`‘பான் கேக் மீது குழந்தைகளுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. பொதுவாக மைதாவில் செய்கிற அதே கேக்கை சத்தான சிறுதானிய மாவுகளைக் கொண்டு வீட்டிலேயே செய்யலாம். மைதாவின் சுவைக்கு சிறுதானியம் எந்த வகையிலும் குறைந்தது அல்ல. அதுமட்டுமல்ல; குறைந்த செலவில் நிறைவான சத்துகளை வழங்குவதில் சிறுதானியங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை’’ என்கிறார் ‘Mathi’s Kitchen’ முகநூல் பக்கத்தை அலங்கரிக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் கலைமதி ராஜேஷ்.

இவர் வழங்கும் பான் கேக் ரெசிப்பிகள், எளிமையாகச் செய்யும் வகையில், ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் வீடியோக்களோடு இடம்பெறுகின்றன. இந்த பான் கேக் வகைகளை குழந்தைகளின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் அழகிய வடிவங்களில், இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்திச் செய்து பழம் மற்றும் தேனுடன் கொடுக்கலாம். சத்துக்குச் சத்து... சுவைக்குச் சுவை!

- கலைமதி ராஜேஷ், தொகுப்பு: ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 1

கோதுமை ராகி வாழைப்பழ பான் கேக்

தேவையானவை:
* கோதுமை மாவு - முக்கால் கப்
* ராகி மாவு - கால் கப்
* தேங்காய்ச் சர்க்கரை (coconut sugar) - 2 டேபிள்ஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
* உப்பு - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
* பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
* வாழைப்பழம் (பழுத்தது) - 2 (நன்கு மசித்துக்கொள்ளவும்.)
* காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
* கோகோ பவுடர் - சிறிதளவு
* எண்ணெய் - பான் கேக் செய்யத் தேவையான அளவு

தேவையான பொருள்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் உலர் பொருள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். கலந்துவைத்துள்ள மாவுடன், நன்கு மசித்த வாழைப்பழம், பால் சேர்த்துக் கலந்தால் பான் கேக் மாவு தயார்.

இரண்டு கப்களில் மாவைத் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளவும். அதில் ஒன்றில் சிறிதளவு கோகோ பவுடர் சேர்த்துக் கலக்கவும். ஒரு ஜிப்லாக் கவர் அல்லது பைப்பிங் பேகை எடுத்து ஒரு டம்ளரில் செட் செய்யவும். பின்பு அதில் கலந்துவைத்துள்ள மாவை ஊற்றவும். மாவை ஊற்றிய பின் இதை இறுக்கமாகக் கட்டவும். இதே போல் இரண்டு மாவையும் கவரில் ஊற்றித் தயாராக வைக்கவும். கவர் நுனியைக் கத்தரியைக் கொண்டு சிறிதாக வெட்டிவிடவும். தோசைக்கல்லை மிதமான தீயில் சூடேற்றவும். சிறிதளவு எண்ணெய்விட்டு துணி அல்லது டிஷ்யூவை வைத்து கல்லை நன்கு துடைக்கவும். முதலில் கோகோ பவுடர் கலந்த மாவைக் கொண்டு, அவுட்லைன் வரையவும் (அடுப்பைக் குறைத்தே வைக்கவும்). இப்போது மற்றொரு கவரில் உள்ள மாவை உள்ளே நிரப்பவும். பிறகு, சுற்றிலும் லேசாக எண்ணெய்விடவும். சில நொடிகளுக்குப் பின் மேலே லேசாக புள்ளிகள் தெரியத் தொடங்கியவுடன், மெதுவாகத் திருப்பிப் போடவும். சுவையான பான் கேக் தயார்.

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

*ராகியில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் எலும்புகள் வலுப்படும்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 2

ஓட்ஸ் பான் கேக்

தேவையானவை:
* பொடித்த ஓட்ஸ் – ஒரு கப்
* சர்க்கரை - அரை (அ) முக்கால் கப்
* பட்டைப் பொடி – கால் டீஸ்பூன்
* உப்பு – ஒரு சிட்டிகை
* பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
* பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
* காய்ச்சி ஆறவைத்த பால் – முக்கால் கப்
* ஆப்பிள் சிடர் வினிகர் – அரை டீஸ்பூன்

தேவையான பொருள்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளளவும். அகலமான பாத்திரத்தில் உலர் பொருள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். இப்போது பால் சேர்த்துக் கட்டி இல்லாமல் கலக்கவும். கடைசியாக ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்துக் கலந்தால் பான் கேக் மாவு தயார்.

தோசைக்கல்லை மிதமான தீயில் சூடேற்றி, சிறிது எண்ணெய்விட்டு துணி அல்லது டிஷ்யூவை வைத்து கல்லை நன்கு துடைக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து கல்லின் நடுவில் ஊற்றவும்.

அதிகம் பரப்பிவிட வேண்டாம். சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விடவும். லேசாக மேலே புள்ளிகள் தெரியத் தொடங்கியவுடன், மெதுவாக திருப்பிப் போடவும். சுவையான ஓட்ஸ் பான் கேக் தயார்.

*கோதுமையைப் போலவே, ஓட்ஸும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 3

ராகி ஆப்பிள் கேரட் பான் கேக்

தேவையானவை:
* ராகி மாவு – அரை கப்
* பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
* தயிர் – கால் கப்
* எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
* வெல்லப்பாகு – கால் கப்
* துருவிய கேரட்- அரை கப்
* துருவிய ஆப்பிள் – அரை கப்
* பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா (மூன்றும் சேர்த்து) - கால் கப்

தேவையான பொருள்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய், தயிர் மற்றும் வெல்லப் பாகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

கலந்த பின் அதனுடன் ராகி மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இனிப்பு விரும்புபவர்கள், வெல்லப் பாகை சிறிதளவு அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

கடைசியாக கேரட், ஆப்பிள் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கலக்கவும் (கேரட் ஆப்பிள் சேர்த்த பின் அதில் உள்ள தண்ணீரும் சேர்ந்து மாவு சரியான பதத்தில் வந்துவிடும்). தோசைக்கல்லை மிதமான தீயில் சூடேற்றவும்.

சிறிது எண்ணெய்விட்டு துணி அல்லது டிஷ்யூவை வைத்து கல்லை நன்கு துடைக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவைக் கல்லின் நடுவில் ஊற்றவும். அதிகம் பரப்பிவிட வேண்டாம். சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விடவும். லேசாக மேலே புள்ளிகள் தெரியத் தொடங்கியவுடன், மெதுவாகத் திருப்பிப் போடவும். சுவையான பான் கேக் தயார்.

*5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் தயிரை பயன்படுத்துகின்றனர்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 4

தேங்காய் மாவு பான் கேக்

தேவையானவை:
* தேங்காய் மாவு – 6 டேபிள்ஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
* கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு கலவை - அரை கப்
* தேங்காய்ப்பால் – ஒன்றேகால் கப்
* ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
* தேங்காய்ச் சர்க்கரை (coconut sugar) - 2 (அ) 3 டேபிள்ஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
* பேக்கிங் சோடா – ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் - பான் கேக் சுடத் தேவையான அளவு

தேவையான பொருள்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் உலர் பொருள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும்.

பிறகு தேங்காய்ப்பால் சேர்த்துக் கட்டி இல்லாமல் கலந்தால் பான் கேக் மாவு தயார் (தேங்காய் மாவு சிறிது நேரத்திலேயே கெட்டியாகிவிடும். அப்போது இன்னும் கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கி பிறகு பான் கேக்கைச் சுட்டெடுக்கவும்.)

தோசைக்கல்லை மிதமான தீயில் சூடேற்றி சிறிது எண்ணெய்விட்டு துணி அல்லது டிஷ்யூவை வைத்து கல்லை நன்கு துடைக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து கல்லின் நடுவில் ஊற்றவும். அதிகம் பரப்பிவிட வேண்டாம்.

சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விடவும். லேசாக மேலே புள்ளிகள் தெரியத் தொடங்கியவுடன், மெதுவாகத் திருப்பிப் போடவும். சுவையான தேங்காய் மாவு பான் கேக் தயார்.

*தென்னைமரத்தின் பழமாக இருந்தாலும்கூட, கெட்டியாக இருப்பதால் `தேங்காய்’ என்றே அது அழைக்கப்படுகிறது.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 5

வரகு மாவு தேங்காய் பான் கேக்

தேவையானவை:
* வரகு மாவு – அரை கப்
* காய்ச்சி ஆறவைத்த பால் - 1/3 கப்
* முட்டை - ஒன்று
* பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
* தேங்காய்ச் சர்க்கரை (coconut sugar) - 4 டீஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
* துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
* பட்டைப் பொடி - ஒரு சிட்டிகை
* எண்ணெய் அல்லது உருக்கிய
* வெண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - ஒரு சிட்டிகை

தேவையான பொருள்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் துருவிய தேங்காய் தவிர மற்ற உலர் பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

கலந்துவைத்துள்ள மாவில் முட்டையை உடைத்து ஊற்றி, பால் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பான் கேக் மாவு தயார்.

தோசைக்கல்லை மிதமான தீயில் சூடேற்றி, சிறிது எண்ணெய்விட்டு துணி அல்லது டிஷ்யூவை வைத்து கல்லை நன்கு துடைக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து கல்லின் நடுவில் ஊற்றவும். அதிகம் பரப்பிவிட வேண்டாம்.

சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய் சேர்த்து, லேசாக மேலே புள்ளிகள் தெரியத் தொடங்கியவுடன், மெதுவாகத் திருப்பிப் போடவும். சுவையான பான் கேக் தயார்.

*ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பர்ய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது வரகு.