ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

சாப்பிட வாங்க !

சாப்பிட வாங்க !

##~##

குடும்பத்துடன் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட பொன் பொழுதுகள் எல்லாம் பொய்யாக, பழங்கதையாக மெள்ள மறைந்தேவிட்டது. இன்றைய அவசர யுகத்தில் 'ஈட்டிங் அவுட்’ என்ற பெயரில், உணவகங்களுக்கு சென்று சாப்பிடும் கலாசாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போகும் பெண்களானாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களானாலும் சரி... 'ச்சே! வாரம் முழுக்கத்தான் சமைச்சுட்டே இருக்கோம்...' என்று அலுத்துக் கொள்ளும் சூழலில்... 'ஈட்டிங் அவுட்’டை ருசிக்க வாரத்தின் இறுதி நாட்களை எதிர்நோக்கி காத்திருப்பது அதிகம்!

'இன்றைக்கு எந்த ஹோட்டலுக்குப் போகலாம்..?’ என்பது, சாப்பிடச் செல்லும் முன்  எழும் கேள்வி. ஆனால், அதற்கான பதில் சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. 'அங்க ரொம்ப காஸ்ட்லிப்பா’, 'அந்த ஹோட்டலில் ரொம்ப மசாலா சேர்க்கிறாங்க’, 'சாப்பாடு சூப்பர். ஆனா, சுத்தம் பத்தாது’ இப்படி ஒவ்வொரு ஹோட்டலைப் பற்றியும் ஒவ்வொருவிதமான ப்ளஸ், மைனஸ் வந்துவிழும்.

சாப்பிட வாங்க !

இதில் உங்களுக்கு கைகொடுக்க... நம்ம ஊர் பிரபல ஹோட்டல்களின் தரத்தை அலசுவதற்காகவே 'சாப்பிட வாங்க!' எனும் இந்தத் தொடர். ஒரு ஹோட்டலின் தூய்மை, உணவுகள் வழங்கப்படும் விதம், உணவு வகைகள், சுவை, தரம், விலை என பலவிதமான காரணங்களின் அடிப்படை யில், ஒவ்வொரு ஹோட்டலை யும் உங்கள் முன் படம் பிடித்துக் காட்டுவதே இதன் நோக்கம்.

சாப்பிட வாங்க !

15-ம் ஆண்டு சிறப்பிதழில் தொடங்கும் இந்த உணவக ரேட்டிங் பயணம், இதழ் தோறும் தொடரும். ஒரு கட்டத்தில், இவற்றை ஒப்பிட்டு அட்டகாசமாக அலசு   வோம்!

முதல்முறை நாம் தேர்ந்தெடுத்தது... சென்னையிலிருக்கும் ஈடன் வெஜிடேரியன் உணவகம்.

சாப்பிட வாங்க !
சாப்பிட வாங்க !

ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கான குறைந்தபட்ச செலவு 350 ரூபாய். நடுத்தரத்துக்கு மேற்பட்டவர்களுக்கான விலையுடன் இயங்குகிறது இந்த உணவகம். குறிப்பாக 'ஹாரிசன்’ ஹோட்டலின் தரத்துக்கேற்ப தங்கியிருப்பவர்களின் வசதிக்காக என்றுகூட சொல்லலாம்.

சுவை வேண்டும் என்பதற்காக மசாலாக்களையும் செயற்கை நிற பவுடர்களையும் அதிகம் சேர்க்காமல் இருப்பது கூடுதல் சிறப்பு. ரொட்டி மற்றும் பிரெட்ஸ் தவிர மற்ற அனைத்துமே 100 ரூபாய்க்கு மேற்பட்ட விலையில்தான் இருக்கின்றன!

'ரொட்டி’, ’குலுச்சா' இரண்டையுமே ஆர்டர் செய்தபோது, 'இரண்டுமே மைதாவில் தயாரிக்கப்பட்டது. எனவே, ஒன்று கோதுமையாக இருக்கட்டும். நீங்கள் கோதுமை புரோட்டாவை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?' என்று வெயிட்டர் அட்வைஸ் தந்தது... அருமை!

கடாய் வெஜிடபிள், மேத்தி... இரண்டு சைட் டிஷ்களும் சூப்பர்!

சர்வீஸ் பரவாயில்லை. உள்ளே நுழையும்போது சின்ன புன்னகையுடன் ஒரு வரவேற்பையும் தந்திருந்தால்... அது முழுமை யானதாக இருந்திருக்கும்!

அதேபோல, குழந்தைகள் அமர்ந்து சாப்பிடுவதற்கென்று பிரத்யேகமான சேர்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்று இல்லாதது... ஒரு குறையே!

'நல்ல உணவுக்கு அடையாளம், அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டாலும், சற்று நேரத்திலேயே ஒரு டீ குடிக்கலாமே என்று தோன்ற வேண்டும்' என்பார்கள். அது இந்த உணவகத்தில் மெய்ப்படுகிறது.

- சுவைப்போம்...

படங்கள்: சு.குமரேசன்