வார இறுதி என்றாலே... புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் அலைமோதும் உள்ளூர் குடும்பத்தினர்களும், சனி - ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரிக்கு விசிட் அடிக்கும் வெளியூர் குடும்பத்தினர் மற்றும் ஐ.டி. உள்ளிட்ட அனைத்துத் துறை இளசுகளும், வயிறு ஆணையிட்டதும் சுவையான உணவகத்தை தேடிப்பிடித்து சாப்பிடத் தவறுவதில்லை... ருசி மற்றும் தரத்துக்காக! அவர்களுக்கு உதவ, இந்த இதழின் 'சாப்பிட வாங்க’ பகுதியில் இடம்பிடிக்கிறது... புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள ஆம்பூர் சாலையில் இருக்கும் 'சைனா டவுன்’ உணவகம். அதன் தரம், சுவை, விலை பற்றிய நேரடி அலசல் இதோ...

முதல் தளத்தில் உணவகம் அமைந்துள்ளது. படிகளைக் கடந்து உள்ளே சென்றால்... பிரதானமான, படுசுத்தமான ஹால். சைனீஸ் உணவகம் என்பதற்காகக் கூடுதல் வேலைப்பாடுகளைச் செய்யாமல்... அப்படியே விட்டு வைத்திருப்பதே தனி அழகைத் தருகிறது.

புதுச்சேரியைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் அயல்நாட்டு பயணிகள், உள்ளூர் குடும்பங்கள் என்றிருந்த கூட்டத்தில் 'அவள் விகடன்' குழுவும் இடம் பிடித்தது. மெனு கார்டில் இடம்பிடித்திருக்கும் சைனீஸ் உணவு வகைகளின் பெயர்கள் திணற வைத்தன. அது என்னவென்று கேட்கும் முன்பாகவே குறிப்பறிந்து... 'இது, இந்த வகை உணவு; இது, இந்தப் பொருளில் தயாராகியிருக்கிறது; இப்படித்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது' என்று வெயிட்டர்கள் விளக்கம் தருவது அசத்தல்! கூடவே, 'இந்த வகை உணவு இங்கு பிரபலம், பிரமாதமாக இருக்கும், ருசித்துப் பார்த்தால் நீங்கள் இதன் சுவையை நிச்சயம் விரும்புவீர்கள்’ என்று எடுத்துக் கொடுப்பதையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

அவர்கள் சொல்வது அத்தனையும் மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதை ஒவ்வொரு உணவுமே நிரூபித்தது! அதேசமயம்... சூப், ஸ்டாட்டர்ஸ், ஃப்ரைடு ரைஸ் என அத்தனை வகைகளும் கூடுதலாகவே சப்ளை செய்யப்படுவதால்... ஒருவரால் மொத்த உணவையும் சாப்பிட முடியவில்லை. மீதமாவதை வீட்டுக்கு 'பார்சல்’ செய்து எடுத்துச் செல்லவும் உதவுகிறார்கள். ஒரே வகை உணவை ஆர்டர் செய்வதை தவிர்த்து, இரு வகையான உணவுகளை ஆர்டர் செய்து ஷேர் செய்து சாப்பிடுவது குட்! சாப்பிட்டவுடன் டேபிளை க்ளீன் செய்யும் விறுவிறுப்பு, உணவு சூடாகவே பரிமாறப்படுவது கூடுதல் சிறப்பைப் பெறுகின்றன.

பார்க்கிங் ஏரியாவில் டூ வீலர், ஃபோர் வீலர் என்று வாகனங்களை நிறுத்திவிட்டு, இறங்குவதற்குள்... போதும் போதுமென்றாகிவிடுகிறது. நகரப் பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள் என போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்திலிருப்பதுதான் காரணம்!

இப்படி சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும்... அசைவ மற்றும் சைவ உணவு என இரு தரப்பினரையுமே அசத்தத்தான் செய்கிறது... 'சைனா டவுன்’.

- சுவைப்போம்...
படங்கள்: ஜெ.முருகன்

இம்முறை அவள் விகடன் ரெவ்யூ டீமுடன் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு வாசகிகளும் பங்குகொண்டனர். அவர்களின் பார்வையில்...

ஸ்ரீவித்யா (விளம்பர ஆலோசகர்): ''வெஜிடபிள் சூப், ஸ்பிரிங் ரோல் ரொம்பவே நல்லா இருந்துச்சு. சைனீஸ் டைப் உணவுங்கிறதால எண்ணெய் அதிக அளவு பயன்படுத்தாம இருக்கறது நல்ல விஷயம். ஃப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸ் ரெண்டுமே சேர்ந்த மாதிரியான உணவு வகையை ஷேர் செய்து சாப்பிட்டோம்... சூப்பரா இருந்துச்சு. அஜினமோட்டோ மற்றும் செயற்கையாக ருசி தரும் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாதது பாராட்டப்பட வேண்டிய விஷயம். நம்ம ஊர் காரசார சமையலுக்குப் பழகிப்போன நாக்குக்கு, இங்க காரம் ரொம்பக் குறைவா இருக்கறது... சின்ன குறை!''

ஜோதி (மருத்துவமனை வரவேற்பாளர்): ''ஸ்வீட் சிக்கன் சூப் ரொம்பவே ருசியா இருந்துச்சு. வஞ்சர மீனை வித்தியாசமா, ரொம்பவே டேஸ்ட்டியா ஃப்ரை பண்ணியிருந்தாங்க. இறால் ஃப்ரையும் நல்லா இருந்துச்சு. வீட்டுல பயன்படுத்துற மசால் பவுடர்களுக்கும், இங்க பயன்படுத்துறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. மீன் வறுவலை வீட்டுல செய்து பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.''

சசிகலா (தொழில்முனைவோர்): ''எல்லாமே ஓ.கே. அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்சது... ட்ரை ஐஸ்க்ரீம். பொதுவா இரவு நேரத்துல அதிகமா சாப்பிட்டா அஜீரண கோளாறு ஏற்படும். இங்க ஹெவியா சாப்பிட்டாலும் நைட் நிம்மதியா தூங்க முடிஞ்சுது. சாப்பிட்ட ஒவ்வொரு உணவிலும் சைனீஸ் டேஸ்ட் இருந்தது. இவ்வளவு நாளா புதுச்சேரியில இருக்கோம், இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிட்டோமேனு நினைக்க வெச்சுருச்சு!''

அன்னபூர்ணா (இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்): ''ஹோட்டல்ல எல்லாமே எளிமையா இருந்தது... ப்ளஸ் பாயின்ட். முதல்ல ஒரு காலிஃப்ளவர் சூப் ஒண்ணு ஆர்டர் பண்ணினோம். அதோட ஸ்மெல் பிடிக்காததால வேற ஒரு சூப் சாப்பிட்டோம். ரொம்பவே சூப்பரா இருந்தது. சர்வீஸ் பண்றப்ப சிரிப்போட பரிமாறினா நல்லா இருக்கும். விலை குறைவா இருக்கறதும் பெரிய ப்ளஸ். குழந்தைங்களோட வந்து சாப்பிட, 'சைனா டவுன்’ சூப்பர் சாய்ஸ்!''