Published:Updated:

சாப்பிட வாங்க !

சாப்பிட வாங்க !

சாப்பிட வாங்க !

சாப்பிட வாங்க !

Published:Updated:
##~##
'எந்த
ஹோட்டலுக்குப் போகலாம்..?’ என்று வீட்டிலிருந்து யோசிப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஹோட்டலின் உணவு வகைகள், சுவை, தரம், விலை என அனைத்தும் முன்கூட்டியே தெரிந்தால்... வசதியாக இருக்கும்தானே..?! அதற்காகத்தான் நகரின் முக்கிய உணவகங்களை உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது, 'சாப்பிட வாங்க’. இந்த முறை அவள் டீம் 'சாப்பிட வாங்க’ பகுதிக்காக தேர்ந் தெடுத்த ஹோட்டல்... சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கும் 'காரைக்குடி செட்டிநாடு உணவகம்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகப்பில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் செட்டிநாடு ஸ்டைலைக் கொண்டு வந்திருப்பது ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, செம்பில் தண்ணீர் ஊற்றித் தருவது சூப்பர்.

மதியம் காரசாரமாக ஒரு கட்டுக் கட்டலாம் என அசைவச் சாப்பாட்டுக்குச் சிலரும், பிரியாணிக்குச் சிலரும் ஆர்டர் செய்தோம். தலை வாழை இலையில் ருசிக்கக் காத்திருந்தவர்களை ஏமாற்றியது, இலையை வட்டமாக வெட்டி ஒரு தட்டில் வைத்து அதில் உணவைப் பரிமாறியது. வழித்துச் சாப்பிடும் ருசி... இதில் கிடைக்குமா என்ன? இலை, தட்டானதற்குக் காரணம், டேபிள்தான். நான்கு பேர் அமர்ந்து சாப்பிடும் டேபிளில் இடப்பற்றாக்குறை. நம் தட்டில் இருக்கும் கூட்டுப் பொரியல் அயிட்டங்களை எடுத்து வெளியே வைத்தால், எதிரில் இருப்பவர் வைத்த அயிட்டங்களுடன் இடிக்கிறது.

சாப்பிட வாங்க !

அசைவ சாப்பாட்டில் ரைஸ், வாழைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், கீரை கூட்டு, முள்ளங்கி சாம்பார், கொத்தமல்லி ரசம் என்கிற சைவ வகைகளுடன் மீன்குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என அசைவ வகைகளையும் சின்ன சின்ன கிண்ணங்களில் கொடுக்கிறார்கள். இன்னும் கேட்டாலும் கொடுக்கிறார்கள். பொதுவாக அசைவ ஹோட்டல்களில் சாம்பார், ரசம் சுமாராகத்தான் இருக்கும். ஆனால், இங்கு இந்த அயிட்டங்கள் மிகவும் சுவையாக இருந்தது தனிச் சிறப்பு. மீண்டும் ஒரு முறை கேட்டு வாங்கி சாப்பிடத் தூண்டுகிறது. அதேசமயம், அசைவ உணவகத்துக்கே உரித்தான மீன் குழம்பு கெட்டுப் போயிருந்ததுதான் வேதனை.

அசைவ குழம்பு வகைகளில் அவ்வளவு சிறப்பு இல்லை. என்றாலும் சைட் டிஷ்கள் அருமை. ஹோட்டலின் பெயருக்கேற்ப 'காரைக்குடி’யின் தனிச்சிறப்பு ருசியை உணவு வகைகளில் கொண்டு வர மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. மெனு கார்டில் பல அயிட்டங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம் போயிருந்தும்... 'இதுதான் இருக்கிறது... இதெல்லாம் இல்லை’ என்று கழற்றிவிட்டது ஒரு குறையே.

சாப்பிட வாங்க !

ஒரே காம்பவுண்டுக்குள் செட்டிநாடு, பஞ்சாபி தாபா, சைனீஸ், ஸீ-ஃபுட் என்று தனித்தனியாக நான்கு விதமான உணவகங்கள் இருப்பதும், பார்சலுக்கு மட்டும் தனியே 'மிஸ்டர் டெலிவரி’ என இருப்பதும் சிறப்பு.            

- சுவைப்போம்... படங்கள்: சு.குமரேசன்

'அவள் விகடன்’ இதழுக்காக 30 வகை சமையல்கள் செய்து அசத்திய கலைச்செல்வி சொக்கலிங்கம், நம் நீண்ட நாள் வாசகிகள் சரஸ்வதி சிவராமன் மற்றும் சசிரேகா... இவர்கள்தான் அவள் ரெவ்யூ டீமில் இம்முறை இடம்பெற்றவர்கள். அவர்களின் பார்வையில்...

கலைச்செல்வி சொக்கலிங்கம்: காரைக்குடி என்ற பெயருக்கேற்றபடி எல்லா அயிட்டங்களும் இருந்தன. மீன் வறுவல், அருமையாக செய்திருந்தார்கள். உணவுடன் சேர்த்து, அங்கே மெல்லியதாக கசிந்த கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளையும் ருசித்தேன். சர்வீஸ் ரொம்ப சுமார். எதையும் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டியிருந்தது!

சாப்பிட வாங்க !

சரஸ்வதி சிவராமன்: இறால் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி என்று ஆர்டர் செய்து நாங்கள் மூன்று பேரும் ஷேர் செய்து சாப்பிட்டோம். ஆனால், எல்லா பிரியாணியும் ஒரே ருசியில் இருந்தது ஏன் என்று தெரியவில்லை. 'காரைக்குடி’ ரெஸ்டாரன்ட்டில் கோலா உருண்டை இல்லாதது வேடிக்கை. மட்கா குல்ஃபி டாப்!

சசிரேகா: நண்டு லாலிபாப் அருமை. சென்னையில் எந்த ஓட்டலிலும் இந்த மாதிரி லாலிபாப் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. மட்டன் சுக்காவை இன்னும் கொஞ்சம் சுருள வறுத்திருக்கலாம்.

சாப்பிட வாங்க !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism