பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச்

தேவையானவை: ஒரே அளவுடைய உருளைக்கிழங்கு - 10, மீல்மேக்கர் - 100 கிராம், வெங்காயம் - 200 கிராம், பூண்டு - 7 பல், தக்காளி - 100 கிராம், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,

இட்லி மாவு - ஒரு பெரிய கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெந்நீரில் மீல்மேக்கரை சில நிமிடங்கள் ஊற வைத்து பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் தோல் உரித்து, குறுக்காக முக்கால் பாகம், கால் பாகம் என இரண்டு வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். முக்கால் பாகமாக உள்ள உருளைக்கிழங்கின் நடுப்பகுதியில் ஸ்பூன் மூலம் தொன்னை போல சுரண்டி எடுத்து விடவும்.

மிக்ஸியில் வெங்காயம், பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய், சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம் - பூண்டு விழுதை வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி... பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் பொடித்து வைத்துள்ள மீல்மேக்கர், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க... பூரணம் ரெடி!

முக்கால் பாக உருளைக்கிழங்கில் மீல்மேக்கர் கலவையை ஸ்டஃப் செய்து, கால் பாக உருளைக்கிழங்கை வைத்து மூடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, ஸ்டஃப் செய்த உருளைக்கிழங்கை இட்லி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

- வெ.தாரகை, கும்பகோணம்

பஞ்ச கலவை அல்வா

தேவையானவை: அவல், சேமியா, ஜவ்வரிசி, மைதா, கோதுமை மாவு - தலா 100 கிராம், சர்க்கரை - ஒரு கிலோ, பால் - ஒரு லிட்டர், நெய் - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அவல், சேமியா, ஜவ்வரிசி மூன்றையும் பாலில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். அந்தக் கலவையுடன், பால் விட்டுக் கரைத்த மைதா, கோதுமை மாவு கலவையையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு... கம்பிப் பாகு வரும் வரை கிளறி, அதில் மாவுக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். கிளறும்போதே நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி... பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை தூவி, துண்டுகள் போட்டு பரிமாறவும்.

- ஜெயலஷ்மி, புதுச்சேரி-12

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

பஞ்ச கலவை அல்வா: பாலுடன் சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறினால்... ருசியும், மணமும் கூடும்.

பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச்: வெங்காயம், தக்காளிக்குப் பதிலாக முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளைப் பொடித்துச் சேர்த்தால்.... சுவையும் அதிகமாகும்; குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.