Published:Updated:

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !

ஆர்.ஷஃபி முன்னா படங்கள்: மனோஜ் அலிகடி

பிரீமியம் ஸ்டோரி
##~##

''வட இந்தியாவின் உணவு முறை, தென்னகத்திலிருந்து ரொம் பவே வித்தியாசமாகத்தான் இருக் கும். அதிலும், ரம்ஜான் பண்டிகைக் காக இங்கே ஸ்பெஷலாக தயாராகும் உணவுகள் ஒவ்வொன் றும் அசத்தல் ரகம்தான். அதில் மிகவும் முக்கியமாக அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம் பெறும் இரண்டு ரெசிபிகள்... சன்னா மசாலா மற்றும் ஷீர் கொர்மா.

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !

ஷீர் கொர்மா என்பது சேமியா வைப் பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபி. இதற்காகப் பயன்படுத்தப் படும் வறுத்த சேமியாவே கொஞ்சம் ஸ்பெஷல்தான்! வழக்க மான சேமியாவைக் காட்டிலும் மிகமிக மெலிதாக இருக்கும் இந்த சேமியா, ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களின்போதுதான் அதிக அளவில் வடஇந்தியாவில் விற்பனைக்கு வரும்'' என்று சொல்லும் உத்தரபிரதே

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !

ச மாநிலம், அலிகர் நகரில் வசிக்கும் ஃபர்சானா அலி, வாசகிகளுக்காக ஸ்பெஷல் சன்னா மசாலா மற்றும் ஷீர்கெர்மா இரண்டையும் செய்து காட்டினார்.

சன்னா மசாலா

தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - 200 கிராம், ரீஃபைண்ட் ஆயில் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சன்னா மசாலா பவுடர் - 20 கிராம், சமையல் சோடா - அரை டீஸ்பூன், தண்ணீர் - 800 மில்லி, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: சுமார் எட்டு மணி நேரத்துக்கு கொண்டைக்கடலையை நீரில் ஊற வைக்கவும். அடுப்பின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, ரீஃபைண்ட் ஆயிலை ஊற்றி, சூடானதும்... பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி துண்டுகளையும் சேர்த்து வதக்கி... பிறகு, சன்னா மசாலா பவுடர் மற்றும் உப்பைச் சேர்க்கவும். நன்கு ஊறிய கொண்டைக்கடலையை அதில் சேர்த்துக் கலந்து, ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, இத்துடன் 800 மில்லி நீரைச் சேர்த்து சமையல் சோடா போட்டு மூடவும். தீயைக் குறைத்து, சுமார் 40 நிமிடங்களுக்கு வைத்திருந்து இறக்கி, சன்னா மசாலா மீது கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறலாம்.

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !

குறிப்பு: சன்னா மசாலாவில் கிரேவி அதிகம் தேவை என்று நினைப்பவர்கள், வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க்கலாம்.

பரிமாறும்போது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறுசிறு துண்டு களாக நறுக்கி, சேர்த்தே பரிமாறுவது வட இந்தியர்களின் வழக்கம்.

ஷீர் கொர்மா

தேவையானவை: ஷீர் கொர்மா (வறுத்த சேமியா) - 100 கிராம், பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரை - தேவைக்கு ஏற்ப, முந்திரி - 25 கிராம், பாதாம் - 25 கிராம், திராட்சை - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: முந்திரி, பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும்படி காய்ச்சி தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் சிறிது நெய்யை ஊற்றி, முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, வாய் அகன்ற பாத்திரத்தில் மீதியுள்ள நெய்யை விட்டு காய்ந்ததும், சேமியாவை அதில் சேர்த்து நன்கு புரட்டவும். பிறகு, காய்ச்சி சுண்டிய பாலை அதில் ஊற்றி... சேமியா கட்டியாகிவிடாமல், அதேநேரம் நன்கு வேகும் வரை கலக்கவேண்டும். வெந்த பின், தேவைக்கேற்ப சர்க்கரையைச் சேர்த்து, அது கரையும் வரை கலக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, அதன் மீது ஏலக்காய்த்தூள் தூவினால்... ஷீர் கொர்மா தயார். பரிமாறும்போது நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாமைச் சேர்க்கவும்.

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !

குறிப்பு: இதை சூடாகவும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து கூலாகவும் சாப்பிடலாம். இத்துடன் கேசரி பவுடர் சேர்த்தால்... ஷீர் அழகான நிறத்தில் ஜொலிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு