ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

வாங்கிபாத்... வாவ்!

வாங்கிபாத்... வாவ்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

வாங்கிபாத்...  வாவ்!

125

வாங்கிபாத்

வாங்கிபாத்...  வாவ்!
##~##

தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - 6, தனியா, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்,  காய்ந்த மிள காய் - 4,  கொப்பரைத்   துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு,  உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, கொப்பரைத் துருவல் சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து... நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்க்கவும். காய்க்கேற்ப உப்பு சேர்த்து, மஞ்சள்தூளையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வதங்கியவுடன் வடித்த சாதம், பொடித்த மசாலா, மீண்டும் சாதத்துக்கேற்ப உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து பரிமாற    வும். இதற்கு தயிர்பச்சடி நல்ல காம்பினேஷன்.

- சந்திரகலா, பெங்களூரு

காலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை

தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, பஜ்ஜி மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வாங்கிபாத்...  வாவ்!

செய்முறை: காலிஃப்ளவரை பூக்களாக எடுத்து சுடுநீரில் 10 நிமிடம் போட்டு மூடி, பின்னர் வடிய வைக்கவும். அதனுடன் நறுக்கிய பஜ்ஜி மிளகாய், வெங்காயம், சோள மாவு, அரிசி மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாகப் பிசிறி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- கஜலட்சுமி, மதுரை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

வாங்கி பாத்: மசாலா பொடி தயாரிக்கும்போது சிறிது வேர்க்கடலை சேர்த்தால்... மேலும் ருசியாக இருக்கும்.

காலிஃப்ளவர்: பஜ்ஜி மிளகாய் ஃப்ரை; பஜ்ஜி மிளகாய் கிடைக்காவிட்டால், அதற்குப் பதில் குடமிளகாயை பயன்படுத்தலாம்.