பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ரைஸ் தால் நைஸ் !

125

ரைஸ் தால் ஸ்டிக்ஸ்

##~##

தேவையானவை: அரிசி மாவு - கால் கப், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், வறுத்து கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை - கால் கப், வறுத்த வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், நறுக்கிய புதினா, கொத்தமல்லி, உப்பு, பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து, விரல் அளவு நீளத்தில் உருட்டி, வறுத்த வெள்ளை எள்ளில் ஒரு முறை புரட்டி எடுக்கவும். இப்படி ஒவ்வொரு 'ஸ்டிக்கை’யும் தயார் செய்யவும். அவற்றை சூடான எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

ரைஸ் தால் நைஸ் !

ஒரு கப்பில் சிறிதளவு பொரித்த 'ரைஸ் தால் ஸ்டிக்ஸ்' போட்டு, அதன் மேல் தயிர், கரம் மசாலாத்தூள் சேர்த்தும் சாப்பிடலாம்.

- லட்சுமி, சென்னை-24

ரியல் ஹோம்மேட் சாக்லேட்

தேவையானவை: மில்க் பவுடர் - 3 கப், சர்க்கரை - 2 கப், கோகோ பவுடர் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபித்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு கப்.

செய்முறை: சர்க்கரையில் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். உடனே அதில் வெண்ணெயை சேர்த்துக் கலக்கவும். அது கொதித்து மேலே வரும் போது, மில்க் பவுடர், காபித்தூள், கோகோ பவுடர் சேர்த்து கைபடாமல் கிளறவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து பளபளப்பாக சாக்லேட் பதத்தில் வரும்போது இறக்கவும். அதனை பட்டர் பேப்பரில் பரப்பி ஃபிரிட்ஜில் வைக்கவும். விருப்பப்பட்டால் முந்திரிபருப்புத் தூவி பரிமாறலாம்.

ரைஸ் தால் நைஸ் !

கெட்டியானதும் வெளியில் எடுத்து, விரும்பிய வடிவத்தில் 'கட்’ செய்து சாப்பிடலாம். அழகிய பேப்பர்களில் சுற்றி பரிசுப் பொருளாகவும் கொடுக்கலாம்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

வாசகிகளின் குறிப்புகளைப் படித்து, தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, கமெண்ட் சொல்லியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்.

அவருடைய கமெண்ட்ஸ்....

ரைஸ் தால் ஸ்டிக்ஸ்: சிறிதளவு கசகசா சேர்த்து மாவுடன் பிசைந்து செய்தால் சுவை கூடும்.

ரியல் ஹோம்மேட் சாக்லேட்: பாதாம், பிஸ்தா, முந்திரியை ஒன்றிரண்டாகப்  பொடித்து சாக்லேட் கலவையில் சேர்த் தால்... நெட்ஸ் சாக்லேட்டாக ருசியும் மணமும் அதிகமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு