``சிறு வயதிலிருந்தே அம்மாவுடன் சமையலறையில் அதிக நேரம் செலவிடுவது என் வழக்கம். திருமணத்துக்குப் பிறகு எனது சமையல் ஆர்வம் பன்மடங்கானது. நான் செய்யும் செட்டிநாட்டு உணவு வகைகள் என் கணவருக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்கிற அபிராமி, பிறந்ததும் வளர்ந்ததும் காரைக்குடியில். பொறியியல் பட்டதாரியான இவர், `வெஜ் 2 நான்வெஜ்’ (veg2nonveg) என்கிற வலைப்பதிவு ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

``ரெசிப்பி செய்வதைவிட அதை வீடியோ, போட்டோ எடுப்பதற்குத் தான் அதிக நேரம் செலவிடுவேன். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் ஊக்கம்கொடுத்து என்னுடைய திறமையை வெளிக்கொண்டுவரச் செய்த கணவருக்கும் குடும்பத்தினரும் நன்றி’’ என்கிற அபிராமி, இங்கே அமெரிக்கன் - இந்தியன் ஃப்யூஷன் வீடியோ ரெசிப்பிகளை வழங்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism