உப்புமா என்றாலே தெறித்து ஓடுகிறவரா நீங்கள்? உப்புமாவை விட்டால் கிச்சடி, கேசரி, லட்டு, பணியாரம்... இவற்றைத் தவிர ரவையைப் பயன்படுத்தி வேறென்ன செய்துவிட முடியும்? இதுதானே உங்கள் கேள்வி? என்ன, இப்படிக் கேட்டுவிட்டீர்கள்! சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் மீனா சுதிர் அளித்திருக்கும் ரவைப்பட்டியலைப் பாருங்கள்... ரவா ஃபிங்கர்ஸ், சீஸி ஸ்பைஸி ரவா மஃபின்ஸ், ரவா மேத்தி கேரட் ஃபிரிட்டர்ஸ், ரவை உன்னி அப்பம், ரவா சீஸ் கட்லெட், ரவா ரொட்டி, ரவா சீடை, ரவா மேங்கோ பால்ஸ்... இவை அத்தனையும் புதுரகம்... சுவைரகம். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் இவை பிடித்தமானவையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவை இருக்கட்டும்... உப்புமா பிரியர்களுக்காகவும் இருக்கவே இருக்கிறது ஒரு ரெசிப்பி. அதுதான் இன்ஸ்டன்ட் ரவா உப்புமா மிக்ஸ்... எந்த நேரத்திலும் எந்த அவசரத்திலும் கைகொடுக்கும் உணவு இதுதானே? அதை இன்னும் சுவையாகவும் விரைவாகவும் செய்ய இந்த ரெசிப்பி உதவும்.

உப்புமா விரும்பாதவர்கள் மற்ற 8 பண்டங்களையும் ருசிக்கலாம். இனி ரவையைக் குறை சொல்ல வேண்டாம்!

படங்கள்: ப.சரவணகுமார்

இன்ஸ்டன்ட் ரவா உப்புமா மிக்ஸ்

தேவையானவை:
* பாம்பே ரவை - 3 கப்
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்
* முந்திரிப்பருப்பு - 10 (நறுக்கவும்)
* சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 6 (காரம் அதிகம் வேண்டுமெனில் எட்டு அல்லது ஒன்பது மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
* இஞ்சி - சிறிய விரல்நீளத் துண்டு (தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
* கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
* எண்ணெய் அல்லது நெய் - 4 டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் அல்லது நெய்யைச் சூடாக்கி (நெய் பயன்படுத்துவது சிறந்தது), கடுகைச் சேர்த்து வெடிக்கவிடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில்வைத்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், முந்திரிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக மாற ஆரம்பிக்கும் வரை கவனமாக வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அனைத்து பருப்பு வகைகளும் முழுவதுமாக பொன்னிறம் அடையும் வரை வதக்கவும். பிறகு அவற்றை ஒரு தட்டுக்கு மாற்றவும்.

அதே கடாயில் ரவையைப் போட்டு மிதமான தீயில் 5 - 6 நிமிடங்களுக்கு கவனமாக வறுக்கவும். ரவையின் பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைக்கவும். பின்னர் கடாயில் இருக்கும் வறுத்த ரவையுடன் வறுத்த பருப்புக் கலவை மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஆற வைக்கவும். கலவை முற்றிலும் குளிர்ந்ததும் அதைக் காற்றுப்புகாத டப்பா அல்லது ஜிப்லாக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். இது மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்.

*ரவையின் ஆங்கிலப்பெயர் செமொலினா(Semolina), அதன் அர்த்தம் தவிடு!

ரவா மேத்தி கேரட் ஃபிரிட்டர்ஸ்

தேவையானவை:
* கோதுமை ரவை - 2 கப்
* கடலை மாவு - அரை கப்
* பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - அரை கப்
* துருவிய கேரட் - அரை கப்
* பச்சைப் பட்டாணி - அரை கப்
* நசுக்கிய பூண்டு - ஒன்றரை டீஸ்பூன்
* ஓமம் - ஒரு டீஸ்பூன்
* எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகாய்த்தூள் - தேவைக்கேற்பப
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
* எண்ணெய் (மாவில் சேர்க்க) - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கோதுமை ரவையையும் கடலை மாவையும் நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையைச் சேர்க்கவும். பச்சைப் பட்டாணியைக் கொரகொரப்பாக அரைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு நசுக்கிய பூண்டு, ஓமம், எள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சூடாக்கிய ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாக நன்கு பிசைந்து வைக்கவும். இதை கோவைக்காய் வடிவத்தில் சிறுசிறு உருளைகளாக உருட்டிக்கொள்ளவும்.

ஒரு பானில் (pan) எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் செய்துவைத்த உருளைகளைப் போட்டு பிரவுன் நிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். சூடான டீ அல்லது காபியுடன் பரிமாறவும்.

*வெந்தயக்கீரையின் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ரவா சீஸ் கட்லெட்

தேவையானவை:
* ரவை - ஒரு கப்
* தண்ணீர் - 2 கப்
* சீஸ் – 2 க்யூப்கள் (துருவவும்)
* மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ஓர் அடி ஆழமான பானில் (pan) தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில் எண்ணெய், ரவை, துருவிய சீஸ் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் நன்கு கலந்து கொதிக்கவிடவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும், ரவையைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். ரவை நன்கு ஒன்றுசேர்ந்து மாவு போல ஆனதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி கலவையை ஒரு நிமிடம் ஆறவிடவும். பின்னர் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, கைபொறுக்கும் சூட்டில் கலவையில் பாதியை எடுத்து பரப்பிக்கொள்ளவும்.

அதன்மேல் துருவிய சீஸைப் பரப்பி, மீதமிருக்கும் கலவையை அதன்மேல் சரியாகப் பரப்பி, அதன் ஓரங்களை கைகளாலேயே மென்மையாக அழுத்தி மூடவும். பின்னர் இதை விரும்பிய வடிவங்களில் வெட்டிக்கொள்ளவும். அவை ஒவ்வொன்றின் ஓரங்களையும் கைகளால் மென்மையாக அழுத்தி மூடவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, வெட்டி வைத்துள்ளவற்றை பொன்னிற மாகப் பொரித்தெடுக்கவும். பின்னர் அதன்மீது கொத்தமல்லித்தழை தூவி, சாஸ் அல்லது சட்னி யுடன் சூடாகப் பரிமாறவும்.

*சிறந்த பாலாடைக்கட்டி விற்பன்னர்கள் `சீஸ் மோங்கர்’ என அழைக்கப்படுகின்றனர்.

ரவா ஃபிங்கர்ஸ்

தேவையானவை:
* ரவை - ஒரு கப்
* வேகவைத்த உருளைக்கிழங்கு (பெரியது) - ஒன்று
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியைச் சூடாக்கி ரவையை 3 முதல் 4 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து, ரவை நன்கு வெந்து மென்மையான கலவையாக மாறும்வரை கிளறி பின்னர் இறக்கி சற்று ஆறவைக்கவும்.

ஒரு பவுலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துச்சேர்க்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்க்கவும். பிறகு வேகவைத்த ரவையையும் சேர்த்து எல்லா வற்றையும் நன்கு கலந்து மாவாகப் பிசையவும்.

கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு மாவை விரல் போன்ற வடிவங்களாகச் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மிதமான தீயில் அவற்றைப் பொரித் தெடுக்கவும்

*வடஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளில் சுஜி (Sujee) என்றும் அழைக்கப்படுவது ரவைதான்.

ரவை உன்னி அப்பம்

தேவையானவை:
* ரவை - ஒரு கப்
* கோதுமை மாவு - ஒரு கப்
* வெல்லப்பாகு - அரை கப் (அல்லது விருப்பத்துக்கேற்ப)
* சிறிய வாழைப்பழம் - ஒன்று (நன்கு மசிக்கவும்)
* எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
* சுக்குப் பொடி - 2 சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
* உப்பு - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ரவையை ஒரு மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பணியாரச் சட்டியில் எண்ணெய்விட்டு சூடாக்கி மாவை அப்பங்களாகப் பொரித்து, எண்ணெயை வடிக்கவும்.

காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். இதை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும்போது ஒரு நிமிடம் மைக்ரோ வேவ் அவனில் வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

*எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

சீஸி ஸ்பைஸி ரவா மஃபின்ஸ்

தேவையானவை:
* ரவை - ஒரு கப்
* தயிர் - முக்கால் கப்
* தண்ணீர் - அரை கப்
* பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
* காய்கறிக் கலவை (பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், வெங்காயத்தாள், குடமிளகாய்) - அரை கப்
* துருவிய செடார் சீஸ் - அரை கப்
* உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு மஃபின் பான் (muffin pan) மற்றும் மஃபின் கப்களை எடுத்துக்கொள்ளவும். அவனை (oven) 180 டிகிரிக்கு பிரீஹீட் செய்யவும். ரவையுடன் தயிர், தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் உப்பு, துருவிய சீஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, பேக்கிங் சோடா சேர்த்து ஒரு தட்டைக் கரண்டியால் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை மப்பின் கப்களில் ஊற்றவும்.

மேலே துருவிய சீஸால் அலங்கரிக்கவும். இந்த கப்களை மஃபின் பானில் (pan) வைத்து, அவனில் 180 டிகிரி செல்ஷியஸில் 20 - 22 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் கார்ன் ரவா இப்போது பிரபலமாகி வருகிறது.

ரவா ரொட்டி

தேவையானவை:
* ரவை - 2/3 கப்
* நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய
* கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
* நடுத்தர அளவிலான கேரட் - ஒன்று (பொடியாகத் துருவவும்)
* துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்

* தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன்
* புளித்த தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
* நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பவுலில் ரவை, தயிர், உப்பு, 2/3 கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். 15 முதல் 30 நிமிடங்கள் ஊறவிடவும். இதனுடன் துருவிய கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கெட்டியான, அதேநேரம் ஊற்றக்கூடிய பதத்தில் மாவாகக் கலந்துகொள்ளவும். ஒரு நான் ஸ்டிக் பானில் (pan) சிறிதளவு எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத் துண்டால் நன்கு தேய்த்துக்கொள்ளவும்.

நான் ஸ்டிக் பானை சூடாக்கி, அடுப்பின் தீயைக் குறைத்து கரண்டியால் மாவை எடுத்து பானில் ஊற்றி, வட்ட வடிவத்தில் மெலிதாகத் தேய்த்துவிடவும். இதை மூடியால் மூடி மிதமான தீயில் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு வேகவிடவும். பின்னர் மூடியை எடுத்துவிட்டு, ரொட்டியின் மேல் மற்றும் அதன் ஓரங்களில் சிறிது எண்ணெய்விட்டு, ரொட்டியின் அடிப்பாகம் பிரவுன் நிறத்தில் வரும்வரை வேகவிடவும். பிறகு கரண்டியால் ரொட்டியைத் திருப்பிப்போட்டு ரொட்டி மொறுமொறுப்பாக மாறியவுடன் எடுக்கவும். ரவா ரொட்டியைத் தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

*இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.

ரவா சீடை

தேவையானவை:
* ரவை - அரை கப்
* பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
* தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன்
* வெண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்
* வெள்ளை எள் - கால் டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ரவையையும் பொட்டுக்கடலையையும் மிக்ஸியில் பவுடராக அரைத்துக்கொள்ளவும். வெள்ளை எள் மற்றும் தேங்காய்த்துருவல் இரண்டையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த வெள்ளை எள், தேங்காய்த் துருவலுடன் வெண்ணெய், உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் மிக்ஸியில் அரைத்த பவுடரையும் சேர்த்து நன்கு கலந்து, நெகிழ்வான மாவாகப் பிசைந்துகொள்ளவும்.

பிசைந்த மாவை மூடியால் மூடி, 45 நிமிடங்கள் ஊறவிடவும். ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு 10 நிமிடங்கள் உலரவிடவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, உருட்டிவைத்திருக்கும் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு கிச்சன் டவலில் பொரித்த சீடைகளைப் போட்டு அதிலிருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். பிறகு அவற்றை சூடாகப் பரிமாறவும்.

*எள் ரத்தச்சோகை பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது.

ரவா மேங்கோ பால்ஸ்

தேவையானவை:
* மாம்பழக்கூழ் - அரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* நெய் - ஒரு டீஸ்பூன்
* வறுத்த ரவை - 3 டீஸ்பூன்
* டெசிகேட்டட் கோகனட் பவுடர் - ஒன்றரை கப்
* டெசிகேட்டட் கோகனட் பவுடர் (அலங்கரிக்க) - சிறிதளவு

செய்முறை:

ஒரு நான் ஸ்டிக் பானை (pan) எடுத்துக் கொள்ளவும். அதில் நெய்யைச் சேர்க்கவும். அதனுடன் டெசிகேட்டட் கோகனட் பவுடர் சேர்க்கவும். பின்னர் இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்து ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். அதே நான் ஸ்டிக் பானில் மாம்பழக்கூழ், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மூன்று நிமிடங்களுக்குக் கிளறவும்.

பின்னர் இதனுடன் வறுத்த ரவையைச் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, கலவையை அடிக்கடி கிளறவும். கலவை மாவு பதத்துக்கு வந்ததும் இதனுடன் வறுத்த டெசிகேட்டட் கோகனட் பவுடர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து கலவையை முற்றிலும் குளிரவைக்கவும். பின்னர் இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உள்ளங்கையால் உருட்டி, டெசிகேட்டட் கோகனட் பவுடரில் புரட்டிப் பரிமாறவும்.

*மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.