Published:Updated:

அள்ளும் சுவையில் எள்ளு பாயசம் !

அள்ளும் சுவையில் எள்ளு பாயசம் !

பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் கைமணம்
படங்கள்: எம்.உசேன்

கார அரிசி பிஸ்கட்

அள்ளும் சுவையில் எள்ளு பாயசம் !
##~##

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு - தலா 4 டீஸ்பூன், எள்ளு, உளுத்த மாவு - தலா 2 டீஸ்பூன், நெய் (அ) வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, மைதா மாவு, உளுத்த மாவு மூன்றையும் லேசாக வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள்ளு, உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் (அ) நெய் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, மைதா மாவில் தொட்டு, சப்பாத்தி போல் இடவும். இதன்மேல் சிறிய டப்பாவின் மேல் மூடியை வைத்து அழுத்தி, சிறு சிறு வட்டங்களைப் போல் செய்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- வ.சுந்தரி சேனன், சென்னை-23

எள்ளு பாயசம்

அள்ளும் சுவையில் எள்ளு பாயசம் !

தேவையானவை: வடித்த சாதம் - அரை கப், எள்ளு (அரைத்த விழுது) - கால் கப், வெல்லம் - ஒரு கப், காய்ச்சிய பால் - ஒன்றரை கப், நெய் - 4 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10.

செய்முறை: வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு லேசான பாகு பதத்தில் காய்ச்சவும். இதில் பால், எள்ளு விழுது சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடித்த சாதத்தை சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

- காயத்ரி வெங்கடேஸ்வரன், திருநின்றவூர்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

கார அரிசி பிஸ்கட்: ஒரு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை பொடி சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்.  

எள்ளு பாயசம்: எள்ளை அப்படியே அரைக்காமல் லேசாக வறுத்து, ஒரு டீஸ்பூன் முந்திரி சேர்த்து அரைத்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு