ஸ்பெஷல் 1
Published:Updated:

வாவ்..வீட் வெஜ் அடை !

வாசகிகள் கைமணம் படங்கள்: பொன்.காசிராஜன்

 தேங்காய் முறுக்கு

##~##

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 4 கப், கசகசா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் தவிர, மற்ற பொருட்களை ஒன்று சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை முறுக்கு அச்சில் இட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து... பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். எண்ணெய் வடிந்ததும், காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.

வாவ்..வீட் வெஜ் அடை !

- பிரேமா ராவ், மூணாறு

வீட் வெஜ் அடை

தேவையானவை: சம்பா கோதுமை ரவை - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - 4, கெட்டித் தயிர் - அரை கப், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - தலா 3 டீஸ்பூன், முட்டைகோஸ் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாவ்..வீட் வெஜ் அடை !

செய்முறை: கெட்டித் தயிரில் சம்பா கோதுமை ரவையை ஊற வைக்கவும். பிரெட் ஸ்லைஸை நீரில் நனைத்து பிழிந்து வைக்கவும். ஊற வைத்த கோதுமை ரவை, பிரெட் ஸ்லைஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.  மாவை சிறு சிறு அடைகளாக தோசைக்கல்லில் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

தேங்காய் முறுக்கு: சிறிதளவு கொத்தமல்லி, புதினாவை அரைத்து, அதனை வடிகட்டி மாவுடன் சேர்த்து முறுக்குப் பிழிந்தால்... நல்ல வாசனையுடனும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

வீட் வெஜ் அடை: பனீர் துருவல் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொண்டால்... மிகவும் ருசியாக இருக்கும்.