சன்னா பாஸ்தா சூப்

தேவையானவை: பாஸ்தா, வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை - தலா அரை கப், வெஜிடபிள் ஸ்டாக் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப், கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட் ஆகியவற்றை வேக வைத்து வடிகட்டிய நீர், நறுக்கிய வெங்காயத்தாள் - தலா அரை கப், இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நான்-ஸ்டிக் பிரஷர் பேனில் ஆலிவ் எண்ணெயை விட்டு, நறுக்கிய இஞ்சி - பூண்டு, வெங்காயத்தாள் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அதனுடன் வெஜிடபிள் ஸ்டாக், பாஸ்தா சேர்த்து வதக்கவும். வாசனை வந்தவுடன் காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், வேக வைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டால்... சன்னா - பாஸ்தா சூப் பரிமாற ரெடி!

- ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

ட்ரைஃப்ரூட் குல்கந்து!

தேவையானவை: ஆப்பிள் விழுது, கிர்ணிபழ விழுது, முலாம்பழ விழுது - தலா ஒரு கப் (ஆப்பிள், கிர்ணி பழம், முலாம்பழம் ஆகியவற்றைக் கழுவி, தோல் சீவி துண்டுகளாக்கி தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ரோஜாப்பூ - 3 பூக்கள், பாதாம் (தோல் நீக்கி சீவவும்), முந்திரி - தலா 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான தவா வில் ஆப்பிள் விழுது, கிர்ணி பழ விழுது, முலாம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அல்வா பதத்தில் கொதித்து வரும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பிறகு குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, கெட்டியான பதத்தில் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், சுத்தம் செய்து, உதிர்த்த ரோஜா இதழ்கள் சேர்த்து ஒருமுறை கிளறி மூடவும். ஆறியதும் சாப்பிட... சூப்பர் சுவையில் இருக்கும்!

- மன்னை ஜி.நீலா, சென்னை-18

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ட்ரைஃப்ரூட் குல்கந்து : ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து பரிமாறினால்... இனிப்பும், சுவையும் அதிகரிக்கும்.

சன்னா - பாஸ்தா சூப் : கடாயில் வெண்ணெயை உருக்கி, அதில் ஒரு டீஸ்பூன் மைதா மாவை சேர்த்துக் கிளறி... ஒன்றரை டீஸ்பூன் பால் சேர்த்து மீண்டும் கிளறினால்... வொயிட் சாஸ் தயார். இந்த வொயிட் சாஸை சேர்த்தால்... சுவையும் மணமும் கூடும்.