Published:Updated:

கலக்குது காக்டெய்ல் பாயசம் !

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 வாசகிகள் கைமணம்

காக்டெய்ல் பாயசம்

##~##

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: பிஸ்தா, பாதாமை  தனித்தனியே ஊற வைத்து தோல் நீக்கவும். இவற்றுடன் தேங்காய் துருவல், கசகசா சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடைசி சுற்றில் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி அரைத்த கலவையை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொதித்து வாசனை வந்ததும்.... நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறினாலும் சூப்பராக இருக்கும்.  

கலக்குது காக்டெய்ல் பாயசம் !

- சுமித்ரா, பெரம்பூர்

கார்ன் ஸ்டஃப்டு பூரி

தேவையானவை: மைதா - ஒரு கப், சிரோட்டி ரவை - 2 டீஸ்பூன், இனிப்பு வகை சோளம் - 2, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கலக்குது காக்டெய்ல் பாயசம் !

செய்முறை: மைதா, உப்பு, ரவை ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். சோளத்தை உதிர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுதை வதக்கவும். அரைத்த சோளத்தை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு... உப்பு, மிளகாய்த்தூள் தூவி, சுருள வதக்கி இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு கிண்ணம் போல் செய்து, சோள கலவையை வைத்து மூடி, பூரிகளாகத் திரட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும்.

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்.

அவருடைய கமென்ட்ஸ்...

கார்ன் ஸ்டஃப்டு பூரி: பச்சைப் பட்டாணியிலும் இதேபோல் ஸ்டஃப்டு பூரி செய்யலாம்.

காக்டெய்ல் பாயசம்: சிறிதளவு வாழைப்பழத்தையும் அரைத்து சேர்த்துக் கொண்டால்... சுவையும், மணமும் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு