கைப்பிடி அளவு நூடுல்ஸ்... கொஞ்சம் காய்கறிக் கலவை... இரண்டு, மூன்றுவித சாஸ்... அமெரிக்கன் சாப்ஸி செய்ய அவ்வளவே தேவை!

அரைமணி நேரத்தில் செய்து முடித்துவிடலாம். ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட நினைத்தால் நிறைய மன தைரியம் வேண்டும். ஒரு பிளேட் அமெரிக்கன் சாப்ஸிக்கு குறைந்தது 600 ரூபாய் வைக்க வேண்டும். ஒருவருக்கான அந்தச் செலவில் ஒரு குடும்பமே சாப்பிடலாம். கூடவே அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து பெருமையடித்துக் கொள்ளலாம்.

வெளிநாட்டு உணவுகளைச் சமைப்பதென்பது பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல ராக்கெட் சயின்ஸ் அல்ல. தேவையான பொருள்களைத் தயாராக இருந்தால் ரெஸ்டாரன்ட்டுகளில் கிடைப்பதைவிடவும் சுவையான ஃபாரின் உணவுகள் வீட்டிலும் சாத்தியம். அப்படிச் சில வெளிநாட்டு உணவுகளைவைத்து உங்களுக்கு விருந்து படைக்கிறார் மெனுராணி செல்லம். பெயர்கள் கொஞ்சம் மிரட்டினாலும், மெனுராணி அளிக்கும் செய்முறைகள் எளிமையானவையே.

இந்தப் பொருள்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்; ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆர்டர் செய்யலாம். ஆகவே, இனி நம் வீட்டுச் சமையலறையிலும் சர்வதேச மணம் பரவட்டும்!

படங்கள்: தே.அசோக்குமார்

ரவியோலி

தேவையானவை:
* மைதா - கால் கிலோ
* உப்பு - தேவையான அளவு
* ஆலிவ் எண்ணெய் (அ) ஏதேனும் சமையல் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பூரணம் செய்ய தேவையானவை:
* பசலைக்கீரை - ஒரு கட்டு
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* பீட்சா சீஸ் (அ) மொசரெல்லா சீஸ் - ஒரு கப்
* பனீர் - கால் கப்
* உப்பு - தேவையான அளவு
* வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
* எண்ணெய் / வெண்ணெய் - தேவையான அளவு

அலங்கரிக்க:
* தக்காளி சாஸ், சில்லி சாஸ் - தேவையான அளவு
* துருவிய சீஸ் - அரை கப்
* க்ரீம் - தேவையான அளவு

செய்முறை:

பசலைக்கீரையை கழுவி பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் (அ) வெண்ணெயைச் சேர்த்துச் சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் வேகவைத்த பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய பனீர், துருவிய சீஸ் சேர்த்து ஒருமுறை வதக்கி கீழே இறக்கி வைக்கவும்.

பின்னர், பிசைந்துவைத்த மாவை அப்பளம் போல தேய்த்து அதை சதுர வடிவங்களாக வெட்டிவைக்கவும். இதில் பூரணத்தைவைத்து மற்றொரு சதுர வடிவ மாவு துண்டால் மூடவும். இனி, சதுரத்தின் ஓரங்களை மைதா பேஸ்ட்டால் ஒட்டவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நிறைய தண்ணீர்விட்டுக் கொதித்தவுடன், ரெடி செய்த ரவியோலி துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். ஒரிஜினல் கலர் மாறியுடன் எடுத்துவிடவும். அதிக நேரம் வெந்தால் கரைந்துவிடும். வெந்ததும் தானாக அவை மேல் எழும்பி வரும். திருப்பிப்போட்டு வேக வைக்கத் தேவையில்லை.

ஒரு பேக்கிங் டிரேயில் எண்ணெய் (அ) வெண்ணெய் தடவி, அதன் மேல் தயாராக ரவியோலி துண்டுகளைப் பரப்பவும். அதன் மேல் தக்காளி சாஸ், சில்லி சாஸ் பரப்பி, துருவிய சீஸையும் க்ரீமையும் தூவவும்.

180 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து வெளியே எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தக்காளி சாஸ் செய்ய தேவையானவை:
* தக்காளி - ஒரு கிலோ
* ஜாதிப்பூ, ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
* ஆரிகானோ இலை - ஒரு டீஸ்பூன்
* வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* கேரட் - ஒன்று (துருவவும்)
* நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* வெண்ணெய் - தேவையான அளவு
* சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
* தக்காளி சாஸ், ஃப்ரெஷ் க்ரீம் - தலா ஒரு கப்

செய்முறை:

தக்காளியைக் கழுவி வேகவைத்து நன்கு மசித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெண்ணெய்விட்டு உருக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய கேரட்டையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சாஸ், ஜாதிக்காய் பொடி, ஜாதிப்பூ, மசித்த தக்காளி, உப்பு, சர்க்கரை, ஆரிகானோ இலை, ஃப்ரெஷ் க்ரீம் முதலியவற்றைச் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கி, குளிர்ந்த பிறகு ஒரு பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

*மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியாவில் மைதா உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

கானலோனி ஃப்ளாரன்டைன்

பான் கேக் தயாரிக்க தேவையானவை:
* மைதா - 2 கப்
* காய்ச்சிய பால் - அரை கப்
* எண்ணெய் - கால் கப்
* உப்பு - தேவையான அளவு
* மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
* தண்ணீர் - 2 முதல் 3 கப் வரை

செய்முறை:

தேவையானவற்றுக்குக் கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கலந்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொண்டால் பான் கேக் ரெடி.

பாலக் ஃபில்லிங் தயாரிக்க தேவையானவை:
* பாலக்கீரை - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
* நறுக்கிய காளான் - ஒரு கப்
* ஆரிகானோ - கால் கப் (பொடியாக நறுக்கியது)
* பனீர் - 100 கிராம் (துருவியது)
* சீஸ் - அரை கப்
* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் (அ) காரத்துக்கேற்ப
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - கால் கப் (அ) வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

எண்ணெய் (அ) வெண்ணெய்விட்டு நன்கு உருகிய பிறகு, வெங்காயம், காளான், பாலக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் துருவிய பனீர், உப்பு, மிளகுத்தூள், பூண்டு, துருவிய சீஸ், ஆரிகானோ சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே சிறிது நேரம் கலக்கி ஆறவிடவும். ஃபில்லிங் ரெடி.

வொயிட் சாஸ் தயாரிக்க தேவையானவை:
* வெண்ணெய் - 50 கிராம்
* மைதா - ஒரு கப்
* பால் - 2 கப்
* மிளகுத்தூள் - (சுமார் 2 டீஸ்பூன்)
* உப்பு - தேவையான அளவு
* சீஸ் - அரை கப்

செய்முறை:

ஒரு கனமான வாணலியில் தீயை மிதமாக்கி வெண்ணெயைச் சேர்க்கவும். முழுதாக அது உருகுவதற்கு முன்பே, மைதாவைச் சிறிது சிறிதாகத் தூவி வறுக்கவும். இதில், பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டிப்படாமல் கிளறவும். கலவைத் தளர இருக்க வேண்டும். கெட்டியாகிவிட்டால் சிறிது நீரைச்சேர்த்து தளர்வாக்கவும். இத்துடன் உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸையும் சேர்த்து கிளறி இறக்கினால் வொயிட் சாஸ் ரெடி.

பேக்கிங் செய்ய தேவையானவை:
* தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
* சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
* துருவிய சீஸ் - அரை கப்

செய்முறை:

ஒரு தட்டில் சிறிது எண்ணெய் தடவி, பான் கேக்கை வைக்கவும். அதன் நடுவில் தயாராகவைத்துள்ள பாலக் ஃபில்லிங் பூரணத்தைவைத்து தக்காளி சாஸ், சில்லி சாஸ் சிறிதளவு ஊற்றி, சுருட்டி மடிக்கவும். ஓர் அலுமினிய பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சுருட்டி மடித்த பான் கேக்குகளை வரிசையாக அடுக்கவும்.

அதன்மேல், தயாரித்து வைத்துள்ள வொயிட் சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸைப் பரப்பவும். பிறகு, 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும். அவனை ஆஃப் செய்தபின் துருவிய சீஸை கடைசியில் தூவி, அந்தச் சூட்டிலேயே ஓவனில் வைக்கவும். சுடச்சுட கானலோனி ப்ளாரன்டைனைப் பரிமாறவும். இது இத்தாலியில் பிரபலமான டிபன்.

*அமெரிக்காவில் மைதாவுக்கு மாற்றாக பேஸ்ட்ரி மாவு பயன்படுத்தப்படுகிறது.

வெஜிடபிள் பணப்பை

மேல் மாவு தயாரிக்க தேவையானவை:
* மைதா - 2 கப்
* உப்பு - தேவையான அளவு
* சிறிதளவு சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* முட்டை - ஒன்று (விருப்பப்பட்டால்)

செய்முறை:

மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாக பிசைந்து காற்றுப்புகாத ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

ஃபில்லிங் செய்ய தேவையானவை:
* துருவிய கேரட் - கால் கப்
* மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
* சர்க்கரை - சிறிதளவு
* கொரகொரப்பாக பொடித்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - சிறிதளவு
* பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
* உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
* சோயாசாஸ் - சிறிதளவு
* கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

ஃபில்லிங்குக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துச் சிறு சிறு உருண்டைகளாக்கவும். மேல் மாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை பிசைந்து சதுரங்களாகத் திரட்டிக்கொள்ளவும்.

அதன் நடுவில் காய்கறி ஃபில்லிங்கை வைத்து சுருக்குப்பை வடிவில் (பார்க்க படம்) மடித்து சிறிது மைதா பேஸ்டால் ஒட்டவும். எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, சோயா சாஸ் மற்றும் வேர்க்கடலையுடன் சேர்த்து பரிமாறவும்.

*இந்தியாவில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான பசையாகப் பயன்படுத்தப்படுவதும் மைதாவே.

கேடோ கேடோ

தேவையானவை:
* காய்ந்த மிளகாய் - 6
* பூண்டு - 10 பல்
* துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* புளி - எலுமிச்சை அளவு (கரைக்கவும்)
* சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
* வேர்க்கடலை - கால் கிலோ
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, உப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்து வதக்கவும். பின் புளிக்கரைசல், சோயா சாஸ், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும்.

தேவையானவை:
* முளைகட்டிய பயறு - ஒரு கப்
* வெந்த பீன்ஸ் - ஒரு கப்
* வெந்த உருளை - ஒரு கப்
* முட்டைகோஸ் - ஒரு கப்
* உப்பு - தேவையான அளவு
* மிளகுத்தூள் - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.

பரிமாறும் முறை:
இந்த சாலடைச் சூடான சாதத்தில் பரிமாறுவார்கள். வெந்த காய்கறிகள், உருளைக்கிழங்கைப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு வேர்க்கடலைச் சேர்த்து பரிமாறவும்.

*தென்னிந்தியாவில் கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்தே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்கன் சாப்ஸி

தேவையானவை:
* நூடுல்ஸ் - 2 பாக்கெட்
* பெரிய வெங்காயம் - ஒன்று
* குடமிளகாய் - 2 (பெரியது)
* வெங்காயத்தாள் - அரை கட்டு
* முட்டைகோஸ் - 100 கிராம்
* கேரட் - 2
* பீன்ஸ் - 100 கிராம்
* எண்ணெய் - கால் கப்
* பச்சை மிளகாய் - 6 - 8
* இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* சோயா சாஸ் - கால் கப்
* லீக்ஸ், செலரி - ஒரு கைப்பிடி

செய்முறை:

வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் நூடுல்ஸைப் போடவும். நன்கு வெந்ததும், தண்ணீரை வடித்துக் குளிர்ந்த நீரில் நன்கு அலசி ஒரு தட்டில் பரப்பவும். பிறகு சிறிது எண்ணெய்விட்டு ஃபோர்கால் கிளறிவிட்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

காய்கறிகள் எல்லாவற்றையும் மெல்லிய நீளமாக நறுக்கவும். அடுப்பில் எண்ணெயை காயவிட்டு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது போட்டு, பச்சை வாசனை போக வதக்கவும்.

நிறம் மாற தேவையில்லை. இத்துடன் நறுக்கிய காய்கறிகள், உப்பு, சோயா சாஸ் கலந்து மூடி வைக்கவும். தீயை மிதமாக்கவும். தண்ணீர் தெளிக்க வேண்டாம். சோயா சாஸ் சேர்ப்பதால் காய்கள் எளிதில் வெந்துவிடும். செளமீன் ரெடி.

வறுத்த நூடுல்ஸ் செய்ய தேவையானவை:
* அரைவேக்காட்டில் வேகவைத்த நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
* எண்ணெய் - 2 கப்

செய்முறை:

நூடுல்ஸை தண்ணீரில் அரை வேக்காடு அளவு வேகவைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வறுத்த நூடுல்ஸ் ரெடி.

புளிப்பு - இனிப்பு கிரேவி செய்ய தேவையானவை:
* கேரட், வெள்ளரிக்காய்,
* குடமிளகாய், வெங்காயம் - தலா ஒரு கப்
* உப்பு - தேவையான அளவு
* வெங்காயத்தாள் - ஒரு கப்
* வெள்ளை வினிகர், சர்க்கரை - தலா அரை கப்
* தக்காளி சாஸ் - ஒரு கப்
* சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

காய்கறிகளைக் கழுவி நறுக்கி சிறிதளவு தண்ணீர், உப்பு போட்டு வேகவைக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும், சோள மாவைத் தண்ணீரில்கரைத்து கொதிக்கும் க்ரேவியில் சேர்க்கவும். நன்றாகக் கெட்டியாகும். பளபளவென்று கலர் மாறும்போது கீழே இறக்கி வைக்கவும்.

மொறுமொறு வெஜிடபிள் செய்ய:

தேவையானவை:
* சோள மாவு, மைதா மாவு - தலா அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* பால் - அரை கப்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

பொரிக்க தேவையானவை:
* கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், குடமிளகாய் - தலா அரை கப் (நறுக்கியது)
* இஞ்சி - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6 - 8
* உப்பு - தேவையான அளவு
* சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மேற்கண்ட எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசறிவைக்கவும். இனி, தயாரித்துவைத்துள்ள பஜ்ஜி மாவில் கலவையை முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சௌமீன் நூடுல்ஸைத் தட்டில் பரத்தவும். அதன்மீது ஸ்வீட் அண்டு புளிப்பு சாஸை ஊற்றவும். பிறகு, மொறுமொறு வெஜிடபிளைப் போட்டு, வறுத்தெடுத்த நூடுல்ஸைத் தூவவும் கடைசியில், தக்காளி சாஸ், சில்லி சாஸ், கோஸ் துருவலைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

*சீனா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் நூடுல்ஸ் முக்கிய உணவாக உள்ளது.

டோம் யம் சூப்

ஸ்டெப் 1 தேவையானவை:
* கலங்கல் இஞ்சி - 10 கிராம்
* பொடியாக நறுக்கிய கலங்கல் இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6 - 8
* தண்ணீர் - 6 கப்

செய்முறை:

இவை அனைத்தையும் 6 கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும்.

ஸ்டெப் 2 தேவையானவை:
* கேரட் (நறுக்கியது) - 2 கப்
* துருவிய கேரட் - அரை கப்
* துருவிய டர்னிப் - கால் கப்
* பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப்
* பொடியாக நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
* லீக்ஸ், செலரி - சிறிதளவு
* தண்ணீர் - 6 கப்

செய்முறை:

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து வேகவிட்டு வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3 தேவையானவை:
* மிளகுத்தூள் - சிறிது
* எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
* அஜினமோட்டோ - ஒரு பிஞ்ச்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வடிகட்டிவைத்துள்ள இஞ்சி - பச்சைமிளகாய் ஜூஸ், காய்கறி ஸ்டாக் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, அஜினமோட்டோ சேர்த்து சுடச்சுடப் பரிமாறவும்.

*மருத்துவ மூலிகையான இஞ்சி இந்திய, சீன உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

இன்ஸிலாட்டா சிசிலியானா

தேவையானவை:
* குடமிளகாய் - ஒரு கப்
* வெங்காயம் - ஒரு கப்
* தக்காளி - ஒரு கப்
* புரொக்கோலி - ஒரு கப்
* உப்பு - சிறிதளவு
* மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை:

காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புரொக்கோலியை கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும். பிறகு காய்கறிகளுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும்.

பெஸ்தோ சாஸ் செய்ய தேவையானவை:
* பேசில் இலைகள் - 2 கப் (அரைக்கவும்)
* வேர்க்கடலை (அ) அக்ரூட் - கால் கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - கால் கப்
* பூண்டு - 2 டேபிள்ஸ்பூன்
* எலுமிச்சை - ஒன்று (சாறு எடுக்கவும்)
* மிளகுத்தூள் - சிறிது
* கொத்தமல்லித்தழை - சிறிது

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த பேசில் இலை பேஸ்ட்டை கலக்கவும். பிறகு, வேர்க்கடலை (அ) அக்ரூட், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயாராகவைத்துள்ள காய்கறி கலவையுடன், பெஸ்தோ சாஸ், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சில்லென்று பரிமாறவும்.

*பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் விளைவிக்கப்படும் குடமிளகாய் உலகெங்கும் உபயோகமாகிறது.

செஸ்வான் ரைஸ்

தேவையானவை:
* பாசுமதி ரைஸ் - 2 கப் (சுமார் 6-8 பேருக்கு)
* கேரட், பீன்ஸ், குடமிளகாய் - தலா அரை கப்
* முட்டைகோஸ், வெங்காயம் - தலா ஒரு கப்
* லீக்ஸ், செலரி - ஒரு கைப்பிடி
* காய்ந்த மிளகாய் - 6-8 (விழுதாக அரைக்கவும்)
* இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல் விழுது (அரைத்த பேஸ்ட்) - 2 டேபிள்ஸ்பூன்
* வெள்ளை வினிகர், சோயா சாஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன்
* அஜினமோட்டோ - அரை டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* வெங்காயத்தாள் - இலை + வெங்காயம் - ஒரு கப்
* எண்ணெய் - கால் கப்
* வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

செய்முறை:

அடுப்பில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறிகள் வதக்கி உப்பு, சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி - பூண்டு பேஸ்ட், காய்ந்த மிளகாய் பேஸ்ட், வினிகர் சேர்த்து வதக்கி மெல்லிய தீயில் மூடிபோட்டு வேகவிடவும். தண்ணீர் தெளிக்க வேண்டாம். நன்றாக வெந்தவுடன் கீழே இறக்கிவைக்கவும். மேலே லீக்ஸ், செலரி தூவவும்.

சாதம் செய்யும் முறை:
அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும். வெண்ணெயை கனமான கடாயில் சேர்த்து அதில் ஊறிய அரிசியைச் சேர்த்து வறுக்கவும். இத்துடன் லீக்ஸ், செலரியை சேர்த்து வறுக்கவும்.

பிறகு, அரிசியைவிட இரு மடங்கு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சாதம் வெந்ததும் வாய் அகன்ற தட்டில் பரத்தவும். இத்துடன் வேகவைத்த காய்கறிகளையும், அஜினமோட்டோவையும் சேர்த்து மாறி மாறிக் கலக்கவும். காய்கறிகளும் அரிசிக் கலவையையும் குழைந்துவிடக் கூடாது.

கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் சிறிதளவு விட்டு காய்ந்ததும், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இத்துடன் சாதம் கலவை, சிறிது அஜினமோட்டோ, லீக்ஸ், செலரி தூவி கிளறி இறக்கிப் பரிமாறவும். பெப்பர் மஷ்ரூம் (அ) மஞ்சூரியன் கிரேவியுடன் பரிமாறவும்.

*‘பாசுமதி’ என்ற சொல்லுக்கு `நறுமணம் வாய்ந்த’, `மென்மையான அரிசி’ என்று பொருள்.

மான்சோவ் சூப்

தேவையானவை:
* கேரட் - கால் கப்
* குடமிளகாய் - ஒரு கப்
* பேபிகார்ன் - கால் கப்
* முட்டைகோஸ் - 2 கப்
* பீன்ஸ் - கால் கப்
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே இருக்கும் பொருள்களைச் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.

கிண்ணத்தில் கலக்க தேவையானவை:
* தண்ணீர் - 2 கப்
* சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* வினிகர் - கால் கப்

செய்முறை:

கிண்ணத்தில் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்துவைக்கவும்.

விழுதாக அரைக்க தேவையானவை:
* சிவப்பு மிளகாய், பூண்டு - தலா 10
* சோயா சாஸ், வினிகர் - தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை:

விழுதாக அரைக்கக்கொடுத்துள்ளவற்றை அரைத்துவைக்கவும். இனி, வதக்கிய காய்கறிகளுடன் கிண்ணத்தில் கலந்தவை, மிளகாய் பேஸ் கலந்து கொதிக்க வைத்து சுடச்சுடப் பரிமாறவும்.

*கேரட்டுக்கு `செம்முள்ளங்கி’ என்றொரு பெயர் உண்டு.

பாஸ்தா பிரைமவேரா

தேவையானவை:
* பாஸ்தா - 100 கிராம்
* ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* புரொக்கோலி - அரை கப்
* பொடியாக நறுக்கிய மூவர்ண குடமிளகாய் - தலா அரை கப்
* கேரட் - ஒரு கப் (நீளமாகப் பொடியாக நறுக்கியது)
* பேசில் இலைகள் - ஒரு கைப்பிடி
* பொடியாக நறுக்கிய பூண்டு - கால் கப் மெல்லியதாக நீளமாக
* நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
* ஆரிகானோ - சிறிதளவு
* துருவிய சீஸ் - அரை கப்
* மிளகுத்தூள் - சிறிது
* உப்பு - தேவையான அளவு
* பால் - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவிட்டு பாஸ்தாவைப் போட்டுச் சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெந்ததும் நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி, ஒரு தட்டில் பரத்தி எண்ணெய் தடவி வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு, பூண்டை வதக்கவும். பூண்டு பொன்னிறமானவுடன் வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் பாஸ்தா, உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். கடைசியில், பால், துருவிய சீஸ் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து மூடிப் போட்டு சிறிது நேரம் வைத்து பிறகு சுடச்சுடப் பரிமாறவும்.

*கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே பாஸ்தா பயன்பாடு பற்றிய குறிப்புகள் உள்ளன.

எம்பனாடாஸ்

பூரணம் செய்ய தேவையானவை:
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
* வேகவைத்த ராஜ்மா பீன்ஸ் - ஒரு கப்
* சர்க்கரை வள்ளிக்கிழங்கு (அ) உருளைக்கிழங்கு மசித்தது - 2 கப்
* மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
* உப்பு - தேவையான அளவு
* எள்ளு - அலங்கரிக்க
* ஆரிகானோ - சிறிதளவு
* சில்லி சாஸ் - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் கடாயைவைத்து எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வெந்த ராஜ்மா பீன்ஸ், உப்பு, மிளகாய்த்தூள், சில்லி சாஸ், கொத்தமல்லித்தழை, ஆரிகானோ சேர்த்துக் கிளறி கரண்டியால் நன்கு மசித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 1

* மைதா - 300 கிராம்
* உப்பு - தேவையான அளவு
* சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் மேலே சொல்லி யிருப்பவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

எம்பனாடாஸ் செய்யும் முறை:
பிசைந்துவைத்த மாவை சிறுசிறு வட்டங் களாகத் திரட்டி அதன் நடுவே தயார் செய்துள்ள பூரணத்தைவைத்து அரை வட்ட நிலா வடிவில் மூடவும். ஓரங்களைச் சிறிது மைதா பேஸ்ட் கொண்டும் மூடலாம். எள்ளைத் தூவி விடவும். எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஸ்டெப் 2 பேக்கிங் முறையில் செய்ய:
* மைதா - 300 கிராம்
* கெட்டி வெண்ணெய் - 150 கிராம்
* உப்பு, ஐஸ் வாட்டர் - சிறிதளவு

செய்முறை:

மைதாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி உப்பு சேர்க்கவும். வெண்ணெயை விரல் நுனியால் சிறிது சிறிதாக மைதாவில் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு வட்டங்களாகத் திரட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி சிறிது தண்ணீர் அல்லது பால் கொண்டு ஓரங்களை ஒட்டி, 180 டிகிரி உஷ்ணத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்தும் பரிமாறலாம்.

*பூண்டுகளின் ஓராண்டுத் தாவரம், ஈராண்டுத் தாவரம், பல்லாண்டுத் தாவரம் ஆகிய வகைகள் இருக்கின்றன.

மெக்ஸிகோ என்சிலாடாஸ்

டார்டியா (Tortillas) செய்ய:
முதலில் டார்டியா தயார் செய்யவும். அதற்கு, மக்காச்சோள மாவுடன் சோள மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு சப்பாத்திகளாக இட்டு, தவாவில் வேகவைத்து எடுக்கவும். ரெடிமேட் டார்டியாக்களும் கிடைக்கின்றன.

ஃபில்லிங் செய்ய தேவையான பொருள்கள்:
* வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* வெங்காயத்தாள் - ஒரு பிடி
* நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்
* நறுக்கி வேகவைத்த பாலக் - இரண்டரை ஸ்பூன்
* துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன்
* செடார் சீஸ் - அரை கப்
* மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* ஆரிகானோ - சிறிது
* உதிர்த்த பேபிகார்ன், பொடியாக நறுக்கிய
*சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய் கலவை - ஒரு கப்

ஃபில்லிங் செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்து வெண்ணெயை உருக்கி நறுக்கிய பூண்டு, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, பாலக், உப்பு, மிளகுத்தூள், துருவிய பனீர், செடார் சீஸ் சேர்த்து வதக்கவும். பின் ஆரிகானோ சேர்க்கவும்.

என்சிலாடாஸ் சாஸ் செய்யத் தேவையான பொருள்கள்:
* எண்ணெய் - கால் கப்
* வெங்காயம், பூண்டு (பொடியாக நறுக்கியது) - அரை கப்
* தக்காளி விழுது - அரை கப்
* பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து
* அரைத்த விழுது - 2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய பூண்டு - வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் பூண்டு - காய்ந்த மிளகாய் விழுது, தக்காளி விழுது, உப்பு சேர்க்கவும். சாஸ் நன்றாகக் கொதித்த பின் இறக்கிவைக்கவும்.

ஃபில்லிங்குச் செய்துவைத்துள்ள பாலக் கலவையுடன், உதிர்த்த பேபிகார்ன், பொடியாக நறுக்கிய சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.

கடைசி ஸ்டெப்:
டார்டியாக்களை பரத்தி, தயார்செய்து வைத்துள்ள பாலக் - காய்கறி ஃபில் லிங்கை உள்ளே வைத்துச் சுருட்டி, ஒரு டிரேயில் வைக்கவும் (சுருட்டிய பக்கம் அடிப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும்). தயாராகவைத்துள்ள என்சிலாடாஸ் சாஸை மேலே பரத்தவும். துருவிய சீஸை மேலே நிறைய தூவி அரை மணி நேரம் 180 டிகிரி வெப்பத்தில் பேக் செய்யவும். சுடச்சுடப் பரிமாறவும். இதை இரவு நேர உணவாகவும் விருந்துகளிலும் பரிமாறலாம்.

*35 டிகிரி செல்சியஸுக்குக் கூடுதலான வெப்பநிலையில் வெண்ணெய் உருகி நெய்யாகிவிடும்.