வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

125

கிட்ஸ் பிஸ்கட்

தேவையானவை: பச்சரிசி மாவு - 4 கப், பாசிப்பருப்பு - ஒரு கப், முந்திரி - 50 கிராம், தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், சாக்லேட் பவுடர் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் (அல்லது) வனஸ்பதி - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேக வைத்து, மசித்து அதில் அரிசி மாவு, தேங்காய் துருவல், வெண்ணெய், சாக்லேட் பவுடர், பொடித்த சர்க்கரை (சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்) எல்லாவற்றையும் கலந்து, நன்கு பிசைந்து கொள்ளவும். இதில் நெல்லிக்காய் அளவு எடுத்து உருட்டி, வட்ட வட்டமாக பிஸ்கட் போல தட்டி, நடுவில் முந்திரித் துண்டுகளை வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குழந்தைகள் விரும்பும் சுவையான பிஸ்கட் இது.

- டி.எம்.பானுமதி, ஆதம்பாக்கம்

பனீர் பூசணி வடை

தேவையானவை: பனீர் துருவல், வெள்ளை பூசணித் துருவல் - தலா ஒரு கப், வெங்காயம் - 4, கடலை மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, முந்திரிப் பருப்பு (உடைத்தது) - 25, இஞ்சி - ஒரு சிறிய துண்டு. கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணித் துருவலில் இருந்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை நன்கு அரைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். பிறகு, உப்பு, எண்ணெயைத் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, நெய் விடவும். தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறிய வடைகளாகத் தட்டிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு சாஸ் தொட்டுச் சாப்பிடலாம்.

- கே.கமலி, சென்னை-83

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

கிட்ஸ் பிஸ்கட்: சிறிதளவு கோவா சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.

பனீர் - பூசணி வடை: மாவு பிசையும்போது, 2 டீஸ்பூன் ரவை சேர்த்துக் கொண்டால், மேலும் மொறுமொறுப்பாக இருக்கும்.