Published:Updated:

விறுவிறு வீட் முறுக்கு !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 125 ,படங்கள்: எம்.உசேன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தால் - வீட் முறுக்கு

##~##

தேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு, கேழ்வரகு மாவு - தலா ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்து... அதனுடன் கேழ்வரகு மாவு, எள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் நன்கு மசித்து சேர்க்கவும். பிறகு, தேவையான தண்ணீர் விட்டு, முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.

விறுவிறு வீட் முறுக்கு !

- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்

நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர்

தேவையானவை: முந்திரி, பாதாம், வால்நட் - தலா 25 கிராம்,  பேரீச்சம்பழம் - 15, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த பிஸ்தா - சிறிதளவு, நெய் - ஒரு ஸ்பூன்.

செய்முறை: முந்திரி, பாதாம், வால்நட், பேரீச்சை ஆகியவற்றை சிறிதளவு பால் விட்டு, ஊற வைத்து நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலில் சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரைத்த விழுதைப் போட்டு, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு, கீழே இறக்கி பொடித்த பிஸ்தாவை நெய்யில் வதக்கி சேர்த்து... ஏலக்காய்த்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

   மிகவும் சத்துள்ள கீர் இது.

- ஜெயலஷ்மி, புதுச்சேரி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

தால் - வீட் முறுக்கு: கோதுமை மாவுக்குப் பதில், மைதா மாவை வறுத்து பயன்படுத்தியும் முறுக்கு செய்யலாம்.

நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர்: நட்ஸ்களை அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்துக் கொண்டால்... சுவை அதிகரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு