குல்குல்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - 2 சிட்டிகை, கெட்டி தேங்காய்ப் பால் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், பொடித்த முந்திரிப் பருப்பு - தேவையான அளவு, நெய், எண்ணெய் கலந்த கலவை - பொரிக்க தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள், 2 டேபிள்ஸ்பூன் நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து, தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசையவும். இதை ஈர துணியை போட்டு மூடி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். சர்க்கரையுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு செய்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இட்டு, உள்ளே சிறிது பொடித்த முந்திரி வைத்து மடித்து, மீண்டும் பூரிகளாக தேய்க்கவும். வாணலியில் நெய், எண்ணெய் கலந்த கலவையை ஊற்றி, காய்ந்ததும் அதில் சிறு பூரிகளைப் போட்டு பொரித்து எடுத்து, சர்க்கரை பாகில் போட்டு, ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.

- ஆர்.ராமாத்தாள், சென்னை-42

பனீர் வெஜ் குருமா

தேவையானவை: காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு - தலா ஒரு கப் (நறுக்கியது), கேரட், பீன்ஸ் - தலா அரை கப் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி - அரை கப், வெங்காயம் - 2, தக்காளி - 4, இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், பனீர் துண்டுகள் - 50 கிராம், பட்டை, சோம்பு - தாளிக்க தேவையான அளவு, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... பட்டை, சோம்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, நன்றாக வதக்கிய பிறகு காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கள் வெந்ததும் பனீர், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

- பி.தமிழ்செல்வி, காஞ்சிபுரம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்:

குல்குல்: ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொண்டால், சுவை கூடும்.

பனீர் - வெஜ் குருமா: பனீருக்கு பதில் டோஃபு (சோயா பனீர்) சேர்த்தும் செய்யலாம்.