Published:Updated:

அட பேரீச்சம்பழக் குழம்பு !

அட பேரீச்சம்பழக் குழம்பு !

அட பேரீச்சம்பழக் குழம்பு !

அட பேரீச்சம்பழக் குழம்பு !

Published:Updated:

வாசகிகள் கைமணம்

வாழைக்காய் மனோகரம்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 1, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி - ஒரு டீஸ்பூன் சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

அட பேரீச்சம்பழக் குழம்பு !
##~##

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உளுத்தம் பொடி, வெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கல், மண் போக வடிகட்டி, கெட்டிப்பாகு காய்ச்சவும். பிசைந்த மாவை, ஒரு துளையுள்ள தேன்குழல் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெல்லப் பாகு சூடாக இருக்கும்போதே சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் இரண்டையும் அதில் சேர்த்துக் கலக்கவும். கூடவே பொரித்த தேன் குழலையும் சேர்த்துக் கலக்கவும்.

கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த மனோகரம்.

- ஆர்.மங்களம், திருச்சி

பேரீச்சம்பழக் குழம்பு

தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, உரித்த சின்ன வெங்காயம் - அரை கப், பூண்டு - 4 பல், தக்காளி - 2, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் - அரை கப், முந்திரிப்பருப்பு - 5, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்தூள் - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அட பேரீச்சம்பழக் குழம்பு !

செய்முறை: பேரீச்சம்பழத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். புளியை கெட்டியாக, ஒன்றரை கப் வருமாறு கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். புளிக்கரைசலை விட்டு, அரைத்த பேரீச்சை விழுது, தேங்காய் விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தளதளவென கொதித்ததும், கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

இது புளிப்பும், தித்திப்புமாக அட்டகாசமான சுவையில் இருக்கும்.

- எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை-95

படங்கள் : பொன்.காசிராஜன்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

வாழைக்காய் மனோகரம்: கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

பேரீச்சம்பழக் குழம்பு: தக்காளியைச் சேர்த்து வதக்கும்போது, கூடவே வேர்க்கடலையையும் வறுத்து வேக வைத்து சேர்த்தால்... சுவை அருமையாக இருக்கும்.