Published:Updated:

இட்லிக்கு உண்டோ இணை?

இட்லிக்கு உண்டோ இணை?
பிரீமியம் ஸ்டோரி
இட்லிக்கு உண்டோ இணை?

டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஓவியங்கள்: வேலு

இட்லிக்கு உண்டோ இணை?

டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஓவியங்கள்: வேலு

Published:Updated:
இட்லிக்கு உண்டோ இணை?
பிரீமியம் ஸ்டோரி
இட்லிக்கு உண்டோ இணை?
இட்லிக்கு உண்டோ இணை?
இட்லிக்கு உண்டோ இணை?

`இட்லி’ என எழுதுவதா, `இட்டிலி’ என எழுதுவதா என்கிற யோசனை வந்தது. `இட்லி’ என உச்சரிக்கும்போதே குண்டாகவும் மிருதுவாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. `இட்டிலி’ என்பது சிறிது ஒல்லியாகவும் சிறிது கடினமாகவும் இருக்கும் பதார்த்தமாகத் தெரிகிறது. உலகிலேயே பாதுகாப்பான, சத்துமிகுந்த உணவாக உலக சுகாதார மையத்தால் பரிந்துரை செய்யப்படும் நம் ஊர் சிறப்பு உணவை `இட்லி’ என்றே எழுதுவது என முடிவு செய்துவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இட்லிக்கு உண்டோ இணை?

சிதம்பரத்தில் என் நண்பன் ஐயப்பனின் அம்மா, தெருமுனையில் இட்லி வியாபாரம் செய்து அவனைப் படிக்க வைத்தார். சிறிய அளவில் மூன்று பைசாவுக்கு ஓர் இட்லி என விற்பார். மிகவும் ருசியாக இருக்கும். கரைத்த தேங்காய்ச் சட்னி, கார மிளகாய், கடுகு எல்லாம் தாளித்து மணமாக இருக்கும்.

இட்லிக்கு உண்டோ இணை?

இலையில் வைத்துக் கொடுக்கும் இட்லியுடன்கூடிய சட்னியை மேலே சிந்திக்கொள்ளாமல் சாப்பிடுவதே ஒரு சவால்தான்!

தெருவோரக் கடைகளில் 10 இட்லிகூட சாப்பிட்டுவிடலாம். வீட்டுக்கும் பார்சல் உண்டு. அவசரத்துக்கு வாங்கிச் சாப்பிட, அரையணா இட்லி!

எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த ஐயப்பன், மேலே படிக்க முடியாமல் ஒரு ஹோட்டலில் சர்வர் ஆனது வேறு கதை. சிலர் வாழ்க்கையில் இட்லியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது.

இட்லிக்கு உண்டோ இணை?

அரிசியும் உளுந்தும் சேர்த்து அரைக்கப்படும் மாவு, புளிக்கவைக்கப்பட்டு வார்க்கப்படும். நீராவியில் வேகவைக்கப்படும். சூடான இட்லிக்கு, தனி மணம் உண்டு. எண்ணெய், நெய் போன்றவையின்றி, நீராவியில் செய்யப்படுவதால் ஆரோக்கியமானது. அதிலுள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், புரோபயோடிக்ஸ் ஆகியவை வீணாகாமல் அப்படியே உடலுக்குக் கிடைக்கின்றன.

இட்லிக்கு உண்டோ இணை?

சில வீடுகளிலும் ஹோட்டல்களிலும் தினமும் இட்லி செய்தாலும் அதற்கான வரவேற்பு தனிதான். `காலையில என்ன சாப்பிட்டீங்க?’ என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் பெரும்பாலும் `இட்லி’ என்ற விடையே வரும். விடையில் வடைக்கும் இடம் உண்டு. இட்லி - வடை காம்பினேஷன்தானே பிரசித்தம்!

இட்லிக்கு உண்டோ இணை?

இட்லி சுடுவது என்பதைவிட, நீராவியில் `அவிப்பது’ என்பது சரியாக இருக்கும். முன்பெல்லாம் வீடுகளில் இரும்பு வாணலிகளின் மீது மாவு வார்க்கப்பட்ட இட்லித் தட்டுகளை வைத்து, வாணலியை மூடி, சிறிது நேரம் கழித்து வெந்த ஆவி பறக்கும் இட்லிகளை எடுப்பார்கள். சிறிய ஈர்க்குச்சியால் குத்தி, வெந்துள்ளதா எனப் பார்ப்பார்கள். ஐந்து இட்லிகள்கொண்ட ஒரு தட்டுதான் ஒவ்வொருமுறையும்!
பெரிய ஹோட்டல்களிலும், திருமணம் போன்ற விசேஷங்களிலும் இப்போதெல்லாம் பெரிய அலுமினிய இட்லிப் பானைகளை உபயோகிக்கிறார்கள். நான்கைந்து தட்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஒரே நேரத்தில் 20, 25 இட்லிகளைச் செய்துவிடுகிறார்கள். மாடர்ன் ஐந்து நட்சத்திர ஹோட்டகளில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய பெரிய நீராவிப்பெட்டிகளில் இட்லி செய்கிறார்கள். எப்படிச் செய்தாலும் இட்லியின் தனித்தன்மை மட்டும் மாறாது.

இட்லிக்கு உண்டோ இணை?

மூன்று முதல் ஆறு வரை இட்லிக்குழிகள் உடைய தட்டுகள் (சின்னச் சின்ன ஓட்டைகளுடன்) மெல்லிய `மல்’ துணியால் மூடப்பட்டு, (சிறிது எண்ணெய் தடவி - மாவு ஒட்டாமல் இருக்க) அதன் மீது இட்லி மாவு ஊற்றப்படும் (பேச்சுவழக்கில் `இட்லி ஊத்திட்டு’ என்பது இதுதான்). வாணலியிலோ, பாத்திரத்திலோ இருக்கும் நீர், ஆவியாகி மேலே தட்டில் இருக்கும் இட்லி மாவை வேகவைத்துவிடும். இட்லித் தட்டுகளில் உள்ள குழிகளின் அளவுக்கு ஏற்ப, மாவைப் பொறுத்து குண்டாகவோ ஒல்லியாகவோ இட்லி ரெடியாகிவிடும்.

இட்லிக்கு உண்டோ இணை?

தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, கார சட்னி, சாம்பார் (இட்லியும் சாம்பாரும் புரதமும் கார்பும் நிறைந்த ஆரோக்கிய உணவு!), வடகறி, கொத்சு, மிளகாய்ப்பொடி (இட்லிப்பொடி) என பலவகையான சைடிஷ்கள்.

இட்லிக்கு உண்டோ இணை?

`வழிநடை இட்லி' என, பொடி-எண்ணெயில் புரட்டிய இட்லிகளை வெளியூர் செல்லும்போது சாப்பிட எடுத்துச் செல்வதுண்டு. திருமணம் ஆன மறுநாள் மணமக்களுடன் அனுப்பிவைக்கப்படும் `கட்டு சாத’க் கூடையின் முக்கியமான அயிட்டம் இந்தப் பொடி இட்லிகள்தாம்.

இட்லிக்கு உண்டோ இணை?

பள்ளிக்கூட நாள்களில் சென்னை கீதா கஃபேயில் இட்லி பார்சலுடன், தனிப் பாத்திரத்தில் சாம்பாரும், தனியாகக் கெட்டி சட்னியும் வாங்கி வந்தது நினைவிலிருக்கிறது.

இட்லிக்கு உண்டோ இணை?

சென்னையில் இப்போதெல்லாம், இட்லிக்கு என்றே தனிக்கடைகள் உள்ளன. `பொடி இட்லி’யுடன் தயிரும் சேர்த்து, `தயிர்-பொடி இட்லிகள்’கூட கிடைக்கின்றன.

இட்லிக்கு உண்டோ இணை?

14 இட்லிகள் (குட்டிக் குட்டி இட்லிகளை சாம்பாரில் ஊறவைத்து, நெய்யுடன் கொத்தமல்லி, கேரட் எல்லாம் சேர்த்துப் பரிமாறப்படும் இட்லிகள்) உடுப்பி ஹோட்டல்களில் கிடைக்கும் இது, சாம்பார் இட்லிகளின் மறு அவதாரம்!

இட்லிக்கு உண்டோ இணை?

நடிகைகள் பெயரில் (பெண் ஆர்வலர்கள் கொடி பிடிக்காதது ஆச்சர்யமே) இட்லிகள், செட்டிநாட்டு இட்லி, ரவா இட்லி, இட்லி ஃப்ரை (இட்லித் துண்டுகளை மசாலா சேர்த்து, எண்ணெயில் வதக்கி, கறிவேப்பிலையுடன் கொடுப்பது (கொத்து பரோட்டா போல `கொத்து இட்லி'), இட்லி உப்புமா (முதல் நாள் இட்லியை உதிர்த்து உப்புமாவாகச் செய்வது. அவசரத்துக்கும், வித்தியாசமான ருசிக்கும், இட்லியை வீணாக்காமல் உபயோகிக்கவும் செய்யப்படுவது) எல்லாமே இட்லிகளின் பல வடிவங்களே.

இட்லிக்கு உண்டோ இணை?

`மொழுக்மொழுக்'கென இல்லாமல், சிறிது `கொரகொர’ப்பாக இட்லிகள் சில ஹோட்டல்களில் கொடுப்பார்கள் (இட்லி ரவையில் செய்யப்படும் அவசர இட்லிகள் அவை), சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இட்லிக்கு உண்டோ இணை?

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு உகந்தது, ஸ்பெஷலாகச் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லிகள். மூங்கில் தட்டுகளில் மந்தாரையிலை வைத்து செய்யப்படும் இந்த வகை இட்லிகளில் சீரகம், மிளகு, இஞ்சியெல்லாம் சேர்த்து வித்தியாசமான வடிவங்களில் மிகுந்த சுவையுடன் படைக்கப்படும்! (வடஇந்திய `டோக்ளா’ போல் தோற்றமுடன், மந்தார இலை வாசனையுடன் வித்தியாசமாக இருக்கும்) வழக்கமான சட்னி-சாம்பாருடன், தக்காளி சட்னியும் காஞ்சிபுரம் இட்லிகளுடன் சேரும்!

இட்லிக்கு உண்டோ இணை?

ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என்பவையெல்லாம், காலத்துக்கேற்ப உருவான புதிய வகை இட்லிகள். இட்லிப் பானையில் செய்யப்படும், ரெகுலர் இட்லிகளுக்கு இணையாக இவை ஒருபோதும் இருக்காது என்பதே உண்மை.

இட்லிக்கு உண்டோ இணை?

பாலக்கட்டில், ராமசேரி என்ற இடத்தில் செய்யப்படும் இட்லிகள் தனி ரகம். மண்பானைகளில் நீரூற்றி மேலே மூங்கில் தட்டுகளில் இட்லி மாவை ஊற்றி வேகவைத்துச் செய்யப்படுவது. தட்டையாக  மூங்கில் கட்டங்களின் டிசைனோடு இட்லி ரெடி. காரச் சட்னி, சாம்பாருடன் யம்மியாக இருக்குமாம். கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் இதற்கு ரசிகர்கள் வருவதுண்டு!

இட்லிக்கு உண்டோ இணை?

புழுங்கல் அரிசி ஆவி உருண்டை, நமது கிராமப்புறங்களில் மிகவும் பிரசித்தம். அரிசியை ஊறவைத்து அரைத்த மாவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் எல்லாம் சேர்த்து வதக்கி, உருண்டைகளாகச் செய்து, இட்லிப்பானையில் வேகவைத்துச் செய்வதே இது.

இட்லிக்கு உண்டோ இணை?

`இட்லி செய்வது சுலபம். ஆனால் சாப்பிடுவது `போர்’ என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது. சூடாக, மணத்துடன் நல்ல சைடிஷ்ஷுடன் வாழையிலையில் பரிமாறப்படும் இட்லிக்கு என்றுமே மவுசு குறைவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism