தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!

நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!

வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

‘அம்மணியின் கைமணம் வேற யாருக்குமே வராது’ என உங்கள் சமையல் புகழப்படுகிறதா? உங்கள் சமையலில், அதன் சுவைக்காக எவருக்கும் தெரியாத நுட்பம் ஒன்றைக் கையாள்கிறீர்களா? சமையலைச் சட்டென முடிக்க உங்கள் வீட்டுச் சமையலறையில் புதிய வடிவமைப்பு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?

நம்மில் பலரும் நம் வேலையையொட்டி, அதன் தேவை காரணமாக சின்னச் சின்ன கண்டுபிடிப்புகளை நாமே நிகழ்த்திவிடுகிறோம். வேகமாகச் சமையலை முடிக்க ‘ஒன்பாட் ஒன்ஷாட்’ டெக்னிக்குகள் செய்வதுபோல. அதுபோன்ற கண்டுபிடிப்புகளை, டிப்ஸாக மற்றவர்களிடம் பகிர்வதும் உண்டு.

நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அமெரிக்காவின் மான்செஸ்டரில், மார்கரெட் இ நைட் எனும் 12 வயது சிறுமியின் அப்பா இறந்துவிடுகிறார். குடும்பத்தின் தேவைக்காகப் படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு பருத்தி ஆலையில் வேலைக்குச் செல்கிறாள் மார்கரெட். ஒருநாள் எதிர்பாராவிதமாக, அவளுடன் மில்லில் வேலைபார்க்கும் ஒருவருக்கு இயந்திரத்தில் அடிபட்டுவிடுகிறது. பாதுகாப்பு இல்லாமல் வேலைபார்த்ததே அதற்குக் காரணம் என்பது, மார்கரெட்டுக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. இதற்கு என்ன செய்யலாம் என அவள் மனம் யோசிக்கிறது. பொதுவாகவே, பலவிதமான பொருள்களைச் செய்துபார்ப்பது அவளுக்குப் பொழுதுபோக்கு. அந்த அறிவை வைத்து ஒரே வாரத்தில் பாதுகாப்பு உபகரணம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அந்த உபகரணம் இதுவரை எவர் பெயரிலும் பேடன்ட் (உரிமம்) பதிவு செய்யப்படவில்லை.

பின்னர் மாசசூசெட்ஸ்ஸுக்கு குடிமாறுகிறது மார்கரெட்டின் குடும்பம். ஒரு காகிதப்பை நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறாள். அப்போதெல்லாம் இன்று நாம் பயன்படுத்துவது போன்ற தட்டையான அடிப்பாகம் கொண்ட காகிதப் பை அரிது. காரணம், அந்த வடிவத்தில் தாளை ஒட்டுவது கடினமாக இருந்தது. மறுபடி மறுபடி முயற்சி செய்து தட்டையான அடிப்பாகத்தை ஒட்டும் மெஷின் ஒன்றை உருவாக்குகிறாள் மார்கரெட். தன் வேலை நேரத்தில், தன் தொழிலின் தேவையை ஒட்டி தனக்காக  அவள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு அது. இந்த மெஷினால் மிக வேகமாக தட்டைப் பைகளைத் தயாரிக்க முடிந்தது. அந்த கண்டுபிடிப்பின் மதிப்பையோ, அதை தன் பெயரில் பதியலாம் என்றோ அவள் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், மரத்தால் செய்யப்பட்டிருந்த அந்த மெஷினை இரும்பினால் செய்தால் அதிக பலன் இருக்கும் எனவும், பேடன்ட் பதியலாம் எனவும் அவளுக்குத் தகவல் தெரியவருகிறது. சார்லஸ் எனும் நபருடன் இணைந்து அதை இரும்பில் தயாரிக்கிறாள். மார்க்ரெட் பேடன்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முன்பே சார்லஸ் அந்தத் தயாரிப்பு முறையைத் திருடி தன் பெயரில் பதிந்துகொள்கிறான். மார்கரெட் நீதிமன்றம் செல்கிறாள்.

நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!

‘பெண்களுக்கு மெக்கானிக்கல் அறிவு கிடையாது. அதை மார்கரெட் கண்டுபிடித்திருக்கவே முடியாது’ என்பது நீதிமன்றத்தில் சார்லஸின் வாதம். ஆம்... அன்று அப்படியான சிந்தனைதான் பலருக்கும் இருந்தது. ஆனாலும், உண்மை வென்றது. தன் பெயரில் பேடன்ட்டைப் பெற்றாள் மார்கரெட். அந்தக் கண்டுபிடிப்பை, அவள் ஈஸ்டர்ன் பேப்பர் பேக் நிறுவனத்தில் வேலை செய்யும்போது அவர்களின் நிறுவனப் பொருள்களைக் கொண்டு தயாரித்ததால், அவள் பெயரிலும், அந்த நிறுவனத்தின் பெயரிலும் அது பேடன்ட் பெற்றது. அமெரிக்க வரலாற்றில் முதல் பேடன்ட் பெற்ற பெண், மார்கரெட் நைட்.

இதுபோலவே, படிக்காத பாமரப் பெண்களின் தொழில் சார்ந்த கண்டுபிடிப்புகள் பலவும் களவுபோயின. அல்லது அவை எவர் பெயரிலும் பேடன்ட் ஆகாமல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.  பாமரர்களின் கண்டுபிடிப்புகள் தொழிலின் தேவை கருதியே நிகழ்கின்றன.

நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!

இந்நிலை மாற வேண்டும். குறிப்பாக, பெண்கள் வீட்டளவில்கூட ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருந்தால், அதை தன் பெயரில் பேடன்ட் செய்துகொள்ளலாம். மாறாக, அப்படியான கண்டுபிடிப்புகளையும் அவள் வீட்டு ஆண் தன் பெயரில் பதிந்து கொள்வதுதான் நடக்கிறது. அதேபோல, கெட்சப் முதல் பிரியாணி வரை பல பிரபல உணவு பிராண்டுகளின் பிரத்யேக ரெசிப்பிகள், அந்த வீட்டுப் பெண்களின் கண்டுபிடிப்பாகவே இருக்கும். ஆனால், அவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பத்து ஆண்கள் தங்கள் பெயரில் பேடன்ட் பெற்றுக் கொள்வதே பெரும்பாலும் நடக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் புது சமையல் ரெசிப்பிகள்வரை அனைத்தையும் அறிவுசார் சொத்துரிமையாகப் பதிவு செய்யும் வாய்ப்பு உண்டு. அவற்றில் இருக்க வேண்டியது, புதுமை மட்டுமே. இன்னொருவரிடம் பகிர்ந்தவை, ஊருக்கே தெரிந்த ரெசிப்பிகள் போன்றவை புதுமை என்னும் அந்தஸ்தை இழந்துவிடுகின்றன அல்லவா? எனவே, அவற்றுக்கு உரிமை கிடைக்காது. அரிய கண்டு பிடிப்புகளுக்கு ரகசியத்தன்மை அவசியம்.

பெண்களே, இனி ரெசிப்பி முதல் ஹவுஸ் கீப்பிங் சொல்யூஷன்வரை உங்களுக்கு அதிஅற்புதமாக, புத்தம்புதிதாக ஒரு ஃப்ரெஷ் ஐடியா தோன்றினால்... பேடன்ட் இட்!