Election bannerElection banner
Published:Updated:

பனங்கற்கண்டு பாயசம்... பலே பலே!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்ஃபுட்ஸ்

படங்கள்: எம்.உசேன்

##~##

மேக்ரோனி  தால் டிலைட்

 தேவையானவை: வேக வைத்த மேக்ரோனி - 200 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் எண்ணெய் - 100 மில்லி, துருவிய கேரட், தேங்காய் (இரண்டும் சேர்த்து)  - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ருசிக்கேற்ப.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை அரை மணி ஊற வைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ரவை பதத்துக்கு கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதனுடன் அரைத்த பருப்பு மசாலா சேர்த்து, பாதி வதங்கிய பின் வேக வைத்த மேக்ரோனி சேர்த்து, மேலும் உதிராக வரும் வரை கிளறி இறக்கவும். இதில் கொத்தமல்லி, புதினா, துருவிய கேரட், தேங்காய் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து கலந்தால்... ஆளை அசத்தும் மணத்தில், ருசியில் மேக்ரோனி - தால் டிலைட் தயார்.

- லஷ்மி ஸ்ரீனிவாசன், சென்னை-24

பனங்கற்கண்டு பாயசம்... பலே பலே!

 வீட்  பனங்கற்கண்டு பாயசம்

தேவையானவை: கோதுமைக் குருணை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பனங்கற்கண்டு - ஒரு கப், முற்றிய தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 5, முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 20 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கோதுமைக் குருணை, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நெய்விட்டு வறுக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிட்டு, நாலு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காயை அரைத்துப் பால் எடுக்கவும்.

அடுப்பிலேயே குக்கரை திறந்து வைத்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் கிளறிக்கொண்டே, ஐந்து நிமிடங்களுக்குப்பின் தேங்காய்ப் பால், பொடித்த ஏலக்காய், நெய்யில்  வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து, கொதித்தபின் இறக்கவும்.

- லலிதா சண்முகம், திருச்சி-3

பனங்கற்கண்டு பாயசம்... பலே பலே!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மேக்ரோனி - தால் டிலைட்: மேக்ரோனி இல்லாவிட்டால், அதற்குப் பதில் வேக வைத்த சேமியாவை பயன்படுத்தியும் செய்யலாம்.

வீட் - பனங்கற்கண்டு பாயசம்: பாயசத்தைக் கொதிக்கவிடும்போது, நெய்யில் வறுத்த கடலை மாவு சிறிதளவு சேர்த்தால், வாசனை மிகவும் நன்றாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு