வெரைட்டி வெஜ் ரிங்ஸ்

தேவையானவை: பெரிய வெங்காயம், வெண்டைக்காய், குடமிளகாய் - தலா 2, புடலங்காய் (சிறியது) - ஒன்று, தயிர் - அரை கப், கடலை மாவு - ஒரு கப், சோள மாவு, மைதா மாவு - தலா கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி... தனித்தனியே பிரித்து எடுக்கவும். வெண்டைக்காயையும் வட்டமாக வெட்டவும். புடலங்காயைத் தோல் சீவி, உள்ளிருக்கும் விதை, பஞ்சு நீக்கி வட்டமாக நறுக்கவும். குடமிளகாயில் இருக்கும் விதைகளை நீக்கி, அதனையும் வட்ட வடிவில் நறுக்கவும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் உப்பு சேர்த்த தயிர், நறுக்கிய காய்களைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, மைதா, மிளகாய்த்தூள், பூண்டு விழுது, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். தயிரில் ஊறிய காய்களை எடுத்து மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, வெந்ததும் எடுக்க... வெரைட்டி வெஜ் ரிங்ஸ் ரெடி!

- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுத்தாங்கல்

ஹனி சேங்தானா

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 150 கிராம், தேன் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 500 கிராம், வறுத்த தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்த முந்திரி - 25 கிராம், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள்- தலா அரை டீஸ்பூன், குங்குமப்பூ - அரை சிட்டிகை, நெய் - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்கவும். கடாயில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து, கம்பி பதத்தில் பாகு வந்தவுடன் அரைத்த வேர்க்கடலை விழுது, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து, நெய் விட்டு சுருளக் கிளறவும். அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது சுக்குப்பொடி, தேன், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மணக்கும் 'ஹனி சேங்க்தானா’ தயார்!

- வே.சித்ரா வேடியப்பன் ஊதப்பூண்டி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

வெரைட்டி வெஜ் ரிங்ஸ்: அரைத்த புதினா, கொத்தமல்லி விழுதை மாவுடன் கலந்தால் சுவையும், மணமும் கூடும்.

ஹனி சேங்தானா:  ஊற வைத்த கசகசாவை அரைத்து வேர்க்கடலை விழுதுடன் சேர்த்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.