Published:Updated:

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ்

- எஸ்.சாந்தி

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

- எஸ்.சாந்தி

Published:Updated:
ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ்
ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

நாட்டுக் கதம்ப சாதம்

தேவை: பச்சரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், பரங்கிக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், சேனைக்கிழங்கு போன்ற நாட்டுக் காய்கள் - 300 கிராம், வேகவைத்த மொச்சை - 100 கிராம், புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு, சாம்பார்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - 2, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 10 பற்கள், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடலை எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: முதலில் ஒரு குக்கரில் பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், துருவிய இஞ்சி, சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரை விட்டு இறக்கவும். பிறகு ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, இதனுடன் நறுக்கிய காய்கறி கலவை, வேகவைத்த மொச்சை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார்த்தூள், சிறிதளவு உப்பு, புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு எடுக்கவும். பிறகு இதை வேகவைத்த பருப்பு சாதத்தில் ஊற்றி கலந்து நன்கு மசித்து, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளிதம் செய்து சேர்த்து இறக்கவும். இதன்மீது கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வெல்லம், நெய் சேர்த்துக் கிளறியெடுத்தால் வீடே கமகமக்கும் நாட்டுக் கதம்ப சாதம் தயார். இதற்கு வற்றல், அப்பளம் பெஸ்ட் சைடிஷ்.

அதிரசம்

தேவை: சிவப்பரிசி அல்லது பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - முக்கால் கப், சுக்கு, ஏலக்காய் - தலா கால் டீஸ்பூன் (பொடிக்கவும்), நெய் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், விருப்பப்பட்டால் வெள்ளை எள் - 2 சிட்டிகை.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: சிவப்பரிசி அல்லது பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி, அரைத்து, சலித்துவைத்துக்கொள்ளவும். பிறகு, துருவிய வெல்லத்தில் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி, கொதிக்க விடவும். இதில் பதம் மிகவும் முக்கியம். வெல்லப்பாகு உருட்டுப்பதம் வந்ததும் அதில் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் மற்றும் சலித்த மாவைக் கொட்டிக் கிளறி, நெய் விட்டு அடுப்பை உடனே அணைக்கவும். பிறகு ஒரு மணிநேரம் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வாழையிலையில் எண்ணெய் தடவி அதில் தட்டி சூடான நல்லெண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான அதிரசம் தயார்.

சிறப்பு: பாரம்பர்ய சுவைமிகுந்த இந்த அதிரசம் ருசியானது மட்டுமின்றி, சத்தானதும்கூட. புரதம் மற்றும் இரும்புச்சத்துமிக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பச்சைப்பயறு பாயசம்

தேவை: பச்சைப்பயறு - 100 கிராம், வெல்லம் - 200 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, உலர்ந்த திராட்சை தலா - 25 கிராம், பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு குக்கரில் நெய்விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய்ப்பல், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை வறுத்து தனியே எடுத்துவைக்கவும். பிறகு, அதிலேயே பச்சைப்பயறு சேர்த்து வதக்கி பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும். பிறகு வெல்லத்தைக் கொதிக்க வைத்து, அதில் ஊற்றிக் கிளறி, நன்கு கலக்கி, இதில் வறுத்த எடுத்தவற்றை கலந்து நன்கு கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து திக்கான தேங்காய்ப்பால்விட்டு இறக்கினால், மண்மணக்கும் பச்சைப்பயறு பாயசம் தயார். தேங்காய்ப்பால் விட்டதும் அடுப்பை அணைத்துவிடவும். கொதிக்க விடக் கூடாது.

சிறப்பு: உடலுக்கு நல்ல பலத்தையும் தேகத்துக்கு நல்ல மினுமினுப்பையும் தரும். மெலிந்தவர்கள் வாரம் இருமுறை சாப்பிட, உடல் பூசினாற்போல பருமன் அடைவார்கள்.

நாட்டு அவரைக்காய் பொரித்தக் கூட்டு

தேவை: நறுக்கிய நாட்டு அவரைக்காய் - ஒரு கப், பாசிப்பருப்பு - 50 கிராம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி, சீரகம் - கால் டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு குக்கரில் அவரைக்காய், பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு எடுக்கவும். பிறகு அதில் வறுத்து அரைத்த பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதிவந்தவுடன், தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

சிறப்பு: நார்ச்சத்தும் புரதச்சத்தும் மிகுந்து காணப்படும் இதை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நம் பாரம்பர்ய துணை உணவு இது.

கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு

தேவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பற்கள், தக்காளி - 2, புளிக்கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சாதம் - ஒரு கப், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன். வறுத்து அரைக்க: எண்ணெய் - தேவையான அளவு, உளுந்து - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு.

தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பாதி வெந்தும் அதில் நான்காக வகுந்த கத்திரிக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) சேர்த்துக் கிளறி பின்பு உப்பு, புளிக்கரைசல்விட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் ஏழு நிமிடங்கள்விட்டு, அடுப்பை அணைக்கவும். இதில் வேகவைத்த சாதம் சேர்த்து அதன்மீது வறுத்துபொடித்த பொடியைத் துாவி ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால், மணம் வீசும் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு தயார்.

சிறப்பு: இது சிறந்த மதிய உணவாகும். பள்ளிக்குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்றது.

சிவப்பரிசி காரக்கொழுக்கட்டை

தேவை: பதப்படுத்திய சிவப்பரிசி மாவு - ஒரு கப், தண்ணீர் - 4 கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 8, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, இதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துப் புரட்டி தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கும்போது உப்பு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து, அதனுடன் சிவப்பரிசி மாவைக்கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கிளறி இறக்கிவைக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் எட்டு முதல் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால், மணக்கும் சிவப்பரிசி காரக்கொழுக்கட்டை தயார்.

சிறப்பு: சத்துமிகுந்த இந்தக் கொழுக்கட்டை இளம்பருவத்தினருக்கேற்ற மாலை நேர சிற்றுண்டி. ஆவியில் வேகவைத்து எடுப்பதால், அனைத்து வயதினரும் உண்ணலாம். சிவப்பரிசியில் உள்ள சத்துகள் உடலை பலப்படுத்தும்.

பொரி அரிசி மாவு உருண்டை

தேவை: இட்லி அரிசி - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - 2, முந்திரி - 15, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். விருப்பப்பட்டால் தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: இட்லி அரிசியை வாணலியில் நன்கு சிவக்க வறுத்து அரைத்து வைக்கவும். பிறகு வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டுக் கரைத்துக் கொதிக்கவிட்டு அதில் வறுத்துப்பொடித்த இட்லி அரிசி மாவைப் போட்டு நன்கு கிளறி உதிர் உதிராக வரும் பதத்தில் இறக்கி இதில் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்த்துக் கிளறி சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைத்தால், அருமையான பொரி அரிசி மாவு உருண்டை தயார். விருப்பப்பட்டால் தேங்காய்த்துருவலை லேசாக வறுத்து முந்திரி சேர்க்கும்போது இதையும் சேர்த்து உருண்டை பிடிக்கலாம். வறுத்துப் பொடிக்கும்போது சிறிதளவு உப்பு சேர்த்தும் பொடிக்கலாம்.

சிறப்பு: இது ஒரு சிறந்த பாரம்பர்யமிக்க மாலை சிற்றுண்டியாகும். கார்போ-ஹைட்ரேட்டும் இரும்புச்சத்தும் நிரம்பிய சிற்றுண்டி.

வரகரிசிக் கஞ்சி

தேவை: வரகரசி - 100 கிராம் (வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துவைக்கவும்), இஞ்சித்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 10 பற்கள், பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் - 8, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், முருங்கைக்கீரை அல்லது புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சை - அரை பழம் அல்லது மோர் - அரை டம்ளர், உப்பு - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: குக்கரில் வறுத்துப்பொடித்த வரகரிசியுடன் பாசிப்பருப்பு, இஞ்சித்துருவல், பூண்டு, நறுக்கிய வெங்காயம், மிளகு, சீரகம், முருங்கைக்கீரை அல்லது புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்விட்டு நன்கு குழையும் வரை ஐந்து விசில் விட்டு இறக்கிக் கடையவும். விருப்பப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு அல்லது மோர்விட்டு நன்கு கலந்து குடிக்கலாம். இதைச் சூடாக காலை வேலையில் பருகுவது நல்லது.

சிறப்பு: இந்தக் கஞ்சி நம் உடலில் தேங்கியுள்ள வாயுக்களைக் கரைத்து நீக்கும். வாய்வுக்கோளாறு, வயிற்றுப்பொருமல் ஆகியவற்றை நீக்கும். வாத உடம்புக்காரர்களுக்கு மிகவும் சிறந்த சத்தான பாரம்பர்ய கஞ்சி. காய்ச்சலைப் போக்கும். உடல்வலியைக் குறைக்கும்.

வல்லாரைத் துவையல்

தேவை: வல்லாரைக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், துருவிய தேங்காய் - 2 கைப்பிடி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை - பாதி அளவு, காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: வாணலியில் சுத்தம் செய்த வல்லாரையைச் சிறிது எண்ணெய்விட்டு வதக்கியெடுத்து வைக்கவும். பிறகு அதே கடாயில் சின்ன வெங்காயம், பூண்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை வதக்கி, இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து புரட்டி இதைக் கீரையுடன் சேர்த்து உப்பு கலந்து அரைத்தெடுக்கவும். இதில் எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு கலந்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு தாளித்துச் சேர்த்தால் அருமையான வல்லாரைத் துவையல் தயார்.

பயன்: நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளையை திறன்படுத்தும்.

வேப்பம்பூ ரசம்

தேவை: வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன், பருப்புத் தண்ணீர் - 200 மில்லி, மிளகு, சீரகம் தலா - கால் டீஸ்பூன், பூண்டு - 10 பற்கள், காய்ந்த மிளகாய் - 2, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், புளிக்கரைசல் - கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல்விட்டு அதில் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, பொடித்த மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்ததும், பருப்புத் தண்ணீர்விட்டு கடுகு, உளுந்து, துவரம்பருப்பு, சீரகம், பெருங்காயம், காயந்த மிளகாய், வேப்பம்பூ ஆகியவற்றை நெய்விட்டு தாளித்து சேர்த்து இறக்கி ரசத்தில் சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

சிறப்பு: வயிற்றில் உள்ள பூச்சிகளையும் நச்சுகளையும் வெளியேற்றும். வயிற்றைச் சுத்தம் செய்யும். மலச்சிக்கலைத் தடுக்கும். வயிற்றுப்பொருமலைத் தடுக்கும். வாரத்தில் மூன்று முறை இந்த ரசம் செய்து சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

கம்பு லட்டு

தேவை: கம்பு மாவு - ஒரு கப், வெல்லம் - 2 கப், வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு - அரை கப், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: கடாயில் நெய்விட்டு முந்திரியை வறுத்தெடுக்கவும். பிறகு அதே நெய்யில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து வைக்கவும். ஒரு மிக்ஸியில் ஆறிய பாசிப்பருப்புடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து, கம்பு மாவு, துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு சுழற்று சுழற்றி ஒரு தட்டில் கொட்டிவைக்கவும். இதில் சிறிது உருக்கிய நெய்விட்டு லட்டுகளாகப் பிடித்தால் அருமையான கம்பு லட்டு தயார்.

சிறப்பு: இது இரும்புச்சத்து, புரதம் மிகுந்த லட்டு. உடலைக் குளிர்விக்கக்கூடியது. உடல்சூட்டைத் தணிக்கும். உடலைக் கட்டுக்கோப்புடன் மெருகேற்றும்.

சோளக் கஞ்சி

தேவை: நாட்டு வெள்ளைச்சோளம் - ஒரு கப், சீரகம் - கால் டீஸ்பூன், மோர் - 200 மில்லி, உப்பு - தேவையானவை.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: வெள்ளைச்சோளத்தை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைத்து லேசாகப் புளிக்கவிட்டு எடுத்தால், கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான மாவு தயார். ஒரு கப் மாவுக்கு ஏழு முதல் எட்டு கப் தண்ணீர்விட்டு, சீரகம் சேர்த்து நன்கு வேகும் வரை காய்ச்சி, அதில் உப்பு சேர்த்து சிறிது ஆறியதும் அதில் மோர் கலந்து குடிக்கலாம். இதற்குத் துணையாக வல்லாரைத் துவையல் தொட்டுக்கொள்ளலாம்.

சிறப்பு: இதில் உள்ள சத்துகள் உடலை கவசம் போல் காக்கும். இதில் நார்ச்சத்து அதிகம். இது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும்.

கொண்டைக்கடலை சாதம்

தேவை: ஊறவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப், சீரகச் சம்பா அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, கீறிய பச்சை மிளகாய் - 2, தண்ணீர் - இரண்டரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புதினா - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப்போட்டு வதக்கி பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்னர் புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதில் ஊறிய கொண்டைக்கடலை சேர்த்து நன்கு சுருளவதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இதில் அரிசி, கொத்தமல்லி, நெய் சேர்த்துக் கிளறி மூடிப்போட்டு இரண்டு விசில்விட்டு இறக்கினால், கமகம கொண்டைக்கடலை சாதம் தயார்.

சிறப்பு: புரதச்சத்துமிகுந்த இந்தக் கொண்டைக்கடலை சாதம். வளரும் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கும் உடல்பலத்துக்கும் பெரிதும் துணைபுரியும்.

வரகரிசி முறுக்கு

தேவை: வரகரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பொட்டுக்கடலை - கால் கப், எள் - 10 கிராம், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: வரகரிசி, உளுத்தம்பருப்பைத் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையையும் அரைத்து இந்த மூன்றையும் சலித்தெடுத்து தேவையான அளவு உப்பு, எள், சீரகம், பெருங்காயம் மற்றும் வெண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக நீர் தெளித்து முறுக்கு மாவுப்பதத்தில் பிசைந்துகொள்ளவும். முறுக்கு பிழியும் அச்சில் மாவை இட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், பாரம்பர்ய ருசிமிக்க வரகரசி முறுக்கு தயார்.

சிறப்பு: வரகரிசியில் அரிசி மற்றும் கோதுமையைவிட நார்ச்சத்துகள் அதிகம். தாது உப்புகளும் அதிகம். இது உடலைப் பலப்படுத்தும்.

கழனிப் புளிச்சாறு

தேவை: அரிசி கழுவிய நீர் - 3 கப், புளி - எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம் - 15, காய்ந்த மிளகாய் - 5, பச்சை மிளகாய் - 5, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்து, துவரம்பருப்பு, சீரகம், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: முதலில் அரிசி கழுவிய தண்ணீரில் புளியை ஊறவைத்து நன்கு கரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, இதில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும், பொடித்த வெந்தயத்தூள் சேர்த்து இறக்கினால், மணக்கும் கழனிப் புளிச்சாறு தயார். இதற்கு தேங்காய்த் துவையல் நல்ல சைடிஷ்.

குறிப்பு: புளிச்சாறு மிகவும் நீர்க்க இருந்தால், சாதம் வடித்த கஞ்சி 2 டீஸ்பூன்விட்டு கொதிக்கவிட்டும் இறக்கலாம்.

சோயா கோலா உருண்டை

தேவை: சோயா உருண்டைகள் - 2 கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 8 பற்கள், பொட்டுக்கடலை - கால் கப், சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை, புதினா - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: சோயாவை வெந்நீரில் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு அதில் சோம்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி பிறகு கறிவேப்பிலை, புதினா, பொட்டுக்கடலை மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, இறுதியாக மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் புரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு ஊறிய சோயாவைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றிச் சேர்த்து நன்கு பிசைந்து, தேவைப்பட்டால் மட்டும் நீர் தெளித்து பிசையலாம். இதை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சோயா கோலா உருண்டை தயார்.

இஞ்சித் துவையல்

தேவை: இஞ்சி - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 7, வெல்லம் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, இதனுடன் தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி மற்றும் புளி சேர்த்து வதக்கி, இறுதியாக வெல்லம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இந்த அரைத்த துவையலையும் சேர்த்துப் புரட்டி எடுத்தால் இஞ்சித் துவையல் தயார். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி அளவு தேங்காய்த்துருவல் சேர்க்கலாம்.

சிறப்பு: வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமலைத் தடுக்கும். குடல் பகுதிக்கு நன்மை செய்யும். வாய்வுத் தொல்லையை அகற்றும். பசியைத் தூண்டும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும். நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்.

பொருள்விளங்கா உருண்டை

தேவை: பச்சரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், வேர்க்கடலை - 2 கப், ஏலக்காய் - 3, வெல்லம் - 400 கிராம், தண்ணீர் - அரை கப், கொப்பரை நறுக்கியது - அரை மூடி, பொட்டுக்கடலை மற்றும் அரிசி மாவு - தலா கால் கப்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: பச்சரிசியை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு வேர்க்கடலை, பொட்டுக்கடலையையும் வறுக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பொடித்துவைக்கவும். ஒரு கடாயில் வெல்லத்தில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி அதை ‘உருட்டுப் பதம்’ வரும் வரையில் நன்கு காய்ச்சி, பிறகு அதில் கொப்பரை, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரிசி மாவு சேர்த்து அடுப்பை அனைத்து நன்கு கிளறிவைக்கவும். தனியாக ஒரு தட்டில் அரிசி மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும். கடாயில் உள்ள கலவையை உருண்டையாகப்பிடித்து அரிசி மாவில் புரட்டி உருட்டியெடுத்தால், பாரம்பர்யமிக்க பொருள்விளங்கா உருண்டை தயார்.

பயன்: உடலுக்கு வலுசேர்க்கும் பாரம்பர்ய ஸ்நாக்ஸ் இது. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கனிமச்சத்துகள் உள்ளன. வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது.

காரக் குழிப்பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒன்றரை கப், பச்சரிசி - அரை கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், உளுந்து - அரை கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: பணியாரத்துக்கு வேண்டிய இட்லி அரிசி, பச்சரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்து, உப்பு கலந்து புளிக்கவைத்து எடுக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு கலந்து நன்கு வதக்கி, இதை மாவில் சேர்த்துக் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக்கல் சூடானதும் அதில் ஊற்றி வேகவைத்து எடுத்தால், சுவையும் காரசாரமுமான சத்தான குழிப்பணியாரம் தயார். இதற்குத் தேங்காய்ச்சட்னி அல்லது காரச்சட்னி தொட்டுக்கொள்ளலாம்.

சிறப்பு: இதை காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சத்தான அதேநேரம் ருசியான ஆரோக்கியமான பணியாரம் இது.

தேன்குழல்

தேவை: பச்சரிசி மாவு - ஒரு கப், உளுத்தம் மாவு - கால் கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், சீரகம் - 2 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைச் சேர்த்து அதில் வறுத்துப்பொடித்து சலித்த உளுத்தம் மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் எள், பெருங்காயம், சீரகம் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதில் வெண்ணெய் சேர்த்துக் கலந்து தேவையான அளவு நீர் தெளித்து, முறுக்கு மாவுப் பதத்தில் பிசைந்து முறுக்குப் பிழியும் அச்சில் இட்டுப் பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான தேன்குழல் தயார்.

சிறப்பு: இது சத்தான சுவையான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகை. பாரம்பர்ய நாட்டுப் பலகாரம். இதில் சேர்க்கும் அனைத்துப் பொருள்களும் சுவைக்கு மட்டுமன்றி உடலுக்கும் நன்மை பயக்கும்.

நாட்டு ஊத்தப்பம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒன்றரை கப், உளுந்து - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, துருவிய கேரட் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு, இட்லிப்பொடி - சிறிதளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஊத்தப்ப மாவு தயாரிக்க அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்து உப்பு கலந்து புளிக்கவைத்து எடுக்கவும். பிறகு சூடான தோசைக்கல்லில் மாவைச் சிறிது கெட்டியான ஊத்தப்பமாக இட்டு அதன்மீது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அதன்மீது இட்லிப்பொடி சிறிது தூவி நல்லெண்ணெய்விட்டு மூடி போட்டு சிறு தீயில் வைத்து சுட்டெடுத்தால் அருமையான நாட்டு ஊத்தப்பம் தயார்.

சிறப்பு: இதைக் காலைநேர சிற்றுண்டியாக நாம் உண்ணும்போது அந்த நாள் முழுவதும் நல்ல புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணரலாம். நம் உடலுக்கு வேண்டிய கார்போ-ஹைட்ரேட், வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

வெங்காய போண்டா

தேவை: நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - 3, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, சோம்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை உதிர்த்து அதில் இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பிறகு கடலை மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசைந்து பிறகு தேவைப்பட்டால், சிறிது சிறிதாக நீர் தெளித்துப் பிசையவும். மாவை உருண்டையாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் வெங்காய போண்டா தயார்.

சிறப்பு: திடீர் விருந்தாளிகளுக்கேற்ற ஸ்நாக்ஸ். பாரம்பர்ய சுவைமிக்க போண்டாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்.

தேங்காய்ப்போளி

தேவை: மைதா மாவு - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, தேங்காய்த்துருவல் - ஒரு கப், சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: மைதா மாவில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து நீர்விட்டு பிசைந்து எண்ணெய் அல்லது நெய் தடவி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு உள்ளே ஸ்டஃப் செய்ய ஒரு கடாயில் தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வறுத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து புரட்டியெடுத்து வைக்கவும். ஊறிய மைதா மாவை வட்டமாகத் தேய்த்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி சப்பாத்தி போல தேய்த்து சூடான தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய்விட்டு சுட்டெடுத்தால் தேங்காய்ப்போளி தயார்.

சிறப்பு: இதில் இரும்புச்சத்து, கால்சியச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன.

தேன் மிட்டாய்

தேவை: பச்சரிசி - ஒரு கப், தோல் நீக்கிய உளுந்து - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - முக்கால் கப், எலுமிச்சைச்சாறு - 4 துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு - சிறிதளவு, பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊறவைத்து நன்கு அரைத்தெடுத்து ஃபுட் கலர் ஆரஞ்சு, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துவைக்கவும். பிறகு சர்க்கரைப் பாகு தயாரிக்க ஒன்றரை கப் சர்க்கரையில் முக்கால் கப் நீர் சேர்த்து அரை கம்பி பதத்துக்குக் காய்ச்சி அடுப்பை அணைத்து விடவும். இதில் சில சொட்டுகள் மட்டும் எலுமிச்சைச்சாறு விட்டு வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில், அரைத்து தயாராக உள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி அதில் போட்டு நன்கு பொரித்து, உடனே அதை எடுத்து சர்க்கரை பாகில் முக்கி சிறிது நேரம் கழித்து எடுத்துவைத்தால் அருமையான தேன் மிட்டாய் தயார். விருப்பப்பட்டால் பாகில் ஊறிய மிட்டாய்களை எடுத்து தனியாக சர்க்கரையில் ஒரு புரட்டு புரட்டியும் கண்ணாடி டப்பாவில் எடுத்து அடுக்கிவைத்துக்கொண்டு மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை சாப்பிடலாம்.

சிறப்பு: இது பாரம்பர்ய சுவைமிக்க நாவை சுண்டியிழுக்கும் நாட்டு திண்பண்டம்..

அறுசுவை பானகம்

தேவை: புளி - நெல்லிக்காய் அளவு அல்லது எலுமிச்சை - பெரிய அளவில் ஒன்று, வெல்லம் பொடித்தது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நசுக்கிய பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - ஒன்று, வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து 200 மில்லி நீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும் அல்லது ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து 200 மில்லி தண்ணீர் அளவு கலந்துகொள்ளவும். கரைத்த புளி அல்லது எலுமிச்சைச்கரைசலை வெல்லம், உப்பு, மிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து நன்றாகக் கலக்கினால், அனைத்து சுவைகளும் அடங்கிய பானகம் தயார்.

சிறப்பு: இதை வாரம் ஒருமுறை பருகி வர, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். பூச்சி மற்றும் விஷக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். சருமம் மிளிரும். சரும நோய் வராமல் பாதுகாக்கும்.

கோசம்பரி

தேவை: ஊறவைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சை - பாதி அளவு, மாங்காய் - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த பாசிப்பருப்புடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மாங்காய் ஆகியவற்றை நன்கு கலந்து, இத்துடன் தேவையான உப்பு சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு, கடைசியாக தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களைக்கொண்டு தாளித்துக்கொட்டினால், பாரம்பர்ய சுவைமிக்க கோசம்பரி தயார்.

சிறப்பு: இது உடல்சூட்டை நீக்கி, வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

கேழ்வரகுக்களி

தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், தண்ணீர் - 3 - 4 கப், உப்பு - தேவையான அளவு.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு கப் கேழ்வரகு மாவுடன் ஒரு கப் நீர்விட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, அதில் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்த கலவையை ஊற்றி நன்கு வெந்து சுருள் வரும் வரை, கிளறி இறக்கவும். கையில் தண்ணீர் தொட்டு நனைத்துக்கொண்டு உருண்டையாக உருட்டிவைக்கவும். தேவைப்படும்போது எடுத்து கீரைக் குழம்பு, மொச்சைக் குழம்பு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சிறப்பு: உடல்பலத்தை அதிகரிக்கும். இதில் கால்சியம் சத்து மிகுந்துள்ளதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். பெண்களின் மெனோபாஸ் காலத்தில் கட்டாயம் ஒரு வேளையாவது கேழ்வரகுக்களியை எடுத்துக்கொள்வது நல்லது.

வாழையிலை மடக்கு

தேவை: பச்சரிசி மாவு - ஒரு கப், தண்ணீர் - 2 கப், உப்பு - 2 சிட்டிகை, தேங்காய்த்துருவல் - ஒரு கப், நாட்டுச்சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வாழையிலை - தேவையான அளவு, நல்லெண்ணெய் - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, 3 சொட்டு நல்லெண்ணெய்விட்டு கொதிக்கும்போது அரிசி மாவைக் கொட்டி நன்கு கலந்து இறக்கிவைக்கவும். சூடு சிறிது ஆறியதும் நன்றாகப் பிசைந்து ஒரு ஈரத்துணி போட்டு மூடிவைக்கவும். பிறகு ஒரு கடாயில் நெய்விட்டு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரை கலந்து வதக்கி இறக்கி ஆறவிடவும். பிறகு ஒரு வாழையிலையை, சிறிய சிறிய துண்டு இலைகளாகச் செய்து அதில் ஓர் உருண்டை மாவை வட்ட வடிவாகத் தட்டி அதில் இந்த தேங்காய் ஸ்டஃப் வைத்து இலையை மடக்கிவைக்கவும். இப்படியாக எல்லாவற்றையும் செய்து ஓர் இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்தால் அருமையான கமகமக்கும் வாழை ருசிமிக்க இலை மடக்கு தயார்.

சிறப்பு: இது வாழையிலையுடன் சேர்த்து வெந்து வருவதால் இலையின் அனைத்து நற்குணங்கள், பயன்கள் உடலில் சேரும். நார்ச்சத்து மிகுந்தது. உடல் சூட்டைத் தணிக்கும்.

மோர்க்களி

தேவை: புளித்த மோர் - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், பெருங்காயம் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது கிள்ளிய மோர் மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்.

தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: புளிப்பான மோரில் அரிசி மாவு மற்றும் உப்பு கலந்து கட்டியில்லாமல் கரைத்துவைக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயம், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துத் தாளித்து இதில் ஒரு கப் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும்போது கரைத்துவைத்த மாவை ஊற்றிக் கலந்து ஏழு நிமிடங்கள் கிளறி இறக்கினால் மோர்க்களி தயார்.

சிறப்பு: காலை நேர சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். உப்பு, புளி, காரம் என நாவின் சுவைமொட்டுகளைத் திறக்கச் செய்யும். இதில் உள்ள புரதச்சத்து வயிற்றுக்கு நன்மை பயக்கும்.

கேழ்வரகு கீரை அடை

தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் - 30 வகை பாரம்பர்ய உணவுகள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பச்சரிசி மாவு இவற்றுடன் உப்பு கலந்துவைத்து அதில் தேவையான அளவு தண்ணீர்விட்டு நீர்க்கக் கரைத்து 20 நிமிடங்கள் வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்து கிளறி சூடான தோசைக்கல்லில் தோசையாக ஊற்றியும் எடுக்கலாம். கெட்டியாக கரைத்து அடைபோல தட்டியும் எடுக்கலாம்.

சிறப்பு: இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, கனிமச்சத்துகள் அடங்கியுள்ளன. இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கேற்ற சிறப்பு உணவாகும்.

காலத்தின் மாற்றத்தைக் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நாள்களில் நம் பாரம்பர்ய சுவை மிகுந்த நாட்டுப் பண்டங்களை சுவைக்க மறந்துகொண்டிருக்கிறோம். ருசியும் ஆரோக்கியமும் ஒருசேர பெற்றிருப்பவை நம் பாரம்பர்ய சுவைமிக்க நாட்டுப் பண்டங்கள்.

எஸ்.சாந்தி
எஸ்.சாந்தி

துரித உணவு மோகத்தில் தொலைந்துகொண்டிருந்த நம்மை மீட்டெடுத்ததில் லாக் டௌனுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆரோக்கியமாகச் சாப்பிட்டாக வேண்டிய அவசியத்தை உணர்த்திய லாக்டௌன், அத்தகைய உணவுகளைத் தேடி ஓடவும் வைத்ததுதான் நிஜம். அந்தத் தேடலில் பலரும் கண்டெடுத்தவை பாரம்பர்ய உணவுகள். நலம்வாழ உதவும் நாட்டுப் பண்டங்களை நாம் சமைத்து, சுவைத்து மகிழ உறுதுணை செய்துள்ளார், KrishVa’s Kitchen என்ற பெயரில் யூடியூப் சேனலை நிர்வகிக்கும் ஓசூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.சாந்தி. பாரம்பர்ய சுவை மாறாமல், சத்துகள் குறையாமல் அதேநேரம் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல சமைத்து அழகிய படங்களுடன் விருந்து படைத்துள்ளார்.

ஸ்நாக்ஸ் டு ஃபுல் மீல்ஸ் வரை பாரம்பர்ய உணவுகளில் விருந்தேவைக்கலாம் என்பதற்கு இந்த உணவுகளே உதாரணங்கள். எளிதாகக் கிடைக்கும் பாரம்பர்ய பொருள்களைவைத்து, சுலபமாக சமைத்துவிடக்கூடிய இந்த உணவுகள் உங்கள் சுவை அரும்புகளை நிச்சயம் மலரச் செய்யும்.