வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஓட்ஸ் கோலா... ஓஹோ !

125 

 ஓட்ஸ் கோலா

##~##

தேவையானவை: ஓட்ஸ் - 6 டேபிள்ஸ்பூன், கேரட் - 100 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 5, இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 4, கசகசா - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்து எடுத்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். வெங்காயம், பூண்டு உரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி  நறுக்கவும். ஓட்ஸ், பொட்டுக்கடலை, வேக வைத்த கேரட், உரித்த வெங்காயம், பூண்டு, சோம்பு, இஞ்சி, ஊற வைத்த மிளகாய், கசகசா, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைக்கவும்.

ஓட்ஸ் கோலா... ஓஹோ !

அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டில் போடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து,  உருண்டைகளைப் போட்டு பொரிக்கவும். இது சுவையும், சத்தும் மிக்கது.

- வெ.தாரகை, கும்பகோணம்

 கத்திரி  உருளை கடலைக் கறி

தேவையானவை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா கால் கிலோ, வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், நறுக்கிய பனீர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஓட்ஸ் கோலா... ஓஹோ !

செய்முறை: வெறும் கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து வைக்கவும். வறுத்த வேர்க்கடலையைப் பொடியாக்கவும். கத்திரிக்காயைக் கீற்றாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கத்திரிக்காயைப் போட்டு வதக்கி, தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து வறுத்து,  தனியா கலவைப் பொடி போட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் தெளித்து (அடுப்பை ’சிம்’மில் வைத்து), மூடி வைக்கவும். கத்தரி, உருளை வெந்தவுடன், நறுக்கிய பனீர் போட்டு கிளறி, ஐந்து நிமிடம் கழித்து வேர்க்கடலைப் பொடியைத் தூவி, நன்கு புரட்டி இறக்கவும்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை

 வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஓட்ஸ் கோலா: அரைத்த ஓட்ஸ் கலவையுடன் சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், சுவை கூடும். கத்திரி - உருளை கடலைக் கறி: ஒரு டேபிள்ஸ்பூன் கொப்பரை துருவல் சேர்த்தால்... மணமும், ருசியும் அதிகமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு