நம் வீட்டின் சமையலறை முதல் பூஜையறை வரை பெரும் மதிப்புடன் இடம்பெறுவது தேங்காய். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு பகுதிகளிலும் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. `உலகின் மிகத் தூய்மையான நீர் இளநீர்’ என்று பெருமையாகச் சொல்லப்படுவது உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு குளூக்கோஸாகச் செலுத்தப்பட்டது தேங்காய் தண்ணீர்தான்! அவ்வளவு ஏன்... தேங்காய்த் துண்டு சாப்பிட்டுப் பசியாறுகிறவர்களையும் நம் பார்த்திருக்கிறோம்.

ரத்த சுத்திகரிப்புக்கு உதவக்கூடிய தேங்காய், இதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைபாடுகளையும் களையக்கூடியது. புரதமும் குளூக்கோஸும் நிறைந்து காணப்படுகிற தேங்காய் செரிமானத்துக்கும் உதவக்கூடியது. வயிற்றுப் புண் பாதிப்புக்கு ஆளானவர்கள் தினமும் இளநீரை அருந்துவது விரைவான நிவாரணத்துக்கு வழிவகுக்கும். சாலை யோரங்களில் விற்கப்படுகிற இளநீர் இப்போது கார்ப்பரேட் விற்பனைப் பொருளாகவும் மாறிவருகிறது. ஆம்... பாட்டில்களிலும் டெட்ராபேக்குகளில் நிரப்பப்பட்டு, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வந்துவிட்டது.

ஏராளமான சத்துகளை தன்னகத்தே பாதுகாத்து நமக்களிக்கும் தேங்காய்களைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் மீனா சுதிர்.

படங்கள்: பா.காளிமுத்து

டிரிப்பிள் கோகனட் சோர்பெத்

தேவையானவை:
* இளநீர் அல்லது
*தேங்காய்த் தண்ணீர் – ஒரு கப்
* தேங்காய்ப்பால் – அரை கப்
* கோகனட் ஃப்ளேக்ஸ் அல்லது இளநீர் வழுக்கை - அரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் - முக்கால் கப்
* உப்பு - சிறிய சிட்டிகை
* எலுமிச்சைச்சாறு - சில துளிகள்

செய்முறை:

ஒரு ஃப்ரீசரில் வைக்கும் கண்டெய்னரில் தேங்காய் தண்ணீரையும் கண்டன்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். தேங்காய்த் துருவலில் வெந்நீரைச் சேர்த்து பால் எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலையும் தேங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். பிறகு இதனுடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு, கோகனட் ஃப்ளேக்ஸ் (அ) இளநீர் வழுக்கை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பிறகு இதை ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு மணிநேரம் கழித்து வெளியே எடுத்து முள் கரண்டியால் நன்கு கிளறவும். மறுபடியும் ஃப்ரீசரில் வைக்கவும். இதேபோல ஆறு முறை செய்யவும். ஆறாவது முறைக்குப் பிறகு, இதை ஒரு இரவு முழுக்க (சுமார் 10 மணிநேரம் வரை) ஃப்ரீசரில்வைத்துப் பிறகு பயன்படுத்தவும்.

*மார்க்கெட்டில் விற்பனையாகும் எந்தவொரு பாட்டில் பானத்தைவிடவும் ஹெல்த்தியானது இளநீரே.

இந்தோரி கோகனட் பேட்டீஸ்

தேவையானவை:
* வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
* கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்
* டெசிகேட்டட் கோகனட் (உலர் தேங்காய்த் துருவல்) - 4 டேபிள்ஸ்பூன்
* இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
* எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
* சிறிய துண்டுகளாக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வேகவைத்த உருளைக்கிழங்கைத் துருவிக்கொள்ளவும். இதனுடன் உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். டெசிகேட்டட் கோகனட்டுடன், எலுமிச்சைச்சாறு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, உப்பு, மிளகாய்த்தூள், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

கையில் எண்ணெய் தடவிக்கொண்டு உருளைக்கிழங்கு கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும். இதனுள் கோக்கனட் கலவையை வைத்து உருண்டைகளாக்கவும். எண்ணெயில் பொரித்தெடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

*உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின்கள் சி, பி6 ஆகியவற்றோடு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

கோகனட் கீர் - கேரமல் பன்னகோட்டா வித் கேஷ்யூ பிரலைன்

தேவையானவை:
* துருவிய தேங்காய் - ஒரு கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* பால் - ஒரு கப்
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* நறுக்கிய முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
* அகர்அகர் – ஒன்றரை டீஸ்பூன் + கால்டீஸ்பூன்
* கோல்டன் கேஸ்டர் சுகர் (பனஞ்சர்க்கரை) - 250 கிராம்
* க்ரீம் – 120 மில்லி
* உப்பில்லாத வெண்ணெய் - 25 கிராம்
* வெனிலா எக்ஸ்ட்ராக்ட் – ஒரு டீஸ்பூன்
* தண்ணீர் - 100 மில்லி
* சர்க்கரை - அரை கப்
* எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
* ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரி - கால் கப்

அலங்கரிக்க:
* நறுக்கிய முந்திரித் துண்டுகள் - சிறிதளவு

செய்முறை:

அடிகனமான பானில் (pan) பாலைச் சூடாக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை `சிம்’மில் வைத்து பால் பாதியாகச் சுண்டும் வரை கொதிக்கவிடவும். பிறகு இதனுடன் கண்டன்ஸ்டு மில்க்கைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும்.

இதனுடன் நறுக்கிய முந்திரியைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அடுப்பை அணைத்து தனியாக எடுத்துவைக்கவும். பின்னர் ஒரு சிறிய பானில் அகர்அகர் துண்டுகளைச் சேர்க்கவும்.

இதனுடன் கால் கப் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும். அகர்அகர் தண்ணீரில் முழுவதுமாகக் கரையும்வரை சூடாக்கவும். இதைத் தயார் செய்துவைத்திருக்கும் பால் - தேங்காய்க் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்களுக்கு விருப்பமான மோல்டு அல்லது கிளாஸில் ஊற்றவும். (நான் மூன்று ஒயின் கிளாஸ்களில் இந்தக் கலவையைச் சமமாக ஊற்றியிருக்கிறேன்.)

கலவை குளிர்ந்தவுடன் செட்டாகிவிடும். கலவை சீக்கிரமாக குளிர வேண்டுமென்றால் ஒயின் கிளாஸ்களை ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவைத்து செட் செய்யலாம். (ஆனால், நான் கலவையை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்னால் வெளியிலேயே கலவையை முழுவதுமாகக் குளிரவைத்த பிறகே ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறேன்.) பன்னகோட்டா ரெடி.

மற்றொரு ஒரு பானில் கேரமல் தயார் செய்யவும். தண்ணீரையும் சர்க்கரையையும் எடுத்துக்கொள்ளவும். பிறகு சர்க்கரை கரையும்வரை சூடுபடுத்தவும். சர்க்கரை கரைந்து குமிழ்கள் நிறைய வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். இதனுடன், க்ரீம், வெண்ணெய், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து நன்கு கலந்து ஒரு ஜாரில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கால் டீஸ்பூன் அகர்அகரை தண்ணீரில் கலந்து சூடாக்கவும். பின்னர் அகர்அகர் தண்ணீரில் முழுவதுமாகக் கரைந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை நான்கு டேபிள்ஸ்பூன் கேரமலுடன் கலந்து கொள்ளவும்.

ஃப்ரிட்ஜில் ஒயின் கிளாஸ்களில் செட் செய்துவைத்திருக்கும் பன்னகோட்டாவை எடுத்து அதன்மேல் சரிசமமாக கேரமல் - அகர்அகர் கலவையை ஊற்றி மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

இப்போது பிரலைன் தயாரிக்கலாம். ஒரு பேனில் கேஸ்டர் சுகரை எடுத்துச் சூடாக்கவும். சூடு ஏற ஏற சர்க்கரை கரைய ஆரம்பிக்கும். சர்க்கரை கிட்டத்தட்ட முழுவதுமாகக் கரையும் வரை, சர்க்கரையைக் கிளறாமல் அப்படியே விடவும். சர்க்கரை மங்கலான பிரவுன் நிறத்தில் மாற வேண்டும். உடனே அதில் எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும். பின்னர், கலவையைக் கலக்கி அதில் முந்திரித்தூள் சேர்த்து இறக்கவும் (சர்க்கரை கரைந்ததும் வேகமாகவும் விரைவாகவும் எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கலக்கி இறக்க வேண்டும். தாமதித்தால் கலவை கடினமாகிவிடும்; தீய்ந்துகூட போய்விடக்கூடும்.)

பிறகு, இந்தக் கலவையை ஸ்பூனால் எடுத்து, சிலிக்கான் லைன்டு பேக்கிங் ஷீட் அல்லது எண்ணெய் தடவிய பிளேட்டில் போட்டு ஒரு நிமிடம் ஆறவிடவும். பின்னர் கூரான முனைகொண்ட கத்தியால் துண்டுகள் போடவும். பிரலைன் தயார். இந்தப் பிரலைனை பன்னகோட்டா இருக்கும் கிளாஸ்களில் சேர்க்கவும். அதன்மேலே முந்திரியைத் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

ஒயின் கிளாஸில் இருக்கும் பன்ன கோட்டாவைத் தலைகீழாகத் திருப்பினால், அது தனியாக வந்துவிடும். இப்படித் தனியாக எடுத்தும் பரிமாறலாம்.

*கி.மு முதல் நூற்றாண்டிலேயே தெற்காசியாவில் தேங்காய் இருந்ததற்கான குறிப்புகள் ராமாயணத்திலும் இலங்கை காப்பியங்களிலும் உள்ளன.

டபுள் லேயர்டு டெண்டர் கோகனட் புடிங்

தேவையானவை - முதல் லேயர் செய்ய:
* மில்க்மெய்டு - 3 டேபிள்ஸ்பூன்
* இளநீர் - கால் கப்
* இளநீர் வழுக்கை - ஒரு இளநீர் காயிலிருந்து எடுத்த அளவு
* கிரானுலேட்டட் சுகர் - 3 - 4 நான்கு டேபிள்ஸ்பூன்
* ஜெலட்டின் - 2 டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் - கால் கப்

இரண்டாவது லேயர் செய்ய:
* இளநீர் - இரண்டரை கப்
* ஜெலட்டின் - 2 டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் - கால் கப்
* கிரானுலேட்டட் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்

முதல் லேயர் செய்முறை:

முதல் லேயர் செய்யக் கொடுத்துள்ள ஜெலட்டினை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இளநீர் வழுக்கை, இளநீர், மில்க் மெய்டு, கிரானுலேட்டட் சுகர் ஆகியவற்றை நன்கு அரைத்து திக்கான ஜூஸ் போல எடுத்துக்கொள்ளவும்.

தண்ணீரில் ஊறவைத்த ஜெலட்டினை அப்படியே அடுப்பில்வைத்துச் சூடாக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி திக்காக செய்து வைத்திருக்கும் ஜூஸில் சேர்க்கவும். இந்தக் கலவையை சற்று ஆறவிட்டுப் பரிமாறும் கிளாஸ்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் கலவை செட்டாகும்வரை வைக்கவும்.

இரண்டாவது லேயர் செய்முறை:

இரண்டாவது லேயர் செய்யக் கொடுத்துள்ள ஜெலட்டினை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். கிரானுலேட்டட் சுகரை இளநீரில் நன்கு கலந்துகொள்ளவும். பின்னர், ஊறவைத்த ஜெலட்டினை டபுள் பாய்லிங் முறையில் கொதிக்கவைத்து இதை இளநீர்க் கலவையில் சேர்க்கவும். சற்று ஆறவிடவும்

இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் கிளாஸில் ஊற்றி மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்யவும்.

குறிப்பு:

முதல் லேயர் ஃப்ரிட்ஜில் நன்கு செட் ஆன பிறகு இரண்டாவது லேயரைத் தயார் செய்ய ஆரம்பிக்கவும்.

*பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் ஆகிய தாதுக்கள் இளநீரில் உள்ளன.

எக்லெஸ் கோகனட் கேக்

தேவையானவை:
* கோதுமை மாவு - ஒன்றரை கப் சட்னி போல அரைத்த
*தேங்காய் விழுது - ஒரு கப்
* தயிர் - ஒரு கப்
* சர்க்கரை - முக்கால் கப்
* பேக்கிங் சோடா - ஒன்றரை டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் – ஒன்றரை டீஸ்பூன்
* வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
* மோர் - அரை கப்
* எண்ணெய் - அரை கப்

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸில் பிரீஹீட் செய்யவும். ஒரு ஸ்ப்ரிங்ஃபார்ம் பானில் (springform pan) ஏழு அல்லது எட்டு இன்ச் அளவுள்ள பட்டர் பேப்பர் அல்லது பார்ச்மென்ட் பேப்பரை வைக்கவும். தயிருடன் சர்க்கரையைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். இதனுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். 5 - 7 நிமிடங்கள் அல்லது கலவை நுரைக்கும் வரை அப்படியே வைக்கவும். இப்போது இதனுடன் தேங்காய் விழுது, எண்ணெய், வெனிலா எசென்ஸ், மோர் சேர்க்கவும்.

கோதுமை மாவைச் சலித்து இதனுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். தோசை மாவு பதத்துக்கு கலவையைக் கலந்துகொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை பட்டர் பேப்பர் வைக்கப்பட்ட பேக்கிங் பேனில் (Baking pan) ஊற்றி 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஒரு டூத்பிக் குச்சியால் கேக்கின் நடுப்பகுதியைக் குத்தி குச்சியை வெளியே எடுத்தால் கேக் குச்சியில் ஒட்டக் கூடாது.

இதுவே சரியான பதம். பிறகு அவனில் இருந்து பானை வெளியே எடுக்கவும். கேக்கை பர்ச்மன்ட் பேப்பருடன் எடுத்து வயர்ரேக்கில் தலைகீழாக வைத்து 10 நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு பார்ச்மென்ட் பேப்பரில் இருந்து கேக்கைக் கவனமாக வெளியே எடுக்கவும். அப்படி எடுக்காமல்விட்டால் கேக்கின் அடிப்பகுதி கொழகொழவென ஆகிவிடும்.

குறிப்பு:

கேக்கை க்ரீம் மற்றும் விரும்பிய பழங்களால் அலங்கரிக்கலாம்.

*அரிசி, சோளம் ஆகிய பயிர்களை விடவும் கோதுமையில் அதிக புரதம் உள்ளது.

கொப்பரி கரேலு

தேவையானவை:
* அரிசி மாவு – 2 கப்
* துருவிய தேங்காய் - ஒரு கப்
* பச்சை மிளகாய் - 6 - 8 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* வெந்நீர் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ஆழமான பவுலில் வெந்நீரைத் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையில் வெந்நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு மர ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும். மாவு ஒன்றாகச் சேர்ந்து வரும் அளவுக்கு மர ஸ்பூனால் மாவாகக் கலந்துகொண்டால் போதும். பிறகு மாவை மூடி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

ஒரு ஜிப்லாக் கவரில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை அதில் வைத்துத் தட்டவும். பிறகு அதன் நடுவில் ஒரு துளைபோடவும். இதைச் சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஓரங்கள் பொன்னிறமாக மாறும்வரை பொரித்தெடுக்கவும் (வாணலியின் ஓரத்தில் மெதுவாக, கவனமாகப் போட்டுப் பொரிக்க வேண்டும். இல்லையென்றால் எண்ணெய் தெறித்து மேலே பட்டுவிடும்).

பிறகு பேப்பர் டவலில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். யோகர்ட், ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும். எதுவும் தொட்டுக்கொள்ளாமல் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

*சோளம், கோதுமைக்கு அடுத்து உலகில் அதிகம் பயிரிடப்படும் தானியம் அரிசியே.

எக்லெஸ் லெமன் கோகனட் லோஃப் வித் லெமன் கிளேஸ்

தேவையானவை- கேக் செய்ய:
* கோதுமை மாவு - ஒன்றரை கப்
* பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
* சர்க்கரை - முக்கால் கப்
* டெசிகேட்டட் கோகனட் (உலர் தேங்காய்த் துருவல்) - ஆறு டேபிள்ஸ்பூன்
* தயிர் - ஒரு கப்
* எண்ணெய் - அரை கப்
* எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன்
* லெமன் ஜெஸ்ட் (எலுமிச்சைத் தோல் துருவல்) - சிறிதளவு (விருப்பப்பட்டால்)

கிளேஸ் செய்ய:
* ஐசிங் சுகர் - அரை கப்
* எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸ்ஸில் 8 - 10 நிமிடங்களுக்கு பிரீஹீட் செய்யவும். லோஃப் பானில் (Loaf Pan) எண்ணெய் தடவி தனியாக வைக்கவும். எண்ணெயையும் சர்க்கரையையும் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை அடித்துக்கொள்ளவும். இதனுடன் தயிரைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பின்னர் எலுமிச்சைச்சாறு, எலுமிச்சைத் தோல் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, இந்தக் கலவையில் சலித்த கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, டெசிகேட்டட் கோகனட் சேர்த்து எல்லாம் ஒன்றாகச் சேரும்வரை மென்மையாகக் கலக்கவும். கலவையை அளவுக்கு அதிகமாகக் கலக்க வேண்டாம். பின்னர் லோஃப் பானில் இந்த மாவைச் சேர்த்து 25 - 30 நிமிடங்களுக்கு அவனில் பேக் செய்யவும்.

ஒரு டூத்பிக் குச்சியால் கேக்கின் நடுப்பகுதியைக் குத்தி குச்சியை வெளியே எடுத்தால் கேக் குச்சியில் ஒட்டக் கூடாது. இதுவே சரியான பதம். இப்போது பானை (pan) அவனில் (oven) இருந்து வெளியே எடுத்து கேக்கை ஆறவைக்கவும்.

ஐசிங் செய்முறை: சர்க்கரையுடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கிக்கொள்ளவும். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவைக்கேற்ப சர்க்கரை மற்றும் எலுமிச்சைச்சாற்றின் அளவை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். பின்னர் இதை கேக்கின் மேல் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

*பிரேசில், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, தாய்லாந்து நாடுகளில் சர்க்கரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோகனட் அல்வா

தேவையானவை:
* துருவிய தேங்காய் - ஒரு கப்
* முந்திரி - கால் கப்
* பாதாம் - கால் கப்
* சர்க்கரை – அரை கப்
* தண்ணீர் - அரை கப்
* குங்குமப்பூ - சிறிதளவு
* நெய் - 4 டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
* பால் - சிறிதளவு

அலங்கரிக்க:
இரண்டாக உடைத்த முந்திரி, சீவிய பாதாம், உலர்திராட்சை - சிறிதளவு (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஐந்து அல்லது ஆறு டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாமை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். ஊறவைப்பதால் முந்திரி மென்மையாகிவிடும். ஊறிய பாதாமின் தோலை நீக்கிக்கொள்ளவும். பின்னர் பாதாம், முந்திரி, தேங்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கம்பிப்பதத்துக்கு பாகு வரும்வரை கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து, கலவையை அடிப்பிடிக்காத வண்ணம் கிளறவும். பின்னர் இதனுடன் பால்-குங்குமப்பூவைச் சேர்த்து நன்கு கிளறவும் (அப்போதுதான் அல்வா நல்ல நிறமாக வரும்).

பிறகு இதனுடன் நெய்யைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு, இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்களுக்குக் கிளறவும் (இப்படிச் செய்தால் அல்வா சாஃப்ட்டாக இருக்கும்). விருப்பப்பட்டால், இரண்டாக உடைத்த முந்திரி, சீவிய பாதாம், உலர்திராட்சை கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு:

அதிக இனிப்பு வேண்டுமெனில் முக்கால் கப் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்.

*தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக்கொண்டது முந்திரி. கி.பி 1560 - 1565 ஆண்டுகளில் போர்ச்சுகீசியரால் கோவாவுக்கு வந்தது.

கோகனட் ரோஸ் சிரப் பண்ட் கேக்

தேவையானவை:
* மைதா - ஒரு கப்
* பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
* மோர் - அரை கப்
* ரோஸ் சிரப் - அரை கப் (வீட்டில் தயாரித்தது)
* எண்ணெய் - அரை கப்
* லேசாக ரோஸ்ட் செய்த டெசிகேட்டட் கோகனட் (உலர் தேங்காய்த் துருவல்) -
*கால் கப் + ஒரு டீஸ்பூன்

கிளேஸ் தயாரிக்க:
* கேஸ்டர் சுகர் (சாதாரண சர்க்கரை) - 1/3 கப்
* ரோஸ் சிரப் - 2 - 3 டேபிள்ஸ்பூன் (வீட்டில் தயாரித்தது)
* தண்ணீர் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு மெஷர்மென்ட் ஜக்கில் மோரை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியேவிடவும். இந்தக் கலவை சற்று பொங்கியிருக்கும். ஒரு `மக்’கில் ரோஸ் சிரப்பையும் எண்ணெயையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பிறகு மைதா மாவை ஒருமுறை சலித்து அதனுடன் கால் கப் டெசிகேட்டட் கோகனட்டைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மோர் கலவை மற்றும் ரோஸ் சிரப் கலவையையும் மெதுமெதுவாகச் சேர்த்து தட்டைக் கரண்டியால் ஒரே பக்கமாக மென்மையாகக் கலக்கவும்.

கேக்கை பேக் செய்யப் போகும் பண்ட் பானில் (Bundt pan) எண்ணெய் தடவிக்கொள்ளவும். அதில் தயார் செய்து வைத்திருக்கும் மாவை முக்கால் அளவுக்கு ஊற்றவும். அவனை (oven) 170 டிகிரி செல்ஷியஸ்ஸுக்கு பிரீஹீட் செய்யவும். பிறகு, அதில் பானை வைத்து 40 - 45 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

பிறகு 5 நிமிடங்கள் லேசாகக் குளிரவிட்டு, கேக்கைக் கூர்மையில்லாத கத்தியால் பானிலிருந்து வெளியே எடுத்து வயர் ரேக்கில் வைத்து முழுவதுமாக ஆறவிடவும். ரோஸ் சிரப், தண்ணீர், சர்க்கரை மூன்றையும் சற்று கெட்டியாகக் கலந்துகொள்ளவும். இதை கேக்கின் மேல் பரப்பவும். பின்னர் ஒரு டீஸ்பூன் ரோஸ்ட் செய்த டெசிகேட்டட் கோகனட் தூவி கட் செய்து பரிமாறவும்.

*மோரில் பி2, பி6, பி12, ஏ1, சி4 ஆகிய வைட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்தும் உள்ளன.

கமர்கட்டு

தேவையானவை:
* துருவிய வெல்லம் - ஒரு கப்
* துருவிய தேங்காய் - கால் கப்
* நெய் - சிறிதளவு

செய்முறை:

வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு கனமான கடாயில் ஊற்றிக் கொதிக்கவிடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்தவுடன் இதில் துருவிய தேங்காயைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கலவை கெட்டியானவுடன் கீழே இறக்கிவிடவும்.ஒரு சிறிய பவுலில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளவும்.

கிளறிவைத்த கலவையை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் குளிர்ந்த நீரில் போடவும். பிறகு இதைக் கைகளில் எடுத்தால் கலவை கரைந்து போகாமல் கடினமான சிறிய பந்து போல உருட்ட வர வேண்டும். இதுதான் சரியான பதம்.

பிறகு கலவையை ஒரு தட்டில் போட்டு சற்றே ஆறவைக்கவும். கைகளில் நெய் தடவிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக்கொள்ளவும். கமர்கட்டு தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு வாரம் வரை இந்த கமர்கட்டை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது.