சுறுசுறுப்பு அளிக்கும் மொறுமொறுப்புத் தின்பண்டம், பிஸ்கட் வகையைச் சேர்ந்த குக்கீ. இது உலகின் எல்லா நாடுகளிலுமே பரவலாகக் கிடைக்கக்கூடிய, மிக அதிக நபர்களால் விரும்பி உண்ணக்கூடிய தின்பண்டம். டீக்கடை பாட்டில்களில் வைக்கப்பட்டுள்ள சாதாரண பிஸ்கட்கள் முதல் காபி ஷாப்களில் பானங்களோடு பரிமாறப்படுகிற வெரைட்டி குக்கீஸ் வரை, இவற்றில்தான் எத்தனை வகை, எவ்வளவு சுவை!

கடைகளில் தொடங்கி இப்போது வெண்டிங் மிஷின்கள் வரை விற்பனையாகிக்கொண்டிருக்கும் இந்த மிருதுவான பிஸ்கட்டுகளில் என்னதான் சுவை ரகசியம் ஒளிந்திருக்கிறது? குக்கீஸென்றே புகழ்பெற்ற கடைகளில் கிடைப்பதுபோன்ற அழகுத் தோற்றம் கொண்ட ருசியான வகைகளை வீட்டிலேயே செய்ய முடியுமா? முடியும் என்பதற்குச் சான்றுதான் இங்கு அளிக்கப்பட்டுள்ள ரெசிப்பிகள்.

இதை... இப்படிக்கூடச் செய்ய முடியுமா என்று ஆச்சர்யப்படுத்தும் குக்கீஸ் ரெசிப்பிகளை அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையற்கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். இவற்றை எவ்வித சிரமமும் இன்றி எளிதில் தயாரிக்கும் வகையில் வீடியோ இணைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஹேப்பி குக்கிங்... டேஸ்ட்டி குக்கீஸ்!

- லட்சுமி வெங்கடேஷ்

செக்கர்போர்டு குக்கீஸ்

தேவையானவை - வெள்ளைப் பகுதிக்கு:
* மைதா – ஒரு கப்
* மென்மையான வெண்ணெய் – முக்கால் கப்
* ஐசிங் சுகர் – அரை கப்
* முட்டையின் மஞ்சள் கரு – ஒன்று
* வெனிலா எசென்ஸ் – முக்கால் டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
* கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்

சாக்லேட் பகுதிக்கு:
* மைதா – ஒரு கப்
* மென்மையான வெண்ணெய் – முக்கால் கப்
* ஐசிங் சுகர் – அரை கப்
* முட்டையின் மஞ்சள் கரு – ஒன்று
* இன்ஸ்டன்ட் காபித்தூள் – அரை டீஸ்பூன்
* கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்

ஒட்டுவதற்கு:
* முட்டையின் வெள்ளை கரு – 2

செய்முறை:

வெள்ளைப் பகுதி: மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும். வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நிறம் மாறி வரும் வரை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு பொடித்த ஐசிங் சுகரை இதனுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து மேலும் அடிக்கவும். வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து மென்மையான க்ரீம் போல் ஆகும் வரை அடிக்கவும். வெனிலா எசென்ஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை அடித்த க்ரீமுடன் சேர்த்துக் கலந்துவிடவும். பிறகு இதனுடன் மைதா மாவுக் கலவையைச் சேர்த்துப் பிசையவும். மாவு உருண்டு வந்ததும் அதை ஒரு பாலிதீன் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். சப்பாத்திக் குழவியால் மாவை அரை அங்குலம் கனமான செவ்வக வடிவ சப்பாத்தியாக திரட்டவும். பின்னர், இதை அரை அங்குலம் அகலத்தில் நீளமான ஸ்ட்ரிப்களாக வெட்டிக்கொள்ளவும். மொத்தம் ஒன்பது ஸ்ட்ரிப்கள் இதுபோல வெட்டிக்கொள்ளவும்.

சாக்லேட் பகுதி: மைதா மாவு, கோகோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்துக் கொள்ளவும். வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நிறம் மாறி வரும் வரை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு ஐசிங் சுகரை சிறிது சிறிதாகச் சேர்த்து மேலும் அடிக்கவும்.

வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து மென்மையான க்ரீம் போல் ஆகும் வரை அடிக்கவும். பிறகு இன்ஸ்டன்ட் காபித்தூள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை க்ரீமுடன் சேர்த்துக் கலந்துவிடவும்.

பின்னர் மைதா மாவுக் கலவையையும் இதனுடன் சேர்த்துப் பிசையவும். மாவு உருண்டு வந்ததும் அதை ஒரு பாலிதீன் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். சப்பாத்திக் குழவியால் மாவை அரை அங்குலம் கனமான செவ்வக வடிவு சப்பாத்தியாகத் திரட்டவும். பின்னர் இதை அரை அங்குலம் அகலத்தில் நீளமான ஸ்ட்ரிப்களாக வெட்டிக்கொள்ளவும். மொத்தம் ஒன்பது ஸ்ட்ரிப்கள் இதுபோல வெட்டிக்கொள்ளவும்.

செக்கர் போர்டு: இரண்டு முட்டையின் வெள்ளை கருவை சற்று அடித்து வைத்துக் கொள்ளவும்.

முதல் அடுக்கு: ஒரு வெள்ளை ஸ்ட்ரிப் வைத்து சுற்றிலும் மூன்று பக்கமும் (வீடியோவில் காட்டியுள்ளபடி) முட்டையின் வெள்ளை கருவை ஒரு பிரஷ்ஷால் தடவவும். இதற்குப் பக்கத்தில் ஒரு சாக்லேட் ஸ்ட்ரிப் எடுத்து வெள்ளைப் பகுதியுடன் ஒட்டி முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பிரஷ்ஷால் தடவவும். மற்றொரு வெள்ளை ஸ்ட்ரிப் எடுத்து சாக்லேட் ஸ்ட்ரிப் பக்கத்தில் வைத்து வெள்ளைப் பகுதி உடன் ஒட்டி முட்டையின் வெள்ளை கருவை ஒரு பிரஷ்ஷால் தடவவும். மீண்டும் ஒரு சாக்லேட் ஸ்ட்ரிப் எடுத்து வெள்ளைப் பகுதி உடன் ஒட்டி முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பிரஷ்ஷால் தடவவும். மீண்டும் இதன் இதற்குப் பக்கத்தில் இதே போல் ஒரு வெள்ளை ஸ்ட்ரிப் மற்றும் ஒரு சாக்லேட் ஸ்ட்ரிப் சேர்த்து ஒட்டவும்.

இரண்டாவது அடுக்கு: இப்போது வெள்ளை ஸ்ட்ரிப்பின் மேல் சாக்லேட் ஸ்ட்ரிப் ஒட்டவும். சாக்லேட் ஸ்ட்ரிப்பின் மேல் வெள்ளை ஸ்ட்ரிப் ஒட்டவும்.

மூன்றாவது அடுக்கு: இப்போது வெள்ளை ஸ்ட்ரிப்பின் மேல் சாக்லேட் ஸ்ட்ரிப் ஒட்டவும். சாக்லேட் ஸ்ட்ரிப்பின் மேல் வெள்ளை ஸ்ட்ரிப் ஒட்டவும். இப்போது ஒரு நீள செக்கர் போர்டு லாக் கிடைக்கும். மீண்டும் இதை ஒரு பாலிதீன் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். பின்னர் இதை செக்கர் போர்டு பாட்டர்ன் வருமாறு கால் அங்குலம் கனமான குக்கீஸ்களாக வெட்டிக்கொள்ளவும். குக்கீஸ்களை பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கவும்.

பின்னர் இதனை 180 டிகிரி வெப்பத்தில் பிரீஹீட் செய்த அவனில் (oven) வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கீழ்ப்பாகம் சற்று சிவந்ததும் வெளியில் எடுத்து ஆறவைக்கவும். பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

குறிப்பு:
பிசைந்த பிறகு மாவு தளர்வாக இருந்தால் ஒவ்வொரு டீஸ்பூன் மைதாவாகச் சேர்த்துப் பிசைந்து, மாவு சரியான பதத்துக்கு வந்ததும் மைதா சேர்ப்பதை நிறுத்திவிடவும். மாவு சேராமல் உதிரியாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்துப் பிசையவும்..

எக்லஸ் கோகனட் குக்கீஸ்

தேவையானவை:
* மைதா – ஒரு கப்
* பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
* வெண்ணெய் – அரை கப்
* பொடித்த சர்க்கரை - கால் கப்
* ஐசிங் சுகர் – முக்கால் கப்
* வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்
* டெசிகேட்டட் கோகனட் – முக்கால்
* உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நிறம் மாறும்வரை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். இத்துடன் சிறிது சிறிதாக ஐசிங் சுகர் சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு, பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் போல ஆகும்வரை அடிக்கவும். வெனிலா எசென்ஸை இந்த க்ரீமுடன் சேர்க்கவும். இத்துடன் மைதா மாவு சேர்த்து கலந்து, பிறகு டெசிகேட்டட் கோகனட் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும். மாவு சேர்ந்து உருண்டுவந்ததும், மாவை ஒரு சிறிய உருண்டை கரண்டியால் எடுத்து பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கி
180 டிகிரி வெப்பத்தில் பிரீஹீட் செய்த அவனில் (oven) வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கீழ்ப்பாகம் சற்று சிவந்ததும் வெளியில் எடுத்து ஆறவைக்கவும். பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ்

தேவையானவை:
* மைதா – ஒன்றரை கப்
* பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
* வெண்ணெய் – அரை கப்
* பொடித்த சர்க்கரை – கால் கப்
* பிரவுன் சுகர் – அரை கப்
* முட்டை – ஒன்று
* வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்
* உப்பு – ஒரு சிட்டிகை
* சாக்லேட் சிப்ஸ் – ஒன்றரை கப்

செய்முறை:

மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நிறம் மாறும்வரை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். பிறகு பொடித்த சர்க்கரை, பிரவுன் சுகரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு அடிக்கவும். பின்னர் வெனிலா எசென்ஸ், முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும்.

இத்துடன் மைதா சேர்த்து கலந்து, பிறகு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும். மாவு சேர்ந்து உருண்டுவந்ததும், மாவை ஒரு சிறிய உருண்டை கரண்டியால் எடுத்து பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கி 180 டிகிரி பிரீஹீட் செய்த அவனில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கீழ்பாகம் சற்று சிவந்ததும் வெளியில் எடுத்து ஆறிய பிறகு காற்று புகா டப்பாக்களில் சேகரித்துவைக்கவும்.