Published:Updated:

சாப்பிட வாங்க!

இப்போது... வேலூர்!

சாப்பிட வாங்க!

இப்போது... வேலூர்!

Published:Updated:
##~##

மாநகராக உருவெடுத்துவிட்ட வேலூரில் என்றைக்குமே மாறாத விஷயங்களாக... வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோயில் என பல விஷயங்கள் இடம்பிடித்துள்ளன. அந்த வரிசையில் சுவைமிகு ஹோட்டல்களுக்கும் இடம் கொடுத்து வைத்துள்ளனர் நம் மக்கள். அப்படிப்பட்ட ஹோட்டல்களின் தரம், சுவை, விலை போன்றவற்றை அறிந்து அறிமுகப்படுத்த வேலூருக்குப் பயணப்பட்டது அவள் விகடன் 'சாப்பிட வாங்க' ரெவ்யூ டீம்.

சாப்பிட வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோட்டல்: பேபி ரெஸ்டாரன்ட்
லேண்ட் மார்க்: 7, ஆபீஸர்ஸ் லேன், வேலூர்
உணவு: சைவ - அசைவ உணவுகள்
செலவு: ஒருவருக்கு

சாப்பிட வாங்க!

150 முதல்

சாப்பிட வாங்க!

250 வரை

நம்ம டீம் தேர்ந்தெடுத்த 'பேபி ரெஸ்டாரன்ட்’, முக்கிய சாலையில் அமைந்திருந்தாலும், தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக ஊர் முழுக்க பாதைகளை மாற்றி மாற்றி வைத்துள்ளதால்... ஹோட் டலை அடைவதென்பது... 'விஸ்வரூபம்' பட ஆப்கானிஸ் தான் ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது.

தரை தளத்தில் சட்டென்று சாப்பிட்டு செல்ல ஒரு பகுதி, நாலாவது தளத்தில் ஏ.சி. அறை மற்றும் ரூஃப் கார்டனுடன் குடும்பத்துடனும் ரிலாக்ஸ்டாக சாப்பிட ஒரு பகுதி என இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். நம் ரெவ்யூ டீம் ரூஃப் கார்டனைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தது.

சாப்பிட வாங்க!

பெரிய டேபிள்... பத்து பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும்படியான இட வசதி. சுற்றி குட்டிச்குட்டி செடிகளுடன் கூடிய தோட்ட அமைப்பு. குழந்தைகளுக்கென்றே ஒரு நீச்சல் குளம், ராட்டினம், மரக் குதிரைகள் என தோற்றம் அசத்தத்தான் செய்கிறது.

மெனு கார்டில் அசைவ உணவு வகைகள் நிறையவே இருந்தாலும்... பேபி ரெஸ்டாரன்ட் டின் ஸ்பெஷல்... பிரியாணி வகைகள்தான்!

ஆனால், ''இந்த பேபி ரெஸ்டாரன்ட் பிரியாணியை பகல் 12.30 மணிக்கு மேல்... ஒரு மணிக்குள் வந்து சாப்பிட வேண்டும். அந்த நேரத்தில் அவசரமில்லாமல் சாப்பிடலாம். அடுத்த அரைமணி நேரத்தில் கூட்டம்   அதிகமாகி அவசரமாக பரிமாறுவதோடு மட்டு மல்லாமல், நம் டேபிளுக்கு பின், அடுத்து சாப்பிடு வதற்காக சிலர் காத்திருப்பார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பிரியாணி காலியாகிவிடும்!'' என்று எச்சரிக்கை கொடுக்கிறார் நம் டீமில் இம்முறை இணைந்து கொண்ட உள்ளூர்வாசியும் அவள் வாசகியுமான செண்பகவள்ளி.

சாப்பிட வாங்க!

சாம்பிளுக்கு சிக்கன் பிரியாணியைப் பகிர்ந்து சாப்பிட்டோம். வாசகி சொன்னது நிஜம்... சூப்பர்தான். அடுத்து, ஆர்டர் செய்த அயிட்டங்களை நம்முன் அடுக்கினார்கள். ஆனால், நாலாவது தளம், ரூஃப் கார்டன் என்பதாலோ என்னவோ... தேவைப்படும்போதெல்லாம் வெயிட்டரைத் தேட வேண்டியிருந்தது. அப்படித் தேடிக் கண்டுபிடித்து தேவையானதைச் சொன்னால், அதன் பிறகு அவர் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் சற்று நேரமாகிவிடுவதால்... சூடு குறைந்தே பரிமாறப்படுகிறது. ஆனால், சுவையில் குறையில்லை.

சாப்பிட வாங்க!

தென்னிந்திய உணவு வகைகளுடன், வட இந்திய உணவு வகைகளும், தந்தூரி வகைகளும் ஒரு சேர இருப்பது சாப்பிடுபவர்களுக்கு நிறைய சாய்ஸ் தருகிறது. கும்பலாக வந்த கல்லூரி மாணவர்கள், இளம் ஜோடிகள், பிஸினஸை வெற்றிகரமாக முடிந்த களிப்புடன் வந்த பிஸினஸ் பிரதிநிதிகள், குதூகலமாக வந்த குடும்பத்தினர் என அந்த மதிய நேரத்திலும் குவிந்தவர்களே அதற்கு சாட்சி! குழந்தைகள் விளையாடும் இடம், பார்க்கிங் வசதி போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் தந்திருப்பது... குறிப்பிடப்பட வேண்டிய விஷயங்களே!

அதிக செலவில்லாமல்... அதேசமயம், ருசியாகச் சாப்பிட நினைக்கிறீர்களா... தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்... பேபி ரெஸ்டாரன்ட்டை!

- சுவைப்போம்...

படங்கள்: ச.வெங்கடேசன்

ம்முறை அவள் விகடன் ரெவ்யூ டீமுடன் வேலூர் - செண்பகவள்ளி, திருப்பத்தூர் - ஜெயந்தி, ஆரணி - செல்வி, அபிராமி ஆகிய வேலூர் மாவட்ட வாசகிகள் பங்கு கொண்டனர். அவர்களின் பார்வையில்...

செண்பகவள்ளி, பேராசிரியை: இதே ஊரைச் சேர்ந்தவள் என்பதால் இந்த ஹோட்டலோட பிரியாணியை அடிக்கடி சுவைத்திருக்கேன். அதனால இறால் ஃப்ரைடு ரைஸை ருசிச்சேன். அத்துடன் கார்லிக் ஃபிஷ்ஷ§ம், ஃபிங்கர் ஃபிஷ்ஷ§ம் டேஸ்ட் பார்த்தேன். நல்லா இருந்தது. சாதத்துக்கு செட்டிநாடு சிக்கன் சேர்த்துக்கிட்டேன். வழக்கமான செட்டிநாடு டேஸ்ட் கொஞ்சம் குறைவுதான்.

சாப்பிட வாங்க!

அபிராமி, இல்லத்தரசி: சைவ வகையில் மஷ்ரூம் 65 சூப்பர். அசைவ அயிட்டங்களில் எதையும் ஒதுக்கித் தள்ள முடியல. சூப்பர்னு சொல்ல முடியாவிட்டாலும், எல்லாமே சுவையா இருந்தது.

ஜெயந்தி, இல்லத்தரசி: மட்டன் சுக்காவைத்தான் கேள்விப்பட்டிருக்கேன். இங்கே சிக்கன் சுக்கா அயிட்டத்தைப் பார்த்துச் சுவைத்தேன். கார்லிக் சிக்கன் வித்தியாசமான சுவையில் இருந்தது. தந்தூரி அயிட்டங்களில் இன்னும் கொஞ்சம் காரத்தைக் கூட்டியிருக்கலாம். ஃப்ரைடு ரைஸ் அயிட்டங்கள் சூடு குறைவா இருந்தது.

செல்வி, புடவை டிசைனர்: என்னோட ஃபேவரைட் டிஷ் வெஜ்தான். வெரைட்டியான விஷயங்கள் நிறைய இருந்தாலும், கொஞ்சம் சாதத்தைப் போட்டு ரசம் ஊற்றி சாப்பிடுவதில் கிடைக்கும் சுவை வேற எதிலும் இல்லைனுதான் சொல்வேன். அந்த வகையில இங்கே சாப்பிட்ட ரசம் சூப்பர்!

சாப்பிட வாங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism