Published:Updated:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

வெப்பமும் வறட்சியும் பாரபட்சமே இல்லாமல் தாக்கும் நேரம் இது. இந்தச் சூழலில், உடலைக் குளுமையாகப் பராமரிக்க வேண்டும். முக்கியமாக, சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் அருந்துவதோடு, தாகத்தைப் போக்க என்னவெல்லாமோ செய்திருப்போம்... குறிப்பாக ஜூஸ் வகைகள்.

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``இந்த முறை சீட்ஸ் கலந்து ஜூஸ் ட்ரை பண்ணுங்க. அள்ளும் சுவையோடு, அசத்தலான சத்துகளையும் கூடுதலாகப் பெறலாம். இங்கு தரப்பட்டுள்ள ரெசிப்பிகள் சுவையானவை மட்டுமல்ல... எடையைச் சீராகவைத்துக் கொள்ளவும் உதவக்கூடியவை... செய்வதற்கும் எளிமையானவை’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல்கலைஞர் கலைவாணி ஜெயச்சந்திரன். அவர் அளித்திருக்கும் ரெசிப்பிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சியா சப்ஜா விதைகள், வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் மற்றும் ஓமம், எள், பாதாம் ஆகியவை உடல்நலத்துக்கு உகந்தவை.

சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பிகளோடு கொண்டாடுவோம் கோடையை!

- ஜெ.கலைவாணி படங்கள்: ப.கார்த்திகா

முருங்கைக்கீரை சூப்

தேவையானவை:
* முருங்கையிலை - ஒரு கப்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (தட்டிக்கொள்ளவும்)
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

குக்கரில் முருங்கையிலை, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதை மூன்று, நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். பின்னர் இந்தக் கலவையை வடிகட்டி அதைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி அருந்தவும்.  காலை வேளையில் குடிக்க சுவையான டயட் டிரிங்க் இது.

குறிப்பு:

தேவைப்பட்டால் காரத்துக்கும் சுவைக்கும் கீறிய பச்சை மிளகாயை ஒன்றைச் சேர்த்து தயாரிக்கலாம்.

*முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துக்குமே மருத்துவ குணங்கள் உண்டு.

பீட்ரூட் சூப்

தேவையானவை:

* பீட்ரூட் - ஒன்று (பெரியது)
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - சிறிதளவு

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

பீட்ரூட்டைக் கழுவி, தோல் சீவி, நான்காக நறுக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். குக்கரின் அடிப்பகுதியில்  ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பீட்ரூட் கிண்ணத்தை அதில் வைத்து, குக்கரை மூடி 4 - 5 விசில் வரும்வரை வேகவிடவும்.
 
பீட்ரூட் கிண்ணத்தை சாய்க்காமல் வெளியே எடுத்தால் கிண்ணத்தில் உள்ள பீட்ரூட் வெந்து அதன் சாறு அடியில் தேங்கியிருக்கும். இரும்புச்சத்து நிறைந்த அந்தச் சாற்றைப் பருகவும். மீதமிருக்கும் பீட்ரூட்டை மிக்ஸியில் தேவையான தண்ணீர்விட்டு  அரைத்து, அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்தும் பருகலாம்.

*செரிமான கோளாற்றை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. இது, ரத்த சிவப்பணுக்களையும் அதிகரிக்கும்.

சியா சீட்ஸ் டிரிங்

தேவையானவை:
* சியா விதைகள் - 2 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)
* எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
* தேன் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

ஒரு பாத்திரத்தில் சியா விதைகளுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அத்துடன் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலந்து பருகவும். இதைக் காலை உணவுக்குப் பின் ஒரு மாதம் வரை குடித்துவர, கொழுப்பு குறைந்து உடல் அழகான வடிவமைப்பைப் பெறும்.

சியா விதைகளில் உள்ள புரோட்டீன் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் கொழுப்பு தேங்காமல் காக்கிறது.

தேனில் இருக்கும்  ஆன்ட்டி ஆக்ஸி டன்ட்டுகள் உடலுக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேராமலும் காக்கின்றன.

*பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மை சியா விதைகளுக்கு உண்டு. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

சோயா பீன்ஸ் இட்லி

தேவையானவை:

* சோயா பீன்ஸ் - ஒரு கப்
* வரகரிசி - ஒரு கப்
* உளுத்தம்பருப்பு  - அரை கப்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

சோயா பீன்ஸ், வரகரிசி இரண்டையும் கழுவி, ஒன்று சேர்த்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் இட்லி மாவுப் பதத்தில்  அரைத்துக்கொள்ளவும்.

உளுந்துடன் வெந்தயம் கலந்து அரை மணி நேரம் தனியாக ஊறவைத்து அவற்றையும் புசுபுசுவென மாவாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இந்த இரண்டு மாவுகளையும் ஒன்றுசேர்த்து, தேவையான  உப்பு சேர்த்துக் கலந்து 2 மணி நேரம் புளிக்கவைக்கவும். பிறகு மாவை இட்லிகளாக வார்த்தெடுக்கவும்.

ஒரு நல்ல டயட் உணவு இது.

*உலக எண்ணெய் உற்பத்தியில் சோயா பீன்ஸ் பிரதான இடம் வகிக்கிறது.

வால்நட் கீர்

தேவையானவை:
* வால்நட் - 5
* கேரட் - 2
* தேன் - 2 டேபிள்ஸ்பூன்
* காய்ச்சி ஆறவைத்த  பால் - கால் கப்

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

கேரட்டைப் பொடியாக நறுக்கி வால்நட்டுடன் சேர்க்கவும். பிறகு இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். பின்னர் அதில் தேன், பால் சேர்த்துக் கலந்து பருகவும்.

வால்நட் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும் திறனும் வால்நட்டுக்கு உண்டு.

*வால்நட் பருப்புகளில் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் காணப்படுகின்றன.

கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்

தேவையானவை:

* மஞ்சள் குடமிளகாய் - பாதி (நறுக்கியது)
* பச்சை குடமிளகாய் - பாதி (நறுக்கியது)
* வெள்ளரிக்காய் - பாதி (தோல் சீவி நறுக்கியது)
* தக்காளி - ஒன்று (நறுக்கியது)
* கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
* தயிர் - ஒரு கப்
* உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய  குட மிளகாய்கள், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அதனுடன் உப்பு, தயிர் கலந்து பரிமாறவும்.

*அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குடமிளகாய் பயிரிடப்பட்டு வருகிறது.

கொள்ளு சூப்

தேவையானவை:
* கொள்ளு - அரை கப்
* பூண்டு – 4 பல்
* தக்காளி – 2
* மிளகு – ஒரு டீஸ்பூன்
* சீரகம் – ஒரு டீஸ்பூன்
* துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
* நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
* கறிவேப்பிலை – சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
* நல்லெண்ணெய் – சிறிதளவு
* கடுகு – சிறிதளவு
* காய்ந்த மிளகாய் (நீட்டு மிளகாய்) – 2
* மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

வெறும் வாணலியில் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்த கொள்ளு, தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்துக் கலந்துவைத்திருக்கும் அரைத்த  கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

முளைகட்டிய கொள்ளு சேர்த்துச் செய்தால் மேலும் சத்து அதிகமாகும். உடல் எடை கட்டுப்படும். கொள்ளு கொழுப்பைக் கரைக்கும்.

*கொள்ளுவில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.

சோயா சுண்டல்

தேவையானவை:
* சோயா - 100 கிராம்
* கடுகு - கால் டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
* காய்ந்த மிளகாய் (நீட்டு மிளகாய்) - 2
* கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* எண்ணெய் - சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

சோயாவை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் சோயாவை குக்கரில் சேர்த்து, சற்று மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு 2 விசில் வரும்வரை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி  கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

இதனுடன் வேகவைத்த சோயாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு அடுப்பின் தீயை  சற்று அதிகமாக வைத்துக் கிளறவும். சுண்டலில் இருக்கும் அதிகப்படியான தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

சோயாவை ஊறவைக்க மறந்துவிட்டால் கவலை வேண்டாம். வெறும் வாணலியில் சோயாவை வறுத்துக்கொள்ளவும்.

பிறகு சோயா மூழ்கும் வரை தண்ணீர்விட்டு குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேக வைக்கவும்.

*புரதச்சத்து அதிக அளவு நிறைந்திருக்கும் தாவரம் சோயா. 100 கிராம் சோயாவில் 40 கிராம் புரதம் கிடைக்கிறது.

முளைகட்டிய வெந்தய ராய்த்தா

தேவையானவை:

* முளைகட்டிய வெந்தயம் - ஒரு கப்
* தயிர் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய வெந்தயம், தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

*முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதன் மூலம் உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கலாம். ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

சப்ஜா பட்டை டிரிங்க்

தேவையானவை:
* சப்ஜா விதைகள் - 2 டேபிள்ஸ்பூன்
* பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்
* காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்
* தேன் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்

ஒரு கண்ணாடி டம்ளரில் சப்ஜா விதைகளைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு 10 நிமி டங்கள்  ஊறவைக்கவும். பிறகு அதில் பட்டைத்தூள் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் தேன் சேர்க்கவும். பிறகு, பால் சேர்த்துக் கலந்து பருகவும். சப்ஜா விதைகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டவை.

*சர்பத், பலூடா போன்றவற்றில் சேர்க்கப்படும் சப்ஜா விதைகளில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகையைத் தடுக்க உதவும்.