வெந்தயக் கீரை சூப்

தேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சோள மாவு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், வெண்ணெய் - சிறிதளவு, காய்ச்சிய பால் - அரை டம்ளர், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும். காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

இந்த 'வெந்தயக் கீரை சூப்’ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல... கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் 'வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.

- சியாமளா ராஜகோபால், சிட்லபாக்கம்

க்ரீன் கபாப்

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், புதினா இலை - கால் கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், பிரெட் தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து... கொத்தமல்லி, புதினா, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பிரெட் தூள், சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து நீளமான உருளை வடிவத்தில் உருட்டி, ஐஸ்கிரீம் குச்சியால் குத்தி (இட்லி தட்டில்) ஆவியில் வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, தக்காளி சாஸ் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

உருண்டைகளை எண்ணெயிலும் பொரிக்கலாம்.

- எம்.சங்கரி, சென்னை-91

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

வெந்தயக் கீரை சூப்: சிறிதளவு சோளத்தை (ஃப்ரெஷ் கார்ன்) அரைத்து சேர்த்தால்... மணமும், ருசியும் கூடும்.

க்ரீன் கபாப்: சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், சுவை சூப்பராக இருக்கும்.