபிள்ஸ்பூன்
* பாதாம், பிஸ்தா சீவல், குங்குமப்பூ - தேவைக்கேற்ப

செய்முறை:

வைகாசி பிரசாதங்கள்!

பாதாமைத் தண்ணீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் மையாக அரைக்கவும். பாலைச் சுண்டக்காய்ச்சி ஆறவைத்து அதில் அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை, சோம்பு, ஏலக்காய்த்தூள் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

இரண்டு கொதிவந்ததும் இறக்கி பாதாம், பிஸ்தா சீவல், வெள்ளரி விதை, குங்குமப்பூ தூவி அலங்கரித்துப் படைக்கவும்.

வைகாசி திருவோணம் 24-5-19

காஞ்சிபுரம் குடலை இட்லி உலகப்புகழ் பெற்றது. பெருமாளுக்கு விசேஷமாக வைகாசி திருவோண நாளில் இந்த இட்லி படைக்கப்படுகிறது. நீண்ட நாள்கள் கெடாமலும் தனித்த சுவையோடும் தயாரிக்கப்படும் காஞ்சிபுரம் இட்லியைக் கொஞ்சம் விசேஷமாகத் தயாரித்து இன்னும் கூடுதல் சுவை பெறலாம். 

காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி

தேவையானவை:
* பச்சரிசி – அரை கிலோ
* உளுந்து - கால் கிலோ
* வெந்தயம் – அரை டேபிள்ஸ்பூன்
* மிளகு – அரை டேபிள்ஸ்பூன்
* சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்
* பெருங்காயத்தூள் - சிறிதளவு
* கடலைப்பருப்பு - சிறிதளவு
* பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
* இஞ்சித் துருவல் - சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - 100 கிராம்

செய்முறை:

வைகாசி பிரசாதங்கள்!

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், வெந்தயம், உளுந்து இரண்டையும் ஒன்றாகவும் மூன்று மணி நேரம் ஊறவைத்து, ஒன்று சேர்த்து மணல் பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெயைச் சூடாக்கி அதில் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து வதக்கி, மாவுடன் சேர்த்துக் கட்டிதட்டாமல் கலந்து வைக்கவும். பின்னர் வீட்டில் உள்ள குவளை அல்லது சிறிய கிண்ணங்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றி இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து வேகவைத்து இறக்கவும். பிறகு வெந்து தயாராக இருக்கும் இட்லிப் பாத்திரங்களின் மீது வாழையிலை வைத்து மூடவும். இலை வாசத்தோடு கூடிய கமகம இட்லி தயார். ஐந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும் இந்த இட்லியை எதுவும் தொட்டுக்கொள்ளாமலே சாப்பிடலாம்.

வைகாசி சஷ்டி 8-6-19

குறிஞ்சி நிலத் தமிழர்களின் அற்புதமான சத்துணவாக தேனும் தினை மாவும் இருந்து வந்துள்ளன. குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமானுக்கு இன்றும் பல ஆலயங்களில் இவையே பிரசாதமாக படைக்கப்படுகின்றன. வைகாசி விசாக நாளில் தேனையும் தினை மாவையும் படைத்தால் முருகப்பெருமான் அருள்பெற்று நல்ல உறவுகள் கிட்டும் என்பது நம்பிக்கை.

தேனும் தினை மாவும்

தேவையானவை:

* தினை – ஒரு கப்
* தேன் – அரை கப்
* ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
* நெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:

வைகாசி பிரசாதங்கள்!

தினை மாவைப் பொடியாக அரைத்துச் சலித்துவைத்துக் கொள்ளவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துப் பிசிறி வைக்கவும். இந்தப் பொடிமீது அப்படியே தேன் ஊற்றிப் படைக்கலாம். அல்லது உருண்டையாகப் பிடித்தும் படைக்கலாம்.

இதயத்துக்குப் பலம் சேர்க்கும் இந்த உணவை வைகாசி சஷ்டி, விசாக நாட்களில் முருகனுக்குப் படைத்து உண்ணலாம்.