Published:Updated:

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

'சாப்பிட வாங்க’... வெளியூர்களுக்குச் செல்பவர்களும், அதே ஊரில் இருப்பவர்களும் அந்தந்த ஊரில் உள்ள உணவகங்களின் தரம், சுவை, விலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும் பகுதி!

ஹோட்டல்: ஹோட்டல் ஸ்ரீ காமாட்சி, புதுச்சேரி
லேண்ட் மார்க்: 20, சுந்தரராஜ நகர், 100 அடி சாலை (ஹீரோ ஹோண்டா ஷோரூம் அருகில்),
புதுச்சேரி-4.
உணவு: சைவ - அசைவ உணவு வகைகள்
செலவு:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாப்பிட வாங்க!

150 முதல்

சாப்பிட வாங்க!

250 வரை.

ம்முறை அவள் ரெவ்யூ டீம் தேர்ந்தெடுத்தது... புதுச்சேரி ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி! இந்த ஊரில் இருப்பவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய உணவகமாக மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தேடிச் செல்லும் உணவகமாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. உணவகம் 'ஹவுஸ்ஃபுல்' ஆகியிருந்த நிலையில், பல குடும்பங்கள் வெளியே காத்திருந்ததே... இதற்கு சாட்சி! பார்சலை, வரிசையில் நின்று பெற்றுச் சென்றவர்களின் கூட்டமும் அதிகம்.

சாப்பிட வாங்க!

அறை, அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் உள்ள அனைத்து டேபிள்களும் விசாலமாக இருக்கின்றன. அதில் பெரிய வாழை இலைகளை விரித்து, வகை வகையாகப் பரிமாறுகிறார்கள். மீல்ஸ், பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளை... காடை, சிக்கன், மட்டன், மீன், முட்டை என்று விதவிதமான அயிட்டங்களாக தயாரிக்கிறார்கள். 'ஸ்ரீ காமாட்சி சிறப்பு வகைகள்' என்கிற பெயரில் சிக்கன் காமாட்சி, மீன் காமாட்சி, இறால் காமாட்சி, மீன் பொடிமாஸ், மீன் குழி ஆம்லெட், இறால் குழி ஆம்லெட், மட்டன் குழி ஆம்லெட், சிக்கன் குழி ஆம்லெட்... என்று உணவுகளின் பட்டியல் நீள்கிறது.

மதிய சாப்பாட்டுடன்... பொரியல், கூட்டு, பச்சடி போன்றவை பரிமாறப்படுகிறது. பிரியாணி சாப்பிடுபவர் களுக்கு, தேவையென்றால் அரிசி உணவையும் வழங்குகிறார்கள். குடும் பத்தினர் அனைவரும் ஒருசேர சாப்பிட ஃபேமிலி தயிர் பரிமாறுகிறார்கள். தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள இந்த ஃபேமிலி தயிர் உபயோகமாக இருக்கிறது. விலையும் கூடுதலாக இல்லை.

'ஃபேமிலி பேக்’ எனப்படும் பார்சல்... 550 ரூபாய். இதில் 2 லார்ஜ் மட்டன் பிரியாணி, 2 சிக்கன் குருமா, ஒரு சிக்கன்-95 (கால் எலும்புடன் கூடிய ஸ்பெஷல் கோழி வறுவலுக்குத் தான் இங்கே 'சிக்கன் 95’ என்று பெயரிட்டுள்ளனர்), இத்துடன் 4 முட்டைகள் தருகிறார்கள். நான்கு பேருக்குக் குறையாமல் இதைச் சாப்பிடலாம்.

சாப்பிட வாங்க!

நாம் சாப்பிட்டு வெளியே வர, உள்ளே திமுதிமுவென நுழைந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது 'நம்ம வீட்டு சமையல்’ என்று அந்த  ஹோட்டலில் எழுதி வைக்கப்பட்டிருப்பதற்கான அர்த்தம் புரிந்தது!

சுவைப்போம்...

படங்கள்: ஜெ.முருகன்

சாப்பிட வாங்க!
சாப்பிட வாங்க!

ரெவ்யூ டீமில் இம்முறை இடம் பெற்றவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த வாசகிகளான மூன்று லட்சுமிகள். ஆம்... லட்சுமி, ராமலட்சுமி, மகாலட்சுமி! அவர்களின் டேஸ்ட்டில்...

லட்சுமி (சமூக செயல்பாட்டாளர்): இந்த ஊர்லயே குடியிருந்தாலும்... இந்த ஹோட்டல்ல முதன் முறையா சாப்பிட்டது இப்போதான். அயிரை மீன்குழம்பும் சிக்கன் பிரியாணியும் சிக்கன் காமாட்சியும் சூப்பர். வஞ்சிரம் மீன் வறுவல் வழக்கம் போல இருந்துச்சு.

ராமலட்சுமி (விற்பனை பிரதிநிதி): பிரியாணியில் மசாலா அயிட்டத்தை குறைவா சேர்த்திருக்கலாம். ஆம்லெட் வகை வித்தியாசமா இருந்துச்சு. அதிலும் மீன் ஆம்லெட் அருமை. வஞ்சிர மீன் குழம்பு சுவையாக இருந்தது. நான் ஒரு பிடி சாதம் அதிகமாவே சாப்பிட்டேன்.

மகாலட்சுமி (குடும்பத் தலைவி): பிரியாணி வகையில் எண்ணெயைக் குறைவா சேர்த்திருக்கலாம். மெஜிரா சிக்கன் வறுவல், சிக்கன்-65 போல வித்தியாசமா இருந்துச்சு. சாப்பிட்டதுமே டேபிளை உடனுக்குடன் கிளீன் செய்திருந்தா கூடுதல் மதிப்பெண் தந்திருக்கலாம்.

சாப்பிட வாங்க!