Published:Updated:

சாப்பிட வாங்க !

படங்கள்: ஆ.முத்துக்குமார்

சாப்பிட வாங்க !

படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

வழக்கமான உணவிலிருந்து ஒரு மாறுதலுக்காக 'இந்த வாரக் கடைசியில், எந்த ஹோட்டலுக்குப் போகலாம்..?’ என்று வீட்டிலிருந்து யோசிப்பவர்களுக்கும், 'ஒரே இடம் போரடிச்சுப் போச்சுப்பா... காசு செலவானாலும் பரவாயில்லை. நல்ல ஹோட்டலா பார்த்துப் போகலாம்’ என்று நினைப்பவர்களுக்கும் ஒவ்வொரு ஹோட்டலின் உணவு வகைகள், சுவை, தரம், விலை என அனைத்தும் முன்கூட்டியே தெரிந்தால்... வசதியாக இருக்கும்தானே! அதற்காகத்தான் முக்கிய உணவகங்களை உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது, 'சாப்பிட வாங்க’ பகுதி!

இம்முறை அவள் டீம் தேர்ந்தெடுத்த ஹோட்டல்... சென்னை, எழும்பூர், மாண்டியத் சாலையில் இயங்கும் 'வெஸ்டின் பார்க்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமாண்ட வரவேற்பு ஹாலின் மூலையில் அமைந்திருக்கிறது உணவகம். பார்ட்டிக்காக... நட்புக்காக... குடும்பத்துக்காக என்று பலரும் குஷியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இங்கு மதிய உணவு பஃபே முறை என்பதால், தரம் பிரித்து ஆர்டர் செய்யும் வேலை இல்லை. சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே உண்டு. சூப், ஐந்து வகை சாலட், ஐந்து வகை அசைவ உணவு, ஐந்து வகை ரைஸ், 11 வகை சைவ பதார்த்தங்கள், ஏழு வகை இனிப்பு உணவுகள், நாண், ரொட்டி, தோசை, மோர் மிளகாய், ஊறுகாய், அப்பளம் என்று கிட்டத்தட்ட முப்பதைந்துக்கும் மேற்பட்ட உணவுகள்!

சாப்பிட வாங்க !

சூப்பை டேபிளிலேயே பரிமாறுகிறார்கள். அசைவமாக சிக்கன் சூப், சைவமாக தக்காளி சூப் கிடைத்தது. இரண்டையுமே பெரிய பாத்திரத்தில் வைத்திருந்து தேவையானபோது எடுத்துக் கொடுக்கிறார்கள். இதையடுத்து... ஸ்பீட் எடுக்கிறது பஃபே!

சாப்பிட வாங்க !

அட, நான்-வெஜ் சாலட். ஆம், சிறுசிறு துண்டுகளாக சிக்கனும், முட்டையும் கலந்து மிளகுத் தூளுடன் வித்தியாசமாக இருந்தது அந்த சாலட். புடலங்காய் பகோடாவும் தனி ருசிதான். அசைவ உணவுகள், அசைவ வாடை இல்லாமல் இருந்தது ப்ளஸ் பாயின்ட். அனைத்து வகை உணவுகளுமே... அத்தனை ஏ.சி-யிலும் சூடாகவே இருந்ததைப் பாராட்டலாம்! விருப்பப்படுபவர்களுக்குச் சுடச்சுட தோசை சுட்டுக்கொடுப்பதும் கவரும் அம்சமே!

சாப்பிட வாங்க !

கடைசியாக சாப்பிடும் இனிப்பு வகைகளான பெங்காலி ஸ்வீட்ஸ், முந்திரி ஸ்வீட்ஸ், புட்டிங், கேக், ஐஸ்கிரீம் மற்றும் ஃப்ரூட் சாலட் ஆஹா...! எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்திருப்பவர்கள், நாம் துடைத்துக் கொள்வதற்காக டேபிளில் தரும் துணியை மிருதுவானதாகவும்... கூடுதல் சுத்தத்தோடும் பராமரித்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றியது!

சாப்பிட வாங்க !

ஆகக்கூடி, குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்து உணவாட நிச்சயம் செல்லலாம்.

- சுவைப்போம்...