வீட்டிலேயே பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்காத ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், மசாலா கிரேவி, தால், சாம்பார், இட்லி, சட்னி முதலியவற்றுக்கான மிக்ஸ்களைத் தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையற் கலைஞர் எஸ்.ராஜகுமாரி, அவற்றுக்கான செய்முறையும் அளிக்கிறார். இவை பயணத்தின்போதும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வேலைக்குச் செல்பவர்களின் அவசரத் தேவைகளுக்கும், விருந்தினர் வருகையின்போதும் பெரிதும் உதவும்.

சப்பாத்தி, நாண், புல்கா, பரோட்டா போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட கிரேவி மிக்ஸ் தயாரிப்பது எப்படி?

தேவையானவை:
* வேர்க்கடலை, துருவிய முந்திரி - தலா 2 டேபிள்ஸ்பூன்
* உலர் தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
* எள், கார்ன்ஃப்ளார் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
* மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் (அல்லது விரும்பும் காரத்துக்கேற்ப)
* பூண்டு, வெங்காய பவுடர்கள் - தலா ஒரு டீஸ்பூன்
* இஞ்சி பவுடர் - அரை டீஸ்பூன்
* கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
* பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
* சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
* கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் முதலில் வேர்க் கடலையை வறுத்துத் தோலை நீக்கவும். பிறகு எள்ளை வறுக்கவும். பிறகு உலர் தேங்காய்த் துருவலை வறுத்து அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் வறுத்த மூன்றையும் மிக்ஸியில் நைஸாகப் பவுடராக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்தப் பவுடரைப் போட்டு மீதியுள்ள அனைத்தையும் இதனுடன் சேர்த்துக் கரண்டியால் (கைபடாமல்) நன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட் அரை கப், நறுக்கிய பீன்ஸ் - கால் கப், நறுக்கிய உருளைக்கிழங்கு - அரை கப் போட்டு 2 கப் நீர்விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். காய்கள் அரை வேக்காடு வெந்ததும் தயாரித்துவைத்துள்ள கிரேவி மசாலா பவுடர் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து மேலும் கொதிக்கவிடவும். காய்கள் இரண்டு மூன்று கொதியிலேயே நன்றாக வெந்து கிரேவி பதம் வந்துவிடும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

விருந்தினர் வருகையின்போதும், பயணம் செய்யும்போதும் பயன்படுத்த இனிப்பு கீர் மிக்ஸ் தயாரிப்பது எப்படி?

தேவையானவை:
* கெட்டி அவல் - 2 கப்
* பொடித்த சர்க்கரை - ஒரு கப்
* பால் பவுடர் - அரை கப்
* உலர் தேங்காய்த் துருவல் - கால் கப்
* ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* ஓட்ஸ் - கால் கப்
* ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
* மெலிதாகச் சீவிய பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் அவலை வறுத்துத் தனியே வைக்கவும். ஓட்ஸை வறுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரியையும் வறுத்துத் தனியே வைக்கவும். உலர் தேங்காய்த் துருவலையும் வெறும் வாணலியில் வறுத்துத் தனியே வைக்கவும். வறுத்த அவல், ஓட்ஸ், நட்ஸ், தேங்காய்த் துருவலுடன் பால் பவுடர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் அனைத்தையும் நன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

கீர் எப்படித் தயாரிப்பது?

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றிக்கொதிக்கவிட்டு, தயாரித்து வைத்துள்ள பவுடரை 3 டேபிள்ஸ்பூன் போட்டுக் கொதிக்கவைத்து, இரண்டு மூன்று கொதிவந்து கெட்டிப்பட்டதும் இறக்கிப் பருகலாம். கீர் கெட்டியாக வேண்டுமெனில் ஒரு டேபிள்ஸ்பூன் பவுடர் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். அது நீர்த்து இருக்க வேண்டுமெனில் ஒரு டேபிள்ஸ்பூன் பவுடரைக் குறைத்துக்கொள்ளலாம்.

வீட்டிலேயே பசியைத் தூண்டும் சூப் மிக்ஸ் தயாரிப்பது எப்படி? எப்படி உபயோகிப்பது?

தேவையானவை:
* தக்காளி பவுடர் - 8 டேபிள்ஸ்பூன்
* இஞ்சி பவுடர் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன்
* மில்க் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெங்காய பவுடர் - ஒரு டீஸ்பூன்
* பூண்டு பவுடர் - ஒரு டீஸ்பூன்
* கேரட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
* சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
* மெலிதாகச் சீவிய பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்
* சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் நன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

சூப் தயாரிப்பது எப்படி?

அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, செய்துவைத்துள்ள சூப் பவுடரை 2 டேபிள்ஸ்பூன் அளவுக்குச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கிப் பருகவும்.

வீட்டில் இருக்கும்போது தயாரிக்க வேண்டுமெனில்... அடிகனமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பீன்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன், மஷ்ரூம் - 2 (நறுக்கவும்), (அ) பனீர்துண்டுகள் - சிறியது 2, ஊறவைத்த பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து ஒரு கப் நீர்விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து காய்கறிகள் பாதியளவு வெந்ததும் 2 டேபிள்ஸ்பூன் சூப் பவுடரை 4 டேபிள்ஸ்பூன் நீரில் கரைத்து ஊற்றி மீண்டும் இரண்டு கொதிவந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவவும். காய்கறிகளை ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் வதக்கி, பிறகு நீரில் கொதிக்கவிடலாம். தேவைப்பட்டால் மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

விருந்தில் ஸ்டார்ட்டராக பரிமாறும் வடை செய்ய இன்ஸ்டன்ட் மிக்ஸ் எப்படித் தயாரிப்பது?

தேவையானவை:
* வெள்ளை உளுந்து - 3 கப்
* மிளகுத்தூள் (கொரகொரப்பாகப் பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்
* சமையல் சோடா - ஒரு டீஸ்பூன்
* பச்சரிசி - 6 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உளுந்து, பச்சரிசி இரண்டையும் நன்கு கழுவி நீரை வடிகட்டி (ஊறவிட வேண்டாம்) நன்றாக உலரவிடவும். உலர்ந்ததும் மிக்ஸியில் இரண்டையும் பவுடராக்கவும். அரைத்த மாவுடன் சமையல் சோடா, மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை; வெளியிலேயே வைக்கலாம்.

வடை தயாரிப்பது எப்படி?

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தேவையான அளவு வடை மிக்ஸ் எடுத்து உப்பு சேர்த்து, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து நீர்விட்டுக் கலந்து பிசைந்து வடை களாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் சேர்த்துச் சுவைக்கவும்.

வேறுமுறை:

வடை மிக்ஸுடன் உப்பு, நீர் மட்டும் சேர்த்துப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் பொரித்து எடுக்கலாம்.

உலர் தேங்காய்த் துருவல் தயாரிப்பது எப்படி? இதை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம்?

தேவையானவை:
முழு தேங்காய் - 2, அதிகம் முற்றவும் கூடாது; இளசாகவும் இருக்கக் கூடாது. தேங்காயை உடைத்து அதில் உள்ள இளநீரை எடுத்துவிட்டு தேங்காயை ஓட்டைவிட்டு முழுமையாக வெளியே எடுத்து தேங்காயின் பிரவுன் பகுதியை பீலரால் (peeler) சீவிவிட்டு வெண்மையான பகுதியை கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய்த் துருவலைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து, அடிபிடிக்காமலும், வெண்மை நிறம் மாறாமலும் கரண்டியால் கிளறிவிட்டு தேங்காயில் உள்ள நீர் வற்றியதும் இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மீண்டும் ஒரு தட்டில் கொட்டிப் பரப்பி விடவும். 10 நிமிடங்கள் கழித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்தோ ஜிப்லாக் பையில் வைத்தோ ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

இதை கேக், பாயசம், குருமா, கூட்டு, பொரியல் எனப் பலவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

கோடை வெயிலுக்கு ஏற்ற இயற்கை முறையில் நன்னாரி சர்பத் தயாரிப்பது எப்படி?

தேவையானவை:
* நன்னாரி வேர் - 100 கிராம்
* சர்க்கரை - 250 கிராம்
* வெல்லம் - 100 கிராம்
* எலுமிச்சைப்பழம் - ஒன்று

செய்முறை:

நன்னாரி வேரைக் கழுவி நன்றாக நசுக்கி அரை லிட்டர் வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலை வடிகட்டி மேலே தங்கிய வேரை எடுத்துவிட்டு கீழே இருக்கும் நன்னாரி நீரை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அதில் வெல்லம், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு கம்பிப்பதம் பாகு வந்ததும் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து இறக்கிவிடவும்.

எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு ஆறியதும் பாட்டிலில் ஊற்றி, இறுக்கமாக மூடி வைக்கவும். 10 தினங்கள் வரை வெளியிலும் ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம்.

சர்பத் தயாரிப்பது எப்படி ?

நன்னாரி சிரப் 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அரை கப் நீர் ஊற்றி 3 ஐஸ்துண்டுகள் போட்டு அரை மூடி எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து நன்றாகக் கலந்துவிட்டு பருகவும். தேவைப்பட்டால் நன்னாரி சிரப் அதிகப்படுத்தியோ, தண்ணீர் அதிகப்படுத்தியோ அருந்தலாம்.

பயன்கள்:
கோடைக்காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, நீர்க்கடுப்பு முதலியவற்றை இந்த நன்னாரி சர்பத் தடுக்கும்.

சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும், ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடவும் எளிமையாக தால் தயாரிப்பது எப்படி?

தேவையானவை:
* பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) - ஒன்றரை கப்
* காய்ந்த மிளகாய் - 3
* மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2
* பட்டை - ஒரு சிறிய துண்டு
* உப்பு - தேவைக்கேற்ப
* கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மாவற்றல் - 2
* பேரீச்சை - 3 (விதை நீக்கவும்)
* கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* சமையல் சோடா - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 10 இலைகள்
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து மிக்ஸியில் பவுடராக்கவும். அதே வாணலியில் காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, மல்லி, சீரகம் ஆகியவற்றையும் வறுத்து பவுடராக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை இரண்டையும் கழுவித் துடைத்து அவனில் (oven) ஒரு செகண்டு வைத்து எடுக்கவும்.

ஈரம் வற்றிவிடும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, வறுத்து பவுடராக்கிய பயத்தமாவைச் சேர்த்து வறுத்து, பிறகு வறுத்து பவுடராக்கிய காய்ந்த மிளகாய் கலவையைச் சேர்த்து உப்பையும் சேர்த்துப் புரட்டி இறக்கிவிடவும்.

ஆறியதும் மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து மாவற்றல், விதை நீக்கிய பேரீச்சை இவற்றையும் துண்டுகளாக்கி அதில் கலக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாது.

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் பங்கு ஒரு மாவு, இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, தால் பதம் வந்ததும் இறக்கவும்.

பவுடர் முறையில் காபி, டீ, சாக்லேட் டிரிங்க் தயாரிப்பது எப்படி ?

காபி மிக்ஸ் பவுடர் தயாரிக்கத் தேவையானவை:
* பால் பவுடர் - ஒரு கப்
* பொடித்த சர்க்கரை - அரை கப்
* இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெந்நீர் ஊற்றி ஒரு டேபிள்ஸ்பூன் காபி மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலந்து கப், டம்ளரில் உற்றிக் குடிப்பது சுவையாக இருக்கும். காபி மிக்ஸ் பவுடர் தயாரிக்கும்போது இன்ஸ்டன்ட் காபி பவுடர் 4 டேபிள்ஸ்பூன் சேர்ப்பதற்குப் பதில் அவரவர் சுவைக்கு ஏற்றுவாறு 6 டேபிள்ஸ்பூனோ, 3 டேபிள்ஸ்பூனோ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம்.

டீ மிக்ஸ் பவுடர் தயாரிக்கத் தேவையானவை:
* பால் பவுடர் - ஒன்றரை கப்
* பொடித்த சர்க்கரை - ஒரு கப்
* கிரீன் டீத்தூள் - 4 டேபிள்ஸ்பூன்
* சாதாரண டீத்தூள் - 4 டேபிள்ஸ்பூன்

வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க:
* பட்டை - ஒரு சிறிய துண்டு
* ஏலக்காய் - 4
* சுக்கு - ஒரு சிறிய துண்டு
* ஜாதிக்காய் - பாதியளவு

செய்முறை:

வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், சர்க்கரை, கிரீன் டீத்தூள், சாதாரண டீத்தூள் மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தவை அனைத்தையும் சேர்த்துக் கலந்து மீண்டும் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து நன்றாகக் கலந்துவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, தயாரித்துள்ளவைத்துள்ள டீ மசாலா பவுடர் 2 டேபிள்ஸ்பூன் போட்டு கொதிக்கவைத்து, இறக்கி வடிகட்டி கப்பில் ஊற்றிப் பருகவும். டீ மசாலாவையும் தண்ணீரையும் தேவைக்கு ஏற்றவாறு சேர்த்துக் கொள்ளலாம்.

ஹாட் சாக்லேட் டிரிங்க் மிக்ஸ் தயாரிக்கத் தேவையானவை:
சாக்லேட் பவுடர் - அரை கப், கோகோ பவுடர் - 4 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - அரை கப், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பவுலில் போட்டுக் கலந்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சாக்லேட் டிரிங்க் எப்படித் தயாரிப்பது?

ஒரு டம்ளரில் ஒரு கப் அளவு வெந்நீர் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் தயாரித்து வைத்துள்ள சாக்லேட் மிக்ஸ் பவுடர் சேர்த்து ஸ்பூனால் நன்றாகக் கலக்கிவிட்டுப் பருகவும்.

வீட்டிலேயே சீஸனுக்கு ஏற்ற சாதம் மிக்ஸ் தயாரிப்பது எப்படி?

சீஸனுக்கு ஏற்ற மாங்காய் புளியோதரை மிக்ஸ் செய்யத் தேவையானவை:

* அதிகம் புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய் - 2
* காய்ந்த மிளகாய் - 6
* கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* வெல்லம் - ஒரு டீஸ்பூன் (மெலிதாகச் சீவியது)
* உலர் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
* எள் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - அரை டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* முந்திரித் துண்டுகள் - 10
* வேர்க்கடலை - 8 டேபிள்ஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
* நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
* ரீஃபைண்டு ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் காய்ந்த மிளகாயை வறுத்துத் தனியேவைக்கவும். அடுத்தடுத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாகப் போட்டு வறுத்துவைக்கவும். வெந்தயத்தைத் தனியே போட்டு வறுத்து வைக்கவும். எள்ளை தனியே போட்டு வறுத்து வைக்கவும். வறுத்த 5 பொருள்களையும் மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.

மாங்காயைத் தோல் சீவி கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். மாங்காய்த் துருவல், கொரகொரப்பாகப் பொடித்த பொடி உலர் தேங்காய்த் துருவல் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து (நீர்விடாமல்) மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் ரீஃபைண்டு ஆயில், நல்லெண்ணெய் இரண்டையும் ஊற்றி, தாளிக்கக்கொடுத்த அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தாளித்து மிக்ஸியில் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேர்க்கவும். வெளியில் வைத்தால் குறைந்தபட்சம் 4 நாள்கள் வரையிலும், ஃப்ரிட்ஜில் வைத்ததால் 10 தினங்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.

மாங்காய் புளியோதரை தயாரிப்பது எப்படி ?

2 கப் உதிர் உதிராக வடித்த பாஸ்மதி அரிசி (அ) சமையல் அரிசி சாதத்தை அடிகனமான பாத்திரத்தில் போட்டு, தயாரித்துவைத்துள்ள மாங்காய் புளியோதரை மிக்ஸில் இருந்து 4 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கரண்டியால் நன்றாகக் கலந்துவிட்டால் மாங்காய் புளியோதரை தயார். தேவைக்கேற்ப மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் மிக்ஸ் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்; ஒரு டேபிள்ஸ்பூன் குறைத்தும்கொள்ளலாம்.

அதிக புளிப்பில்லா எந்த மாங்காயையும் இதற்கு உபயோகிக்கலாம். இந்த மாங்காய் புளியோதரையை அப்பளம், வடகம், சிப்ஸ் தொட்டுச் சாப்பிடலாம்.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய டெசர்ட் மிக்ஸ் ஒன்றைச் சொல்லவும்...

சாக்லேட் கேக் மிக்ஸ் தயாரிக்கத் தேவையானவை:
* மைதா மாவு - 200 கிராம்
* பொடித்த சர்க்கரை - 175 கிராம்
* பால் பவுடர் - 25 கிராம்
* சாக்லேட் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
* கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு - அரை டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, ஒரு வாரம் வரை வெளியிலும் ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜிலும் வைத்துப் பயன்படுத்தலாம்.

கேக் தயாரிப்பது எப்படி?

ஒரு பவுலில் கால் கப் பால், கால் கப் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டு போட்டு நன்றாக அடித்து அரை கப் தயாரித்து வைத்துள்ள கேக் மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலக்கவும். கலந்த கலவை இட்லி மாவு பதம் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்க்கவும். ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் மேலே ஒரு பட்டர் பேப்பர் போட்டு அதன் மேலே பரவலாக ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயைத் தடவி அதன் மேலே கலந்துவைத்துள்ள கலவையை ஊற்றி அதன் மேலே மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரி துருவல் (தலா ஒரு டேபிள்ஸ்பூன்) தூவி, கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து, அந்த நான் ஸ்டிக் பாத்திரத்தின் மூடியைப் போட்டு மூடவும்.

கேக் வெந்து வாசனை வர ஆரம்பித்ததும் கத்தியை வைத்து குத்திப் பார்த்தால் கேக் ஒட்டாமல் வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு பாதியளவு ஆறியதும் துண்டுகள் போடவும். சுவையான இந்த கேக் மிக்ஸ் ரெடியாக இருந்தால் அரை மணிக்குள் நாம் சாக்லேட் கேக் தயாரித்துவிடலாம். விருப்பப்பட்டால் முந்திரி, பாதாம் துருவலுடன் டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சையையும் சேர்த்து வேகவிடலாம்.